பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 06, 2007

ஐசிஐசிஐ வங்கிக்கு 50 லட்சம் அபராதம்

கடனை வசூலிக்க அடியாட்களை பயன்படுத்தியதற்காக ஐசிஐசிஐ வங்கிக்கு டெல்லி நுகர்வோர் கமிஷன் ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும் இது தொடர்பாக வங்கிக்கு கடுமையாக கண்டனமும் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரெட்டி இது குறித்து கவலை தெரிவித்ததோடு வங்கிகள், கடன் வசூலிக்க அடியாட்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார். இதனிடையே ஐசிஐசிஐ வங்கி மீது தபன்போஸ் என்பவர் டெல்லி நுகர்வோர் கமிஷனில் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார்.

இந்த புகாரில் அவர் தான் பெற்ற கார் கடனுக்காக வங்கியின் சார்பில் நியமிக்கப்பட்ட அடியாட்கள், காரை பறிமுதல் செய்ததாகவும் அப்போது தனது நண்பரின் மகனை இரும்புத் தடியால் அடித்து, உதைத்து படுகாயமடைய செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த வங்கி இந்த செயலுக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்றும், இதற்காக நியமிக்கப்பட்ட பணம் வசூலிப்பு நிறுவனத்திடம் சட்டத்திற்குட்பட்டு செயல்படுமாறு கூறி இருந்ததாகவும், எனவே அந்த நிறுவனமே பொறுப்பு என்றும் தெரிவித்தது.

நுகர்வோர் கமிஷன் இந்த வாதத்தை ஏற்கவில்லை. கடன் வசூலிப்புக்கு வங்கியே நேரடி பொறுப்பு என்று கூறிய கமிஷன், அடியாட்களை நியமித்து கடன் வசூலிப்பது காட்டுமிராண்டித்தனமானது என்று கண்டனம் தெரிவித்தது.

நாகரீகமான சமூகத்தில் இத்தகைய செயல்கள் மனித உரிமை மீறலாகும் என்று தெரிவித்த கமிஷன், ஐசிஐசிஐ வங்கி சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.50 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சில ஆயிரம் ரூபாய்களை வசூலிக்க அடியாட்கள் வன்முறையை பிரயோகிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கமிஷன் தெரிவித்துள்ளது.

CNN-IBN செய்தி

1 Comment:

Unknown said...

நிறைய பேருக்கு இந்த கிரெடிட் கார்டு காரங்கள எப்படி handle செய்வது என்பது தெரியல..... ஆனாலும் கோர்ட் இந்த மாதிரி தீர்ப்பு சொல்லி இருக்குறது..இந்தியாவுல நியாயம் சாகலைன்னு தெரியுது...

கிரெடிட் கார்டு கொடுக்குற வரையில நல்லா புடிச்சி நீவி விடுவாங்க...கொடுத்தா பிறகு....ஆப்பு வெக்கிரதிலேயே.. குறியா இருப்பானுக இந்த பேங்க் காரனுன்ங்க ... கொஞ்ச நாள் முன்ன குமுதத்தில இத பத்தி..நல்ல article வந்தது... அய்யா இட்லி வடை... அத்த தேடி கண்டுபிடிச்சி... இங்க போடுங்கய்யா...ஜனங்க...பாக்கட்டும்...

முக்கியமா ஆப்புக்கு பேர் போன பேங்க்..சிட்டி பேங்க்.. எனக்கு இந்த மாதிரி ஒரு அனுபவம் நடந்தது.... நான் மறு ஆப்பு வெச்சேன்... அதனால 20,000 ரூபா தப்பிச்சேன்..இல்லாட்டி... நானும் இவனுங்க ஆப்புல மாட்டி இருப்பேன்...

- கிரெடிட் கார்டு ஆப்புல மாட்டாத கொரங்கு...