பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 06, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 06-11-07

இந்த வாரம் இட்லிவடைக்கு முனிஸ் எழுதும் கடிதம்.

அன்புள்ள இட்லிவடை,

நலமா ? லா.ச.ரா மறைவு குறிச்சு உன் பதிவுல பார்த்தேன். ரொம்ப வருத்தமா இருந்துச்சு. உனக்கு விஷயம் தெரியுமா ? பிறந்த நாளன்னிக்கே அவருக்கு மரணமும் நேர்த்திருக்கு.

தீபாவளி ஜோர் ஆரம்பிச்சாச்சு. டிவியில படம் ஆரம்பிச்சா அது பாட்டுக்கு அந்தக் காலப் படம் மாதிரி நாலஞ்சு மணி நேரம் ஓடுது. ஒன்றரை மணி நேரம் விளம்பரம். அலுத்துப்போச்சு. போன ஞாயித்துக்கிழமை 11:15க்கு சன் டிவியில '11:30 மணிக்கு திரைபட விருது வழங்கும் விழா காணத்தவறாதீர்கள்'ன்னு டிக்கர் ஓடிக்கிட்டிருந்துச்சு. கலைஞர் டிவியில பைரவி ( கருப்பு வெள்ளை படம் ) ஆரம்பிச்சது. 11:30க்கு சொன்ன மாதிரியே சன் டிவில திரைபட விருது வழங்கும் விழா ஆரம்பிச்சது. ரஜினி அமர்களமா பேசினார். நாம தான் விளம்பரம் வரும்போதெல்லாம் ரிமோட்டை வெச்சுகிட்டு மாத்திகிட்டே இருப்போமே, பாத்தா.. கலைஞர் டிவில பைரவி படம் நிறுத்திட்டு கில்லி படம் ஆரம்பிச்சுட்டாங்க. குழம்பிட்டேன்.

அப்பறம் அரை மணி நேரத்துல சன் டிவியில் இந்த விழா நின்னு போச்சு. கலைஞர் டிவிலயும் கில்லியை நிறுத்திவெச்சு, திரும்பவும் பைரவி ஆரம்பிச்சுட்டாங்க, அதை நீ கவனிச்சயா?

சரி என்ன விஷயம்ன்னு கலைஞர் டிவில என் நண்பரை அழைச்சுக் கேட்டேன். அந்தக் கூத்தைக் கேளு.

"என்ன சார் என்ன நடக்குது உங்களுக்குள்ள?"

"சன் டிவி ஏன் இந்த மாதிரி நடந்துகிச்சுன்னு தெரியலை"

"அது சரி சார், ஏன் பாதில கில்லியை போட்டீங்க?" ன்னு விடாம கேட்டேன்.

அதுக்கு அவங்க சொன்ன பதில், "எங்க தீபாவளி நிகழ்ச்சியை அவங்க போட்டதால, நாங்க அவங்க தீபாவளி திரைப்படம் போட்டோம்"

யார் சொன்னது குடுமி இருந்தா தான் குடுமிப்பிடி சண்டை போடனும்னு?

அடுத்த நிகழ்ச்சி ஒன்னுல ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரை பார்க்கற சந்தர்ப்பம் கிடைச்சது.. பரஸ்பரம் ரெண்டு பேரும் அறிமுகம் செஞ்சுகிட்டப்பறம் அவர் டைரக்டர் ஷங்கர்கிட்ட வேலை பார்க்கறதா சொன்னார். சரின்னு நம்ம ரோபோ படம் பத்தி ஒரு கேள்வியை கேக்கலாமேன்னு ஒரு ஐடியா..

"ஏன் ரோபோவில ஷாருக்கான், ஷங்கர் பிரிஞ்சுட்டாங்க?" ன்னேன் சுத்திமுத்தி பார்த்துகிட்டே.

"அதுவா..., அது வந்து...." ன்னு கொஞ்சம் ரொம்பவே இழுத்தாரு.

"அட சொல்லுங்க சார், பத்திரிகையில வராது சும்மா பொது அறிவு வளரத்தானே கேக்கறேன்."

