பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 17, 2007

100 வயதை கொண்டாடும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம்

100 வயதை கொண்டாடும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம். சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


எழும்பூர் ரெயில் நிலையம்

சென்னையில் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக, முக்கிய இடத்தை பிடிப்பது எழும்பூர் ரெயில்நிலையம். சென்னையில் இதய பகுதி போன்று அமைந்துள்ள இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 1906-ம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன்பிறகுதான், 1908-ல் எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. அதை தொடர்ந்து அவ்வப்போது தேவைக்கேற்ப ரெயில் நிலையம் பழமை மாறாமல் விரிவாக்கம் செய்யப்பட்டது.

கிரீடம் வைத்தது போல்

இந்தோ-சார்க்கனிக் முறைப்படி எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் ராபர்ட் சிஸ்ஹோம் என்பவர் ஆவார். முகலாய பேரரசர்கள் கட்டிய கட்டிடங்களை போல, எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம், தலையில் கிரீடம் வைத்தது போன்று கட்டப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த ரெயில் நிலையம் கட்டப்பட்டு இந்த ஆண்டுடன் (2007) 100 வருடங்கள் பூர்த்தி அடைகின்றன.

ரெயில் நிலையம் தொடங்கிய நாள் முதல் மீட்டர் கேஜ் பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அதன்பின் படிப்படியாக அகல ரெயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

50 ஆயிரம் பயணிகள்

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செங்கல்பட்டு - கடற்கரை இடையிலான மின்சார ரெயில் பாதையும் அகல ரெயில் பாதையாக மாற்பட்டது. தற்போது எழும்பூர் ரெயில் நிலையத்தில் 11 பிளாட்பாரங்கள் உள்ளன.

தினமும் இங்கிருந்து குருவாயூர், திருச்சி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, மதுரை, கும்பகோணம், மங்களூர் ஆகிய இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரை இடைய 200-க்கும் மேற்பட்ட முறை மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் சுமார் 50 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

நூற்றாண்டு விழா

இந்த நிலையில் எழும்பூர் ரெயில் நிலையம் புதுப்பிக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தது. அந்த பணிகளும் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன. தமிழகத்திலேயே முதன்முதலில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் தான் நகரும் படிக்கட்டுகள் (எக்ஸலேட்டர்) அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த எழும்பூர் ரெயில் நிலையம் கட்டப்பட்டு இந்த ஆண்டுடன் (2007) 100 ஆண்டுகள் முழுமையடைகின்றன. எனவே எழும்பூர் ரெயில் நிலையத்தின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. எழும்பூர் ரெயில் நிலையம் கடந்துவந்த பாதைகளை நூற்றாண்டு விழா மலராகவும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
( நன்றி: தினத்தந்தி )

1 Comment:

Anonymous said...

தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய திறந்த வெளி கக்கூசு எக்மோர் ஸ்டேஷன், காலையில 5 முதல் 8 மணி வரைக்கும் போய் பாருங்க கருணாநிதிக்குப் பிடிச்ச கலர்ல எக்மோர் ஸ்டேஷன் முழுக்க மங்களகரமா நிறைஞ்சு வழியும் இது கெட்ட கேட்டுக்கு நூற்றாண்டு விழா ஒன்னுதான் குறைச்சல்