பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 30, 2007

என் கடமை - கலைஞர் பேட்டி

மலேசிய தமிழர்களை காப்பாற்ற வேண்டியது என் கடமை என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்....


கேள்வி:-மலேசியா நாட்டில் தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்து, பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியதைத்தொடர்ந்து, மலேசியா அமைச்சர் ஒருவர் நீங்கள் அப்படி பேசியிருக்கக் கூடாது என்றும், அங்கேயே பிரச்சினை அதிகமாக இருப்பதாகவும் உங்களைப்பற்றி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

முதல்-அமைச்சர் கருணாநிதி பதில்:- நான் மலேசிய நாட்டு அரசைப்பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை. அங்கே உள்ள தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையைச் செய்ய வேண்டும் என்றுதான் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான்.


கேள்வி:-மலேசிய அமைச்சரைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்:-அதற்கெல்லாம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை. பிரதமருக்கு தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை. தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அந்தக் கடமையைச் செய்து இருக்கிறேன். மற்றபடி இந்தப் பேச்சுக்கெல்லாம் பதிலுக்குப் பதில் சொல்ல நான் விரும்பவில்லை.

Read More...

Thursday, November 29, 2007

சாம்பார் வடைக்கு டாப் 10+1 சினிமா

இதுவரை இந்த மாதிரி விளையாட்டு பதிவுகளுக்கு பதில் சொல்லி பழக்கமில்லை, இருந்தாலும் வாரத்துக்கு 5 படம் பார்ப்பதால் கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.


1. திருவிளையாடல்
2. வா ராஜா வா
3. சலங்கை ஒலி
4. இந்தியன்
5. 6லிருந்து 60வரை
6. எதிர் நீச்சல்
7. சிந்து பைரவி
8. தேடினேன் வந்தது ( பிரபு, கவுண்டமணி நடித்தது )
9. உத்தமபுத்திரன்
10. கர்ணன்
11. அன்பே சிவம்

( வேறு ஏதாவது நல்லா படம் நினைவுக்கு வந்தால் இங்கேயே அப்டேட் செய்கிறேன் )

Read More...

கருணாநிதிக்கு மலேசிய மந்திரி கண்டனம்

மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் கருணாநிதிக்கு அந்நாட்டு அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மலேசியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை பொறுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.


மலேசியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். சுமார் 18 லட்சம் இந்தியர்கள் அங்கு வாழ்கிறார் கள். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் ஆவார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மலேசியாவில் உள்ள தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழர்கள் உட்பட ஏராளமான இந்தியர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கு அழைத்துச் சென்றது.

ஆனால், அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்றும் அவர்கள், 3ம் தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள் என்றும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அமைப்பு ஒன்றை நிறுவி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர்.

தங்களது மூதாதையினர் கண்ணிய குறைவாக நடத்தப்பட்டதால் தங்கள் சந்ததியினருக்கு படிப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் உரிய உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி, அதற்கு இழப்பீடாக 4 டிரிலியன் அமெரிக்க டாலர் தொகை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை சட்ட விரோதம் என்று கூறிய மலேசிய அரசு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் விரட்டினார்கள்.

மேலும் தமிழர்கள் மீது தடியடி பிரயோகமும் நடத்தப்பட்டது. இதில் பலர் காயம் அடைந்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் விடாமல் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டால், உள்நாட்டு பாதுகாப்புச்சட்டம் பாயும் என்றும் மலேசிய அரசு எச்சரித்தது.

இந்நிலையில், மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழகத்தில உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.
மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழர்களின் வாழ்வுரிமைகளை மீட்டு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

முதலமைச்சர் மு. கருணாநிதியும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த செவ்வாய்கிழமை கடிதம் எழுதி தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். கருணாநிதியின் இந்த கடிதம் மலேசிய அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் நஸ்ரி அசீஸ், கருணாநிதி தேவையில்லாமல் மலேசியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதியின் கடிதத்தை தாம் பார்க்கவில்லை என்று கூறிய அந்த அமைச்சர், இது தமிழ்நாடு அல்ல, மலேசியா என்றும், இந்த நாட்டு விவகாரங்களில் அவர் தலையிட தேவையில்லை என்றும், வேறு வேலை இருந்தால் அவர் பார்க்கலாம் என்றும் ஆவேசமாக கூறியிருக்கிறார்.

Read More...

நடிகை குஷ்பு மீது வழக்கு - இந்து முன்னணி தொடர்ந்தது

"28.11.07 தேதியிட்ட ஒரு வார இதழை படித்தபோது அதில், குஷ்பு முப்பெரும் தேவியர் சிலைகள் மற்றும் முப்பெரும் தேவியரின் திரு உருவங்களுக்கு பூஜைக்காக வைக்கப்பட்டுள்ள பூஜை பொருட்கள் ஆகியவற்றை அவமதிக்கும் வண்ணம் முப்பெரும் தேவியரின் திரு உருவ விக்கிரகங்களுக்கு அருகில் நாற்காலியில் காலணியுடன் கால்மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார். இந்த புகைப்படம் அதில் பிரசுரமாகி உள்ளது.


குஷ்புவின் இந்த செயல் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வண்ணமாக அமைகிறது. இந்து கடவுள்களின் திரு உருவ சிலைகள் பூஜிக்கப்படும் இடங்களில் ஆன்மீக சம்பிரதாயங்கள், வேதங்களின்படி அனுசரிக்கப்பட வேண்டும்.

முப்பெரும் தேவியர் இந்துக்களால் குறிப்பாக தமிழ் மக்களால் போற்றி வணங்கப்படும் தெய்வங்களாவர். இந்த தெய்வ திரு உருவ சிலைகளையும், தெய்வ திருவுருவ சிலைகளுக்கு பூஜிக்க வைக்கப்பட்டுள்ள புனித பொருட்களையும் அவமானப்படுத்துவது இந்து சமயத்தையே அவமானப் படுத்தும் செயலாகும்.

இந்த செயல்கள் இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 295, 295 ஏ மற்றும் 296 படி குற்றமாகின்றன.

வழிபாட்டுத்தலம், வழிபாட்டுக்குரிய தெய்வ திரு உருவங்களை அவமதிக்கும் வண்ணம் குஷ்பு செயல்பட்டுள்ளதால் அவரை நீதிமன்றத்தார் சம்மன் செய்து விசாரித்தும், மனுதாரர் தரப்பு சாட்சியங்களை விசாரித்தும் மற்றும் மனுதாரர் தரப்பு ஆவணங்களை பரிசீலனை செய்தும் தகுந்த உத்தரவிட வேண்டும்.''

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நடுவர் பாபுலால், மனு மீதான விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Read More...

டாக்டர் ராமதாஸ் பேச்சுக்கு அமைச்சர் கண்டனம்

டாக்டர் ராமதாஸ் பேச்சுக்கு அமைச்சர் கண்டனம்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரத்தில் நடைபெற்ற ஒரு மணவிழாவில் பேசிய பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் பற்றி பேசியதாகவும், அப்போது தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஏற்கனவே மத்திய அரசின் திட்டத்துக்கு ஒத்துக்கொண்டதாகவும், ஆனால், தற்போது தமிழகத்தை ஆளுகிறவர்களும், ஏற்கனவே ஆண்டவர்களும் இதனை எதிர்ப்பதற்காக ஒன்றாக கூட்டுச் சேர்ந்துள்ளார்கள் என்றும் பேசியிருக்கிறார்.

பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அன்றாடம் பொழுது விடிந்தால் யாரைப்பற்றியாவது குற்றச்சாட்டு கூறாவிட்டால் தூக்கம் வராதுபோலும்.

மத்திய அரசு சார்பில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த முன்வந்து உண்ணாவிரதம் இருந்தபோது, அந்தப்பிரச்சினையில் ஏதாவது சுமூக முடிவு எடுக்க வேண்டும் என்ற அக்கறையோடு, அந்த மாணவர்களை முதல்-அமைச்சர் கலைஞர் நேரில் சந்தித்து மத்திய அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவதாகவும், அவர்களை உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு போராட்டத்தை நிறுத்துவதற்கு வழி வகுத்தாரே தவிர, அந்த மாணவர்களை தூண்டிவிடவில்லை என்பதை உலகமே நன்கு அறியும். மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இதை அறிவார்கள்.

மருத்துவர்கள் கிராமங்களில் பணியாற்றுவது குறித்து தமிழக அரசுக்கு வேறுபட்ட கருத்து கிடையாது ஆனால், மருத்துவப் படிப்புக்கான காலத்தை ஆறரை ஆண்டுகளாக நீட்டிப்பதைப் பற்றி மாணவர்கள் எழுப்பிய கோரிக்கை குறித்துத் தான் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதுவதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இந்த ஊர் சுகாதாரத்துறை அமைச்சர் ஏதோ கையெழுத்துப் போட்டுக்கொடுத்ததாகவும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார். அப்படி நானோ, எனக்கு முன்பிருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆரோ எந்தவிதமான கையெழுத்தும் போட்டுக்கொடுக்கவில்லை.

ஆனால், இந்த திட்டத்தை எதிர்ப்பதற்காக தற்போது ஆளுகின்றவர்களும், ஏற்கனவே ஆண்டவர்களும் ஒன்றாகக் கூட்டுச்சேர்ந்திருப்பதாக டாக்டர் ராமதாஸ் சிதம்பரத்தில் பேசியிருப்பது என்பது வேண்டுமென்றே திட்டமிட்டுக்கூறுகிற கற்பனையேயாகும்.

Read More...

Wednesday, November 28, 2007

அப்படியா ?

அ.தி.மு.க.,வின் நமது எம்.ஜி.ஆர்., நாளிதழில் வெளியான கேள்வி - பதில்

தினமலர் கடந்த சில மாதங்களாகவே கழகத்தை சீண்டிப் பார்ப்பது மற்றும் பாதகமான செய்திகளை வெளியிடுகிறது. இதுநாள் வரை தினமலர் மற்றும் தினமணி இதழின் ஆசிரியர்கள் குறித்து, வைத்தியநாதய்யர் என்றும் கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்றும் "அவாள்' என்றும் குறிப்பிட்டு விமர்சனம் செய்து வந்த கருணாநிதி, இப்போது எந்த விமர்சனமும் செய்யாததில் இருந்தும், இந்த பத்திரிகையாளர்கள், நிர்வாகிகள், சந்திப்பு நடந்திருக்கிறது. தினமலர் பதிப்பாளருடன் நேரடி சந்திப்பு. தினமணி நிர்வாகத்துடன் கருணாநிதி குடும்ப ஏஜெண்டுகள் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக அந்தப் பத்திரிகையிலிருந்தே தகவல். இதன் மூலம் என்ன ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அ.இ.அ.தி.மு.க.,வை விமர்சனம் செய், தே.மு.தி.க.,வை ஆதரி - தி.மு.க.,வை விமர்சனம் செய்யாதே! ஸ்டாலின், கனிமொழி போன்றோர் செய்திகளை அதிகம் போடு என்பது தான். கழகத்தவர்கள் தயக்கமில்லாமல் இவ்வகை காரணங்களுக்காகவே தினமலர் - தினமணி இதழ்களை வாங்கிப் படிப்பதையும், விளம்பரம் கொடுப்பதையும் தவிர்க்கலாம்.

Read More...

பூனைக்கு மணி கட்டினார் மலைச்சாமி

தமிழ் மொழிபெயர்ப்பாளர் பல மாதங்களாகவே இல்லாமல் இருந்து வரும் நிலையில், நேற்று நடைபெற்ற இந்திய பாய்லர் சட்ட மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக எம்.பி.,யான மலைச்சாமி தமிழிலேயே தொடர்ந்து பேசினார். இதை மொழி பெயர்க்க ஆள் இல்லாத காரணத்தாலும் மற்ற எம்.பி.,க்கள் விழித்தனர்.

பார்லிமென்ட்டின் இரு அவைகளிலுமே அந்தந்த மாநில மொழிகளில் எம்.பி.,க்கள் பேசலாம். இவர்கள் தங்களது தாய்மொழியில் பேசும்போது, அதை ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ மொழிபெயர்க்க ஏராளமான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். குறிப்பிட்ட எம்.பி., என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை உடனுக்குடன் இந்த ஊழியர்கள் மொழிபெயர்த்து மைக்கில் ஒலிபரப்புவர். இதனால், தங்களது சொந்த மொழிகளில் பிரச்னைகளை பேசும் வாய்ப்பு எல்லா எம்.பி.,க்களுக்குமே உண்டு.ஆனால் ராஜ்யசபாவில் பணியாற்றி வந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர் விருப்ப ஓய்வு பெற்றுச் சென்று ஒரு ஆண்டு ஆகும் நிலையில், இதற்கு மாற்று ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. இதுகுறித்து தமிழக எம்.பி.,க்கள் பலமுறை முறையிட்டும், கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. மொழி பெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும்படி விளம்பரம் வெளியிட்டும் யாரும் வரவில்லை என ராஜ்யசபா அலுவலகம் காரணம் கூறியதாக தெரிகிறது. பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் இந்த பிரச்னை நேற்று ராஜ்யசபாவில் வெடித்தது. நேற்று மதியம் ராஜ்யசபாவில் இந்தியன் கொதிகலன் சட்ட மசோதா மீது அதிமுக வைச் சேர்ந்த மலைச்சாமி எம்.பி., பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.அப்போது எழுந்த அவர், முதலில் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். "ராஜ்யசபாவில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் இல்லை என்ற குறையை பலமுறை சுட்டிக் காட்டியுள்ளோம். அதற்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. பல காரணங்களை கூறி இப்பிரச்னை இழுத்தடிக்கப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை எனகூறி விளம்பரம் செய்யப்பட்டதாகவும், ஆட்கள் கிடைக்கவில்லை என்றும் காரணம் கூறப்படுகிறது. விளம்பரம், எங்கு எந்த நாளிதழில் தரப்பட்டது? தமிழ் நாளிதழ்களில் அல்லவா விளம்பரம் செய்திருக்க வேண்டும்? நிரந்தரமான பணி இது என்ற போதிலும் இப்பிரச்னை "ஜெனரல் பர்ப்பஸ்' கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகள் பிரச்னைக்கு தீர்வு காண்பது போல தெரியவில்லை. போகாத ஊருக்கு வழி சொல்வது போல உள்ளது. எங்களது பிரச்னைக்கு தீர்வு காண்பதை தவிர்க்க நினைக்கிறீர்கள். இன்று என்ன ஆனாலும் சரி. பூனைக்கு மணி கட்டும் நடவடிக்கையாக நான் எனது தாய் மொழியான தமிழ் மொழியில் தான் பேசப் போகிறேன்' என்று கூறினார். மலைச்சாமியின் இந்த திடீர் தாக்குதலால் பிற எம்.பி.,க்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக எம்.பி.,க்கள் மத்தியில் உற்சாகம் கிளம்பியது. அவர்கள் பலத்த ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தவுடன் தமிழில் பேச ஆரம்பித்தார் மலைச்சாமி. "தமிழ் தொன்மையான மொழி. தனித்தன்மையான மொழி. இனிமையான மொழியும்கூட. காட்டுமிராண்டிகளாக மனிதன் வாழ்ந்த காலங்களில் கூட எனது தமிழன் ஏடு கொண்டு இலக்கியம் படைத்துள்ளான். அப்படி கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த மொழிதான் எங்களது அருமை தமிழ்மொழி' என்று பேசிவிட்டு தமிழ் மொழியின் சிறப்பு குறித்த பாவேந்தர் பாரதிதாசன் கவிதை ஒன்றை சரளமாகக் கூற, அவையில் பரபரப்பு கூடியது.

மலைச்சாமி என்ன பேசுகிறார் என்பதை புரியாமல் பிற எம்.பி.,க்கள் முழித்தனர். எம்.பி.,யின் பேச்சை எவ்வாறு பதிவு செய்வது என்று தெரியாமல் ஊழியர்களும் பார்த்துக் கொண்டிருக்க அவைத் தலைவர் இருக்கையில் இருந்த சந்தோஷ் பகரூடியா," மிஸ்டர் மலைச்சாமி, நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். ஆனாலும், நீங்கள் தமிழில் பேசுவதால் எங்களுக்கு எதுவும் புரியவில்லை' என்று கூறினார். ஆனால் பிற தமிழக எம்.பி.,க்கள் சையதுகான், அன்பழகன், கோவிந்தராஜர், மைத்ரேயன், திருச்சி சிவா, சுதர்சன நாச்சியப்பன் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் அனைவரும் மலைச்சாமிக்கு ஆதரவாகவும் அவரை தமிழிலேயே பேசும்படியும் உற்சாகப்படுத்தினர்.

அவையில் திடீரென கிளம்பிய இந்த பரபரப்பால் சற்று கூச்சல் கிளம்பியது. "மலைச்சாமி தமிழில் பேசுவதில் நியாயம் உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பாளர் பிரச்னை வேண்டுமென்றே காலம் கடத்தப்படுவது முறையல்ல' என கர்நாடக, ஆந்திர மாநில எம்.பி.,க்கள் உள்பட பலரும் எழுந்து குரல் கொடுத்தனர். பின்னர் இறுதியாக மலைச்சாமி, " தமிழ் மொழிபெயர்ப்பாளர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதை அடையாளப்படுத்தவே தமிழில் தொடர்ந்து பேசினேன். அனைத்து எம்.பி.,க்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். எனவே இனி நான் இந்த மசோதா மீது ஆங்கிலத்திலேயே எனது உரையை தொடர்கிறேன்' என்று கூறிவிட்டு கொதிகலன் மசோதா மீது ஆங்கிலத்தில் பேசி முடித்தார். இதனால், ராஜ்யசபாவில் எழுந்த திடீர் பரபரப்பு முடிவுக்கு வந்தது.
( செய்தி: தினமலர் )

Read More...