"Om-Shanthi-Om, படத்துல ரஹ்மான் இசை அமைக்க மறுத்திருக்காரு. அதுல ஷாருக்கானுக்கு கொஞ்சம் கோபம். இப்ப ரோபோவில் இவர் தான் தயாரிப்பாளர். ஷங்கர் ரஹ்மான் வேணும்ங்கறாரு. ஆனால் ஷாருக்கான் ரஹ்மான் வேண்டாம்னு ஒரே பிடிவாதமா இருக்காரு. அதனால பிரிஞ்சாங்க" இப்ப யார் நடிக்க போறாங்க தெரியுமா ? ஹ்ரித்திக் ரோஷன்.

அப்பறம் ஸ்டாலினோட கூட போன ஒரு தொழிலதிபர்கிட்ட பேசற சந்தர்ப்பம் கிடைச்சது. விட்டுடுவோமா?

"சொல்லாமலே" ஏன் சார் பாங்காக் போனாரு, குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்சனையா ?"

"சே சே அதெல்லாம் "Heir" பிராப்ளம் இல்லை, "Hair" பிராப்ளம்"னார். "இளைஞர்" அணித் தலைவருக்கு தலையில மயிர் இருந்தாத் தானே மதிப்பு ?

ஓ-பக்கங்கள் திரும்பவும் வந்திடுச்சு பார்த்தையா ? இப்பல்லாம் ஞாநிக்கும் விகடனுக்கும் அப்படி ஒரு பந்தம். விகடனில் பணிபுரிகிறவர்களுக்கு Workshop எல்லாம் நடத்தறாரு தெரியுமா ? சில தொடர்களை விகடன் பாதியில் நிறுத்தியதற்கும் 'இந்த வாரக் குட்டு' என்று அரசல் புரசலாக பேசுகிறார்கள். எல்லாம் அந்த ஸ்ரீநிவாசனுக்கே வெளிச்சம் ( நான் திருப்பதி ஸ்ரீநிவாசனை சொன்னேன் )

விஜய் டி.வி-யில் ‘இப்படிக்கு, ரோஸ்’ என்னும் நிகழ்ச்சியை நடத்த போறாங்க ரோஸ், இவர் ஒர் அரவாணி. ‘‘இந்தியாவில், அரவாணி நடத்தும் முதல் டி.வி. ஷோ இது. சன், ஜெயா, கலைஞர் எல்லாம் இதே போல காப்பி அடிக்க தயாராகிட்டாங்கன்னு என்று கேள்வி!

சூப்பர் டூப்பர்ன்னு சன் டிவியில ஒரு நிகழ்ச்சி வருது பாத்திருக்கியா ? அதே போல காப்பி அடித்து 'காமெடி டைம்' மயில்சாமி ஜெயா டிவியில ஒரு நிகழ்ச்சி செய்ய போறார். இந்த டூப்பிளிகேட் நிகழ்ச்சிக்கு பேர் என்ன தெரியுமா ? டூப்பிளிகேட்தான். விளங்குமா ?

பெப்சி உமா கடந்த 15 வருஷமா சன் டிவியிலெ போன் பேசிக்கிட்டு இருந்தாங்க.
தமிழ் வலைப்பதிவர்களை பத்தி கருத்து சொன்னாங்களே அதே உமா தான். சின்ன வயசிலேர்ந்து கலைஞர் என்றால் அவங்களுக்கு பிடிக்குமாம் அதனால கலைஞர் டிவிக்கு இப்ப போயிட்டாங்களாம். தெய்வமே !

இந்தியாவுல 60% தங்க நகைகள் எங்கே இருக்கு தெரியுமா ? சென்னையில் தான். இதுல என்ன ஆச்சரியம், எல்லா மாமிகளும்தான் சென்னையில ஸ்கூட்டரில் வந்து நகையும் வைர தோடுமா வாங்குறாங்களே.

