பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 03, 2007

அடிக்கடி கேட்கப்படாத கேள்விகள்

எச்சரிக்கை:
அடிக்கடி கேட்கப்படாத கேள்விகள் என்றால் என்ன ?

இந்தப் பதிவைப் படித்தால் உங்களுக்கே புரியும். இந்தப் பதிவில் அபானவாயு பற்றி அடிக்கடி கேட்கப் படாத கேள்விகள் மற்றும் பதில்கள். கேட்க நினைக்கும் கேள்விகள் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

ஏன் இந்த விபரீத ஆசை ?

உங்கள் பதிவில் அரசியல் நெடி அதிகம், மற்றதையும் டிரை பண்ணுங்கள் என்று ஒரு பிரபல பத்திரிகையாளரும், ஒரு வலைப்பதிவரும் சொன்னார்கள். அவர்களுக்கே இந்தப் பதிவு சமர்ப்பணம்.

இந்த மாதிரி எழுதினால் உங்களை நாகரிகமற்றவன் என்று மற்றவர்கள் நினைக்க மாட்டார்களா ?

வலைப் பதிவுலகத்திற்கு வெளியே பீ, குசு, மூத்திரம் போன்ற சொற்களைப் பயன்படுத்துபவன்/பேசுபவன் நாகரிகமற்றவன் அல்லது நாகரிகமறியாதவன் என்று கருதுவது உண்மை தான். இந்தச் சொற்களைப் பற்றிய பேச்சு வரும்போது அதனை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்துச் சொல்லுவதற்கு இலக்கணம் எழுதியிருக்கிறார்கள் ( மங்கல வழக்கு, இடக்கரடக்கல், குழூஉக்குறி, அவையல் கிளவி போன்றவை). பீக்கு மலம் என்றும், குசுவிற்கு அபானவாயு என்றும், மூத்திரத்திற்கு சிறுநீர் என்றும் கொஞ்சம் கௌரவமான சொற்கள் இருக்கின்றன. தமிழ் வலைப் பதிவில் இதைவிட மட்டமான வார்த்தைகளை எல்லோரும் படித்து அனுபவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் அவைகளோடு ஒப்பிட்டால் இதெல்லாம் ஜுஜுபி.

தமிழ் இலக்கியத்தில் இந்த மாதிரி சொற்கள் வந்துள்ளனவா ?

இலக்கியத்தில் இருக்கிறதா என்று தெரியாது. சமண மரபில் வரும் நீலகேசி காவியத்தில் 829ஆம் பாடலிலிருந்து நான்கைந்து செய்யுள்களில் மலத்தை மையமாக வைத்து கருத்தை விளக்குகிறார். இந்தச் செய்தி பெருமாள் முருகன் எழுதிய பீக்கதைகள் என்ற தொகுப்பின் முன்னுரையில் விரிவாக இருக்கிறது. இந்தச் சிறுகதைத் தொகுப்பில் பீயை மையமாக வைத்து பதினான்கு கதைகள் இருக்கின்றன. ( அடையாளம் வெளியீடு ).

இரா. முருகனின் 'வாயு'( சைக்கிள் முனி, கிழக்கு வெளியீடு) என்ற கதையின் கடைசியில் ...
"ஒலிபெருக்கி உரக்க அறிவித்தது. பர்ர்ர்ர்ர்ர்
நிறுத்தாமல் குளோரியா அம்மாள் குசு விட ஆரம்பித்தாள்" என்று முடிக்கிறார். அதே போல் மூன்று விரல் என்ற புதினத்திலும் சில இடங்களில் வருகின்றன.

பிகு: முருகன் என்ற பெயர் வைத்தவர்கள் தான் இதை எல்லாம் எழுதுவார்கள் என்று நினைக்க வேண்டாம்.

அது எப்படி உருவாகிறது ?

ஆங்கிலத்தில் Flatulence, தமிழில் அபான வாயு அல்லது சின்னதாகக் குசு. பாக்டீரியாக் கிருமிகள் ஒன்றுக்கொன்று உதவிக்கொண்டும் அதனுடன் கமீர்(yeast) கலந்து நம் அடிவயிற்றுல் சேர்ந்தவுடன் ஆசானவாய் வழியாக அசால்டாக வெளியேறும் வாயு. அவ்வளவு தான்.

சரி, ஏன் அதில் அவ்வளவு வாசனை ?