Tuesday, November 27, 2007

கேரி கிரிஸ்டன் அடுத்த கோச்

நம் நாட்டில் பிரதம மந்திரிக்கு அடுத்து பாபுலரான நபர் கிரிக்கெட் பயிற்சியாளர் ( நன்றி சாப்பல்). பிசிசிஐ தான் என்னை தொடர்பு கொண்டார்கள்,நானாக அவர்களை அனுகவில்லல என்று கேரி கிரிஸ்டன் சொல்லியிருக்கார். நல்ல ஆரம்பம். முதல் நிபந்தனை மீடியாவை பார்க்க கூடாது, பேசகூடாது என்று இருந்தால் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது.

இந்திய கிரிக்கெட் போர்டின் கொள்கைகளுக்கு தென் ஆப்ரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி கிரிஸ்டன் ஒப்புதல் தெரிவித்துள்ளதால் அவர் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து கிரிக்கெட் வாரிய பொதுச்செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில் பயிற்சியாளர் தேர்வுக்குழுவினர் கேரி கிரிஸ்டன் குறிதது திருப்தி தெரிவித்ததாகவும், அவர் இந்திய கிரிக்கெட் வாரிய நிபந்‌தனைகள் மற்றும் கொள்கைகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.இதனால் கேரி கிரிஸ்டன் சம்மதம் ‌தெரிவித்தால் அவர் இரண்டு ஆண்டு காலம் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படுவார் என்று நிரஞ்சன் ஷா கூறினார்.இதற்கிடையே இன்னும் ஒரு வாரத்தில் பயிற்சியாளர் தேர்வில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிததுளளது.

Read More...

மு.க.அழகிரி - அறிக்கை !

எல்லோரும் படிக்க வேண்டிய அறிக்கை. இதிலிருக்கும் உட்கருத்து புரியவில்லை என்றால் நீங்கள் அரசியலில் ஸிரோ!

சமீப காலமாக அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களிலும் எனது பெயரை பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையிலும் தவறான பரிந்துரைகளையும் சிலர் செய்து வருவதாக தெரிய வருகிறது.

இனிமேல் என்சார்பாகவோ அல்லது என் பெயரைச் சொல்லி சிபாரிசுகள் வந்தாலும் யாராக இருந்தாலும் பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். முதல்வர் கருணாநிதியின் நல்லாட்சி யில் பல முன்னேற்ற திட்டங்களை நிறைவேற்றிடவும், மக்கள் பணிக்கும், கட்சித் தொண்டர் களுக்கும் துணையாக நின்று உதவி செய்திட வேண்டும் என்கிற போது நானே நேரில் தொடர்பு கொள்வேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.

- மு.க.அழகிரி ( முதல்வரின் மூத்த மகன் )

Read More...

அன்புமணி்க்கு எதிரான போராட்டம் - ராமதாஸ்

மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக அன்புமணி இருப்பதால் தான் தமிழ்நாட்டில் சிலர் மருத்துவக் கல்லூரி மாணவர்களை போராடு வதற்கு தூண்டி விடுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

எனக்கு கூட இப்படி இருக்குமோ என்று தோன்றியது, அதையே இன்றூ ராமதாஸ் கூறியுள்ளார். திமுக மீது தொடர்ந்து ராமதாஸ் தாக்குவதற்கும் காரணம் யாரும் அன்புமணியை சப்போர்ட் செய்யாதது, தமிழக மக்கள் மீது இருக்கும் அபிமானம் என்று நீங்கள் நினைத்தால் நிஜமான அப்பாவி நீங்கள் தான்.


மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக அன்புமணி இருப்பதால் அவரது துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கருத்து கூறுவதை நான் தவிர்த்து வந்தேன்.

எய்ம்ஸ் இயக்குனர் பிரச்சனையில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் அன்புமணிக்கு ஆதரவாக பேசவில்லை. அவரது இடத்தில் வேறொரு தமிழன் அமைச்சராக இருந்திருந்தால், நான் பாமகவினரை திரட்டி எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு மிகப்பெரிய போராட்டம் நடத்தியிருப்பேன்.

இப்போது தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் பிரச்சனை அரசியலாக்கப்பட்டு விட்டது. இது கிராமப்புற மக்களின் உயிர் பிரச்சனை என்பதால் இதில் நான் ஒரு மருத்துவர் என்ற முறையிலும், அரசியல் ரீதியாகவும் கருத்து சொல்ல விரும்புகிறேன்.

மருத்துவப் படிப்புக் காலம் ஐந்தரை ஆண்டிலிருந்து ஆறரை ஆண்டாக உயர்த்தப்படுவதாக மாணவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக் கிறார்கள். மருத்துவப் படிப்புக் காலம் ஐந்தரை ஆண்டுகள் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

ஓராண்டு என்பது நான்கு மாதங்கள் கிராமப்புற மருத்துவமனைகளிலும், நான்கு மாதங்கள் தாலுகா மருத்துவ மனைகளிலும், நான்கு மாதங்கள் மாவட்ட மருத்துவமனைகளிலும் 8 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெற்று பணியாற்றுவதற்காகத்தான்.

இந்த அடிப்படையில் தான் மத்திய அரசு சட்டம் கொண்டு வர உத்தேசித்துள்ளது. எனவே படிப்புக் காலம் உயர்த்தப்படுவதாக தவறாக புரிந்து கொண்டு மாணவர்கள் போராட்டம் நடத்துவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இந்த பிரச்சனையில் சில அரசியல் கட்சிகள் உள்ளே புகுந்து மாணவர்களை தூண்டிவிட்டு வருகிறார்கள். இதனை மாணவர்கள் உணர வேண்டும்.

கிராமப்புற மருத்துவ சேவை பல்வேறு மாநிலங்களில் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அல்லாமல், கிராமப்புறங்களில் பணி யாற்றுவதை சேவை மனப்பான்மை யுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தான் ஓராண்டு கிராமப்புற சேவைக்கான சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

இந்த பிரச்சனை தொடர்பாக மாணவர்களை அழைத்து பேசி அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்க சாம்பசிவராவ் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு உத்தேசித்துள்ள சட்டம் வருவதற்கும் நீண்ட நாட்களாகும்.

இதில் மாணவர்களை தூண்டி விட்டு போராட்டத்தில் ஈடுபடுத்துவது கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலங்களிலும் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள சட்டத்தை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் போராடவில்லை.

இப்படிப்பட்ட சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உள்ளிட்ட எல்லா மாநில அமைச்சர்களும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

அப்படியிருந்தும் தமிழகத்தில் மருத்துவ மாணவர்களின் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையுமே நான் கேட்கிறேன்.

இவர்கள் ஆட்சிக் காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட எல்லா மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் முழு அளவில் நியமிக்கப்பட்டு, மருத்துவ சேவை முழுமையாக நடைபெற்றது என்று இவர்களால் அறிவிக்க முடியுமா?

இங்கே மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் அரசியல் புகுந்துள்ளது. இதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன். இதுவரை அரசியலே புகாமல் இருந்த புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் சென்று மாணவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அரசியல் தலைவர்களை அரசு அனுமதித்தது ஏன்?

மாணவர்கள் அரசியலுக்கு அடிபணியாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.

Read More...

நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு

நீண்ட நேரம் லேப் டாப் கம்ப்யூட்டர்களை மடியில் வைத்து இயக்குவது ஆண்மைக் குறைவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எவ்வளாவு தூரம் உண்மை என்று தெரியலை. அனுபவம் உள்ளவர்கள் சொல்லலாம் :-)

நீண்ட நேரம் லேப் டாப்களை மடியில் வைத்து இயக்கும் போது அதிலிருந்து வெளியாகும் உஷ்ணம் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக வெப் எம்டி என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷெய்ன் கின் மற்றும் அவரது உதவியாளர்கள் 21 முதல் 35 வயது வரை உள்ள 29 இளைஞர்கள் மத்தியில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் போது சிலரது மடியில் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஆன் செய்து சோதிக்கப்பட்டதாகவும், சிலரது மடியில் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஆப் செய்யப்பட்டு வைக்கப்பட்டதாகவும் இந்த ஆய்வின் முடிவில் ஆன் செய்யப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்களிலிருந்து வெளியான உஷ்ணம் அதை பயன்படுத்துபவர்களின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தியது தெரியவந்ததாகவும் ஷெய்ன் கின் தெரிவித்துள்ளார்.

எனவே, லேப் டாப் கம்ப்யூட்டர்களை மடியில் வைத்து இயக்குவது ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Read More...

Monday, November 26, 2007

உங்களை ஏன் சன் டிவியில அதிகமாக காட்டறாங்க - கேப்டன் பதில்

மாணவர்களுடன் கேப்டன் உரையாடல். சன் டிவியில் உங்களை அதிகமாக ஏன் காண்பிக்கிறார்கள் போன்ற சுவாரசியமான கேள்விகள்... ( நன்றி குமுதம் )மாணவர்கள் : நீங்கள் ஆட்சிக்கு வந்தா இளைஞர்களுக்கு என்ன செய்வீங்க?

விஜயகாந்த் : ‘என்னிடம் இருப்பவர்கள் நிறையப் பேர் இளைஞர்கள். அவர்கள் அறிவுத் திறனைப் பார்த்து, மக்களுக்கு சேவை செய்யற மனப்பான்மையைப் பார்த்து அதுக்கு ஏற்ற மாதிரி பதவி தருவோம். படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை தருவோம். எல்லாத்தையும் இப்பவே சொல்லிடமுடியுமா?

மாண: இளைஞர்கள் பதவிக்கு வந்தால்தான் துடிப்பா பணியாற்ற முடியும். இப்ப இருக்கிற தலைவர்கள் எல்லாம் வயதானவர்கள். இது பற்றி என்ன நினைக்கறீங்க?

வி.காந்த் : அதுக்கு அவர்கள் சொல்வது அனுபவம். நாங்கள் இளைஞர்கள் வரணும் என்கிறோம். ஐ.க்யு. பவர் அவர்களுக்கு அதிகம் உள்ளது. இன்று விஷுவல் மீடியாவில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறீர்கள். உங்களுக்கு நாட்டு நடப்பு நன்றாகத் தெரியும். இன்று உண்மையில் இளைஞர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இன்றுகூட 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருவோம் என்கிறார் முதல்வர். என்னிக்கு தருவார்? நாலு வருஷம் கழிச்சாம்! இதெல்லாம் கண்துடைப்பு!

மாண: காங்கிரஸ், தி.மு.க. என்று எல்லா கட்சியிலும் வாரிசு அரசியல் இருக்கு. அது போல உங்கள் வாரிசுகள் தலையீடும் இருக்கும்போது உங்கள் சமாளிப்பு எப்படி இருக்கும்?

வி.காந்த் : நான் என்றைக்குமே வாரிசு அரசியலை கிண்டல் செய்தது கிடையாது. நீங்க அரசியலில் இருக்கீங்க. உங்க அண்ணன், தம்பி உங்ககூட இருந்து உதவி செய்யும்போது அவங்களை கொண்டு வருவீங்களா மாட்டீங்களா? அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். உங்க மனைவி உங்களுக்குதானே ஆதரவு தருவார்?

மாண : சினிமா உங்கள் தொழில்... இப்போது அரசியலுக்கு வந்துள்ளீர்கள். தொழில் என்றால் எதை பார்ப்பீர்கள்?

வி.காந்த் : இதே கேள்வியை முதல்வரிடம் கேட்க முடியுமா? இன்று வரை முதல்வர் படங்களுக்குக் கதை வசனம் எழுதவில்லையா? ‘தாய்’ நாவலுக்கு வசனம் எழுதவில்லையா?

மாண : ஆட்சிக்கு வந்தா கல்விக்கு என்ன செய்வீர்கள்?

வி.காந்த் : நிறைய செய்வேன். முன்னாடியே சொல்லிவிடக் கூடாது. பஸ் கண்டக்டர்களுக்கு போனஸை நாங்கள் ஏத்திக் கொடுக்கும்படி கோரிக்கை வைத்தோம். அதை தொழிற்சங்கங்கள் போஸ்டர் ஒட்டியபோது, என்னமோ விஜயகாந்த் செஞ்சது மாதிரி சொல்றாங்களே என்று அமைச்சர் நேரு சொல்றார். இது மாதிரி என் மனசுல நிறைய ஐடியா ஓடிட்டு இருக்கு. நகரம், கிராமம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சமச்சீர் கல்வியைக் கொண்டுவர என்னால் முடியும். செய்து காட்டுவேன்.

மாண : உங்கள் தொகுதியான விருத்தாசலத்திற்கு இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்கீங்க?

வி.காந்த் : நிறைய நிறைய... தண்ணீர் கஷ்டம் வந்தபோது என் சொந்தச் செலவில் ஐந்து லாரிகள் வச்சு தண்ணீர் ஊற்றினேன். கம்ப்யூட்டர் மையங்களை விருத்தாசலத்திலும் மங்களம்பேட்டையிலும் திறந்துள்ளேன். இரண்டிலும் பத்துப் பத்து கம்ப்யூட்டர்கள் உள்ளன. இலவசமாக தையல் பயிற்சி, எம்ப்ராய்டரி பயிற்சிப் பள்ளிகளை ஆரம்பித்துள்ளேன். முடிஞ்சும், முடியாம இருந்த பத்து கோயில்களை முடிச்சு கொடுத்தேன். இதைப் பார்த்துட்டு, நாங்களும் இதைச் செய்யறோம்னு கலைஞர் புத்தகம் போட்டுத் தர்றார். மசூதிகளுக்கும், தேவாலயங்களுக்கும் செய்கிறோம்!

மாண: நீங்களும் காலேஜ் நடத்தறீங்களே... டொனேஷன் வாங்கறீங்களா?

வி.காந்த் : நான் அந்தப் பக்கமே போறது கிடையாது. இடம் வாங்கிப் போட்டதோடு சரி... என் மச்சினனை கேளுங்கள். எந்த டொனேஷனும் கிடையாது. அதிலும் இவர்கள் கை வைக்க நினைத்தால், எதை வேணா செய்யுங்கள் என்கிறேன்.

மாண : அரசியலில் நிரந்தர நண்பன், எதிரி கிடையாது என்பார்கள். உங்கள் நிரந்தர எதிரி யார்?

வி. காந்த் : நிறைய இருக்கிறார்கள். கூட்டணி இல்லைன்னா எல்லாரும் எதிரிதானே! அவர்கள் அப்படி நினைக்கிறார்கள். நான் நினைக்கலை. ஊழலற்ற, மதச்சார்பற்ற அணிகளோட கூட்டணி வைக்கலாம். பின்னால் பார்க்கலாம். என்ன அவசரம்? கட்சி நடத்தறது, அதுவும் இப்படி வைராக்யத்துடன் கட்சி நடத்தறது சாதாரண விஷயம் கிடையாது.

மாண : சேது சமுத்திரத் திட்டம் இப்படி இடியாப்பச் சிக்கலாகிவிட்டதே?

வி. காந்த் : கலைஞர் தன் வாயாலயே கெடுத்து வச்சிருக்கார். அவர் தேவையில்லாம பேசிய சில விஷயங்கள் மத்திய அரசு வரை போய் விட்டது. அதனால்தான் பிரதமரும், சோனியாவும் ராமர் விழாவில் கலந்துகிட்டாங்க. இவர் பாட்டுக்கு காரியத்தை சாமர்த்தியமாக செய்ய வேண்டியதுதானே! அதைவிட்டுவிட்டு பிரச்சினையை கிளப்பினது இவர்!

மாண: அரசியல்வாதிகள் பற்றிதான் பேசறோம். அதிகாரிகளும் இப்போ நிறைய ஊழல் செய்ய ஆரம்பித்து விட்டார்களே?

வி.காந்த் : இவர்களைப் பார்த்து அவர்களும் கை வைக்கிறார்கள். தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி மாதிரிதான். அவர் வாங்கும்போது நாம வாங்கினா என்ன என்று நினைக்கிறார்கள். அது கடைசியில் டிராபிக் போலீஸ்வரை போய்விட்டது! லஞ்சத்தை ஒழிக்க முடியாது என்றில்லை! சிங்கப்பூரில் எப்படி முடிந்தது? ஹாங்காங் நம்பர் ஒன் கிரிமினல் சிட்டியாக இருந்தது. ரோட்டுலேயே ஓடுவாங்க. தென்ஆப்பிரிக்கா எப்படி இருந்தது? எப்படி மாறியது?

மாண: தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் உள்ளார்கள். அவர்களாலும் கூட்டத்தைச் சேர்க்கமுடியும். உங்க கட்சி உங்களை நம்பியே உள்ளது. தேர்தல் நேரத்தில் 234 தொகுதிகளிலும் உங்கள் ஒருவரால் சுற்ற முடியுமா?

வி.காந்த் : ‘‘அதெல்லாம் 60 வருஷ கட்சி. என்னுடையது இரண்டு வருஷ கட்சி. அப்புறம் அவங்களுக்கு கூட்டம் எப்படி வருது? நூறு ரூபாயையும் பிரியாணியையும் தந்து கூட்டி வருகிறார்கள்..’’ (பண்ருட்டியார் இடைமறித்து). ‘‘அப்புறம், இன்னிக்கு மீடியா வந்துவிட்டது! அதோட பலமே வேற... அந்த காலத்தில் மீட்டிங் கேட்கத்தான் கூட்டம் வரும். இந்தக் காலத்து அரசியல் வேற....’’

மாண : மூப்பனார் இருந்தா என் அரசியலே வேற மாதிரி இருந்திருக்கும் என்றீர்கள். எப்படின்னு சொல்ல முடியுமா?

வி.காந்த் : அதில் பல அர்த்தங்கள் இருக்கு. அதெல்லாம் ரகசியம். ரகசியத்தை எப்படி வெளிப்படையா சொல்றது?