இந்த தீபாவளிக்கு மாமிகளுக்கு புதுசா சில புடைவைகள் வந்திருக்கு. ஸ்ரீகுமரன் சில்க்ஸ் 'Zip and Match' என்ற புடவையை அறிமுக படித்தியிருக்காங்க. புடவையோடு நான்கு முந்தானைகள் தருகிறார்கள். எந்த பல்லு வேண்டுமோ அந்தப் பல்லுவை ஜிப் மூலம் புடவையுடன் இணைத்து அணிந்து கொள்ளலாம். ஜிப் மூலம் முந்தானை முடிச்சு போட்ட புடவையின் விலை 20,000!.


போத்தீஸ் இப்ப ராத்திரி 12 மணி வரையில் இருக்கு. 12 மணிக்கு போனாலும் பார்க்கிங் இடம் கிடைப்பதில்லை. ஆயிரம் அரிய மலர்களைக் கொண்ட பரம்பரா பட்டுச் சேலையை, போத்தீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆடர் கொடுத்தால் ஒரு மாசத்தில தவருவாங்களாம். சுதா ரகுநாதனுக்கு இலவசம், நீங்க வாங்கனுமுனா 40 ஆயிரம் ரூபாய்.

நாயுடு ஹால் அறிமுக படுத்தியுள்ள சேலை பெயர் 'Lighting' புடவை. நல்ல வேலைபாடு கொண்ட இந்த சேலையில் சின்ன் சின்ன பல்பு வெச்சிருக்காங்களாம். புடவை ஓரத்தில ரிச்சார்ஜ் பேட்டரி வைத்து மினுமினுக்குமாம்.

ஆண்களுக்கு புதுசா ஒண்ணுமில்ல அதனால் பக்கத்தில ஷரேயா படம். அவ்வளவு தான் என்னால் முடிஞ்சது :-)

இந்த தீபாவளிக்கு என்ன ஸ்வீட் வாங்க போற ? Cookie Man திபாவளிக்கு 85 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை ஸ்பெஷல் ஸ்வீட் தயாரிச்சு விக்கிறாங்களாம்.

அப்பறம் ஸ்ரீகிருஷ்ணா ஸ்விட்ஸ் இந்த வருஷம் தீபாவளி பட்சணம் பாக்கெட் விக்கிறாங்க. அதுல அதிரசம், மைசூர்பா, மனோகரம், லாடு, கடலை உருண்டை, தேன்குழல், கைமுறுக்கு, முள்ளு முறுக்கு, காரசேவ், தீபாவளி லேகியம், காங்கா தீர்த்தம், ஸ்லோகம் புக், பிரசாதம் எல்லாம் ஒரே பாக்கெட்டுல விக்கறாங்க. விலை ரூபாய் 204.

இதே போல சூப்பர் ஸ்டார் சாக்கலேட்ஸ் ஆதம்பாக்கம் இப்படி எல்லோருமே தங்களோட பங்குக்கு அசத்தறாங்க.

இதில ஏதாவது ஒரு பாக்கெட் வாங்கி கவிஞர் கனிமொழி கருணாநிதிக்கு அனுப்புங்க, அவங்க நம்ம தமிழ் மக்களுக்கு காஜு கத்லி, மைசூர்பாக் தவிர வேற ஒன்னும் தெரியாதான்னு ஒரு பேட்டியில சொல்லியிருக்காங்க. அதனால என்ன பண்ணற பெங்காலி ஸ்விட் எக்கோர் கிட்ட இருக்கும் ஸ்ரீமிட்டாய் கடையில் வாங்கி அனுப்பு. எப்படியும் மத்திய அமைச்சர் ஆவ போறாங்க; அதனால அட்வான்ஸா வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பு சரியா ? இப்ப அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லும் சீசன்.

சிவாஜி கணேசன் மனைவி காலமாயிட்டாங்க இல்லையா துக்கம் விசாரிக்க புதுச்சேரி முதல்வர் வந்திருந்திருக்காரு. வந்தவர் தன் செருப்பை வீட்டு வாசல்லயே கழட்டி வெச்சிட்டு உள்ளே போயிருக்கிறார். அவ்வளவு தான். யாரோ லவுட்டிக்கிட்டு போயிட்டாங்க. பிரபு காதில் இந்த நியூஸ் போயிருக்கு உடனே பதறி அடிச்சுகிட்டு தன் அப்பாவோட ஒரு புது செருப்பை அவருக்கு அன்பளிப்பா கொடுத்திருக்கார். அதுக்கு நன்றி சொல்லிட்டு போலீஸ்காரர் பக்கத்து கடையில் வாங்கின ரப்பர் செருப்பை போட்டுக்கிட்டு போயிட்டாராம். இது எப்படி இருக்கு ?