அதில் இருக்கும் ஹைடிரோஜன் சல்ஃபைடு மற்றும் ஒரு விதமான ஆர்கானிக் கரசல் செய்கிற வேலை. சல்ஃபர் (கந்தகம்), நைடிரோஜன் சேர்மம் சேர்ந்தால் ஸ்டிராங்காக இருக்கும். காலிஃபிளவர், முட்டை, இறைச்சியில் நிறைய சல்ஃபர் இருக்கிறது, அடுத்த முறை சாப்பிட்டபின் சோதித்துப் பார்க்கவும்.

மொச்சைக் கொட்டை சாப்பிட்டால் தான் வரும் என்று நினைத்தேனே ?

மொச்சை சாப்பிட்டாலும் நிறைய வரும், ஆனால் அது அவ்வளவு வாசனையாக இருக்காது.

சத்தம் போட்டு ஊரைக் கூட்டுகிறதே ?

ஆசானவாய் வழியாக வரும் போது அதிருவதால் இந்தச் சத்தம் வருகிறது. அதனுடைய வேகம், ஆசானவாயின் தசைகள் எவ்வளவு இறுக்கமாக இருக்கின்றன போன்றவற்றைப் பொருத்து சத்தம் மாறும். ரொம்ப சத்தமாக விட்டால் அண்டர்வேர் அவிழ்ந்துவிடும், சிலசமயம் கிழிந்துவிடும்.

சில சமயம் சத்தம் இல்லாமல் வருகிறதே ?

நாம் முழுங்கும் காற்றில் நிறைய நைடிரோஜன் மற்றும் கார்பன் டையாக்சைடு (கரியமில வாயு) இருக்கிறது. இதில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு மீதம் இருக்கும் வாயுவில் எந்த வாசனையும் கிடையாது அல்லது மைல்டாக இருக்கும். ஆனால் வயிற்றில் அஜீர்னம், அசிடிட்டி போன்றவற்றினால் நடக்கும் பாக்டிரியா நொதித்தலினால்(fermentation) உண்டாவதில் தான் ஆபத்து அதிகம். இதை ஆங்கிலத்தில் SBD (Silent-But-Deadly) என்று சொல்லுவார்கள். இது வெளியே வரும் போது கொஞ்சம் சூடாகவும் இருக்கும் என்பது குசுருத் தகவல்.

சூடாக வருவதால் Global Warming க்கு ஏதாவது ஆபத்து இருக்கா ?

இல்லை என்று சொல்ல முடியாது. ஆடு, மாடு கூட்டம் விடும் குசுவில் அதிக மீத்தேன் இருப்பதால் Global Warmingக்கு 20% பாதிப்பு என்று சொல்லுகிறார்கள்.

சூடான காற்று கீழிருந்து மேலே தானே வரும் அது எப்படி அடியிலே போகிறது ?

நல்ல கேள்வி! குடல் பகுதியில் நடக்கும் அதிசயம் தான் காரணம். இந்தப் பகுதியில் விளக்குவது கஷ்டம், 'விக்கிப் பசங்க'ளிடம் கேட்கலாம்.

ஒரு நாளைக்கு சராசரியாக் ஒருவர் எவ்வளவு தடவை விடுவார் ?

ஒரு நாளைக்கு பதினான்கு முறை; மொத்தம் சராசரியாக அரை லிட்டர் அளவு என்று சொல்கிறார்கள். அளந்து பார்த்ததில்லை. பொழுது போகவில்லை என்றால் வலைப் பதிவு படிக்காமல் உருப்படியான வேலையாக இதை எண்ணிப் பார்க்கலாம்.

எனக்கு டீ குடித்தால் வருகிறதே ?

சிலருக்கு சாப்பிட்டால் வரும், உங்களுக்கு டீ குடித்தால். ஆனால் டீ குடிக்கும் போது, பக்கத்தில் யாராவது நடந்து போனால் ஜாக்கிரதையாக இருக்கவும். பார்க்க வடிவேலு காமெடி! (முதல் 30 வினாடிகளில் வரும்)விட்டவுடன் மற்றவர் மூக்குக்கு போகும் நேரம் எவ்வளவு என்று சொல்ல முடியுமா ?