மாண: சன் டி.வி.க்கும் உங்களுக்கும் இப்போ என்ன புது உறவு? உங்க கூட்டத்தை காட்டறாங்க... படத்தை விடாம போடறாங்க...

வி.காந்த் : என் படங்களை வாங்கி வைத்துள்ளார்கள். போடுகிறார்கள். அவ்வளவுதான். தி.மு.க.வுக்கும், அவர்களுக்கும் பிரச்னை என்பதால்கூட காட்டலாம். நான் ஒண்ணும் விழுந்து விழுந்து பேட்டி தரலையே..

மாண : இது உங்கள் வளர்ச்சியை காட்டுகிறதா? இனி உங்களைத் தவிர்க்க முடியாதுன்னு நினைக்கறாங்களா?

வி.காந்த் : சன் டி.வி. மட்டுமல்ல. இனி எந்தக் கட்சியும் விஜயகாந்தை தவிர்க்க முடியாது. விஜயகாந்த் ஒழிக என்றாலும் நான் இருப்பேன். என்னை அரசியலிலிருந்து எடுக்க முடியாது.

மாண : ரமணா படத்தில் மன்னிப்பு எனக்குப் பிடிக்காத வார்த்தை என்றீர்கள். நிஜவாழ்க்கையிலும் யாரையும் மன்னிக்கமாட்டீர்களா சார்?

வி.காந்த் : (சிரிக்கிறார்). அப்படியில்லை. அந்த கேரக்டர் அப்படி. லஞ்சத்தை ஒழிக்கப் போராடும் அந்த அதிகாரி அப்படித்தான் பேசுவார். ‘ரமணா’ படத்தில் க்ளைமாக்ஸை நண்பர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் இறந்தா லஞ்சம் தானாக மறுபடியும் வந்துவிடாதா என்றார்கள். ஆனால் கதையின் கருப்படி அவர் சாகணும்!

மாண : இப்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படியுள்ளது?

வி.காந்த் : இவர்கள் ஆட்சிக்கு வந்தாலே அராஜகம் அதிகமாகத்தான் இருக்கும். இதை எப்பவோ சொல்லிட்டேன். எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கார், ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தா அராஜகம் தலைவிரித்தாடும்’ என்று. அதனால்தான் தன் கட்சிக்காரர்களை கத்தி வச்சுக்கச் சொன்னார். என்னோட விளம்பர போர்டை கூட வைக்கமுடியவில்லை. ஏன் கிருஷ்ணசாமியை குத்தினார்கள்! உளவுத்துறைக்கும், போலீஸுக்கும் தெரியலை. ‘என் பேனரை அங்க போய் வை’ என்று முதல்வர் சொன்னால் எல்லா போலீஸும் அங்கே போகிறது. மற்ற எவன் பேனரும் வைக்காதே என்கிறார்கள். இது அராஜகம்! இவர்களா மக்களின் பாதுகாவலர்கள்?

மாண : இன்னும் பத்து வருஷம் கழிச்சு எங்கே இருப்பீங்கன்னு யூகிக்க முடியுதா?

வி.காந்த் : என்ன, வயசு கொஞ்சம் கூடியிருக்கும்! சரி, நான் சொல்றது இருக்கட்டும். உங்களைக் கேட்கிறேன். இதுக்கு பதில் சொல்லுங்க!

(ஒரே குரலாக) கோட்டையில இருப்பீங்க!.

Read More...

Sunday, November 25, 2007

நியூஸ் பிட்ஸ்

* பாமக மாநில துணைத் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன், தன் ஆதரவாளர் களுடன் அக்கட்சியிலிருந்து விலகி இன்று விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தார்.
(இதனால் பாமக வளர்ந்துள்ளதா ? அல்லது தேமுதிக வளந்துள்ளதா ? )

* மருத்துவ படிப்புக்கான காலத்தை நீட்டிக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
(பிரதமர் அலுவலகத்தில் குப்பை தொட்டி இருக்கிறதா ? )

* அதிருப்தி தலைவர்கள் போர்க்கொடி - தேவேகவுடா கட்சி 2 ஆக உடைகிறது; பா.ஜனதா- காங்கிரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் தாவல் ( இன்னும் இது நடக்கலையா ? )

* நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மாதவன் கதாநாயகனாக நடிக்க, நிஷிகாந்த் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளார். ( வாரிசு அரசியல் மாதிரி வாரிசு சினிமா. ஆளவந்தாளுக்கு வாழ்த்துக்கள்! )

Read More...

Thursday, November 22, 2007

மூத்த பத்திரிக்கையாளர் பால்யு காலமானார்

மூத்த பத்திரிக்கையாளர் பாலசுப்ரமணியம்(பால்யூ) சென்னையில் நேற்று காலமானார்.
கடந்த ஒரு மாதமாக உடல் நலம்< சரியில்லாமல் இருந்த பாலசுப்ரமணியம் பத்திரிக்கையாளர்கள் குடியிருப்பில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலை 11:30 மணிக்கு மரணமடைந்தார். 1925ம் ஆண்டு பிறந்த பாலசுப்ரமணியன் முதலில் தபால் துறையில் பணியாற்றினார். பின்னர் அரசு பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழ் வார(குமுதம்?) இதழில் சேர்ந்தார். அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய பாலசுப்ரமணியம், ராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட தலைவர்களை பேட்டி கண்டுள்ளார். பாலசுப்ரமணியத்திற்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். பாலசுப்ரமணியத்தின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

Read More...

சினிமாவில் சான்ஸ் போனதால் தான் ஸ்டாலினே அரசியலுக்கு வந்தார் - கேப்டன்

கே: சினிமாவில் சான்ஸ் போனதால்தான் நீங்கள் அரசியலுக்கு வந்ததாகவும், முதலமைச்சர் கனவுடன் அரசியலில் இறங்கியிருப்பதாகவும் ஸ்டாலின் உங்களை பற்றி கூறி வருகிறாரே?

ப: ஸ்டாலின் குறிஞ்சி மலர் என்ற தொடரில் நடித்தார். அந்த சான்ஸ் போனதால்தான் அரசியலுக்கு வந்திருக்கிறாரா? உள்ளாட்சியே நல்லாட்சி தருக என்று அவரது ஆதரவாளர்கள் பேனர் வைக்கிறார்கள். அப்படியென்றால் அவரது தந்தை நல்லாட்சி தரவில்லையா?

மற்ற கேள்வி பதில்கள் கீழே...

கே: 2011ல் உங்களுடன் சில கட்சிகள் கூட்டணி சேர ரகசிய பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. மேலும் காங்கிரசுடன் நீங்கள் ரகசியமாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறதே?

ப: ரகசிய தகவல்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள். அதை எப்படி வெளியே சொல்ல முடியும்?

கே: அப்படியானால் கூட்டணி உண்டா?
ப: நான் அப்போதும் சொன்னேன்; இப்போதும் சொல்கிறேன். கூட்டணி என்பது கிடையாது. நான் தனி அணி. மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை.

கே: சட்டம்ஒழுங்கு நிலைமை குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: காவல் துறை மக்களுக்காக சேவை செய்யவில்லை. ஆளும் கட்சிக்கே வேலை செய்கிறார்கள்.

கே: விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு முதலமைச்சர் கருணாநிதி இரங்கல்பா வெளியிட்டது பற்றி...
ப: இது பற்றி சட்ட வல்லுனர்களைத்தான் கேட்க வேண்டும்.

கே: உங்கள் அரசாங்கம் எப்போது வரும்?
ப: எப்போது தேர்தல் வருமோ அப்போது வரும்.

கே: புதிய அலுவலகம் திறந்து இருக்கிறீர்களே?
ப: இந்த கட்டிடத்தை புதிய கட்டிடம் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே இடித்ததை சரி செய்து இங்கே வந்திருக்கிறோம். எங்களை உடைத் தாலும் மீண்டும் உருவெடுப்போம். எங்கள் அலுவலகமே இதற்கு எடுத்துக்காட்டு.

கே: சினிமாவில் சான்ஸ் போனதால்தான் நீங்கள் அரசியலுக்கு வந்ததாகவும், முதலமைச்சர் கனவுடன் அரசியலில் இறங்கியிருப்பதாகவும் ஸ்டாலின் உங்களை பற்றி கூறி வருகிறாரே?

ப: ஸ்டாலின் குறிஞ்சி மலர் என்ற தொடரில் நடித்தார். அந்த சான்ஸ் போனதால்தான் அரசியலுக்கு வந்திருக்கிறாரா? உள்ளாட்சியே நல்லாட்சி தருக என்று அவரது ஆதரவாளர்கள் பேனர் வைக்கிறார்கள். அப்படியென்றால் அவரது தந்தை நல்லாட்சி தரவில்லையா?

Read More...

காங்கிரஸுக்கு ஆதரவு - தேவகவுடா

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது. அரசியல் மாற்றம் நாளுக்குநாள் கர்நாடகாவில் மாறிவருகிறது. பா.ஜ. ஆட்சி கவிழ்ந்து குடியரசு தலைவர் ஆட்சி கர்நாடகாவில் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து எவ்வித தகவலும் இல்லை.

சீக்கரம் எலக்ஷன் வைத்தால் நல்லது !

Read More...

Tuesday, November 20, 2007

கர்நாடகாவில் இன்று

சில செய்திகள்..


பிஜேபி ஆட்சியை கவிழ்த்ததால் மக்களிடையே மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியை எதிர்த்து அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரசுடன் சேர்ந்து மாற்று அரசு அமைப்பது சரியாக இருக்காது, டெல்லியில் முகாமிட்டுள்ள கவுடாவை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காங்கிரசின் கதவுகளை தட்டக் கூடாது என்று குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக பதவியேற்க அழைக்கப்படும் நபருக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பது திருப்தியளிப்பதாக கவர்னர் கருதும் போது, அவர் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதற்கு கவர்னருக்கு அரசியல் சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சில எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றால் மட்டுமே முதலமைச்சர் பதவி வகிப்பவர் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் கோரலாம்.

மதச்சார்பற்ற ஜனதாதளம் விதித்த நிபந்தனைகளை ஏற்று பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று பிஜேபியை அக்கட்சி வலியுறுத்தியது அரசியல் சட்டத்திற்கு எதிரானது


- முன்னாள் நீதிபதியாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கவர்னராகவும் இருந்த ரமாஜாய்ஸ்

"நீங்கள் அடிக்கடி பல்டி அடித்து எங்களை சித்ரவதை செய்கிறீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கிறீர்கள். இப்படி செய்வதற்கு பதில் எங்களை எல்லாம் விதான் சவுதா (சட்டசபை) உச்சிக்கு அழைத்து சென்று அங்கு இருந்து எங்களைத் தள்ளி கொன்று விடுங்கள்'' - ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள். எந்த நேரத்திலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Read More...

பாண்டிங்கின் 'ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்'

இன்று பாண்டிங் கும்பளே பற்றி இந்த கருத்துக்களை சொல்லியிருக்கிறார்.

* ஆஸ்திரேலியா பயணத்தின் போது கேப்டனாக இருக்கும் நெருக்கடியை கும்ப்ளே அனுபவிக்க நேரும். .

* டெண்டுல்கர் மற்றும் திராவிட் போன்ற வீரர்கள் கேப்டன் பதவியின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தடுமாறியது போலவே கும்ப்ளேவும் தடுமாறுவார்.

* ராகுல் திராவிட் போல் கும்ப்ளேவும் கேப்டன் பதவியை விரும்பாமல் போகலாம்.

என்று ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இது தான் பாண்டிங்கின் வழக்கமான 'ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்' இந்த ஒரு காரணத்துக்காவது ஆஸ்சியை அசிங்கமாக வீழ்த்தனும்.

Read More...

ரஜினி பிறந்த நாளில் பில்லா படம் ரிலீஸ

ரஜினி இரு வேடங்களில் நடித்து 1979-ல் ரிலீசாகி பரபரப்பாக ஓடிய படம் `பில்லா'. இப்படம் அஜீத் நடிக்க மீண்டும் தயாராகிறது. ரஜினி பிறந்த நாள் அன்று ரிலீஸ் ஆகுது !
`கிரீடம்' படத்துக்கு பின் `பில்லா' ரீமேக்கில் நடிக்க விரும்பினார். ரஜினி வீட்டுக்கு நேரில் சென்று அனுமதி கேட்டார். ரஜினி சம்மதம் தெரிவித்த தோடு அவரை வாழ்த்தி புத்தகமும் பரிசாக அளித்தார். பிறகு படப்பிடிப்புதொடக்க விழா பூஜையிலும் பங்கேற்றார்.

படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்தது. மலேசி யாவில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜீத்தை வித்தியாசமான தோற்றத்தில் நேர்த்தியாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் விஷ்ணு வர்த்தன். இவர் ஏற்கனவே `பட்டியல்', `அறிந்தும் அறியாமலும்' உள் ளிட்ட படங்களை டைரக்டு செய்தவர்.

அஜீத் ஜோடியாக, நயன்தாரா நடித்துள்ளார். ஜேம்ஸ்பாண்ட் ஆங்கில படநாயகி சாயலில் நயன்தாரா இறுக்கமான உடை துப்பாக்கி சகிதங்களோடு தோன்றுகிறார். இன்னொரு நாயகியாக நமீதா நடித்துள் ளார்.

கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவன் இறந்து விட அவன் தோற்றத்தில் இருக்கும் இன்னொருவனை கொள்ளையனாக மாற்றி அவ்விடத்துக்குள் போலீஸ் அனுப்பி கும்பலை கூண் டோடு பிடிப்பது கதை.

பழைய பில்லாவில் உள்ள சில காட்சிகள் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப விறுவிறுப்பாக மாற்றப்பட்டு உள்ளன. `மைநேம் ஸ் பில்லா' என்ற பாடலும் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

`டப்பிங் மற்றும் இசை சேர்ப்பு பணிகள் தற் போது நடந்து வருகின்றன. இப்படத்தின் டிரைலர் காட்சி சமீபத்தில் ரஜினிக்காக ஏவி.எம். ஸ்டுடியோவில் திரையிட்டு காட்டப் பட்டது. அதை பார்த்த ரஜினி அஜீத்தையும் விஷ்ணு வர்த்தனையும் வெகுவாக பாராட்டினார்.

பாடல் கேசட் வெளியீட்டு விழா வருகிற 21-ந்தேதி நடக்கிறது. படத்தை ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி ரிலீஸ் செய்ய அஜீத் விரும்பினார். இயக்குனர், தயாரிப்பாளரும் அதனை ஏற்றுக்கொண்டனர் இதையடுத்து ரஜினி பிறந்த நாளில் `பில்லா' ரிலீசாகிறது.

Read More...

Monday, November 19, 2007

எடியூரப்பாவின் நம்பிக்கை

மர்மமா , திர்ல்லரா, காமெடியா என்று வகைபடுத்த முடியாத கர்நாடக அரசியல்.


கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ. அரசு இன்று பெரும்பான்மையை நிருப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் 12 நிபந்தனைகளை விதித்தது. இந்த நிபந்தனைகளை ஏற்று கையெழுத்து இட்டால்தான், அரசில் பங்கேற்கவும், பெரும்பான்மை நிரூபிக்கவும் ஆதரவு தருவதாக கூறியது. ஆனால் எடியூரப்பா முதலில் பெரும்பான்மையை நிரூபித்தபின், நிபந்தனைகளை ஏற்பதாக கூறினார். இதனை ஏற்காத மதசார்பற்ற ஜனதா தளம் தனது ஆதரவு அளிப்தில்லை என அக்கட்சியின் தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ( இவர் நம்பிக்கையை பாராட்ட வேண்டும். )

முக்கிய இலாகாக்களை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்ற மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் கோரிக்கையை ஏற்க பிஜேபி மறுத்து விட்டது. மேலும் அக்கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட வேண்டும் என்ற கோரிக்கையையும் பிஜேபி ஏற்கவில்லை.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா விரைவில் ராஜினாமா செய்வார் என பா.ஜ. கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளது. பா.ஜ. கட்சியினர் எடியூரப்பா தலைமையில் கவர்னரை சந்திக்க இருக்கின்றனர்.கடைசி தகவல்: சட்டசபை வாசலுக்கு அடிக்கடி வந்து குமாரசாமி வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருக்கிறாராம் எடியூரப்ப்பா.
கெளடா-எதியூரப்பாவின் இந்த அரசியல் விளையாட்டை சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்துள்ளனர்.

வாசகர்களூக்கு ஒரு கேள்வி யார் புத்திசாலி
1. எடியூரப்ப்பா
2. குமாரசாமி
3. காங்கிரஸ்

Read More...

Saturday, November 17, 2007

தமிழ்நாடு இன்று...

இன்று வந்த இரண்டு செய்திகள் ...


தி.மு.க. செயலாளர் சுட்டுக்கொலை
திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர், பூண்டி கலைச் செல்வன். மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் இருந்தார். இவரது வீடு திருவாரூரை அடுத்த கொரடாச்சேரியை அடுத்த பூண்டியில் உள்ளது.

இன்று காலை 9 மணிக்கு வீட்டில் பூண்டி கலைச் செல்வன் இருந்தார். அப்போது ஒரு டாடா சுமோ கார் வீட்டு முன்பு வேகமாக வந்து நின்றது.

அந்த காரில் இருந்த 6 பேர் கீழே இறங்கி வந்தனர். அவர்கள் தாங்கள் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்துள்ளோம். என கூறினர். இதைப்பார்த்த அவரது உதவியாளர் சற்று இருங்கள் என கூறி விட்டு உள்ளே சென்றார்.

அதற்குள் அந்த 6 பேரும் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மேலே நோக்கி சுட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

துப்பாக்கி சத்தம் கேட்டு இருந்த பூண்டி கலைச்செல்வன் வெளியே வந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 6 பேரும் துப்பாக்கியால் அவரை சுட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டவும் செய்தனர். இதில் அவருக்கு தலை, கை, கால் பகுதிகளில் வெட்டு விழுந்தது.