கலைஞர் தமிழ்செல்வன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல் கவிதை படிச்சயா? ஜெ அதுக்கு கண்டனம் தெரிவிச்சதுக்கு, 'என் உடம்பில் ஓடுவது தமிழனின் ரத்தம்'ன்னு பதில் சொல்லியிருக்கார் பாத்தியா? அந்த சப்ஜெக்ட்டுக்கு நான் போகலை. ஆனா ரத்தம் சொல்லும் குணங்கள் பத்தி ஜப்பான்ல மருத்துவ ஆராய்ச்சி நடத்தியிருக்காங்க. நம்ம அமைச்சர்கள், பெயர்களை மாற்றியது போல ரத்தத்தை மாத்திக்கப் போறாங்க, அப்பறம் உயிருக்கே ஆபத்தா முடிஞ்சுடும்.

ஓ (ஞாநி இல்லைங்க) குருப் ரத்தம் உள்ளவங்க எப்பவும் கடின உழைப்பாளியாம், இலக்கை எட்டறவரைக்கும் சளைக்காம பாடுபடுவாங்களாம். இரக்கம், விசுவாசம், தன்னம்பிக்கை இவங்களோட பிளஸ். மைனஸ் - அதிகார மனோபாவம், தற்பெருமை, பொறாமை.

ஏ-குருப் - இவங்க மனிதாபிமானி, அமைதியான குணத்துக்கு சொந்தகாரர். நல்லா வேலை செய்வாங்க. இவங்க பிளஸ் - புத்தி கூர்மை, பொறுமை, பணிவு. மைனஸ் - பிடிவாதம், நிதானமின்றி செயல்படறது.

பி-குருப் காரங்க எப்பவும் தனித்தன்மையோட செயல்படுவாங்க. இவங்க வழி தனி வழியாக இருக்கும். புத்திசாலித்தனம், நேர்மை, சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடந்துக்கற பாங்கு இவங்க குணங்களாம். இவங்க குறை என்ன தெரியுமா ? குறுகிய மனப்பான்மை.

ஏபி குருப் அன்பர்கள் ரொம்ப அமைதியானவங்க. கட்டுகோப்போட செயல்படுவாங்களாம். இவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். இவர்களோட குறை என்ன தெரியுமா ? சந்தேக புத்தி, பகை உணர்வு, முடிவெடுக்கறதுல குழப்பம் இதெல்லாம்.

அரசியல்வாதிகளோட ரத்தம், இது எதுலயுமே அடங்காத தனி குருப்னு சொல்றியா, அதுவும் சரிதான்.

தீபாவளியை நல்லா கொண்டாடு. தமிழனா லட்சணமா டிவிபொட்டி முன்னால உட்கார்ந்து கிட. சிங்கம் சிங்கிளாத்தான் இருக்கும்னெல்லாம் ஏதாவது சால்ஜாப்பு சொல்லாம, அடுத்த வருஷமாவது உனக்கு தலைதீபாவளியா இருக்கவும் வாழ்த்துகள்.

ஒவ்வொருவர் உள்ளத்திலும்
ஒளிந்துள்ளான் நரகாசுரன் - அவனை
வெளிக் கொணர்ந்து விரட்டி விட்டால்
வாழ்வெல்லாம் தீபாவளி

கவிதை எப்படி இருக்கு ? சும்மா ஒரு மெசேஜ் சொல்லனும் இல்லையா ? அதான்
:-) அப்பறம் சொல்ல மறந்துட்டேன். தீபாவளி மலர் பத்தி அடுத்த கடிதத்தில எழுது.
உனக்கும் மற்றவர்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்!

அன்புடன்,
முனிஸ்

13 Comments:

Mathi said...

தீபாவளி வாழ்த்துக்கள்! இட்லி & முனிஸ்.