ஈரப் பதம், தட்ப வெப்ப நிலை, காற்றின் வேகம்/திசை, விட்டதில் இருக்கும் molecular எடை, பக்கத்தில் இருக்கும் நபர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதை பொருத்தது. திறந்த வெளியில் விட்டால் காற்றுடன் கலந்து நீர்த்துப் போகும். பீச்சில் சுண்டல் சாப்பிட்டுவிட்டு விட்டால் சிபிஐயே வந்தாலும் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் க்வாட்ரோச்சியை தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கார், ஏசி ரூம், லிஃப்ட் போன்ற இடங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 13-20 வினாடிக்குள் பக்கத்தில் இருக்கும் மூக்குக்குப் போகும் என்று சொல்லுகிறர்கள்.

நான் இதுவரை விட்டதே இல்லை என்று என் நண்பன் சொல்லுகிறானே, இது உண்மையா ?

நான் அனானிப் பின்னூட்டமே போடலை என்றால் நம்புவீர்களா ? மனிதனாகப் பிறந்தால் விடாமல் இருக்க முடியாது. சினிமா ஸ்டார்கள், நடிகைகள், ஃபிகர்கள், பாட்டி, தாத்தா, பார்ட்டி, பாடகர்கள்,மத குருக்கள், சாமியார்கள் ஏன் ஆடு,மாடு யானை கூட விடும். கவலைப் படாதீர்கள், செத்துப் போய் கொஞ்ச நேரத்தில் கூட வர வாய்ப்பிருக்கிறது. டைனோசர் ? பார்க்க படம்


தண்ணீரில் விட்டால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்கிறார்களே, மீன்கள் விடுமா ?

தண்ணீருக்குள் குசு விட்டால் கண்டுபிடித்து விடலாம் என்பார்கள். மீன்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை. மீன் தொட்டியில் உன்னிப்பாக கவனித்தால் பார்க்கலாம். சில சமயம் பின்னாடியிலிருந்து bubble வரும். ஏன் ஆமை, பாம்பு கூட விடும்.

யார் அதிகம் விடுவார்கள் ஆண்களா பெண்களா ? பெண்கள் தான் அதிகம்னு....

வில்லங்கமான கேள்வி. பெண்கள் குசு குசு என்று பேசிக்கொள்வதை வைத்து நீங்கள் தப்புக் கணக்கு போடுகிறீர்கள். இரண்டு பேரும் இதில் சமம். என்ன ஆண்களுக்கு தற்பெருமை கொஞ்சம் அதிகம்.

அதிகமாக விடப்படும் சமயம் எது ?

காலையில் பாத்ரூம் போகும் போது நிச்சயம் ஒன்று இருக்கும். இதற்குப் பெயர் காலை இடி. பக்கத்து வீட்டுக்காரர் கேஸ் சிலிண்டர் வந்திருக்கிறது என தினமும் நினைக்க வாய்ப்பில்லை. மற்றபடி இதக்கு கால நேரம் கிடையாது, எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

சில சமயம் நாம் அடக்கிக்கொள்கிறோமே அதனால் ஏதாவது ஆபத்தா ?

சிலர் ஆமாம் என்கிறார்கள், சிலர் இல்லை என்கிறார்கள். Claudius என்ற ராஜா, பார்ட்டியில் விட்டால் தப்பு இல்லை என்று ஒரு உத்திரவே போட்டார். அடக்கினால் அந்த விஷவாயுவினால் ஆபத்து என்று இன்று நம்புகிறார்கள். ஆனால் டாக்டரிடம் கேட்டால் இதனால் பிரச்சனை இல்லை என்கிறார்கள். ரொம்ப அடக்கினால் வயிற்றுவலி வரலாம். விட்டால் பக்கத்தில் இருப்பவருக்கு மயக்கம் வரலாம்.

எவ்வளவு நேரம் அடக்கி வைக்கலாம் ?

முழித்துக்கொண்டு இருக்கும் வரை அடக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அடக்கிக்கொண்டு தூங்கினால், குறட்டையுடன் சேர்ந்து இந்த சத்தமும் வரும் அவ்வளவு தான்.

சில சமயம் அடக்க முடியாமல் போகிறது என்ன செய்யலாம் அல்லது எப்படித் தப்பிக்கலாம் ?

நிறைய வழிகள் இருக்கின்றன. இதற்கென்றே வாசனையை உறிஞ்சிக் கொள்ளும் அண்டர்வேர் விற்கிறார்கள். சுலபமான வழி, பக்கதில் இருக்கும் நாய் பூனையைக் கடிந்துகொள்வது.

பக்கத்தில் நாய், பூனை இல்லை, நண்பர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்றால்...?

