பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 01, 2007

ராமதாஸுக்கு "அட்வான்ஸ்' வாழ்த்துகள் - கலைஞர்

கேள்வி: தமிழகத்தில் காவல்துறை செயலிழந்துவிட்டது. காவல் துறைக்கு ஈரலே இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

பதில்: பாமக நிறுவனர் ராமதாஸ் 2011-ல் ஆட்சிக்கு வருவதாக அவரே சொல்லியிருக்கிறாரே, அவர் வந்து காவல் துறையை செயல்பட வைக்கட்டும். அவருடைய கூற்றுப்படி அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் ஆட்சிக்கு வரப்போகிறார், அப்போது காவல்துறையைச் செயல்பட வைக்கட்டும். முன்கூட்டியே அதற்கான "அட்வான்ஸ்' வாழ்த்துகள், பாராட்டுகள்.

மற்ற கேள்வி பதில்கள் கீழே..

கேள்வி:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் பேசும்போது முக்குலத்தோர் மூன்று பிரிவாக இருந்ததை இணைத்து நான் ஆட்சியில் இருந்த போது உத்தரவு பிறப்பித்திருந்தேன். ஆனால் அதை தற்போது கிடப்பில் போட்டு விட்டதாக சொல்லியிருக்கிறாரே?

பதில்:- ரத்து செய்து விட்டதாக சொல்லவில்லை அல்லவா? கிடப்பில் போட்டு விட்டதாகத் தான் சொல்லியிருக்கிறார். அதில் இருந்து என்ன புரிகிறது? அந்த மூன்று சமூகத்தினரும்-தேவர் இனம் ஓர் இனம் என்று சொல்லிக் கொள்வதற்கு, மாறுபாடான சில கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியுமா; இல்லையா? நீங்களே சொல்லுங்கள். எல்லா முக்குலத்தோரும் அதை ஒத்துக் கொள்கிறார்களா? தேவர் இனம், கள்ளர்-மறவர்-அகம்படியர் என்றெல்லாம் பிரிவுகளாக இருக்கிறார்களே, அவர்கள் அனைவரும் ஒரு குடைக்கீழ் கொண்டுவர அனைவரும் ஒப்புக் கொள்கிறார்களா என்பதில் ஐயப்பாடு இருக்கிறதே? அது கிடப்பிலே இருக்கிறது என்றால், அதனை ரத்து செய்து விட்டதாக அர்த்தம் இல்லையே!

கேள்வி:-தேவர் நூற்றாண்டு விழாவிற்கு நீங்கள் குறைவாக நிதி ஒதுக்கியிருப்பதாகவும், அவர்கள் மூன்று கோடி ரூபாய் தேவர் நூற்றாண்டு விழாவிற்காக ஒதுக்கியதாகவும் ஜெயலலிதா அறிக்கை விட்டதோடு மட்டுமல்லாமல், நேற்றையதினம் கூட்டத்திலும் பேசியிருக்கிறார்களே?

பதில்:-அவர்கள் ஒன்றுமே கொடுக்கவில்லை. அதனால் தான் எங்களை குறைவாக கொடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

கேள்வி:-அ.தி.மு.க. ஆட்சியில் மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாக ஜெயலலிதா சொல்கிறாரே? விழாவிலே பேசியிருக்கிறாரே?

பதில்:-கிடையாது. யார் யாரோ சவால் விடுகிறார்களே, இவர்களும் சவால் விட்டுப் பார்க்கட்டுமே. நான் சவால் விடுகிறேன். அப்படி சவால் விட்டவர்கள்-நான் அரசியலை விட்டுப் போகிறேன், கருணாநிதி நிரூபித்தால் என்று வைகோ கூட சமீபத்தில் சொன்னார். கருணாநிதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதவில்லை, சேது சமுத்திர திட்டத்தைப்பற்றி கருணாநிதி எந்த பிரதமருக்காவது கடிதம் எழுதியதை நிரூபித்தால் தான் அரசியலில் இருந்தே விலகிக் கொள்வதாக சவால் விட்டார். நான் நிரூபித்தேன்.

