பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 05, 2007

4 மாசத்துக்கு ஒரு தடவை கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு கத்திப்பாரா ஜங்ஷன்ல போஸ் கொடுக்கத்தான் தெரியும் - விஜயகாந்த்

288 பக்க விகடனில் வந்த கேப்டன் பேட்டி. வழக்கம் போல...

‘ராமர் எங்கே இன்ஜினீயரிங் படிச்சார்னு கலைஞர் சொல்லி, இங்கே பத்திக்கிச்சே...அதைப்- பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?’’

‘‘ராமரைக் கடவுள் இல்-லைன்னு சொல்ற கலைஞர், அதுக்கு மட்டும் ராஜாஜியைத் துணைக்கு அழைக்கிறார். ஆனா, ராஜாஜி சொன்னதையெல்லாம் இவர் கடைப்பிடிச்சாரா?

கொட்டுற மழையில் கோபாலபுரம் போய், மதுக்கடைகளைத் திறக்க-வேண்டாம்னு கெஞ்சினாரே ராஜாஜி, அதைக் கேட்டாரா?

ஒரு கட்சியின் தலைவரா, உங்கள் கொள்கைகளைச் சொல்லலாம். ஆனா, அரசாங்-கத்தின் தலைவரா இருக்-கும்-போது, நம்பிக்கை உள்ளவங்-களுக்கும் இல்லாத-வங்களுக்கும்இவர்தானே தலைவர். ‘ராமர் இன்ஜினீயரா?’னு கேட்டிருக்கவும் தேவையில்லை... ‘என் தலைவர் பெயரும் ராமசாமிதான்’னு பல்டி அடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. வார்த்தை விளையாட்டுக் களையும் மக்களின் வாழ்க்கையில் நடத்துகிற விளையாட்டுக்-களையும் விட்டுட்டு, உபயோகமான வேலை களைப் பார்க்கலாம்.

யாரையும் நீண்ட நாளைக்-கு ஏமாற்ற முடியாது என்பது அவருக்கே தெரிஞ்ச உண்மைதான். அது என்னவோ அவருக்கு ராமர், ராமச்சந்-திரன்-னாலே மனசுக்குள்ள ஒரு வெறுப்பு, பயம்-தான்!’’

‘‘சேது சமுத்திரத் திட்டத்தைநிறை -வேற்றுவது பற்றி உங்கள் கருத்து-என்ன?’’

‘‘அது தொலைநோக்குப் பார்வை உள்ள திட்டம்தான். ஆனால், ஆட்சி-யாளர்கள் திடீர்னு அதில் காட்டுகிற அவசரத்தோட பின்னணிதான் மர்மமா இருக்குது. அதுக்கான ஒப்பந்-தங்-கள் ஏதேதோ பேசப்பட்டு, இப்போ அதை நிறுத்தினா பல பிரச்னைகள், கேள்வி-களுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்குமே... திரிசங்கு சொர்க்கம்னு கலைஞர் அடிக்கடி சொல்வாரே,அதில் அவர்தான் அடிக்கடி மாட்டிக்கிறார். அந்த அவசரம்-தான், ரஜினிகாந்த் வரைக்கும் போய், சாமியார்களைக் கேட்டுச் சொல்லுங்கன்னு சொல்லவைக்குது போல.

சும்மா கிடந்த சங்கை ஊதிக்-கெடுத்த கதைதான் இதுவும்! சேது சமுத்திரத் திட்டத்-தில் அரசிய-லைக் கலக்காம, அறிவியலை மட்டுமே கலந்திருந்தா பிரச்னையே வந்திருக்காது. ராமர் பாலம் இருப் பதால்தான் கன்னியா-குமரிக்கு வந்த சுனாமி, ராமேஸ்-வரத்துக்கு வரலைன்னு சொல்-றாங்க. பவளப் பாறைகளை உடைப்பது நல்லதில் லைன்னு சொல்-றாங்க. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி, எல்லாச் சந்தேகங்களையும் துடைச்சுட்டு, அப்புறம் ஜாம்-ஜாம்னு நிறைவேத்துங்க.

இதில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் ஒருத்தர் இருக்காரே... எதையும் விளக்கமாச் சொல்ல-மாட்டார். அவருக்கு நாலு மாசத்துக்கு ஒரு தடவை கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு, கிண்டி கத்திப்பாரா ஜங்ஷன்ல நின்னு வரைபடத்தை வெச்சுக்கிட்டு ஒரு கையை உயரத் தூக்கி போஸ் கொடுக்கத்தான் ரொம்பப் பிடிக்கும்!’’

‘‘பி.ஜே.பி. கூட்டணிக்கு ஃபெர்னாண்டஸ் உங்களுக்குத் தூண்டில் போட, நீங்கள் காங்கிரஸ் பக்கம் சாய்வதாகச் சொல்கிறார்களே?’’