கீழ் காணும் வழிகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றலாம்.
விட்டவுடன், ஒன்றும் தெரியாததைப் போல் நடிக்கவும்..
'என்டா விட்டே ?" என்பதைப் போல் பக்கத்தில் இருப்பவரை முறைத்துப் பார்க்கலாம்.
இருமல், தும்மல் அல்லது சேரில் உட்கார்ந்து இருந்தால் அதை நகர்த்தலாம். ( அந்தச் சத்ததுடன் இது ரீமிக்ஸ் ஆகும் )
கைக்குட்டையை அடியில் வைத்துக்கொண்டு, வரும் சத்ததின் அளவை கம்மி செய்யலாம்.

வீட்டில் இந்த மாதிரி போர்டு வைத்து எச்சரிக்கை செய்யலாம்.
வேறு வழிகள் இருந்தால் நீங்களும் சொல்லுங்கள்.(பின்னூட்டத்தில்)

மாட்டிக்கொண்டு விட்டேன், என்ன செய்வது ?

Sorry அல்லது excuse me என்று சொல்லலாம். தமிழை இதுபோன்ற தர்மசங்கடங்களுக்கு அணுக வேண்டாம். தமிழர்கள் எஸ்-குசு-மி என்றும் சொல்லலாம் ( கவுண்டமனி ஸ்டைலில் )

பையோ காஸ் போல் நாம் விடுவதில் ஏதாவது நன்மை இருக்கிறதா ?

துரதிஷ்டவசமாக இதை உபயோகப் படுத்த முடியாது. இல்லையென்றால் இந்நேரத்துக்கு உங்கள் பின்பக்கம் பழுத்திருக்கும். ஒரு நெருப்புக் குச்சியை வைத்து சோதித்து பார்க்கலாம், தப்பில்லை. ( பார்க்க வீடியோ ). சிலசமயம் அதில் கலந்துருக்கும் மீத்தேனால் பற்றிக் கொள்ளும். பயப்பட வேண்டாம்.


இதை பற்றி ஏதாவது புத்தகம் இருக்கிறதா ?

தமிழில் இதுவரை இல்லை(பதிப்பாளர்கள் கவனிக்க!), ஆங்கிலத்தில் இருக்கிறது.
Cover of Fart Guys CD

Cover of Unspeakably Worst Fart Book


எனக்கு அடிக்கடி வருகிறது, இதை வைத்துக்கொண்டு சம்பாதிக்க முடியுமா ?

வலைப் பதிவு வைத்துக்கொண்டே சம்பாதிக்கிறார்கள், இதில் சம்பாதிக்க முடியாதா என்ன ? Le Petomane என்பவர் மெழுகுவர்த்திகளைத் தன் திறமையால் அணைத்து ஃபிரான்சில் புகழ்பெற்றார். Methane என்றவர் ஒரு பிரபல Flatuist. ( Flutist மாதிரி ). இவர் அதில் கச்சேரி செய்பவர். பக்கவாத்தியம் இருக்குமா என்று தெரியவில்லை. இவரின் சிடிக்கள் கிடைக்கின்றன.

கடைசி கேள்வி பந்த் அன்று விடலாமா ?

அது உங்கள் கட்சிக் கொள்கையைப் பொருத்தது. இதுக்கொல்லாம் போலிஸ் பாதுகாப்பு கொடுக்க முடியாது.

( இந்த மாதத்தோடு இட்லிவடை ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆகிறது. பலவிதங்களில்(:-) ஆதரவு தந்த அனைத்து வாசகர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி!)

52 Comments:

Hariharan # 03985177737685368452 said...

மொழி தெரியாத கலீக் என்ன இவ்வளவுக்கு சிரிக்கிறாய் என்பதற்கும் அபானவாயு என்று சொல்லிவிட முடியாத அபாயம்

முடியலை....

வேலைநேரத்தில் எவ்வளவுக்கு சிரிப்பை அடக்கி வைப்பது?

கண்டுபிடித்தது:
கட்டுக்கடங்காத சிரிப்பை அடக்க முற்பட்டாலும் அபான வாயு வெளியாகும் அபாயம் இருக்கிறது என்பதை.

Anonymous said...

Just because people complain about "arasiyal nedi", and you wanted some other nedi, it is ingenious of you to write about "nedi"...your KusuPuranam lacks the punch...the punch of having that sanskrit saying which I have heard somany times tat goes something like "dhus boos praana sangadam"...am sure for Anti-Ram-Engineer there must be a ThiruKusul anyway!

tamizh ilakkia said...

I really appreciate you for explaining this subject.It is very intresting to read.Thanks

Arivoli.K

IdlyVadai said...