அருண்மொழி said...

stalin matter இப்படி சப்புனு முடிந்துவிட்டதே :-)

IdlyVadai said...

அருண்மொழி இதில என்ன வருத்தம். எப்போதும், இட்லிவடையில் ஆரய்ந்து சரியான தகவல் தான் தருவேன் :-)

அருண்மொழி said...

இட்லிவடையாரே,

குமுதம், விகடன் எல்லாம் இன்னும் 3,4 வாரங்களுக்கு cover story எழுதி குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்குவார்கள் என்று பார்த்தால் ...இப்படி முடிந்தது வருத்தம் தரத்தானே செய்யும். கேபுடனுக்கு அடுத்த அறிக்கைகான matter ready :-).

என் தலையில் உள்ளது 17 லட்சத்து 21 ஆயிரத்து 312 முடிகள். அதில் கருப்பு 7 லட்சத்து 12 ஆயிரத்து 912. மீதி கருப்பு டை அடித்த வெள்ளை முடிகள். stalin தன் முடிகளுக்கு கணக்கு சொல்ல முடியுமா?

Anonymous said...

deepavali wishes idlyvadai.
200 டாலருக்கு மிகவும் அத்யாவசியமான சூட் வாங்க நான் அவ்வளவு யோசிக்கிறேன். நீங்கள் என்னவென்றால் 40 ஆயிரம் ரூபாய்க்கு பட்டுபுடவை என்கிறீர்களே?இந்தியாவில் அத்தனை பணமா?

IdlyVadai said...

//குமுதம், விகடன் எல்லாம் இன்னும் 3,4 வாரங்களுக்கு cover story எழுதி குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்குவார்கள் என்று பார்த்தால் ..// ஏற்கனவே ஜூவி, ரிப்போட்டரில் வந்துவிட்டது கவர் ஸ்டோரி.

அனானி வாழ்த்துக்கு நன்றி. அட ஒரு நடை தி.நகர் வந்து பாருங்க எவ்வளவு சேல்ஸ் என்று மலைப்பா இருக்கும்.

பாண்டி-பரணி said...

தீபாவளி வாழ்த்துக்கள்

பின்றங்கா... சும்மா தீபாவளி TV(எல்லா TV) நிகழ்ச்சி பார்த்த மாதிரி இருந்தது.....

பாண்டி-பரணி said...

தீபாவளி வாழ்த்துக்கள்

பின்றங்கா... சும்மா தீபாவளி TV(எல்லா TV) நிகழ்ச்சி பார்த்த மாதிரி இருந்தது.....

IdlyVadai said...

Pondy-Barani வாழ்த்துக்கு நன்றி.
//சும்மா தீபாவளி TV(எல்லா TV) நிகழ்ச்சி பார்த்த மாதிரி இருந்தது.....// இது பாராட்டா :-)

பினாத்தல் சுரேஷ் said...

தீபாவளி வாழ்த்துஸ் இட்லிவடை.

கொஞ்சம் சேனல் தூக்கலா பேசறாரே முனி? என்ன தமிழக பி பி ஸி லே எம்ப்ளாய்மெண்டா?

நாகை சிவா said...

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் :)

தமிழன் பெருமை தீபாவளி அன்று நிலை நிறுத்துங்க :)

ஏபி + எல்லாம் நல்லா தான் இருக்கு, மைனஸ் தான் இடிக்குது :(.

இலவசக்கொத்தனார் said...

ரொம்பவே பெரிய கடுதாசிதான். ஆனா எல்லாம் சின்னத்திரை மேட்டரால்ல இருக்கு... வலையுலக வம்பும் கொஞ்சம் போடுங்கப்பா.

சீனு said...

//ஓ (ஞாநி இல்லைங்க) குருப் ரத்தம் உள்ளவங்க எப்பவும் கடின உழைப்பாளியாம், இலக்கை எட்டறவரைக்கும் சளைக்காம பாடுபடுவாங்களாம். இரக்கம், விசுவாசம், தன்னம்பிக்கை இவங்களோட பிளஸ். மைனஸ் - அதிகார மனோபாவம், தற்பெருமை, பொறாமை.//

:)