பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 01, 2007

மு.க.ஸ்டாலின் எங்கே ?

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கே?
அவர் யாரிடமும் சொல்லாமல் பாங்காக் சென்று விட்டார் என்பது உண்மையா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதியுடன் அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை?

சாதாரணமாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாடு செல்வதாக இருந்தால், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களில் இருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது.

அதுமட்டுமல்ல, முதல்வரின் முன் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் மாநிலத்துக்கு வெளியேயோ, வெளிநாடுகளுக்கோ போவது வழக்கத்துக்கு மாறானது. அப்படி இருக்கும் போது, ஸ்டாலின் யாருக்கும் தெரியாமல் பாங்காக் சென்று விட்டார் என்பதை எப்படி நம்புவது என்பது தான் அதிகாரிகளுக்கும், கட்சியினருக்கும் மட்டுமல்ல, பத்திரிகையாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் குழப்பம்.

ஸ்டாலின் தாய்லாந்து தலைநகரான பாங்காக்குக்கு திடீரென சென்று விட்டதாக முதலில் பேசப்பட்டது. செவ்வாய்க்கிழமை அவர் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய வட்டாரங்களும் தெரிவித்தன.

தலைமைச் செயலகத்திலும், அண்ணா அறிவாலயத்திலும், ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரங்களிலும் "ஸ்டாலின் எங்கே?' என்கிற கேள்விக்கு சரியான பதிலை யாரும் சொல்லத் தயாராக இல்லை.

என்பதற்கு இன்றைய நாளிதழ்கள் சொல்லும் காரணங்கள் :

* கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி தருவது இவர்க்கு பிடிக்கவில்லை
* அழகிரி கை ஓங்கியுள்ளது. போன வாரத்தின் அமைச்சர் மாற்றம் அழகிரி அட்வைஸ் என்று சொல்லுகிறார்கள் ( KKSSR ஸ்டாலினின் நண்பர் )
* பேரனுடன் விளையாடும் போது சுளுக்கிவிட்டது, அதனால் பாங்காக்கிற்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். ( நெல்லையில் அடுத்த மாதம் நடைபெறும் திமுக இளைஞர் அணி மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை காலையில் கட்சி நிர்வாகிகளிடம் ஸ்டாலின் விவாதித்துள்ளார். )

3 Comments:

IdlyVadai said...

மு.க.ஸ்டாலின் எங்கே ? பேரனுடன் விளையாடும் பொழுது சுளுக்கி விட்டது என்று ... பேரனுடன் விளையாடும் பொழுது சுளுக்கி விட்டது என்று போட்டு விட்டு இளைஞர் அணி மாநாடு என்ற செய்தியையும் போடுவது குசும்புதானே ?:))))

( Edited )

Anonymous said...

உடல்நிலை குறித்து நான் கேள்வி பட்ட செய்தி உண்மையா இல்லையான்னாவது விசாரிச்சுச் சொல்லலாமில்ல? அவசர சிகிச்சையைத்தான் பாங்காங், ஹாங்காங் என்று மாற்றிச் சொல்லுகிறார்களா?

Unknown said...

கலைஞர் குடும்பத்த்துகுள்ளியே "ல க .. ல க .. ல க .. ல க .. ல க .. "

இந்த லட்சணத்தில ஸ்டாலின என் சீண்டி விட்டு பாக்கணும்...

அழகிரி...கனிமொழி...மிச்சம் இருக்குற மு. க.. குடும்பத்தினர்...நாடு தெருவில ஒருத்தர ஒருத்தர் பிஞ்ச செருப்பால அடிச்சிகிற நாள் ரொம்ப துரத்தில இல்ல...

அப்பிடி ஒரு situation வரச் சொல்ல தமிழ் குடி தாங்கி.. மாட்டு மருத்துவர் ராமதாசு, கேப்டன், சரத் அண்ணாச்சி, தெருமா வளவன் (மன்னிக்கவும்..திருமாவளவன்) எல்லோரும்..பால் பாயசம் வெச்சி சாப்பிடுவாங்க.... இந்த எழவு எல்லாம் பாக்கத்தான போறோம்..