பின்னர் அவர்கள் 6 பேரும் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த பூண்டி கலைச்செல்வனை திருவாரூர் தனியார் ஆஸ் பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.


அதிமுக செயலாளர் வெட்டி கொலை
செங்கல்பட்டு நகர அதிமுக செயலாளர் குமார் இன்று காலை 30 பேர் கொண்ட மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் காரில் சென்ற மற்றொரு நபரும் உயிரிழந்தார்.

வேகமாக வந்த அந்த கார்கள் குமாரின் காரை வழிமறித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார்களில் இருந்த சுமார் 30 பேர் அவரை சூழ்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் என்று அடையாளம் காண்பதற்கு முன்னதாகவே அவர்கள் தாங்கள் கொண்டு வந்த அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக குமாரை வெட்டினார்கள்.

இதில் அந்த இடத்திலேயே குமார் ரத்த வெள்ளத்தில் பிணமானார். குமாருடன் சென்ற ஆறுமுகம் என்பவரும் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


தலைவர்களுக்கு பாதுகாப்பு தருவதைவிட தொண்டர்களுக்கு தேவை என்று நினைக்கிறேன்.

Read More...

பத்திரிக்கை விஷமம் - 7

நீண்ட் நாட்களுக்கு பிறகு திரும்பவும் ...

அரசு பதில்கள் - குமுதம்
“முதல்வர்கள் அனைவரும் கலைஞராகி விட முடியாது. கலைஞர்கள் அனைவரும் முதல்வராகிவிட முடியாது” என்று சொல்கிறாரே அன்பழகன்?

முதல்வர்கள் அனைவரும் கலைஞர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.

துக்ளக் கேள்வி-பதில்
விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் – இணைந்த அணி, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணியை வீழ்த்த முடியுமா?

ப : முடியாது. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க., விஜயகாந்த், சரத்குமார் கட்சியினர் கூட்டணி அமைத்து, பாராளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால், அநேகமாக தமிழகத்தில் எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றுவிட முடியும்.

ஹாய் மதன் - விகடன்

டென்னிஸ், கபடி, பேஸ்கெட் பால் என எல்லா விளையாட்டுக்களிலும் பெண்கள் பிச்சு உதறுகிறார்கள். ஆனால், கிரிக்கெட் மட்டும் அவர்களுக்கு வசப்படவில்லையே, ஏன்?

சானியா மிர்ஸாவை நம் எல்லோருக்கும் தெரியும். இந்திய பெண்கள் கிரிக்-கெட் டீமில் உள்ள ஒரே ஒருவரின் பெய-ரைச் சொல்லுங்கள், பார்ப்போம்! கிரிக்கெட் என்றில்லை, பல ‘டீம்’ விளையாட்டுக் களில் பெண்கள் இரண்டாம்பட்ச-மாகத் தான் இருக்கிறார்கள். பி.டி.உஷா போல தனிப்-பட்ட வீராங்கனைகள்தான் உண்டு. எதிர்-காலத்தில் ‘பெண்கள் கிரிக்கெட்’டில் (20-20 மேட்ச் போல) கவர்ச்சிகரமான புதிய அம்சங்கள் புகுத்-தப்பட்டு, ஸ்பான்-ஸர்களும் மீடியாவும் அதை அலாக்காகத் தூக்கிப் பிரபலப்-படுத்துவார்கள் என்பது என் நம்பிக்கை

சுஜாதா பதில்கள் - குங்குமம்
மனப்பாடம் செய்வது, புரிந்து படிப்பது எது ஈஸி ?
மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்றால் மனப்பாடம். அறிவு பொருக வேண்டும் என்றால் புரிந்து படிப்பது

கிரேஸியை கேளுங்கள் - கல்கி

நட்புக்கும் பகைக்கும் இடையே உள்ள தூரம் என்ன?

நட்பு - பகை இரண்டுமே நமக்கு அருகாமையில்தான் உள்ளன. பகை- கைக் கெட்டிய கல்லெறி தூரத்தில் உள்ளது. நட்பு - வாய்க்கெட்டிய கூப்பிடு தூரத்தில் இருக் கிறது. அருகாமையில் உள்ள நட்பு, அணுகாமையால் பகையாகிறது.


Read More...

100 வயதை கொண்டாடும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம்

100 வயதை கொண்டாடும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம். சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


எழும்பூர் ரெயில் நிலையம்

சென்னையில் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக, முக்கிய இடத்தை பிடிப்பது எழும்பூர் ரெயில்நிலையம். சென்னையில் இதய பகுதி போன்று அமைந்துள்ள இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 1906-ம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன்பிறகுதான், 1908-ல் எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. அதை தொடர்ந்து அவ்வப்போது தேவைக்கேற்ப ரெயில் நிலையம் பழமை மாறாமல் விரிவாக்கம் செய்யப்பட்டது.

கிரீடம் வைத்தது போல்

இந்தோ-சார்க்கனிக் முறைப்படி எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் ராபர்ட் சிஸ்ஹோம் என்பவர் ஆவார். முகலாய பேரரசர்கள் கட்டிய கட்டிடங்களை போல, எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம், தலையில் கிரீடம் வைத்தது போன்று கட்டப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த ரெயில் நிலையம் கட்டப்பட்டு இந்த ஆண்டுடன் (2007) 100 வருடங்கள் பூர்த்தி அடைகின்றன.

ரெயில் நிலையம் தொடங்கிய நாள் முதல் மீட்டர் கேஜ் பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அதன்பின் படிப்படியாக அகல ரெயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

50 ஆயிரம் பயணிகள்

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செங்கல்பட்டு - கடற்கரை இடையிலான மின்சார ரெயில் பாதையும் அகல ரெயில் பாதையாக மாற்பட்டது. தற்போது எழும்பூர் ரெயில் நிலையத்தில் 11 பிளாட்பாரங்கள் உள்ளன.

தினமும் இங்கிருந்து குருவாயூர், திருச்சி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, மதுரை, கும்பகோணம், மங்களூர் ஆகிய இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரை இடைய 200-க்கும் மேற்பட்ட முறை மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் சுமார் 50 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

நூற்றாண்டு விழா

இந்த நிலையில் எழும்பூர் ரெயில் நிலையம் புதுப்பிக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தது. அந்த பணிகளும் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன. தமிழகத்திலேயே முதன்முதலில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் தான் நகரும் படிக்கட்டுகள் (எக்ஸலேட்டர்) அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த எழும்பூர் ரெயில் நிலையம் கட்டப்பட்டு இந்த ஆண்டுடன் (2007) 100 ஆண்டுகள் முழுமையடைகின்றன. எனவே எழும்பூர் ரெயில் நிலையத்தின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. எழும்பூர் ரெயில் நிலையம் கடந்துவந்த பாதைகளை நூற்றாண்டு விழா மலராகவும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
( நன்றி: தினத்தந்தி )

Read More...

இது என்ன ?பின்னூட்டத்தில் தெரிந்தவர்கள் ( தெரியாதவகளும் ) சொல்லலாம்.

Read More...

Friday, November 16, 2007

சிம்பு - நயன்தாரா பேட்டி


ஆனந்த விகடனில் வந்த சிம்பு நயன்தாரா பேட்டி இரண்டு பகுதிகள் மட்டும் இங்கே... முழு பேட்டியை விகடனில் படியுங்க ...

சிம்பு நமிதாவிடம்:

‘‘நான் கல்யாணம் செய்துக்கப் போறதில்லை நமீதா! என்னவோ அப்படித் தோணிடுச்சு. ஏன்னா, பவித்திரமான அன்புக்கு என் விஷயத்தில், பெண்கள் சரியா செட்டாக மாட்டேங்கி-றாங்க. இந்தக் காலத்துப் பொண்ணுங்க ரொம்ப ஃபாஸ்ட்! ஆம்பளைங்க நாங்க என்ன செய்றோம், காதல் உடைஞ்சுடுச்-சுன்னா, ‘மச்சி, அவ்வளவு-தான்டா, என் லைஃபே காலிடா!’னு ஃப்ரெண்ட்ஸ் கிட்டே புலம்பறோம். ஆனா, பெண்-கள் அதையே இன்னொரு புது பாய் ஃப்ரெண்ட்கிட்டே சொல்றாங்க. ம்ம்ம்... அப்படிப் போச்சு காலம்! அதனால், கல்யாணமே வேண்-டாம். ஆனால், எனக்குக் குழந்தை மட்டும் வேணும் நமீ! என்ன பண்ணலாம்?’’
என்றார் ஏக்கமாக.

நயன்தாரா

‘‘எனக்கு நேர்ந்த மாதிரி வந்தால், அது அவஸ்தைதான். காதல் எந்த நேரத்தில் வரும்னு சொல்ல முடியலியே! காதலில் சீரியஸாக இருக்கிறோமா, இல்லை-யானு யோசிக்கிற-துக்கு முன்னாடியே அது சீரியஸ் ஆகிடும். நமக்குத் தெரியாம-லேயே எல்லாம் நடந்துடும்.

அவர் இன்னமும் என்னைப் பற்றிப் பேசுறார். பாட்டுக்கூட எழுதுறார். எல்லாம் எனக்கும் தெரியும். ஒருத்தரை லவ் பண்ணோம்னா, அவரோட உள்ளும் புறமும் தெரியும். அவர் எந்த நேரத்-தில் என்ன செய்வார், எப்படிப் பேசுவார், என்ன-விதமாக நடந்துப்பார்னு எல்-லாமே நமக்குப் புரியும். அதனால இதைப் பற்றி எல்லாம் எனக்கு ஆச்சர்யமும் இல்லை; அதிர்ச்சியும் இல்லை. அந்த லவ் எவ்வளவு பிரியமா ஆரம்பிச்சதோ, அதே அளவில் என்னிடம் இருந்து போய்-விட்டது. ஆமாம், அந்தக் காதலும் நிஜம்... இந்தப் பிரிவும் நிஜம்!’’


கொசுறு செய்தி:
தனியாக வாழும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகம் சந்தோசமாய் இருப்பவர்கள் பெண்கள்.. Britain survey முடிவு..

அங்கே ஆய்வு நடத்தியதில் தனித்து வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தான் சந்தோசமாய் மற்றும் அரோகயமாய் இருக்கின்றனர் எனவும், Daily Telegraph என்னும் பத்திரிக்கை நடத்திய கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த கணிப்பு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் நடத்தப்பட்டு உள்ளது. இதோடு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வாழும் ஆண்கள், மனைவியுடன் வாழ்பவர்களைப்போல் சந்தோஷமாக இருப்பதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வயதான அன்பர்களே இது நிஜமா???

பிட் படம் ஓட்டும் இடத்தில் வயசானவங்க தான் இருப்பாங்க, அதே போல இந்த மாதிரி படம் பார்த்து இங்கே வந்தவங்களுக்கு மேலே உள்ள செய்தி... :-)

Read More...

கருணாநிதியை கைது செய்ய வேண்டும் - ஜெ பேட்டி

ஜெயலலிதா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்..


கேள்வி:_ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரே. இதுகுறித்து உங்கள் நிலை என்ன?

பதில்:_விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கம் ஆகும். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகள் இயக்கத்தை யார் ஆதரித்தாலும் அவர்கள் தேசவிரோதிகள், தேசதுரோகிகள். தேசதுரோக செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட சிலர் மீது பாய்வது ஏன் என்று புரியவில்லை.

விடுதலைபுலிகள் இயக்கத்தின் செயல்பாட்டையும், புலிகளின் தலைவர்களில் ஒருவரின் மறைவுக்கும் தமிழ்நாடு முதல்வர், தமிழக அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி, செய்தித்துறையின் மூலம் இரங்கல் வெளியிட்டுள்ளார். இதற்காக கருணாநிதியைத்தான் முதலில் கைது செய்திருக்க வேண்டும். ஏன் அப்படி செய்யவில்லை?.


கேள்வி:சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழகம் முழுவதும் வீரவணக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறதே...


பதில்:_எந்த வகையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தாலும் அது தேச துரோகம் தான். விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேரணி, ஆர்ப்பாட்டம் என எதுவும் நடத்தக்கூடாது. இத்தகைய பேரணிகளுக்கு அரசு அனுமதி அளித்தால் தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டும். விடுதலை புலிகள் விஷயத்தில் அ.தி.மு.க.தெளிவாக இருக்கிறது. அதுபோல் மத்திய அரசின் நிலையும் தெளிவாக இருக்க வேண்டும்.

கேள்வி: வைகோ கைதால் உங்கள் கூட்டணி பாதிக்குமா?

பதில்: தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியைப் பற்றி பேசுவோம். சிந்திப்போம். இப்போது எந்த கட்சியை எடுத்துக் கொண்டாலும், காங்கிரசானாலும், பாரதீய ஜனதாவானாலும் ஒரு காலகட்டத்தில் வைகோவின் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கின்றன. என்னை பொறுத்தவரை இப்போது கூட்டணி பற்றி பேச முடியாது.

கேள்வி:காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியுடன் சந்திப்பு குறித்து...

பதில்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கிருஷ்ணசாமியை மனிதாபமான அடிப்படையில் தான் சந்தித்தேன். அவரை எனக்கு பல ஆண்டுகளாகத்தெரியும். முன்னதாக காங்கிரசுடன் உறவு வைத்திருந்தபோதிலிருந்தே அவர் எனக்கு நல்ல நண்பர்.

கேள்வி: கேரள அரசு முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறதே?

பதில்:_முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த அணை தொடர்பாக நாங்கள் ஆட்சியில் இருந்தபோது உச்சதிமன்றத்துக்கு சென்று ஆணையை பெற்றோம். அதன்பிறகு வந்த மைனாரிட்டி தி.மு.க.அரசு எந்தவித தொடர் நடவடிக்கையும் எடுக்கவில்லை. முல்லைப்பெரியாறு அணை, பாலாறு பிரச்சனை போன்ற மக்கள் பிரச்சனைகளில், ஜீவாதார பிரச்சனைகளில் இந்த அரசு கவனம் செலுத்துவதில்லை.

கேள்வி:நந்திகிராமத்தில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:நந்திகிராமத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சம்பவங்கள் கவலையை அளிக்கிறது. மேற்கு வங்க மாநில அரசு இத்தகைய வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுக்கு அடங்கவில்லை என்றால் மத்திய அரசு தலையிட வேண்டும்.

கேள்வி:_2011_ல் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாமல் பா.ம.க.தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என பா.ம.க.நிறுவனர் கூறியுள்ளாரே?

பதில்: (சிரித்துவிட்டு) கனவு காண்பதற்கு அனைவருக்குமே உரிமை உண்டு.

கேள்வி:_அணு சக்தி ஒப்பந்தத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:_அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பாக குரல்கொடுத்த இந்தியாவின் முதல் அரசியல்வாதி நான்தான். அ.தி.மு.க. இதனை தொடர்ந்து எதிர்த்து தான் வருகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மத்திய அரசு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறது. அடிக்கடி உங்கள் நிலைப்பாட்டை ஏன் மாற்றிக்கொள்கிறீர்கள் என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். சில நெருக்குதல் காரணமாக தேர்தல் விரைவில் வரத்தான் செய்யும்.

கேள்வி:_தேர்தல் விரைவில் வரும் என்று எப்படி சொல்கிறீர்கள்
?

பதில்:எல்லாவிஷயங்களையும் விவரமாக சொல்லிவிடமுடியாது. எனக்குத்தெரியும் விரைவில் தேர்தல் வரும் என்று.

கேள்வி:3அணி எப்போது அமையும்?

பதில்:3வது அணி என்று ஒன்று இல்லை.

கேள்வி: தி.மு.க.வின் நெல்லை மாநாடு பொறுப்பு முதல்வரை அறிமுகப்படுத்ததான் என்று கூறப்படுகிறதே...

பதில்:அதுதான் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதே.

கேள்வி:_குஜராத் முதல்வர் மோடி பதவி விலகவேண்டும் என்று கோரப்படுகிறதே?

பதில்:_இனிமேல் பதவி விலகுவது எதற்காக. தேர்தல் தான் வருகிறதே.

கேள்வி:_தமிழகத்தில் சட்டம்_ஒழுங்கு எப்படி உள்ளது?

பதில்:_தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்தான் உள்ளது.

கேள்வி:_புதிய தொழிற்கொள்கை குறித்து உங்கள் கருத்து.

பதில்:_இது அர்த்தமற்ற ஒன்றாகும். புதிய தொழிற்கொள்கையின் மூலம் பல அறிவிப்புகளை செய்திருக்கிறார்கள். ஆனால் அதனை செயல்படுத்தும்வரை இந்த அரசு தொடராது.

கேள்வி:_பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது....

பதில்:_பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து நான் முதல்வராக இருந்தபோது 2006_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதன்பிறகு தேர்தல் வந்துவிட்டது. ஆட்சிமாற்றமும் ஏற்பட்டுவிட்டது. இதற்கு வேண்டிய தீர்வு காண தி.மு.க.அரசு எந்தவிதத்திலும் சிந்திக்கவில்லை.

கேள்வி:_உங்களுக்கு இப்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதா?

பதில்:_ஏதோ அதிகரிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுவதில்லை.

Read More...

Thursday, November 15, 2007

இது, மாய்மாலம் ! - கலைஞர் கவிதை - துக்ளக் கருத்து

இது, மாய்மாலம் ! என்ற தலைப்பில் கலைஞர் எழுதிய கவிதைக்கு சோவின் காட்டமான விமர்சனம்.


ஒரு முன்னாள் இந்தியப் பிரதமரைக் கொலை செய்த இயக்கத்தைச் சார்ந்தவர்
– தமிழகத்தில் அடைக்கலமாகியிருந்த, ஒரு இலங்கைத் தமிழர் இயக்கத்தைச் சார்ந்த பதினான்கு பேரையும், அவர்களுடைய தலைவரையும் தமிழகத்தின் தலைநகரிலேயே கொன்றுபோட்டக் கூட்டத்தைச் சார்ந்தவர் – தமிழகத்தில் வேறு பல குற்றங்களையும், இன்றுவரை ஆயுதக் கடத்தல்களையும் நடத்தி வருகிற அமைப்பைச் சார்ந்தவர்
– இலங்கையிலேயே பல தலைவர்களை மட்டுமல்லாமல், தமிழர்களையும், தமிழர் தலைவர்களையும் கொன்று குவித்த தீவிரவாதிகளைச் சார்ந்தவர் – தானாகவும் நிறையபேரைக் கொன்றவர் – தமிழ்ச்செல்வன் என்ற பெயருடையவர், இலங்கை ராணுவத்தின் விமானத் தாக்குதலின்போது மரணமடைந்தார்.

அதற்கு தமிழக முதல்வர் கலைஞர் கவிதை எழுதி கண்ணீர் அஞ்சலி
செலுத்தியிருக்கிறார். "இந்தியர்கள் அயல் நாட்டினர்; நாங்களும், சிங்கள மக்களும் சகோதரர்கள்; எங்களுக்குள் நடக்கிற விவகாரத்தில் தலையிட அந்நியர்களான இந்தியர்களுக்கு உரிமை இல்லை' – என்று பிரகடனம் செய்தவர்கள் விடுதலைப்புலிகள்.

இந்தியாவில், அவர்கள் அட்டூழியங்களைச் செய்ததற்காக – குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததற்காக – தடைசெய்யப்பட்ட இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம். இந்தத் தடையை விதித்துள்ள மத்திய அரசில், அங்கம் வகித்து, பல பதவிகளை அனுபவித்து வருகிற தி.மு.க.வின் தலைவர் கலைஞர், இப்போது விடுதலைப்புலிகளில் ஒருவரின் மரணத்திற்குக் கண்ணீர் வடித்து கவிதை எழுதியிருக்கிறார். இது தமிழக அரசின் செய்தித்துறை மூலமாகவே வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது, அதிகாரபூர்வமான அழுகை.

இந்திய மாநிலங்களின் ஒன்றின் முதல்வர், மத்திய அரசினால் தடைசெய்யப்பட்டுள்ள இயக்கத்தின் தலைவர்களில் ஒருவருடைய மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கிறார்; மத்திய அரசில் பங்கு வகிக்கிற கட்சியின் தலைவர், அந்த அரசின் தடை உத்திரவை துச்சமாக மதித்து, தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் நஷ்டத்திற்கு துக்கப்பட்டிருக்கிறார்.

அல்கொய்தா இயக்கத்தில் ஒருவர் மரணம் அடைந்தால் – அமெரிக்க மாநிலங்களில் ஒன்றினுடைய கவர்னர் துக்கம் தெரிவிப்பாரா? அப்படி தெரிவித்தால், அதற்குப் பிறகு அவர் தனது பதவியில் தொடர முடியுமா?

பிரிட்டனில் நாசவேலை புரிந்த இயக்கத்தின் தலைவர் ஒருவர் இறந்தால்,
அந்நாட்டில் முக்கிய பதவி வகிக்கிற யாராவது அழுது தீர்க்க முடியுமா? அப்படி அழுதுவிட்டு பதவியையும் அனுபவிக்க முடியுமா?

இவ்வளவு ஏன்? காஷ்மீரில் அராஜகம் புரிந்து வருகிற இயக்கங்களில் ஒன்றினுடைய தலைவர்களில் ஒருவர் மரணமடைந்தால், இந்திய அரசைச் சார்ந்த ஒரு அமைச்சர் கலங்கி கண்ணீர் சிந்தி, கவிதை எழுத முடியுமா? அப்படி ஒருவர் செய்தால், அதற்கு மேல் அவர் பதவியில் நீடிப்பாரா?

ஆனாலும், முன்னாள் இந்தியப் பிரதமரைக் கொன்ற இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரின் மரணத்திற்கு, இங்கே ஒரு மாநில முதல்வர் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்; பதவியிலும் தொடர்கிறார்! மத்திய அரசில் அமைச்சர்கள் பதவிகளை கேட்டுப்பெற்று, அனுபவித்துக் கொண்டே, அந்த அரசின் உத்திரவை எள்ளி நகையாடவும் செய்கிறார். நமது நாட்டைத் தவிர, (அதுவும், இந்த மாதிரி ஒரு விவஸ்தை கெட்ட கூட்டணி அரசு அரசாளுகிற சமயம் தவிர) வேறெங்கும் இது நடக்காது.

தமிழகத்தில் வேறு பல கட்சிகளின் தலைவர்களும் (வைகோ உட்பட) இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பதவிகளில் இல்லை. அவர்கள் செய்துள்ளது சட்டப்படி குற்றம் இல்லை என்றாலும், இந்நாட்டின் இறையாண்மை பற்றிய அக்கறையின்மை அவர்களிடம் தெரிகிறது. இதை மக்கள் கண்டிக்க வேண்டும். "இத்தகையவர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகிற தகுதியுடையவர்கள்தானா?' என்பதை வாக்காளர்கள் நன்றாகச் சிந்திக்க வேண்டும்.

ஆனால் முதல்வரின் அஞ்சலி, மற்றவர்களின் கண்ணீரிலிருந்து மாறுபட்டது. அவர் "இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடப்பதாகவும், இந்தியாவின் மாட்சிமையை மதிப்பதாகவும் – சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றவர். ஒரு மாநில முதல்வர், மத்திய அரசின் உத்திரவை கால்தூசியெனக் கருதுகிறார் என்றால், அது அரசியல் சட்டவிரோதம். இந்திய மாட்சிமைக்கு குந்தகம்.

ஆகையால் முதல்வரின் அஞ்சலி பற்றி அவரிடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும். இப்படிப்பட்ட முதல்வர், விடுதலைப்புலிகளின் மீதான தடையை இந்த
மாநிலத்தில், முறையாக அமல்படுத்துவாரா என்பதையும் மத்திய அரசு யோசிக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட இயக்கத்தினர் பற்றி, இவ்வளவு நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளவர், அந்தத் தடையை அமல்படுத்துவாரா? அல்லது அந்தத் தலைவர்களுக்கு இவர் வசதி செய்து தருவாரா? மத்திய அரசு இவ்விஷயத்தை நன்கு பரிசீலிக்க வேண்டும்.

முதல்வர், "இறந்தவர் தமிழர், நானும் தமிழன். அதனால் அஞ்சலி' என்று விளக்கம் அளித்திருக்கிறார். ஆட்டோ சங்கர், வீரப்பன் போன்றவர்கள் எல்லாம் கூட தமிழர்கள்தான். அவர்களுடைய மரணங்களுக்கு முதல்வர் ஏன் கண்ணீர் அஞ்சலி செலுத்தவில்லை? விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்ட தமிழர்கள், மற்றும் தமிழர் தலைவர்களில் எத்தனை பேருடைய மரணங்களுக்கு முதல்வர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்? ஒவ்வொரு தமிழனின் மரணத்திற்கும் இவர் அஞ்சலி செலுத்திக்கொண்டே இருக்கிறாரா?

ஆக, "தமிழன் என்பதால் "அஞ்சலி' என்பது மாய்மாலம். முதல்வருக்கு புலிகள் மீதுள்ள பரிவுதான் அவருடைய அஞ்சலிக்குக் காரணம். இப்படி இந்நாட்டின்
முன்னாள் பிரதமரைக் கொன்ற இயக்கத்தின் தலைவர்களில் ஒருவருக்கு – இன்னமும் இந்திய சட்டத்தைப் பொறுத்தவரையில், ராஜீவ் காந்தி கொலையில் முதல் குற்றவாளி என்கிற நிலையில் உள்ளவரின் இயக்கத் தலைவர்களில் ஒருவருக்கு – அஞ்சலி செலுத்தி, அந்த இயக்கத்தின் மீது தனக்குள்ள பரிவை, பட்டவர்த்தனமாக முதல்வர் காட்டிக்கொண்டுள்ள நிலையில் – "தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பை, இவருடைய அரசு எப்படி முறையாக நிர்வகிக்கும்?' என்ற கேள்வி எழுகிறது.

அடுத்த தேர்தலின்போது, வாக்காளர்களின் மனதை விட்டு இந்தக் கேள்வி அகலக்கூடாது.

Read More...

புதிரா புனிதமா

நேற்றிலிருந்து எது 'புனிதம்' எது 'புதிர்' என்று ஒரே குழப்பம்.
நெட்டில் தேடியதில் எனக்கு கிடைத்ததை கீழே உங்கள் பார்வைக்கு மட்டும்...Read More...

பாஸ் - லாஸ் ?

"சிவாஜி’ படத்தில் ரஜினி மொட்டை போட்டுக் கொண்டார். நிஜத்தில் எங்களுக்குத்தான் மொட்டை போட்டிருக்கிறார். கோடிக்கணக்கில் நஷ்டப்பட்டிருக்கிறோம். குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற அளவுக்கு விரக்தி எங்களை வாட்டுகிறது"
என்று படத்தை வாங்கிய (பெயர் சொல்ல விரும்பாத) விநியோகஸ்தர்கள் பலர் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜூவியில் கட்டுரை வந்திருக்கிறது.

என்னுடைய ஐந்து கேள்விகள் கீழே..

1. சிவாஜி படத்துக்கு டிக்கெட் விலையை அதிகமாக வைத்து விற்ற போது கலைஞர் ராஜாஜி எழுதிய ராமாயணம் படித்துக்கொண்டிருந்தார். சின்ன சின்ன கிராமத்தில் கூட முதல் ஒரு மாசத்துக்கு டிக்கெட் விலை அதிகாமாக வைத்து தான் ஓட்டினார்கள். அப்படியுமா லாஸ்
?

2. முதல் 4 வாரம் புக்கிங் என்று ரஜினி ரசிகர்கள் திரும்ப திரும்ப போய் படம் பார்த்தார்கள். என்ன சார் சவுக்கியமா என்று கேட்ட்வர்கள் கூட, என்ன சார் சிவாஜி படம் பாத்தாச்சா ? என்று கேட்டார்கள் ?" அப்படியுமா லாஸ் ?

3. ஷேர் மார்கெட்டில் பணம் போடுகிறோம், சில சமயம் ஊத்திக்கும், சில சமயம் நல்ல லாபம் வரும். அதே போல் தான் ரஜினி படமும். நல்ல லாபம் வரும் என்று வாங்கிவிட்டு, இப்ப ரஜினியும், ஏ.வி.எம், ஷங்கரை குறை சொன்னா எப்படி ?

4. 'ஒரு கூடை சன் லைட்' பாடலுக்கு கருப்பாக இருக்கும் ரஜினிக்கு வெள்ளையாக மேகப் போட்டு அசத்தியிருப்பார்கள். அதே போல இவர்களின் கருப்பு பணத்துக்கு இந்த மாதிரி நியூஸ் போட்டு வெள்ளையாக மேகப் போட டிரை பண்ணுகிறார்களா ?

5. ரஜினியை வைத்து ஷங்கர், ஏ.வி.ம் சம்பாதித்தார்களா, அல்லது இந்த நியூஸை போட்டு ஜூவி சம்பாதிக்கிறதா ? எது எப்படியோ கிளைமேக்ஸில் ரஜினி தலை மொட்டை, இப்ப நம்ப தலை.

இன்றைய பரண் பதிவு
இன்னும் படம் பார்க்காதவர்களுக்கு சிவாஜி படம் விமர்சனம்.

Read More...

Wednesday, November 14, 2007

FLASH: குஜராத் யாருக்கு

CNN-IBN கருத்து கணிப்பு

குஜராத் மக்கள் யாரை விரும்புகிறார்கள் - நரேந்திர மோடி
2002 - 38%
2007 - 40%

நரேந்திர மோடி
Is he a Effective Leader ? 56% people say yes
Has Gujarat prestige gone up ? 52% say yes2002 BJP got 10% lead
2007 based on the opinion poll says it is 5% only

63% குஜராத் மக்கள் மோடி நல்ல ஆட்சி செய்கிறார்கள் என்கிறார்கள்

விரிவான செய்தி கீழே...சிஎன்என் ஐபிஎன், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் திவ்யபாஸ்கர் இணைந்து நடத்திய இந்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் பிஜேபியை சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அதிக அளவில் செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு காணப்பட்ட செல்வாக்கை விட தற்போது அவருக்கு 4 சதவீத கூடுதல் செல்வாக்கு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. டிசம்பர் மாதம் 11 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெறவுள்ள தேர்தலில் பிஜேபிக்கு 45 சதவீத வாக்குகளும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 40 சதவீத வாக்குகளும் மற்றவர்களுக்கு 15 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

முந்தைய தேர்தலை விட தற்போது பிஜேபிக்கு 5 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைத்தால் 182 உறுப்பினர்கள் கொண்ட சட்டப் பேரவையில் பிஜேபி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது.

பிஜேபியின் வாக்கு விகிதம் ஒரேயொரு சதவீதம் மட்டும் அதிகரித்தால் கூட அக்கட்சிக்கும், காங்கிரசுக்கும் சம அளவிலேயே தலா 88 இடங்கள் கிடைக்கும் என்றும், இதர கட்சிகளுக்கு 6 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிகிறது.

சிறந்த முதலமைச்சராக நரேந்திர மோடிக்கு 40 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. பிஜேபி அதிருப்தி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கேசுபாய் பட்டேலுக்கு 4 சதவீத மக்களின் ஆதரவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் சங்கர்சிங் வகேலாவுக்கு 9 சதவீத வாக்காளர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.

எனினும் சவுராஷ்டிரா வடக்கு குஜராத் மற்றும் மத்திய குஜராத் பகுதிகளில் பிஜேபியின் செல்வாக்கு குறைந்திருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற மதக்கலவரங்களை மறந்து முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று 72 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read More...

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் !

குழந்தைகள் தினத்திற்கு அடுத்த தினம் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடங்குகிறது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கூடவே கூடாது என்று ஒத்த காலில் நின்ற இடது சாரி கட்சிகள் சோனியா, ராகுல் காந்தி அதை தொடர்ந்து பிரதமரின் சீன விஜயத்திற்கு பிறகு தங்கள் நிலைகளை மாற்றி சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சு நடத்த மத்திய அரசுக்கு ஒப்புதல் தெரிவித்து உண்மையான இடது சாரிகள் என்று மீண்டும் நிருபித்துள்ளார்கள்.

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் வெடித்து கிளம்பியுள்ள வன்முறை சம்பவம் தொடர்பாக அக்கட்சிகள் சமரசம் செய்து கொண்டது என்று பிஜேபி குற்றம் சாட்டியுள்ளது. இருக்கலாம் யார் கண்டது.

எது எப்படியோ இடது சாரிகள் சாரி கட்டிக்கொண்டு நாளை பாராளுமன்றம் வரலாம்.

நந்திகிராம் பிரச்சனையை எழுப்பி, மேற்கு வங்க மாநில அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு பிஜேபியும், அதன் தோழமை கட்சிகளும் வலியுறுத்தும் உடனே காங்கிரஸ், மற்றும் இடது சாரிகள் மோடியை இழுப்பார்கள். மூன்றாம் அணியும் நாமும் வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.

நாடாளுமன்றத்தின் பெரும்பகுதி நாட்கள் அமளியிலேயே கழிவது புதுசா என்ன ?

சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி திட்டுவார், கத்துவார் ஒத்திவைப்பார், ராஜிநாமா செய்ய போகிறேன் என்பார். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவார். நாடாளுமன்றத்தினால் எவ்வளவு செலவு வீண் என்று CNN-IBN, NDTV போன்ற டிவி சேனல்கள் சொல்லும். Times-Now நாடாளுமன்றத்தில் யார் தூங்குகிறார்கள் என்று படம் பிடித்து போடும்.

டிசம்பர் 6ஆம் தேதி என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

அப்பறம் சொல்ல மறந்துட்டேனே மகளிர் இட ஒதுக்கீட்டுப் மசோதா சோதாவாக முடியும்.


எப்படியோ நம் MPகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் !

Read More...

நாமம் போடுபவர்கள் படிக்க வேண்டிய பதிவு

இந்த ஆண்டு தீபாவளி மலர்கள் எல்லாம் ஒரு ரவுண்ட் பார்த்துவிட்டேன். தினமணி விமர்சனத்தை பாபா போட்டிருக்கிறார். அதே போல் தினமலரிலும் தீபாவளி விமர்சனம் போட்டிருந்தார்கள். இந்த இரண்டிலும் தினகரன் தீபாவளி மலர் பற்றிய விமர்சனம் மிஸ்ஸிங்.

பெரிய சைஸ் ஆனந்த விகடன் மாதிரி இருந்து விகடன் தீபாவளி மலர்.
கல்கி அதைவிட மோசம். மற்ற தீபாவளி மலர்கள் எல்லாம் ரொம்ப சுமார்.

இந்த ஆண்டின் சிறந்த தீபாவளி மலர் - தினகரன் தீபாவளி மலர் தான். ( 40 ரூபாய்க்கு இலவசம் வேற )

அதில் நாமம் பற்றிய கட்டுரை மிக அருமை. அதை கீழே தந்திருக்கேன். முக்கியமான பகுதிகளை மட்டும் தட்டச்சு செய்து, போட்டிருக்கேன் அதனால் பிழைகள் இருக்க வாய்ப்பு இருக்கு. படங்களை ஸ்கேன் செய்து போட்டிருக்கேன்.அந்த நாமம் ஒரு கிராமத்தையே வாழவைத்துக் கொண்டிருக்கிறது. நாமக்கட்டிகளை தயாரித்து, நாட்டுக்கே நாமம் போடும் அந்த கிராமம் ஜாடாரி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரிலிருந்து 10கிமி தொலைவில் கடலைக் காடுகளுக்கு நடுவில் அமைதியாக இருக்கிறது.

மொத்தம் 150 குடும்பங்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் காயும் நாமக்கட்டிகள் பளீரென்று நம்மை வரவேற்கின்றன.

ஜடேரிக்கு பக்கத்து கிராமமான தென்பூண்டிப் பட்டில் கிடைக்கிறது வெண்பாறை மண். இதைத் திருமண் என்று அழைக்கின்றனர். சுமார் 20 முதல் 30 அடி ஆழத்தில் வெண்பாறைப் படிமங்களாக இந்த மண் பதுங்கியிருக்கிறது. அந்தப் பாறையை உடைத்து, மாட்டு வண்டிகள் மூலம் கொண்டு வந்து சேர்க்கின்றனர். வெயிலில் நன்கு காயவைக்கப்பட்ட அந்த வெண்பாறைப் படிமங்கள் உடைத்து தூளாக்கப்படுகிறது. தூளாக்கபட்ட மண்ணுடன் சிறுது தண்ணீர் சேர்த்து கூழாக்கி செக்கு ஆலையில் கொட்டி பதமாக அரைக்கின்றனர். இதற்கு 'ஆலை ஓட்டுதல்' என்று பெயர். தேவையான பதம் கிடைக்க குறைந்தது மூன்று மணி நேரம் பிடிக்கிறது.

இதற்கு பிறகு தான் சவாலான வேலை. ஒன்றொடு ஒன்று குழாய்கள் மூலம் இணைக்கப்ப்ட்ட தொட்டிகள் இருக்கின்றன. தயாரிப்பின் அளைவைப் பொறுத்து இந்த தொட்டிகளின் என்ணிக்கை பத்திலிருந்து பதினைந்து வரை இருக்கிறது. கூழாக அரைக்கப்பட்ட மணல் கலவையை ஒரு தொட்டியில் கொட்டி, முழுவதும் தண்ணீரால் நிரப்பிக் கரைக்கின்றனர்.

இறுதியாக கிடைக்கும் வெள்ளைப் படிமக் குழைவை பெரிய பெரிய உருண்டைகளாகப் பிடித்து காய வைக்கின்றனர். மிதமான அளவு காய்ததும், அந்தக் குழைவை ஒன்று சேர்த்து உலக்கையால் இடித்து நன்கு மிருதுவாக்குகின்றனர். மிருதுவான மண்ணை ஒருவர் சிறிய துண்டுகளாக பிடித்துப்போட, இன்னொருவர் அதற்கு மரக்கட்டையால் தட்டி வடிவம் கொடுக்கிறார். ஒரே ஒரு நாள் வெயிலில் காய்ந்தால் போதும். நாமக்கட்டி தயார்.

100 நாமக்கட்டிகள் கொண்டது ஒரு பேக், 3000 பீஸ் கொண்டது ஒரு மூட்டை. சிறு உருண்டைகளை சாம்பலுடன் சேர்த்து திருநீறு உருண்டைகளாகவும் தயாரிக்கிறார்கள்.

திருப்பதி, ஸ்ரீரங்கம், பழனி, மைசூர் என பல ஊர் கோயில்களில் கிடைக்கும் நாமக் கட்டிகளும் திருநீறும் ஜடேரி கிராம மக்களின் உழைப்பு.


எங்களை வாழ வைக்கிறதுக்கு கடவுளா பாத்து இந்த திருமண்ணை கொடுத்திருக்காரு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பீஸ் நாமக்கட்டி போடுவேன். பீஸ் வேகமா போடலாம். ஆனா ஷேப் கொடுக்கிறதுதான் கொஞ்சம் நேரம் பிடிக்கும். - ஆரிமுத்து.

"இதானே பொழைப்பு.. வயித்தை நிரப்ப இந்த விட்ட வேற வழி? இந்த வயசுல வயக் காட்டில போய் வேல செய்ய முடியுமா? எங்கள வாழ வைக்கிறதே இந்த மண்ணுதான். இப்ப இந்த மண்ணையும் எடுக்கக்கூடாதுன்னு சொல்லி எங்க வயத்துல மண்ணை அள்ளிப் போடுறாங்க" - சரோஜினி பாட்டி வயது 85

எனக்கு விவரந் தெரிஞ்சு கரண்ட் வசதி இல்லாத நாள்லேர்ந்து செஞ்சுகிட்டு இருக்கோம். இதுவரைக்கும் இலவசமா மண் எடுத்திட்டு இருந்தோம். சிலருக்கு ஓட்டு போடலைங்கிறதால இப்ப வண்டி மண்ணுக்கு 35 ரூபா வாங்குறாங்க. அதனால நெரும்பிறை கிராமத்துல மண் எடுத்து பாத்தோம். அது அவ்வளவு தரமா இல்லை. ஒரு மூட்டை நாம கட்டி 150 ரூபாய். புரட்டாசி மாதிரி மாதங்கள்ல டிமாண்ட் இருக்கும் அப்ப ஒரு மூட்டை 300 ரூபாய். - தெய்வசிகாமணி.


குடிசை தொழிலாக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் இவர்களை இன்னும் எத்தனை தலைமுறை இப்படியே இருக்கபோகிறோம் என்ற கவலை வாட்டுகிறது.

இந்த கிராமத்தின் நுழைவாயிலில் கண்ணில்பட்ட வாசகம் "இலக்கு இல்லாத செயல் - ஒரு கனவு. செயல் இல்லாத இலக்கு - நேரத்தை வீணாக்குவது. இலக்குடன் கூடய செயல் - வளர்ச்சி"


வெளிநாட்டில் இருக்கும் ஐயாங்கார்ஸ் எல்லாம் கோவிலுக்கும் மடத்துக்கும் அள்ளி கொடுக்கும் டாலர்களின் ஒரு சிறு பகுதியை இந்த கிராமத்தை முன்னேற்ற, பள்ளிக்கூடம் கட்ட, கொடுப்பார்களா ?

Read More...

பாபாவை வணங்கிய சரத்குமார்

இந்த வாரம் ஜூவியில் கழுகார் சொன்ன தகவல் இது. ரஜினி சரத்குமாரிடம் பாபாவின் மகிமைகள் குறித்துப் சரத்குமாரிடம் பேசியதுடன் ‘சித்தர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில் விரைவில் சித்த புருஷர் ஆட்சிதான் ஏற்படப் போகிறது...’ என்று தனக்கு அருள்வாக்காகச் சொன்ன, ஒரு சாமியாரின் வார்த்தைகளையும் சரத்திடம் பகிர்ந்து கொண்டாராம்..."


அதைக்கேட்டு இமயமலை சென்று பாபாவை தரிசிக்க வேண்டும் என சரத் உணர்ச்சிவசப்பட... அவரை அமைதிப்படுத்தி, சென்னை படப்பையில் தனது நண்பர் ஹரி அமைத்திருக்கும் பாபா ஆசிரமத்துக்கு போகச் சொன்னாராம் ரஜினி. சரத்தும் கடந்த சனிக்கிழமை படப்பை பாபா ஆசிரமத்துக்குப் போய் பாபாவை வணங்கினாராம். விரைவில் இமயமலைக்கு செல்வதில் துடிப்பாக இருக்கிறாராம் சரத்!"

Read More...

வைகோ கைது: கருத்து கூற புலிகள் மறுப்பு

புலிகள் இயக்க அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தடையை மீறி சென்னையில் ஊர்வலம் செல்ல முயன்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கைது பற்றி விடுதலைப் புலிகள் இயக்கம் உடனடியாகக் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

( நன்றி: குமுதம்.காம் )

Read More...

Tuesday, November 13, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 13-11-07

இந்த வாரம் இட்லிவடை, முனிக்கு தீபாவளி நிகழ்ச்சிகளை பற்றி மட்டும் எழுதும் கடிதம்

ஹாய் முனி,

என்ன தீபாவளி எல்லாம் ஆச்சா ?
தீபாவளி டிவி நிகழ்ச்சி பத்தி இந்த கடிதத்தில். நோ அரசியல். ஓ.கேவா ?

பட்டாசு சத்தத்தால் சீக்கிரம் எழுந்து டிவியை போட்டேன்.

சங்கராச்சாரியார் கைதுக்கு பிறகு அவர் டிவிக்களில் (குறிப்பாக ஜெயா டிவியில்) அருளுரை வழங்குவதில்லை. அதே போல தீபாவளி மலர்களில் (கல்கியில் உட்பட) அவர் படம் வருவதில்லை. பொதிகை டிவியில் கூட அகோபில மடம் ஜீயர், பங்காரு அடிகளார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், குன்றக்குடி ஆதீனம் அருள் உரை வழங்கினார்கள். ஆனால் ஜெயேர்ந்திரர் மிஸ்ஸிங். ஒரு மாறுதலுக்கு ராஜ் டிவியில் இந்த முறை சங்கராச்சாரியார் அருளுரை வழங்கினார்(ராஜ் டிவி கலைஞர் கட்சி என்பதாலா என்று ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம்).

கலைஞர் டிவியில் விஜயின் அம்மா ஷோபா கர்(not)டிக் பாடல் பாடினார்.
கார்ட்டூன் நெட்வர்கில் - தி பவர்பப் கேர்ள்ஸ் வந்தது.

சில பட்டி மன்றங்களை பார்க்கநேர்ந்தது அதிகம் நடத்தியது, ஒன் அன் ஒன்லி லியோனி.

விஜய் டிவியில் லியோனி ("குடும்ப வாழ்வில் மனநிறைவு பெற்றவர்கள் அன்றைய பெண்களா? இன்றைய பெண்களா?' என்ற தலைப்பில்) எப்போதும் போல் சினிமா பாடல்களை பாடி வெறுப்பேத்தினார். அதே போல் ஜெய டிவியிலும் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

சன் டிவியின் பட்டிமன்றம் தான் பார்க்க கொஞ்சம் வித்தியாசமா இருந்தது.

75 ஆண்டு கால தமிழ் சினிமா மக்களுக்கு தந்து இருப்பது சாதனையாப அல்லது வேதனையா. இதை தலைப்பாக வைத்துக் கொண்டு சாலமன்பாப்பையா தலைமையில் சிங்கப்பூரில் நடந்த பட்டிமன்றத்தை சன் டி.வி. ஒளிபரப்பியது.

வேதனைகளே என்ற தலைப்பில் ராஜா, பாரதி பாஸ்கர் மற்றும் 2 சிங்கப்பூர் தமிழர்கள் பேசினார்கள். சாதனைகளே என்ற தலைப்பில் பாரதிராஜா, சத்யராஜ், குஷ்பு, ஸ்ரீபிரியா பேசினார்கள்.

நவீன மாற்றங்களுக்கு வழிகாட்டுவதும் சினிமாதான். இதில் தொப்புளை காட்டி விட்டார்கள் என்பதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. தொப்புளை காட்டுவது ஏன்ப பள்ளிக்கூடத்துக்கு வா என்றால் வர மாட்டான். மிட்டாய் தருகிறேன். மதியம் உணவு தருகிறேன் என்றால் பள்ளிக்கூடத்துக்கு வந்து விடுவான். அது மாதிரிதான் தொப்புளை காட்டித்தான் நல்ல விஷயங்களை பார்க்க அழைக்க வேண்டியதுள்ளது என்றார் பாரதிராஜா வடிவேலு, விவேக் எல்லாம் ஜாக்கிரதையா இருக்கனும். தமிழுக்கு அடுத்த காமெடி நடிகர் கிடைத்துவிட்டார்.

75 ஆண்டு தமிழ் சினிமா சாதனைகள் நிறைந்தது என்று தீர்ப்பளித்தார் சிவாஜியில் நடித்த சாலமன் பாப்பையா. அதன் பின் தமிழ் சினிமா பற்றி டி.ராஜேந்தர் என்னவெல்லாமோ பேசினார், அடுக்கு மொழியில் பேச வேண்டுமே என்பதற்காக ஏதேதோ அடுக்கினார். "அரச்ச மாவை அரைப்போமா,தொவச்ச துணிய தொவைப்போமா" என்ற பாடலுக்கு விளக்கம் கொடுத்தார் பாருங்க ஐயோ தங்கலடா சாமி. நான் சாலமன் பாப்பையாவாக இருந்தால் இந்த ஒரு காரணத்துக்காகவே தீர்ப்பை மாத்தி எழுதியிருப்பேன்.

இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, சில பேட்டிக்களையும் பார்த்தேன்...

இந்த முறை நடிகர் விஜய் செய்த இரண்டு நிகழ்ச்சிகள் சூப்பர். ஒன்று
நடிகர் விஜய் ராணுவ கிராமத் துக்கு சென்று அந்த கிராம மக்களுடன் நடிகர் விஜய் கொண்டாடிய தீபாவளி நிகழ்ச்சியை விஜய் டிவியில் ஒளிபரப்பினார்கள்.
அந்த ராணுவ கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தலா இரண்டு அல்லது மூன்று பேர் ராணுவத்தில் சேர்ந்து நம் நாட்டின் எல்லையை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுக்காக உயிரைக் கொடுத்த ஒரு வீரருக்கு விஜய் அஞ்சலி செலுத்தினார்.

"நான் படத்தில்தான் ஹீரோ. ஆனால் நாட்டில் நிஜமான ஹீரோ நீங்கள்தான் என்று அவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களிடம் கூறியது சூப்பர்.

"சிறையில் விஜய்" என்ற டிக்கர் தீபாவளிக்கு முந்தின நாள், கலைஞர் டி.வி-யில் ஓட அதை கொஞ்சம் நேரத்தில் "சிறைக் கைதிகளுடன் விஜய் உணர்ச்சிகரமான சந்திப்பு" என்று அறிவிப்பை மாற்றினார்கள். விஜய் ரசிகர்கள் டென்ஷன் தான் இதற்கு காரணம் என்று சொல்லுகிறார்கள். கலைஞர் டிவி என்பதற்காக இவர்களுக்கு அனுமதி அளித்தார்கள் என்றும் பேச்சு.

நடிகர் சிம்பு விஜய் டி.வி.க்காக இந்திய கடற்படையின் மிகப்பெரிய கப்பலுக்கு சென்று கடற்படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்திய சிம்பு கடைசியில் "என் ஆசை மைதிலி ரீ-மிக்ஸ் பாடலுக்கு ராணுவ வீரர்களுடன் குத்தாட்டம் போட்டார். கப்பலுக்கு விஜயகாந்த் கேப்டனாக வருவார் பார்த்தேன் கடைசி வரை வரலை.

'நம் நமிதா' நிகழ்ச்சி ஜெயா டி.வி.யில் நமுத்து போகாமல் இருந்தது.

"கவர்ச்சி காட்டி நடிக்கிறீர்களே.... என்ன காரணம் ?"

நமிதா பதில்: "எனக்கு பிளஸ்-பாயிண்டே கவர்ச்சிதான். அதனால்தான் இப்பவும் நான் கவர்ச்சியா வந்து இருக்கேன். இன்னும் ஒரு வருஷத்துக்கு என்னால் முடிந்த அளவுக்கு கவர்ச்சி காட்டுவேன். ஒரு வருஷத்துக்குப் பிறகு கவர்ச்சி நடிப்பில் இருந்து கேரக்டர் நடிப்புக்கு மாற திட்ட மிட்டுள்ளேன்" எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது.

"தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த விஷயம், பிடிக்காத விஷயம் ? எது"

பதில்: கவர்ச்சி ஆட்டத்துக்கு குறைவான பாடல்கள் கொடுப்பது பிடிக்கவில்லை. தமிழில் நிறைய திறமையான கலைஞர்கள் இருப்பது பிடித்துள்ளது"

பிடித்த நடிகர் யார்?
"ரஜினிதான் பிடிக்கும். ஒரே ஒரு படத்திலாவது ரஜினிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க வேண்டும்" என்பது நமீதாவின் தீராத ஆசையாம்.

தலை தீபாவளி கொண்டாடும் நடிகர்கள் என்று ஸ்ரீகாந்த் வந்தனா ஜோடியின் பேட்டியை காண்பித்தார்கள். ஸ்ரீகாந்த் வழிந்ததை பார்த்தால், இவர்களா இவ்வளவு சண்டை போட்டார்கள் என்று வியப்பு தான் ஏற்பட்டது.

ஸ்பெஷல் ஷோ இரண்டு பார்த்தேன்.

கலைஞர் டிவியில் மெயின் நிகழ்ச்சியாக தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழா முழுமையாக ஒளிபரப்பானது. நடிகைகள் போட்ட குத்தாட்டதால் ரிமோட்டை மாத்தாமல் கலைஞர் டிவியையே பார்க்க முடிந்தது.

கேடிவியில் முன்பு கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவை மீண்டும் ஒளிபரப்பி, தயாநிதி மாறனை காண்பித்தது. சிரிப்பை அடக்க முடியலை.

தீபாவளிக்கு அதிகம் பேரால் பார்க்கபட்ட நிகழ்ச்சி விளம்பரங்கள் - சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், கோல்ட் வின்னர் வாங்கியதற்கு தேங்க்ஸ் சொன்ன சிறுமி. மற்றும் வடிவேலு பேட்டி.

தீபாவளி நிகழ்ச்சியில் 95% சதவீத நிகழ்ச்சிகள் சினிமாவை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தீபாவளி கொண்டாட்டம் என்ற பெயரில், (தீபாவளி)மருந்து சைசுக்கு கூட சினிமா தவிர்த்து எதையும் காண்பிக்கவில்லை.

பல சமயம் எந்த சேனலை பார்த்துக்கொண்டிருக்கோம் என்று கீழே தெரிந்த லோகோவை பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

மக்கள் டிவியை இந்த சமயத்தில் பாராட்ட வேண்டும். கட்சிக்கு கொள்கை இருக்கோ இல்லையோ, அட்லீஸ்ட் டிவிக்கு இருக்கு. அதனால் தான் என்னவோ மற்ற டிவி லோகோவை போல் கீழே இல்லாமல் மேலே இருக்கு.

தீபாவளி அன்று மக்கள் டிவி பார்க்காதவர்கள் போல, தீபாவளி பண்டிகையை கொண்டாடாத கிராமங்களைப் பற்றி, அந்த கிராமங்களுக்கே சென்று அதற்கான காரணங்களை அறியும் ஒரு நல்ல நிகழ்ச்சி. சுவாரசியமாக இருந்தது. சபாஷ்.

தூக்க கலக்கதுடன்,
இட்லிவடை

Read More...

சுடுகாட்டில் நள்ளிரவில் வடை, டீ விருந்து

மக்களின் மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக, சுடுகாட்டில், நள்ளிரவுக்கு பின், வடை, டீ சாப்பிடும் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்துயுள்ளார்கள், "பாரத் ஜன் விஞ்ஞான் ஜதா' அமைப்பினர்.

வடமாநிலங்களில், தீபாவளிக்கு முதல் நாள், காளி சதுர்தசியாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில், நள்ளிரவுக்கு பிறகு, சுடுகாட்டில், சாமியார்கள் அல்லது பூஜாரிகளைக் கொண்டு யாகம் நடத்துவது வழக்கமாக உள்ளது. இந்த சிறப்பு பூஜை மூலம், அமானுஷ்ய சக்திகளை கட்டுப்படுத்தி, வசப்படுத்தலாம் என்று மக்கள் நம்புகின்றனர்.

இது மூட நம்பிக்கை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறப்பு பூஜை நடத்தும் நேரத்தில், சுடுகாட்டில் தேநீர், வடையுடன் காலை உணவு உட்கொண்டு பிரச்சாரம் செய்திருக்கிறார்கள் , "பாரத் ஜன் விஞ்ஞான் ஜதா' அமைப்பினர்.

குஜராத் மாநிலத்தில், பரவலாக அனைத்து சுடுகாடுகளிலும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தாலும், மாநில அளவில் போர்பந்தரில் உள்ள சுடுகாட்டில், காலை உணவு சாப்பிடும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்கள்.

சாமியார்களும், பூஜாரிகளும், மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்டு, அதன்மூலம் பணம் சம்பாதிப்பதாகவும், தேவையின்றி மக்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், "பாரத் ஜன் விஞ்ஞான் ஜதா' அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஜினி பற்றி ஒரு செய்தி போட்டால், கமல் பற்றி ஒரு செய்தி போடனும், விஜய் பற்றி என்றால் அஜித் பற்றி போடனும். அதே போல தான் இட்லி பற்றி செய்தி போட்டால், வடை பற்றி போடனும் :-)

Read More...

இட்லி சாப்பிட்டார் வைகோ

நேற்று கைதான வைகோ + தொண்டர்கள் இட்லி சாப்பிட்டனர் !

தமிழ்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ் ஈழவிடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பேரணி தலைவர் பழ.நெடு மாறன் தலைமையில் நடந்தது.

இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். போலீ சின் தடையை மீறி நடந்த பேரணியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். ஏராளமான ம.தி.மு.க.வினரும் விடுதலைசிறுத்தை கட்சியினரும், இந்திய தேசிய லீக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

சட்ட விரோதமாக நடந்து கொண்ட வழக்கில் வைகோ, பழ.நெடுமாறன், மல்லை சத்யா, மாவட்ட தலைவர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், வக்கீல் ராதாகிருஷ்ணன், சைதை மதியழகன், விடுதலைசிறுத்தைகள் கட்சி திருமாறன், இந்திய தேசிய லீக் தலைவர் பசீர்அகமது உள்பட 262 பேர் கைது செயப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும், எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியத்தில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு இரவு உணவாக இட்லி வழங்கப்பட்டது. வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொண்டர்களுடன் தொண்டராக நின்று இட்லி பொட்டலத்தை வாங்கி சாப்பிட்டனர். இது அவருடன் கைதான ம.தி.மு.க. தொண்டர்களை நெகிழ வைத்தது.

Read More...

நாய்க்குத் தாலி கட்டிய நவீன வாலிபர்

மானாமதுரை அருகே நடந்த சம்பவம் - தனது தோஷம் நீங்க தடபுடல் விருந்துடன் நாய்க்கு ஒரு இளைஞர் தாலி கட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள ஏ.விளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். 33 வயதாகும் இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஜாலியாக இருந்த 2 நாய்களை அடித்துக் கொன்று மரத்தில் கட்டித் தொங்கவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து செல்வக்குமாரின் கை,கால்கள் முடங்கின. காதும் சரிவரக் கேட்கவில்லை. இதற்குப் பல டாக்டர்களைச் சந்தித்து சிகிச்சை பெற்றார். இதன் விளைவாக செல்வக்குமார் கடந்த 2 ஆண்டுகளாகக் கம்பு ஊன்றி நடக்கிறார். சிறு, சிறு வேலைகளை மட்டும் தனக்குத் தானே அவர் செய்து கொண்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் ஒரு ஜோதிடரைப் பார்த்துள்ளார். இது நாய்களின் சாபம். நாய்க்குத் தாலி கட்டினால் இந்த தோஷம் நீங்கும் என்று அவர் யோசனை கூறியுள்ளார். அதன்படி செல்வக்குமாருக்கும், செல்வி என்ற நாய்க்கும் திருமணம் நடந்தது. முன்னதாக மணமகள் 'செல்வி'க்கு சேலைகட்டி ஊர்வலமாக கணபதி கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். செல்வக்குமார் மாப்பிள்ளை கோலத்துடன் மணமேடைக்கு வந்தார். இருவரும் மாலை மாற்றிக் கொண்ட பிறகு, மணமகன் நாய்க்குத் தாலி கட்டினார். தொடர்ந்து ஊராருக்கு தடபுடல் விருந்து கொடுக்கப்பட்டது. நாய்க்கு பன் கொடுக்கப்பட்டது. இது குறித்து மணமகன் செல்வகுமார் கூறுகையில், நான் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்துள்ளேன். மனைவி செல்வியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன் என்றார்

Read More...

Monday, November 12, 2007

16 "பிட்' அனைத்து தமிழ் எழுத்து தரக் குறியீட்டுக் குழு

கணினியில் அனைத்து தமிழ் எழுத்துகளும் இடம் பெற வாய்ப்பு என்ற தலைப்பில் தினமணி கட்டுரை. நொ கமெண்ட்ஸ்!
கணினி "யுனிகோடி'ல் அனைத்து தமிழ் எழுத்துகளும் இடம் பெறச் செய்வது தொடர்பாக தமிழக அரசு விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கணினியில் மொழி எழுத்துகளைக் கொண்டு வரும் முறைக்கு "யுனிகோடு' எனப்படுகிறது. இந்த "யுனிகோடி'ல் முதலில் ஆங்கிலம் புகுத்தப்பட்டது. இணையதள பயன்பாடு வந்த பிறகு, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகள் கொண்டு வரப்பட்டன.

இதன்மூலம், "வின்டோஸ்' என்ற மென்பொருளில் ஒரே நேரத்தில் ஆங்கிலம் உள்பட பல மொழிகளையும் பார்க்க முடிகிறது.

மேலும், கணினியில் பல மொழிகளைக் கொண்டு வரும் முயற்சியாக "16 பிட் என்கோடிங்' முறை ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம், "யுனிகோடி'ல் 65,536 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு, புதிதாக பிற மொழி எழுத்துகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டது.

இதன் பின்னர், 1980-களின் பிற்பகுதியில் புதிதாக எழுத்துகள் சேர்ப்பது தொடர்பாக உலக அளவில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

தற்போது, கணினியில் தமிழ் மொழி பல்வேறு வழி முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தைப் போல தமிழ் மொழியையும் உலக அளவில் ஒரே முறையில் பயன்படுத்துவது தொடர்பாக மலேசியாவில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் 16 "பிட்' அனைத்து தமிழ் எழுத்து தரக் குறியீடு என்ற குழுவை தமிழக அரசு அமைத்தது.

இதைத் தொடர்ந்து, தமிழ் மொழிக்கு உயிர் எழுத்துகள் உள்பட 247 எழுத்துகள் மற்றும் குறியீடுகள் சேர்த்து மொத்தம் 384 இடங்கள் தேவைப்படுகின்றன எனக் கணக்கிடப்பட்டது. "யுனிகோடி'ல் 484 இடங்கள் காலியாக இருப்பதால், நம் கோரிக்கை ஏற்கப்பட்டது.

பின்னர், "யுனிகோடி'ல் அனைத்து தமிழ் எழுத்துகள் மற்றும் குறியீடுகள் கொண்டு வரப்பட்டால், அதன் பயன்பாடு எவ்வாறு இருக்கும்? என்பது தொடர்பாக பதிப்புத் துறை, மின்னணு நிர்வாகம் உள்பட 3 துறைகளில் பரிசோதனை செய்யப்பட்டது.

அண்மையில், சென்னையில் நடைபெற்ற 16 "பிட்' அனைத்து தமிழ் எழுத்து தரக் குறியீட்டுக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில், 3 துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றிகரமாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது என்றார் குழுவின் துணைத் தலைவரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான மு. பொன்னவைக்கோ.

அவர் மேலும் கூறியது:

"சென்னையில் 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள தெற்காசிய மொழிகளுக்கான துணைக் குழுக் கூட்டத்தில் சோதனை முடிவுகள் தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே, தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களும் "யுனிகோடி'ல் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

தற்போதுள்ள முறையால் கால விரயம் ஏற்படுகிறது. உதாரணமாக, "கொடு' என்ற வார்த்தைக்கு 4 முறை தட்டச்சு செய்ய வேண்டும். ஆனால், "யுனிகோடி'ல் அனைத்து தமிழ் எழுத்துகள் மற்றும் குறியீடுகள் சேர்க்கப்பட்டு விட்டால், "கொடு' என்ற வார்த்தைக்கு 2 முறை தட்டச்சு செய்தாலே போதுமானது. இதன் மூலம், கால விரயத்தைத் தவிர்க்கலாம். மேலும், மின்னணு நிர்வாகத்துக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்றார் பொன்னவைக்கோ.

Read More...

குஜராத் ஆகிறது கர்நாடகம் - எடியூரப்பா பதவி ஏற்றார்

இன்று பகல் 12 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்தது. முதல் - மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ராமேஸ்வர் தாகூர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

"எடியூரப்பாவிடம் ஆட்சியை ஒப்படைத்தால் கர்நாடகா இன்னொரு குஜராத் ஆகும்" சில வாரங்களுக்கு முன் குமாரசாமி சொன்னது.

துக்ளக் தலையங்கத்தின் ஒரு பகுதி கீழே...


கர்நாடகத்தில் இவ்விஷயத்தில் என்ன நடந்தாலும், அது கேவலம்தான்.
பா.ஜ.க.விற்கு ஜனதா தளத்தின் ஆதரவு உறுதியான நிலையில் (நிபந்தனைக்கு முன்), அவர்களை ஆட்சி அமைக்க அழைக்காதது – கவர்னர் நடத்திக் காட்டிய கேவலம்; பா.ஜ.க.விற்கு ஜனதா தளத்தின் நிபந்தனையற்ற ஆதரவு கிட்டியபோது, அவர்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்காதவாறு பார்த்துக் கொண்டது – சோனியா காந்தி புரிந்த கேவலம்; ஜனதா தளத்தைப் பிளந்து ஒரு ஆட்சி உருவாக்க முனைந்தது – காங்கிரஸின் கேவலம்; இப்போது ஜனதா தளம், மீண்டும் தனது ஆதரவை சந்தேகத்திற்குரியதாக்கியுள்ள நிலையில், எப்படியாவது அவர்களை சமாதானப்படுத்தி ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயல்வது – அக்கட்சிக்கு கேவலம்.

இந்தக் கேவலங்களின் ஊர்வலத்தில், மிகவும் மட்டமான கேவலம் – பா.ஜ.க.வின் கேவலம்தான்.


Read More...

Sunday, November 11, 2007

கேப்டனை வளர்க்கும் திமுக

இன்று Deccan Chronicleல் வந்த செய்தி:

"Reacting to the DMK president and CM M.Karunanidhi's call to his party men for the youth to ensure the party's growth, film star and DMDK leader Vijayakath demamded to know on Saturday whether the CM would be willing to replace the dozen old ministers in his cabinet with young blood.


இன்று இதற்கு திமுகவிலிருந்து வந்த ரியாக்ஷன் கீழே...

நாட்டில் புதுசு, புதுசாக எத்தனையோ கட்சிகள் தோன்றுகின்றன. அந்தக் கட்சிகளுக்கு கொள்கையோ, லட்சியங்களோ, கோட்பாடு களோ கிடையாது. அவர்களின் ஒரே குறிக்கோள் அடுத்த முதல்வராக தான் வர வேண்டும் என்பதுதான். அதற்கு தி.மு.க. விதிவிலக்காக வந்து உள்ளது. - ஸ்டாலின்


தி.மு.க. பதவிக்காக உரு வாக்கப்பட்ட இயக்கமல்ல. சிலர் கலைஞர் பதவிக்காகவும், அவரது குடும்பத்தினரின் பதவிக்காகவும் உழைத்துக் கொண்டு இருக்கிறார் என்று பேசுகிறார்கள். அவர்கள் ஆசைப்படுவதில் தவறில்லை. அதற்குள் நான் போக விரும்பவில்லை.

இந்த இயக்கத்தை வீழ்த்துவேன் என்று தலைநிமிர்ந்து ஒருவர் பேசுகிறார். அவர் யார்ப அவர் தமிழக மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்ப அவர்களை அனுமதித்தால் தமிழகம் பேரழிவை சந்திக்கும். தமிழகத்தின் உரிமை பறிபோய், வளர்ச்சி பாதிக்கப்படும். ஒருவர் அவரது மச்சானுக்கும், மனைவிக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கி விட்டு கலைஞர் குடும்ப அரசியல் நடத்துவதாக பேசுகிறார். இதுபற்றி பேச அவருக்கு என்ன தகுதி உள்ளது. நமது மாவட்டத்தில் அந்த இயக்கத்தை வீழ்த்திக்காட்ட வேண்டும். அவர்களை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. - வீரபாண்டி ஆறுமுகம்

Read More...

கலைஞர் இரங்கல் பா - இளங்கோவன் கடும் தாக்கு

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த விஷயம் தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதியை மத்திய அமைச்சர் இளங்கோவன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்


மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மரகதம் சந்திரசேகரின் பிறந்தநாள் விழா சத்யமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மறைந்த தலைவரின் உருவ படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியது..

மறைந்த மரகதம் சந்திரசேகர், தமிழக காங்கிரசுக்கும், அகில இந்திய காங்கிரசுக்கும் பாலமாக விளங்கினார். ஆனால் இன்று தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று டெல்லிக்கு தெரியவில்லை.

ராஜீவ் காந்தியை எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொன்றார்களோ, அதே இயக்கத்தைச் சேர்ந்தவர் இறந்ததற்காக இங்கு ஊர்வலம் நடத்துகிறார்கள். போஸ்டர் ஒட்டுகிறார்கள். பெரிய பதவி வகிப்பவர்கள் இரங்கல் பா பாடுகிறார்கள், அதை அரசு துறையே வெளியிடுகிறது. இது எவ்வளவு பெரிய அவலம். கேட்டால், தமிழ் உணர்வு என்கிறார்கள். இந்த இயக்கத்தால் எத்தனையோ அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டார்களே அவர்களுக்கு தமிழ் உணர்வு இல்லையா? நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்போதும் உறங்கி கொண்டிருக்க வேண்டும், அடங்கி கிடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் மெஜாரிட்டி இல்லாத போது, நம்மை அரசில் சேர்த்திருக்க வேண்டுமா? வேண்டாமா? ஆனால் இப்போது இருக்கும் நிலையை பார்க்கும் போது நாம் சேராமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.

தினந்தோறும் வன்முறை நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை சின்ன சம்பவம் என்று எடுத்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆமாம் சாமி போடுவதற்காகவா நாம் காங்கிரசில் இருக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றால் சிலருக்கு கோபம் வருகிறது. நீங்கள் ஆட்சிக்கு வரும் போது அதையெல்லாம் தடுத்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இதை நான் சொன்னால் இளங்கோவனை அடக்கி வையுங்கள் என்று சொல்கிறார்கள்.

நான் அடங்கி, ஒடுங்கி தான் போய் கொண்டிருந்தேன். விடுதலைப்புலிகளை ஆதரித்து, போஸ்டர் ஒட்டி, ஊர்வலம் நடத்துவதை பார்க்கும் போது எப்படி சும்மா இருக்க முடியும்?
ராஜீவ் காந்தியை கொன்றவர்களை நாம் எப்படி மன்னிக்க முடியும்? ராஜீவ் கொலையை ஒரு துன்பியல் சம்பவம் என்று அந்த அமைப்பின் தலைவர் ஆணவமாக பதில் கூறியிருக்கிறார்.

தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க நாம் என்ன அடிமைகளா? நாம் ஜால்ட்ரா அடித்து கொண்டே இருக்க வேண்டுமா? வெள்ளைக்காரர் களிடமிருந்து அடிமைத்தனத்தை உடைத்தெறிந்த நாம் இப்போது அடிமையாக இருக்க வேண்டுமா?

முதல்வருக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த போக்கை வளரவிட்டால் நமக்கே ஆபத்தாகத்தான் முடியும். நாம் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லி கொண்டிருக்கிறோம். விரைவில் விடிவுகாலம் வரும்.

Read More...

சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி மோதல்

காங்கிரஸ் அலுவலகத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த கோஷ்டி மோதலின் காரணமாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் படுகாயம் அடைந்தார். மூன்று பேருக்கு அருவாள் வெட்டு

Read More...

திமுக அரசு மைனாரிட்டி அரசு தான் - ராமதாஸ்

அதிரடி அரசியலுக்குப் பேர் போனவர் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே ஆளுங்கட்சிக்கு அவ்வப்போது குடைச்சல் கொடுத்து வரும் இவர், சமீபத்தில் ‘எதிர் வரும் தேர்தலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இடம் பெறாத மாற்று அணி ஒன்றை உருவாக்கி, பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும் வகையிலான திட்டம் தீட்டி வருகிறோம்’ என்றொரு தகவலை வெளியிட்டு, அரசியல் களத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளார்.

பலருக்கு வியப்பையும், சிலருக்குத் திகைப்பையும் கொடுத்துள்ள இந்த அறிவிப்பு பற்றி விளக்கமறிய ராமதாஸை தைலாபுரத்திலுள்ள அவர் வீட்டில் சந்தித்துப் பேசினோம். தனது கம்ப்யூட்டரில் பூச்செடிகளை ஸ்கேன் செய்தபடி நமது கேள்விகளை எதிர் கொண்டார்.தமிழக அரசியலில் நீங்கள் மட்டுமே முக்கியப் புள்ளியாக இருக்கிறீர்கள். நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு உரிய இடத்திலிருந்து உரிய மதிப்பு உடனடியாகக் கிடைத்து விடுகிறது! இது உங்களுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று?

‘‘எங்களது பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருவதால் மட்டுமே இது சாத்தியமானது. அதாவது எதையும் தீர்க்கமாக யோசித்து, அதை எங்கள் அரசியல் குழுவில் தீவிரமாக விவாதித்து, மக்களுக்கான பிரச்னைகளைக் கையிலெடுத்து போராட்ட வடிவம் வரை கொண்டு செல்வதால்தான் இது சாத்தியமாகிறது.’’

இப்படியெல்லாம் தீர்க்கமாக யோசிக்கும் உங்கள் கூட்டணி தர்மம் மட்டும் குழப்பமாக இருக்கிறதே?

‘‘கூட்டணி என்பது பற்றிய விளக்கத்தை நான் நிறைய முறை விரிவாகவே சொல்லி விட்டேன். இப்போது தமிழகத்தில் செயல்படுவது கூட்டணி அரசு அல்ல. கூட்டணியும் அல்ல. தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு வைத்திருந்தோம். அது தேர்தலோடு முடிந்து விட்டது. இப்போது இருக்கின்ற அரசு சிறுபான்மை அரசு. இதற்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாததால், எங்களின் கூட்டணி இருந்தால்தான் ஆட்சியை தி.மு.க. தொடர முடியும் என்ற நிலையிருப்பதால் ஆதரவு கொடுத்திருக்கிறோம். இந்த ஆதரவை, எந்தச் சூழ்நிலையிலும் வாபஸ் பெற மாட்டோம். அதே சமயம், எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறோம். இதில் எங்களுக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. சில ஊடகங்கள்தான் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றன.

இன்னும் தெளிவாகச் சொன்னால், எங்களுடைய கொள்கை வேறு. வழிமுறை வேறு. இலக்கும் வேறு. எங்களுக்கென்று தனிப்பாதை இருக்கிறது. இப்படியிருக்கையில், கூட்டணி என்று சொல்லிக் குழப்புவதில் அர்த்தமே இல்லை. இப்போதைய அரசு குறைந்தபட்ச செயல்திட்டமோ, அதற்கான குழுவையோ நியமிக்காத நிலையில், நாங்கள் அரசை விமர்சிக்க மட்டுமே செய்வோம். எங்கள் விமர்சனம் சில சமயம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களுக்கு தர்ம சங்கடத்தைத் தரலாம். அதே சமயம், எங்கள் விமர்சனத்தை முதல்வர் கலைஞர் சரியாகப் புரிந்து கொள்கிறார். இது போதும்.’’

உங்களைப் புரிந்து கொண்ட முதல்வர் கலைஞர் தானே ‘மதியாதார் வாசல் மிதியாதே’ என்றெல்லாம் கேள்வி பதிலில் கூறியிருந்தார்?

‘‘கலைஞர் அதை எந்தச் சூழ்நிலையில், யாரைக் குறிப்பிட்டு, எதற்காகச் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. இதை எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லியிருக்கும் பட்சத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.’’

அதிருக்கட்டும். தி.மு.க. கொண்டுவர நினைக்கும் துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம், நெய்வேலி அனல் மின்திட்டம் போன்றவை பா.ம.க.வின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் வகையில் உங்கள் ஏரியாவில் கொண்டு வருவதால்தானே எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள்?

‘‘அப்படிச் சொல்ல முடியாது. ஓசூர், மதுரை போன்ற நகரங்களில் கூட சில திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறோம். டைட்டானியம் தொழிற்சாலை விவகாரத்தில் 2000 பெண்களை அழைத்து, முதன் முதலில் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் எதிர்ப்புத் தெரிவித்தது நான்தான். ஆக, மக்களைப் பாதிக்கும் விதத்தில் எங்கு பிரச்னை வந்தாலும் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். அதே சமயம், பா.ம.க.வின் வாக்கு வங்கி தமிழகம் முழுக்க வியாபித்துள்ள நிலையில், இந்தக் கேள்வியே தவறாக இருக்கிறது. மேலும் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் கூடவே கூடாது என்பதற்காக, முதன்முதலாக மாபெரும் மாநாடு நடத்தியதும் நாங்கள்தான். இந்த மண்டலம் எங்கள் வாக்கு வங்கியைக் குறிவைத்துத் தொடங்கப்பட்ட திட்டமல்ல என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.’’

இதற்கிடையில் நீங்கள் பல்வேறு திட்டங்களை அறிக்கையாகக் கொடுத்து வருகிறீர்கள். மாதிரி பட்ஜெட்டைக் கூட பல வருடங்களாகக் கொடுத்து வருகிறீர்கள். இதில் எதையாவது தி.மு.க. தலைமை படித்துப் பார்த்து விளக்கம் கேட்டுள்ளதா?

‘‘நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு அறிக்கையையும் எல்லா அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இதுவரை அது பற்றி யாரும் விளக்கமும் கேட்டதில்லை; வினாவும் எழுப்பியதில்லை. இவர்கள் இதையெல்லாம் படிக்கிறார்களா என்பதும் சந்தேகம்தான். அதே சமயம் எல்லாத் திட்டங்களையும் கலைஞர் படிக்கிறார் என்று மட்டும் தெரியும்.’’

கலைஞர் ஆட்சியில் காவல்துறையும், கல்வித் துறையும் கெட்டுக் கிடக்கிறது என்று பகிரங்கமாகச் சொல்லி வருகிறீர்கள். மற்ற துறைகளில் குறைகளே இல்லை என்று கருதுகிறீர்களா?

‘‘எல்லாத் துறைகளிலும் குறை இருக்கத்தான் செய்கிறது. மணல் பிரச்னையிலிருந்து வேளாண் பிரச்னை வரை பலவற்றிலும் குறை இருக்கவே செய்கிறது. எல்லா சர்க்கரை ஆலைகளிலும் ஒரு மாதத்தில் கரும்பை வெட்டி அதற்குரிய பணத்தைக் கொடுப்பதாக அமைச்சர் சொல்ல முடியுமா? இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் வாழ்வதா? சாவதா? என்ற நிலையில்தான் இருக்கிறார்கள்.’’

இந்தப் பிரச்னையை மனதில் வைத்துத்தான் சேலம் ரயில்வே கோட்ட விழாவில் வீரபாண்டி ஆறுமுகத்தை அவமானப்படுத்தினீர்களாக்கும்?

‘‘அவர் ஊரில் நடந்த அந்த விழாவில் அவருக்குரிய மரியாதையைக் கொடுக்கத்தான் செய்திருக்கிறோம். உண்மையைச் சொல்லப்போனால், அவர்தான் எங்கள் கட்சியையும் பா.ம.க. நிர்வாகிகளையும் பல சூழ்நிலைகளில் புறக்கணித்து அவமானப்படுத்தி வந்துள்ளார். சேலம் தொகுதியின் முடிசூடா மன்னரான அவர், எவ்வளவு பெரிய அமைச்சர்? அவரை நாங்கள் அவமானப்படுத்த நினைக்கக்கூட முடியாதே!’’

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் செல்வாக்கு வளர்ந்து வருவதை ஒப்புக் கொள்கிறீர்களா? இல்லையா?

‘‘சில கேள்விகளுக்கும், சிலரைப் பற்றிய கேள்விகளுக்கும் நான் பதில் சொல்வதைத் தவிர்த்து வருகிறேன். புரிகிறதா?’’

சரி, பொதுவான கேள்வி ஒன்று. நடிகை குஷ்பு போன்றவர்கள் ஆதரிக்கும் பாலியல் கல்வி அவசியம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

‘‘இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும். பரவலான கருத்துக் கேட்பு நடத்தப்பட்டு அமலாக்கப்படவேண்டிய விஷய மிது. நமக்கு அடிப்படை பாலியல் கல்வி வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அதே சமயம், இந்தக் கல்வியை, எந்த வகுப்பிலிருந்து போதிப்பது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இந்தக் கல்வியில் ரொம்ப முழுமையாகப் போகாமல் ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பற்றி அதன் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றைச் சொல்லிக் கொடுக்கும் விதத்தில் மட்டும் இருந்தால் நல்லது.’’

இப்படி பல விவகாரங்களுக்கும் ‘பளிச்’ என்று பதில் சொல்லும் நீங்கள் முதல்வராக, கலைஞர் வாழ்த்தெல்லாம் கூறியிருந்தார். அந்த வாழ்த்தில் கிண்டல் அல்லது உள்நோக்கம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

‘‘கலைஞர் என்னைக் கிண்டல் அல்லது உள்நோக்கத்துடன் வாழ்த்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அவர் வாழ்த்து உண்மையானது. பலிக்கக் கூடியது. வசிஷ்டர் வாயால் வாங்கிய வாழ்த்து அது. மனதாரத்தான் அவர் வாழ்த்தியிருக்கிறார்!’’

உங்களின் போக்கு தி.மு.க.வுக்கு எதிராகப் போவது போல் வெளிப்படையாகவே தெரிகிறதே?

‘‘உண்மையில் தி.மு.க.தான் பா.ம.க.வுக்கு எதிராகப் போவது போல் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆற்காட்டார் சமீபத்தில் தனித்துப் போட்டியிட்டு 150 இடங்களைப் பிடிப்பது நிச்சயம் என்கிறார். அதை தலைவர் கலைஞர் ஆமோதித்துக் கொள்கிறார். இப்போதெல்லாம் வளர்ந்த கட்சிகள் மட்டுமன்றி, நேற்று கட்சி ஆரம்பித்தவர்களே தனித்துப் போட்டியிட்டு ஆட்சி அமைப்போம் என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது. இதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.’’

நீங்கள் ஆரம்பத்திலிருந்தே விமர்சனம் என்ற பெயரில் தி.மு.க.வுக்கு தர்மசங்கடத்தைத் தொடர்ந்து கொடுக்கிறீர்கள். உண்மையில் இந்த ஆட்சி உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

‘‘நான் எப்போதும் வெளிப்படையாக கருத்துத் தெரிவிப்பவன் என்று எல்லோருக்குமே தெரியும். மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாகப் பேசி வருவதால் நல்லதும் நடந்துள்ளது. கெட்டதும் நடந்துள்ளது. என் கருத்து தி.மு.க.வுக்கு மனக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கலாம். அதற்காக என் போக்கை மாற்றிக் கொள்ள முடியாது. இதே ஆட்சியில் சில நல்ல விஷயங்கள் நடந்த போது பாராட்டியும் இருக்கிறேன். ஆக, ஆட்சி பற்றி புதிதாக கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை.’’

இதற்கிடையில் மாற்று அணி ஒன்றை உருவாக்கி தலைமை தாங்கப் போவதாக அறிவித்துள்ளீர்கள். அதற்கான தகுதி பா.ம.க.விற்கு இருக்கிறதா என்ன?

‘‘இந்தக் கேள்விக்கு நான் கொஞ்சம் விரிவாகவே பதில் சொல்லிவிடுகிறேன். எந்த ஒரு கட்சியும் யாருக்காவது துணைக் கட்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. நான் முன்னரே சொன்னது போல் இரண்டு பேர் சேர்ந்து நேற்று கட்சி ஆரம்பித்துக் கொண்டு, ஒருவரையருவர் வருங்கால முதல்வர் என்று அழைத்துக் கொள்ளும் போக்குதான் இருக்கிறது. இந்நிலையில், நாங்கள் 1989_ல் பா.ம.க.வை ஆரம்பித்து 18 வருடங்கள் ஆகின்றன. நாங்கள் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருக்கிறோம். அ.தி.மு.க.வுடன் துணை போயிருக்கிறோம். இதெல்லாம் ஒரு துணைக் கட்சியாகச் செயல்பட்ட காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்போது பா.ம.க. ஒரு முழுமையான அரசியல் கட்சியாக அவதாரம் எடுத்துவிட்டது. முன்பு எங்களுக்கு வடக்கே மட்டும் பலம் இருப்பதாகச் சொல்லி வந்தார்கள். ஆனால் இப்போது பா.ம.க. வடக்கில் மட்டுமின்றி தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதிகளிலும் செல்வாக்குப் பெற்றிருக்கிறது.

இந்த முழுமையை அடைய தீவிரமாக உழைத்து வருகிறோம். இங்குள்ள பெரிய கட்சிகள் காட்டாத உழைப்பை, வியர்வையை, ரத்தத்தைச் சிந்தி வளர்ந்து வருகிறோம். அரசியல் ரீதியாக எடுத்துக் கொண்டால் 234 தொகுதிகளிலும் தொகுதி மாநாடு நடத்தியிருக்கிறோம். அத்தனை தொகுதிகளுக்கும் நான் போயிருக்கிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் அமைப்பும், கட்சியும் இருக்கப் போய்த்தானே இது சாத்தியமாகி இருக்கும்.

அடுத்து, சமய சமுதாய நல்லிணக்க மாநாடு. கிட்டத்தட்ட 14 மாநாடு நடத்தியுள்ளோம். இதன் மூலம் பல்வேறு மதத் தலைவர்களை ஒருங்கிணைத்தோம். இதையடுத்து தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்னையான நதிநீர் விவகாரத்தில் அதிரடியாக பல போராட்டங்கள் நடத்தினோம். முல்லைப் பெரியாறு விஷயத்திற்காகவும் காவிரி, பாலாறு பிரச்னைக்காகவும் போராட்டம், வழக்கெல்லாம் நடத்தி வருகிறோம். அது போல் மொழி என்று எடுத்துக்கொண்டால், ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ் முழக்கம்’ என்ற நிலை மாறி மறைந்து விட்டது. ஆட்சி மொழி, பயிற்சி மொழியில் மட்டுமின்றி விளம்பரப் பலகை தொடங்கி சின்னத் திரை, பெரிய திரை, ஊடகங்களிலும் தமிழ் மொழி காணாமலே போய்விட்டது. இதற்காகக் குரல் கொடுத்த பா.ம.க.வின் பங்கை யாராலும் மறுக்க முடியாது.

அதுபோல கடந்த ஐந்து வருடங்களாக மாற்று நிதி நிலை அறிக்கை கொடுத்து வருகிறோம். சில அறிக்கை, அரசின் அறிக்கையை விட நிறைவாக இருப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளார்கள். மேலும் தொழில் கொள்கை, விவசாயக் கொள்கை, ஊரக வளர்ச்சிக் கொள்கை போன்றவற்றின் தொலை நோக்குத் திட்டங்களைக் கொடுத்துள்ளோம்.

எங்களது அறிக்கைகளை நடைமுறைப்படுத்தினாலே தமிழகம் பொற்காலத்தை அடைந்துவிடும். அந்த அளவிற்கு சிறப்பான திட்டங்கள் அவை. மேலும் ‘தமிழ்நாடு உழவர் பேரியக்கம்’ என்று அரசியல் கலப்பில்லாத அமைப்பை ஆரம்பித்து வேளாண் வளர்ச்சிக்குக் குரல் கொடுத்து வருகிறோம். ‘பசுமைத் தாயகம்’ மூலம் ஆறுகளைக் காக்க போராடியுள்ளோம். ஏரிகளில் தூர்வாரி உள்ளோம். மக்களுக்கான பிரச்னைகளில் தீர்வு காண நாங்கள் போராடிய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இது போன்ற மக்களுக்காக குரல் கொடுக்கும் என்னை, பண்பாட்டுக் காவலரா அதாவது மாரல் போலீஸா என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். ஆம்... அந்தப் பட்டத்திற்கு நான் தகுதியானவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

இவை மட்டுமின்றி பல ஆண்டுகளாக நிர்வாகிகளுக்குப் பயிலரங்கு நடத்தும் ஒரே கட்சி நாங்கள்தான். இப்படி பல நிலைகளைக் கடந்து வரும் எங்களுக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்று இப்போது சொல்லுங்கள்!’’

இதெல்லாம் களப் பணிகள். ஆனால் மாற்று அணித் தலைவராக மற்ற கட்சிகள் உங்களை ஒப்புக் கொள்ளுமா?

‘‘அதைப் பற்றி இப்போதே ஏன் சிந்திக்க வேண்டும்? இந்த அணி 2011_ல் வரப் போகும் தேர்தலுக்கு உருவாகப் போகும் அணி. அதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு மற்ற கட்சிகளுடன் கலந்து பேசுவதுதான் சரியாக இருக்கும். அதுவரை எங்கள் கட்சியைப் பலப்படுத்தவும், வளப்படுத்தவும், மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடி அவர்களிடம் நெருக்கத்தைக் காட்டி அங்கீகரிக்க வைக்கவும் பாடுபட்டு வருவோம்!’’
(நன்றி: ரிப்போட்டர் )

Read More...