‘‘என் மரியாதைக்குரிய தலைவர், மூப்பனார். அவரோடு நல்ல நெருக்கமாக இருந்த நாட்-களை மறக்கவே முடியாது. சமீ-பத்தில் மூப்பனார் வீட்டுத் திரு-மணத்தில் கலந்துக்கிட்டேன். நாளைக்கே கலைஞர் வீட்டுத் திருமணத்துக்கு அழைத்தால்கூடப் போவேன். இந்த நாகரிகம் இங்கே எப்ப மீண்டும் வருமோ, தெரியலை. எனக்கு உள்ள வருத்தமெல்லாம், மூப்பனார் காலத் தில் அவ்வளவு சுதந்திர-மா இருந்த காங்கிரஸ் காரங்க இப்போ கையைக் கட்டி நிக்கி றாங்களேன்னுதான்! ஜார்ஜ் ஃபெர் னாண்டஸ் என் மதிப்-புக்குரிய தொழிற்சங்க வாதி. எங்களை மதிச்சுப் பேச வந்தார். பரஸ்பரம் பேசிட்டு, சந்தோ-ஷமா டிபன் சாப்பிட்டுட்டுப் போனார். அதனால் பி.ஜே.பி. கூட்டணியில் சேர்ந்திடு-வோமா என்ன?’’

‘‘ராமதாஸ், திருமாவளவன் இரண்டு பேரும் உங்கள் செல்வாக்கைக் குறைக்கத் தீவிரமா இறங்கப்-போவதாக செய்திகள் அடிபடுதே!’’

‘‘அப்படியா..? தெரியாது! ‘விஜயகாந்த் ஒழிக’னு சொல்லச் சொல்ல, விஜயகாந்த் இல்லாமல் இனி தமிழக அரசியல் இல்லைனு புரியுதா? என் செல்வாக்கைக் குறைக்க முயற்சி பண்றாங்கன்னா, என் செல்-வாக்கு கூடிட்டு வருதுன்னுதானே அர்த்தம்! ஜனங்க தெளிவா இருக்காங்க சார்! இரண்டு கழகங்களின் ஆட்சி-களை-யும் பார்த்து வெறுத்-துப் போயிருக்-காங்க. யார் துணையும் இல்லாம மக்-களை என் வச-மாக்க என்னால் முடியும். அந்த நம்பிக்-கை-தான் இன்னிக்கு நானும் ஒரு சக்தின்னு அந்த ரெண்டு பேரையும் உணரவெச்சிருக்கு!’’

7 Comments:

வெங்க்கி said...

வாயாலேயே ஆப்பு வெக்கிற ஒரே ஆளு..கேப்டன் தான்... அரசியல நல்லா புரிஞ்சிகிட்ட மாதிரி தெரியுது... அட்லீஸ்ட் ஒருமுறையாவது கேப்டனுக்கு வாய்ப்பு குடுத்து பாக்கோனும்யா.

வாழ்க வளமுடன்...

Anonymous said...

Ya even i too feel the same.
Just waiting for the next election.
i strongly believe that he will make a difference.

அருண்மொழி said...

//ஒரு தடவை கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு,//

ஆனாலும் இது கொஞ்சம் over தான். இவுரு போடாத கண்ணாடியா, பேசாத வசனமா??

DMKவை தொடர்ந்து திட்டினால் பத்திரிக்கை ஆதரவு கிடைக்கும் என்று பேசுகிறார். anti-DMK, anti-MK votes எல்லாம் இவருக்கு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. No wonder he is splitting AIADMK votes :-).

//he will make a difference.//

அய்யோ பாவம். இவரும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான் :-).

Anonymous said...

அய்யோ பாவம். இவரும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான் :-).

அப்போ சரி எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்
என்ன பண்ணலாம் இப்படியே வெட்டி பேச்சு பேசி vote போடாம விட்டுவிடுவோமா

be wise
choose the best among the worst is all i can say.

Anonymous said...

நானும் தான் தினமும் பாக்கறேன் இந்த கிண்டி பாலம் கட்டறதை. நாலடிக்கு பாலம் கட்டி எட்டு அடிக்கு இடிக்கிறாங்க. வருசக்கணக்கா கட்டறாங்க .

cheena (சீனா) said...

கிண்டி பாலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் ஏற்படும் துன்பங்கள் - போக்குவரத்து நெரிசல் மக்களுக்கு மன வருத்தத்தை அளிக்கின்றன. இவை தற்காலிகமான துன்பங்கள். நடக்கப் போகும் நிரந்தர நன்மைகளுக்காக இவைகளைப் பொறுத்து த்தான் ஆக வேண்டும்.

நாஞ்சில் மைந்தன் said...

இதெல்லாம் விஜயகாந்துக்கு யாரு எழுதி கொடுக்கிறாங்களோ? :)

எல்லோருமே திருடனுங்க தான்... இதுல சின்ன திருடன் பெரிய திருடன் என்றெல்லாம் கிடையாது...