பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 02, 2007

சுப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்

இலங்கையின் வடபகுதியில் உள்ள கிளிநொச்சியில் விமானப்படை நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன் பலியானார்.
.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பகுதியில் இலங்கை விமானப்படை விமானங்கள் இன்று கடும் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் புலிகளின் மேலும் நான்கு முக்கிய தலைவர்களும் பலியானார்கள்.
இத்தகவலை விடுதலைப்புலிகள் இயக்கமும் உறுதிப்படுத்தியுள்ளது. கிளிநொச்சியில் தான் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இங்கு கடந்த ஒருவாரத்தில் இலங்கை ராணுவம் மூன்றாவது முறையாக விமான தாக்குதலை நடத்தியது.
(செய்தி: மாலைசுடர்)

1 Comment:

Anonymous said...

மிகவும் வருந்ததக்க நிகழுவு