நான் பிரதமர் ராஜீவ்காந்திக்கும் கடிதம் எழுதினேன். பிரதமர் வாஜ்பாய்க்கும் கடிதம் எழுதினேன். இரண்டு கடிதங்களையும் ஏடுகளில் வெளியிட்டு நான் நிரூபித்துக் காட்டி விட்டேன். ஆனால் அரசியலை விட்டுப் போகிறேன் என்று தாங்களாக சொன்னவர்கள் போகவில்லை. இப்போது நான் சொல்கிறேன். மூன்று கோடி ரூபாய் தேவர் நூற்றாண்டிற்காக ஒதுக்கி செலவு செய்தேன் என்று சொல்வது உண்மைக்கு மாறான தகவல். நிரூபிக்கட்டும், பார்க்கலாம்.

நேற்று பத்திரிகைகளில் இந்தச் செய்தி வந்ததும், நான் மதுரையிலிருந்து தலைமை செயலாளருக்கு, நிதித்துறை செயலாளருக்கு, பொதுத்துறை செயலாளருக்கு, மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அப்படி எதுவும் கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று தான் சொன்னார்கள். நான் இதை நேற்று விழாவிலேயே குறிப்பிட்டேன்.

இந்த விழா எல்லோரும் சேர்ந்து நடத்துகின்ற விழா. தனித்தனியாக தேவர் நினைவகத்தில் மரியாதை செலுத்தினாலும் கூட, இது எல்லோரும் சேர்ந்து நடத்துகின்ற விழா. இதிலே ஒருவருக்கொருவர் தகராறு கூடாது, ஒருவருக்கொருவர் எதிர்கருத்துக்களை சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது, எல்லோரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியோடு விழாவினை கொண்டாட வேண்டும் என்று சொல்லி விட்டு-இப்படி கொண்டாடுகின்ற மற்ற கட்சிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.

அது ஏடுகளில் எல்லாம் வெளிவந்திருக்கிறது. ஆனால் ஏதோ ஓட்டுக்காக கருணாநிதி வந்தார் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். நான் தேவர் மறைந்த காலத்திலிருந்து பல ஆண்டுகள் அந்த நினைவிடத்திற்கு வந்திருக்கிறேன்.

இன்னும் சொல்லப் போனால், அந்த நினைவு மண்டபத்தை கட்டியதே தி.மு.கழக ஆட்சியில் தான். மேலநீலித நல்லூர், கமுதி, உசிலம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் தேவர் பெயரால் நான் என்னுடைய ஆட்சிக்காலத்தில் அப்போதே மூன்று கல்லூரிகளை உருவாக்கினேன்.

மதுரையில் பிரமாண்டமான தேவர் சிலையை அமைத்து, அப்போது குடியரசு தலைவராக இருந்த வி.வி.கிரியை அழைத்து வந்து அதைத் திறந்து வைத்தோம்.

நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும், மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கும் சார்புடையவனாக இருக்கிறேன் என்பதால் தான் எனக்கு ஒரு சாராரால் தமிழ்நாட்டில் எதிர்ப்பே. அதைப் பற்றி விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், 1973-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் ஒரு முறை நான் பேசும்போது சொன்னேன். உங்களுக்கே தெரியும்-தி.மு.க. எப்போதுமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடுகின்ற, வாதாடுகின்ற, பாடுபடுகின்ற இயக்கம். அந்த அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், ஆதிதிராவிட மக்களுக்கும்-குறிப்பாக நான்கைந்து ஆண்டுகளில் என்ன செய்தோம் என்பதை 10/8/1973 அன்று சட்டமன்றத்தில் பட்டியலிட்டுக் காட்டினேன்.

தமிழ் மாநிலத்திற்கு க்ரூப் 1 சர்விஸ் எழுதுகிறார்களே-தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தேர்ந்தெடுக்கிறதே- அதிலே எப்படிப்பட்டவர்கள் டெபுடி கலெக்டர்களாக, டி.எஸ்.பி.களாக, ஜே.சி.டி.ஓ.க்களாக, டெபுடி ரெஜிஸ்ட்ரார்களாக யார் யார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பேரவையிலே தெரிவித்தேன். கிட்டத்தட்ட 96 பேர்; அதில் ஆதிதிராவிடர்கள்-தாழ்த்தப்பட்டவர்கள்-மொத்தம் 18 பேர் நான் சொன்ன இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முக்குலத்தோர் வகுப்பை சேர்ந்தவர்கள்-17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 11 பேர். நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 8 பேர். பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்தவர் ஒருவர். முஸ்லிம் (லப்பை வகுப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட) மொத்தம் 7 பேர்கள்.