அனானி நானே எல்லாவற்றையும் சொன்னால், வாசகர்களுக்காக அதை விட்டு விட்டேன்.

நாகை சிவா said...

:))))

வாழ்த்துக்கள்....

குசு விடாதவங்க யாரும் இருக்க முடியாது....

ஆனா அனானி கமெண்ட் போடாதவங்க நிறைய பேர் இருக்காங்க சாமி... என்னையும் சேர்த்து... ;)

Hariharan # 03985177737685368452 said...

ஐந்தாம் ஆண்டில் "வாயு"வேகத்துடன் அதிரடியாக எடுத்துவைக்கும் இட்லிவடைக்கு வாழ்த்துக்கள்!

நாகை சிவா said...

அப்புறம் ஒரு சின்ன கேள்வி... ஒரு சின்ன கதையும் கூட....

ஒரு திருடன் ஒரு வீட்ல திருட போய் இருக்கான், அந்த நேரம் பாத்து வெளிய போய் இருந்த அந்த வீட்டு ஒனர் தம்பதிகள் திரும்ப வந்துட்டாங்க.. இவன் பரணி மேல் ஏறி பதுங்குகிறான். கொஞ்சம் நேரம் கழித்து அந்த வீட்டுக்காரர், நம்ம வீட்டுக்கு யாரோ வந்து இருக்காங்க என்று மனைவியிடன் சொல்லுறார்.. எப்படிங்க சொல்லுறீங்க என்று அவர் கேட்க... இங்கு வீசும் வாசம், உன்னுதும் இல்ல, என்னுதும் இல்ல... வேற யாரோ ஒருவருடையது என்று சொல்லுகிறார்.

இது போல வாசனைய வச்சு கண்டுப்பிடிக்க முடியுமா இ.வ????

அபி அப்பா said...

நாம் சத்தம் போட்டு சிரிக்கவில்லை, அமுக்கி சிரிச்சேன், ஆபீஸில் என் பக்கத்திலிருப்பவன் ஏன் வெளியே எழுந்து போனான் என சொல்ல முடியுமாஅ இட்லி வடையாரே! நல்ல பதிவு:-))

IdlyVadai said...

ஹரிஹரன், அறிவொளி, நாகை சிவா, அபி அப்பா நன்றி.

நாகை சிவா கதைக்கு ஸ்பெஷல் நன்றி :-)

அபி அப்பா said...

இட்லி வடையாரே! திரு.குசும்பனுக்கு லிங் அனுப்பிவிட்டேன் வருவார் சீக்கிரமா:-))

குசும்பன் said...

இந்த பதிவுக்கு லிங் கொடுத்து உன் பெயருக்கு கலங்கம் விளைவித்து இருக்கிறார் இட்லிவடை என்றார் அபி அப்பா!!

படிச்சு பார்த்து என்னன்னு கேட்டா குசு+ ம்பன் = குசும்பன் என்கிறார்:(

(சும்மா கற்பனைதான்)

அவ்வ்வ்வ்வ்

IdlyVadai said...

//படிச்சு பார்த்து என்னன்னு கேட்டா குசு+ ம்பன் = குசும்பன் என்கிறார்:(//

டி.ஆர் பாலு நீதிபதிகளை பார்த்து நீ என்ன பெரிய கொம்பனா என்றார். அபி அப்பா உங்களை பார்த்து நீ என்ன பெரிய குசும்பனா என்கிறார் :-)

தறுதலை said...

இதப் பத்தின ஸ்லோகம்.

கடமுடா பயம் நாஸ்தி
தஸ்புஸ் மத்திமம்
நிசப்தம் ப்ராண அவஸ்தா
(குசு வேதம். காண்டாம்: வயிறு)

இன்னொன்னு. திருந்து அல்லது திருத்தப்படுவாய் (செந்தில் ஸொல்றது மாதிரி படிக்கனும். அகர் அவாள் மாதிரி படிக்கக்கூடாது). Molecular தமிழ்ல மூலக்கூறு.

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

Hari said...

/* கடைசி கேள்வி பந்த் அன்று விடலாமா ? */

ஹை-லைட் கேள்வி.

:))

நன்றாக சிரித்தேன்.

தறுதலை said...

//கடைசி கேள்வி பந்த் அன்று விடலாமா //

அகர் அவாள் விடலாம். கருணாநிதி விடப்டாது

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

அருண்மொழி said...

