பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆங்கில பத்திரிகை (DC)க்கு அளித்த பேட்டி...
பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக வளர்ச்சி அடைந்த ஒரு அரசியல் இயக்கமாக வளர்ந்துள்ளது. தமிழக மக்களின் தேவைகள் ஆசைகள் ஆகியவற்றை எங்கள் கட்சி நன்கு உணர்ந்துள்ளது. கலாச்சாரம், மொழி, கல்வி, சமூக நீதி, மாநிலத்தின் உரி மைகள் உள்பட எந்த துறை யானாலும் சரி பா.ம.க. அதில் அக்கறை காட்டி செயல் பட்டு வந்திருக்கிறது. எதை யும் எங்ககள் கட்சி விட்டு வைக்க வில்லை.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இந்த புதிய கூட்டணி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும்.
புதிய கூட்டணி அமைக்கவும், ஆட்சி அமைக்கவும் எங்களுக்கு உரிமை இல்லை என்றால் வேறு யாருக்கு இருக்கிறது.
பாராளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் ஏற்கனவே எங்களுக்கு பிரதி நிதித்துவம் கிடைத்தது. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக 2001-ம் ஆண்டில் இருந்து செயல் பட்டு வந்திருக்கிறோம். எனவே அடுத்து நாங்கள் ஆட் சிக்கு வருவது தான் பொருத் தமானது.
பா.ம.க. வெளியிட்ட தொழில் கொள்கை மற்றும் விவசாய கொள்கைகள் மக்கள் நல்வாழ்வுக்கு நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒரு உதாரணம் தான். சினிமா மற்றும் மெகா சீரியல்கள் இல்லாமல் சேட் டிலைட் சேனல்கள் நடத்த முடியாது என்று கூறினார்கள். ஆனால் அதை மக்கள் தொலைக் காட்சி பொய்யாக்கி காட்டியது.
இட ஒதுக்கீடு பிரச்சினையில் அதிக முக்கியத்தும் காட்டியது பா.ம.க. தான் இட ஒதுக் கீடுக்கு ஆதரவு திரட்ட நான் ஒவ்வொரு மாவட்ட தலைநகருக்கும் சென்று தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினேன். இது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாட ஒரு வக்கீலையும் பா.ம.க. நியமித்தது.
காவிரி பிரச்சினையை பொறுத்த வரை பா.ம.க.வின் நிலை உறுதியாக இருந்தது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் பல தவறுகள் செய்தன. சில நேரங்களில் மாநிலத்தின் நலனை விட்டுக் கொடுத்து விட்டன.
முல்லைப் பெரியார் அணை பிரச்சினையில் எங்கள் கட்சி தான் முதன் முதலில் அந்த அணை அருகே போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வித்துறையை பொறுத்த மட்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. நுழைவுத் தேர்வு ரத்து செய் யப்பட்டதால் கிராமப்புற மாணவர்கள் வெகுவாக பயன் அடைந்துள்ளனர்.
தி.மு.க.கூட்டணியில் இருந்து கொண்டே புதிய கூட்டணி அமைப்பதாக கூறு வது சரியாப என்ற கேள்விக்கு ராமதாஸ் பதில் அளிக்கும் போது, தேர்தலில் தி.மு.க.வுடன் இட பங்கீடு தான் வைத்துக் கொண்டோம். தேர்தலுக்குப் பிறகு அது முடிந்து விட் டது. தி.மு.க. அரசுக்கு பெரும் பான்மை இல்லாததால் நாங் கள் வெளியில் இருந்து தான் ஆதரவு கொடுத்து வருகி றோம்''
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, November 10, 2007
2011 பா.ம.க ஆட்சி - ராமதாஸ் உறுதி!
Posted by IdlyVadai at 11/10/2007 12:21:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment