கணினியில் அனைத்து தமிழ் எழுத்துகளும் இடம் பெற வாய்ப்பு என்ற தலைப்பில் தினமணி கட்டுரை. நொ கமெண்ட்ஸ்!
கணினி "யுனிகோடி'ல் அனைத்து தமிழ் எழுத்துகளும் இடம் பெறச் செய்வது தொடர்பாக தமிழக அரசு விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கணினியில் மொழி எழுத்துகளைக் கொண்டு வரும் முறைக்கு "யுனிகோடு' எனப்படுகிறது. இந்த "யுனிகோடி'ல் முதலில் ஆங்கிலம் புகுத்தப்பட்டது. இணையதள பயன்பாடு வந்த பிறகு, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகள் கொண்டு வரப்பட்டன.
இதன்மூலம், "வின்டோஸ்' என்ற மென்பொருளில் ஒரே நேரத்தில் ஆங்கிலம் உள்பட பல மொழிகளையும் பார்க்க முடிகிறது.
மேலும், கணினியில் பல மொழிகளைக் கொண்டு வரும் முயற்சியாக "16 பிட் என்கோடிங்' முறை ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம், "யுனிகோடி'ல் 65,536 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு, புதிதாக பிற மொழி எழுத்துகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டது.
இதன் பின்னர், 1980-களின் பிற்பகுதியில் புதிதாக எழுத்துகள் சேர்ப்பது தொடர்பாக உலக அளவில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
தற்போது, கணினியில் தமிழ் மொழி பல்வேறு வழி முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தைப் போல தமிழ் மொழியையும் உலக அளவில் ஒரே முறையில் பயன்படுத்துவது தொடர்பாக மலேசியாவில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் 16 "பிட்' அனைத்து தமிழ் எழுத்து தரக் குறியீடு என்ற குழுவை தமிழக அரசு அமைத்தது.
இதைத் தொடர்ந்து, தமிழ் மொழிக்கு உயிர் எழுத்துகள் உள்பட 247 எழுத்துகள் மற்றும் குறியீடுகள் சேர்த்து மொத்தம் 384 இடங்கள் தேவைப்படுகின்றன எனக் கணக்கிடப்பட்டது. "யுனிகோடி'ல் 484 இடங்கள் காலியாக இருப்பதால், நம் கோரிக்கை ஏற்கப்பட்டது.
பின்னர், "யுனிகோடி'ல் அனைத்து தமிழ் எழுத்துகள் மற்றும் குறியீடுகள் கொண்டு வரப்பட்டால், அதன் பயன்பாடு எவ்வாறு இருக்கும்? என்பது தொடர்பாக பதிப்புத் துறை, மின்னணு நிர்வாகம் உள்பட 3 துறைகளில் பரிசோதனை செய்யப்பட்டது.
அண்மையில், சென்னையில் நடைபெற்ற 16 "பிட்' அனைத்து தமிழ் எழுத்து தரக் குறியீட்டுக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில், 3 துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றிகரமாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது என்றார் குழுவின் துணைத் தலைவரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான மு. பொன்னவைக்கோ.
அவர் மேலும் கூறியது:
"சென்னையில் 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள தெற்காசிய மொழிகளுக்கான துணைக் குழுக் கூட்டத்தில் சோதனை முடிவுகள் தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே, தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களும் "யுனிகோடி'ல் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
தற்போதுள்ள முறையால் கால விரயம் ஏற்படுகிறது. உதாரணமாக, "கொடு' என்ற வார்த்தைக்கு 4 முறை தட்டச்சு செய்ய வேண்டும். ஆனால், "யுனிகோடி'ல் அனைத்து தமிழ் எழுத்துகள் மற்றும் குறியீடுகள் சேர்க்கப்பட்டு விட்டால், "கொடு' என்ற வார்த்தைக்கு 2 முறை தட்டச்சு செய்தாலே போதுமானது. இதன் மூலம், கால விரயத்தைத் தவிர்க்கலாம். மேலும், மின்னணு நிர்வாகத்துக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்றார் பொன்னவைக்கோ.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, November 12, 2007
16 "பிட்' அனைத்து தமிழ் எழுத்து தரக் குறியீட்டுக் குழு
Posted by IdlyVadai at 11/12/2007 04:43:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
உள்ள யுனிகோட் எழுத்துருக்களைக் கூட யார் நேரிடையாகப் பயன்படுத்துகிறார்கள்? கலப்பை, அஞ்சல் மற்றும் இன்னபிற ட்ரான்ஸ்லிடெரேஷன் கருவிகளைக்கொண்டே தமிழ் எழுத்துக்களை பெரும்பாலானவர்கள் உள்ளிடுகிறோம். இதில் உபரி எழுத்துக்களுக்கு கோட்ஸ்பேஸ் வேண்டும் என்று கேட்பது வெட்டிவேலை.
டிஸ்கி, டாம் (TAM), டாப் (TAB) போன்ற
சிறந்த பணி, மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நல்ல செய்தி. ஆப்பில் மாக் மென்பொருளில் phonetic யுனிகோடு நடைமுறை படுத்தி நான் இதை தட்டச்சு செய்துள்ளேன். தமிழக அரசு ஆப்பில் மாக் மென்பொருளில் பரிசோதனை செய்தார்களா?
மிக நல்ல விஷயம் வரவேற்ப்போம்..
அதெல்லாம் சரி நந்திக்ராம் பத்தி யாருமே பேச மாட்டேன் என்று அமைதியாய் இருப்பது எதனாலோ?
Thank u for the information.we are waiting for the day.
Adhu sari ippa tamilil eppadi type pannuradham ?
தற்போது அலைபேசியில் கூட குறுஞ்செய்திகள் தமிழில் வருகின்றனவே - அதுவும் யூனிக்கோடின் புரட்சி தானே
Post a Comment