இட்லிவடையாரே,

வாழ்த்துக்கள்.

IdlyVadai said...

//இதப் பத்தின ஸ்லோகம்.

கடமுடா பயம் நாஸ்தி
தஸ்புஸ் மத்திமம்
நிசப்தம் ப்ராண அவஸ்தா
(குசு வேதம். காண்டாம்: வயிறு)//

இந்த ஸ்லோகத்தின் தமிழாக்கம்:

அசு குசு ஆள அடிக்கும்
படார் குசு பரம சாது

IdlyVadai said...

ஹரி பந்த அன்று எழுதினேன் :-)

அருண்மொழி நன்றி.

IdlyVadai said...

//Molecular தமிழ்ல மூலக்கூறு.//

ஏற்கனவே இந்த பதிவு நாறுது. அதுல மூலமும் சேர்ந்து..:-)

Anonymous said...

Vaazthukkal Idlyvadai

இலவசக்கொத்தனார் said...

அண்ணா,

முதலில் நாலு வருஷம் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.

அதுக்காக நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கிற அளவு நீங்க பெரிய ஆள் ஆகலை. அதுக்கெல்லாம் காப்பிரைட் வாங்கின ஆளுங்க இருக்காங்க அப்படின்னு சொல்ல கடமைப்பட்டு இருக்கேன்.

அப்புறம் என்னதான் குசு, பீன்னு எழுதினாலும் நீங்க பி.ந.வியாதி ஆக முடியாது. ஏன்னா அதுக்கு வேற சில குவாலிபிகேஷன்ஸ் இருக்கு.

//என்பது குசுருத் தகவல்.//

எவனாவது வந்து போடா மசுரு அப்படின்னு ரைமிங்கா சொல்லிடப் போறான் பார்த்து.

அரசியல் நெடியோ, இந்த நெடியோ ஆக மொத்தம் நாத்தம் இல்லாம பதிவு எழுத முடியாதுன்னு நிரூபிச்சுட்டீங்க!!

ஐந்தாம் வருடத்திலும் கலக்க இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!!

IdlyVadai said...

இலவசம் நன்றி. என்ன குவாலிபிகேஷன்ஸ் என்று எனக்கு மட்டும் சொல்லுங்க :-)

Anonymous said...

வாழ்த்துக்கள் இட்லி வடையாரே!

இலவசக்கொத்தனார் said...

நாலு வருஷமா எழுதறீங்க. உங்களுக்குத் தெரியாத குவாலிபிகேஷனா நான் சொல்லப் போறேன்?

அப்படியே கேட்டுத் தெரிஞ்சுக்கணும் அப்படின்னாலும் நம்ம உடன்பிறப்புக்கள் எத்தனையோ பேர் இருக்காங்களே இங்க. அவங்க கிட்ட இல்ல கேட்கணும்! ;-)

ILA (a) இளா said...

4 வருஷமா? வாழ்த்துக்கள்

Boston Bala said...

கக்கூசு என்னும் வார்த்தையில் இருந்து வருவதா குசு?

Anonymous said...

இட்லிவடை, தமிழ்மணம் மணப்பது போதவில்லையா?நீங்கள் வேறு இப்படி மணக்க வேண்டுமா?

குவன்னாவையும் சுவன்னாவையும் வைத்து 'எட்டு' போட்டுக்கொண்டிருக்கிறர்கள் நம் தமிழ்'மண'த்தில்

எப்படிஆயினும், நன்றாக சிரித்தேன்.

இந்த பதிவிற்க்கு மட்டும் உங்களுக்கு எத்தனை பின்னூட்டம் பாருங்கள்!!!!

IdlyVadai said...

ILA(a)இளா நன்றி.
பாபா இருக்கலாம், யார்கிட்டயாவது கேட்டு சொல்றேன்.
//இட்லிவடை, தமிழ்மணம் மணப்பது போதவில்லையா?நீங்கள் வேறு இப்படி மணக்க வேண்டுமா?//

நான் தமிழ்மணத்தில் இல்லையே !
//இந்த பதிவிற்க்கு மட்டும் உங்களுக்கு எத்தனை பின்னூட்டம் பாருங்கள்!!!!//
ஆமாம் ஆனால் இதில் ஒன்றை கவணித்தீர்களா ?

Anonymous said...

Very good you have completed 4 years, congrats for the fifth year do something non political good all the best

Anonymous said...

மன்னிக்கவும்.என் சிற்றரிவுக்கு எட்டவில்லை...