கௌரா என்ற மிக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 3 பேர்கள். படகா-டெபுடி கலெக்டர் ஒருவர். வீரக்குடி வெள்ளாளர்-டெபுடி கலெக்டராக இரண்டு பேர். சலவைத் தொழிலாளி- டெபுடி கலெக்டராக 2 பேர்.

பார்கவ குல நத்தமான் டெபுடி கலெக்டர் ஒருவர், டி.எஸ்.பி. ஒருவர், ஆக இரண்டு பேர் துளுவ வெள்ளாளர்-டெபுடி கலெக்டராக ஒருவர்.

குறும்பர் டெபுடி கலெக்டராக ஒருவர் (அதுவரை யாரும் குறும்பர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் டெபுடி கலெக்டர்களாக வந்ததே கிடையாது)

மூப்பனாரில்-டெபுடி கலெக்டர் ஒருவர், தொண்டமானில்-டெபுடி கலெக்டர் ஒருவர், வடுகரில்-டெபுடி கலெக்டராக ஒருவர், டி.எஸ்.பி.யாக ஒருவர் என்று இரண்டு பேர்கள். தேவாங்கரில்- டி.எஸ்.பி. ஒருவர், வலையரில் ஜே.சி.டி.ஓ. ஒருவர், அருந்ததியரில்-ஜே.சி.டி.ஓ. ஒருவர், யாதவரில்-மொத்தம் நான்கு பேர்கள். சேனைத்தலைவரில்-டெபுடி ரிஸிட்டிரார் ஒருவர். செட்டி பாலாஜியில்-டெபுடி ரிஜிஸ்ட்ரார் ஒருவர், வேட்டுவக்கவுண்டரில் டெபுடி ரிஜிஸ்ட்ரார் ஒருவர், மருத்துவரில்-டெபுடி ரிஸிட்ரார் ஒருவர், ஒட்டரில்-டிஸ்டிரிக்ட் ரிஜிஸ்ட்ரார் ஒருவர் என்று இந்த பட்டியலை நான் பேரவையில் எடுத்துச் சொன்ன பிறகு தான், தி.மு.கழக ஆட்சிக்கே பள்ளம் தோண்டுகின்ற வேலையிலே ஒரு கூட்டத்தினர் ஈடுபட்டார்கள். அவர்கள் யார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை.6 Comments:

Unknown said...

2 வது பாயிண்ட்...புள்ளி விவரம் குடுககிறதில கலைஞருக்கு நிகர் அவரே தான்...

மொத கேள்வி...அய்யா மரவெட்டி மருத்துவ ராமதாசுக்கு சூப்பர் பதில்...

ஒண்ணு கவனிங்க..இவனுங்களுக்கு தெனமும் மொக்க அறிக்கை , மொக்க பேட்டி குடுக்கிறதே வேலையா போச்சு... (நாம இங்க மொக்க போடுற மாதிரி...)

வாங்கையா ... வாங்க.. மொத்தமா எல்லோரும் போய் புங்காத்தா கோயில்ல சூர தேங்கா பொறுக்குவோம்... (தமிழ் குடிதாங்கி மாட்டு மருத்துவர் ராமதாசு..மற்றும் கழக கண்மணிகளையும் சேர்த்து தான்..)

-- இஞ்சி தின்ற இந்தோனேசியா குரங்கு...

Anonymous said...

சாதிகள் இல்லயடி பாப்பா!!!!!!!!!!

கமெடியின் உச்சகட்டம் இது!!!

KARTHIK said...

இநிமேல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சாதி சங்க தலைவர்களுக்கும் விழா கொண்டாட நிதி ஒத்துக்குவாங்களா ?

KARTHIK said...

இநிமேல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சாதி சங்க தலைவர்களுக்கும் விழா கொண்டாட நிதி ஒத்துக்குவாங்களா ?

Anonymous said...

என்னங்க இது தமிழக அரசுப் பணிகளில் பார்ப்பணர்கள் யாருமே இல்லையா அப்புறம் எப்படி பார்ப்பணீயம், பித்தளை ஈயம்னும் புலம்பிகிட்டே இருக்காங்க ?

Anonymous said...

Evar Pattiyalitta ellarum nalla service commission exam eluthiiruppanganu ninaikirein..

Pattiyala partha mandatory requiremente jathi mathiri irukku.. athukku oru re telecast vera.. doordharshan mathiri..