IdlyVadai said...

அனானி நன்றி.

//மன்னிக்கவும்.என் சிற்றரிவுக்கு எட்டவில்லை...//

அட சும்மா ஒரு போடு போட்டேன் அவ்வளவு தான் :-)

மடல்காரன்_MadalKaran said...

ஐந்தாம் வருட ஆரம்ப விழாங்கறதால இந்த நகைச்சுவை பதிவா?
உங்க இட்லி வடை மணம் மனதில் பதியும் மணம்.
அபானவாயு வெளி நடப்பு செய்யலனால்
உடலுக்கு அபாயம் தான்..

வாழ்த்துக்கள்.
கேட்கப் படாத சில கேள்விகளில்..
இட்லி சாப்டா அபானவாயு வருமா?
வடை சாப்டா அபானவாயு வருமா?

அன்புடன், கி.பாலு

Anonymous said...

வாழ்த்துக்கல் இட்லியாரே....

ஆமா!, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லற பாணியில் வேற ஒருபதிவினை பார்த்தேன் இன்று...அதுக்கு இது ஒண்ணும் நக்கல் பதிவில்லையே?...

இல்லை கருணாநிதித்துவமான பதிவெல்லாம் வேண்டாஞ்சாமி ஒனக்கு...விட்டுடூ

Haranprasanna said...

நான்காம் வருடத்திற்கு வாழ்த்துகள்.

IdlyVadai said...

அனானி, ஹரன்பிரசன்னா நன்றி

Anonymous said...

congrats man
i always like your posts perhaps this is the first comment here

i know you have remove thamizmanam pinger scripts from your blog.. but i am the guy regularly used to update your blog status through pinging :)))))


i dont like thamizmanam at all ..reason would be same kind of posts with the reason from the stomach of fire :)))

but your posts gives a diffrent and a real approach

carry on man

with this post you have prooved your visitors strength without any reference from aggregationors

carry on

Unknown said...

வாழ்த்துகள் இட்லிவடையாரே. இன்னமும் ஒரு நூற்றாண்டு உமது சேவை இந்த (தமிழ்) நாட்டுக்கு தேவை:)

IdlyVadai said...

அனானி உங்க வேலை தானா அது. நிறைய பேர் என்னை தப்பாக நினைத்தார்கள் :-) நன்றி நல்லா இருங்க.

செல்வன் நன்றி.

Sundar Padmanaban said...

நாலு வருசம் ஆச்சா - அடேயப்பா - வாழ்த்துகள்!

நல்ல(!) பதிவுங்க. சின்ன வயசுல அடிக்கடி காதுல விழுந்த பழமொழி (எனக்குத் தெலுங்கு தெரியாது - குத்துமதிப்பாக நினைவிலிருந்து சொல்கிறேன்) 'நசுக்கு புசுக்கு வேயி நம் ப்ராண தீயகா, தஸ் புஸ் வேயிரா தர்மராஜு' .

இதுக்கு வெளக்கம் வேறு சொல்லணுமா?

ஆனாலும் சும்மா அந்த ரெண்டெழுத்து பேரைக் கேட்டாலே (சிரிப்புல) அதிருதுல்ல?

என் தாத்தா அடிக்கடி சொல்லும் கதைகளில் பிரதானமான நகைச்சுவைக் கதை இதை மையமாக வைத்துச் சொல்லப்பட்ட கதைதான்!

வாழ்த்துகள்.

அரவிந்தன் said...

பாராட்டுக்கள்!!! இட்டிலியாரே,

உங்கள் குழுவிலுள்ள சென்னை,பெங்களூர்,கலிபோர்னியா வாழ் உறுப்பினர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

அன்புடன்
அரவிந்தன்

Anonymous said...

Best Wishes

Sa.Thirumalai

IdlyVadai said...

வற்றாயிருப்பு சுந்தர் ந்னறி.
அரவிந்தன் நன்றி. உங்கள் கண்டுபிடிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது.
திருமலை நன்றி.

Jeeva said...

வாழ்த்துக்கள்.... IV

ஜீவண்

IdlyVadai said...

ஜீவண் நன்றி !

Anonymous said...

செல்வேன் என்று செல்லாது இருப்பது விடும் போது ஓசை எழுப்புமா?
ட£க் கடையில் பொட் என்று விட்டால் பாட் நாறுமா?
வெளியில் மிதந்து விட முடியுமா?
5000 ஆண்டுகளாக விடாது இருந்தவர்கள் என்ன செய்வார்கள்?
தான் விடுவதை தானே லுக்க முடியுமா?
பதில்(ஸ்) பிளீஸ்
வாழ்த்துக்களுடன்
பொன்.பாண்டியன்

Anonymous said...

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
"வளி"முதலா எண்ணிய மூன்று !

Another:
Discovery channel's Myth buster video:
http://www.youtube.com/watch?v=RHcDP_Yew-g

உண்மைத்தமிழன் said...

ஐந்தாம் ஆண்டு புதுமனை புகுவிழாவிற்கு வாழ்த்துக்கள்..

பதிவு படு சூடு.. சூட்டைப் போலவே சிரிப்பும் சூடாகவே வந்தது.. நிறைய இடங்களில் டக்கமாட்டாமல் சிரித்தேன்.. ஐயா இட்லிவடையாரே.. திரட்டிகள் இல்லாமலேயே இப்படியா..?

நீர்தான்யா வலைப்பதிவர்..

'அது'க்கு என்ன அர்த்தம்னு தெரியாம இதுவரைக்கும் யார்கிட்டேயும் ப்படி கேக்குறதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டிருந்தேன். சொல்லிட்டீங்க.. நன்றிகள்..

எதுக்கும் அந்த வார்த்தைக்கு ஒரு காப்பிரைட் வாங்கிருங்க.. இனிமே பின்னநவீனத்துவக்காரங்க மொத்தமா குத்தகைக்கு எடுத்துக்கப் போறாங்க..

வாழ்க வளமுடன்..

IdlyVadai said...

உண்மை தமிழன் உங்க பாராட்டுக்கு நன்றி. நீங்க இதுவரை பின்னூட்டம் போடாதது விட்ட குறை தொட்ட குறைய இருந்தது இப்ப ஓ.கே :-)

Anonymous said...

//உண்மை தமிழன் உங்க பாராட்டுக்கு நன்றி. நீங்க இதுவரை பின்னூட்டம் போடாதது விட்ட குறை தொட்ட குறைய இருந்தது இப்ப ஓ.கே :-)//

எங்கள் தங்கம் உ.தமிழன் உங்கள் பதிவுகளுக்கு ரெகுலராக அனானி பின்னூட்டம் போடுவது உண்டு. உதாரணத்துக்கு இந்த பதிவில் கூட அனானியாக பின்னூட்டம் போட்டிருக்கிறார். அந்த பின்னூட்டம் :

//வாழ்த்துக்கல் இட்லியாரே....

ஆமா!, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லற பாணியில் வேற ஒருபதிவினை பார்த்தேன் இன்று...அதுக்கு இது ஒண்ணும் நக்கல் பதிவில்லையே?...

இல்லை கருணாநிதித்துவமான பதிவெல்லாம் வேண்டாஞ்சாமி ஒனக்கு...விட்டுடூ//

Unknown said...

ஐந்தாவது ஆண்டில் வாசனையோடு அடி எடுத்து வைக்கும் இட்லி வடையாருக்கு வாழ்த்துக்கள்..

First போஸ்டே அபானமா விட்டு கடாசியிருக்கிங்க... நெறைய இந்தமாதிரி இன்னும் தினுசு தினுசா போடுங்க... (நான் தகவல்களை சொன்னேன்) இந்த write-up ஐ கேப்டன் answer பண்ணாக்க எப்படி இருக்கும்னு சன்-டிவி அசத்த போவது யாரு ஸ்டைல் ல யோசிச்சி பார்த்தேன்...அடக்க முடியலே...(சிரிப்ப தேன்.. )

-- இஞ்சி தின்ற குரங்கு (இந்த குரங்கு கண்டிப்பா குசு விடாது...)

Anonymous said...

வணக்கம் இட்லிவடையாரே,
ஜெயகாந்தனோட "ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது",
மற்றும் நாகூர் ரூமியோட "குட்டியாப்பா" ,
இவையிரண்டையும் படிக்கும் போதே
விழுந்து விழுந்துச் சிரித்தது ஞாபகத்தில்
உள்ளது.அதற்குப் பிறகு நான் வாய்விட்டுச்
சிரித்தது, உங்களின் "அடிக்கடி கேட்கப்படாத
கேள்விகளைப்" படித்துதான்.
நெல்லையில் ஒரு சொலவடை உண்டு.
கொலைப்பழி ஏத்தாலும் ஏப்பான் , குசுப்பழி
ஏக்கமாட்டான் , அப்படின்னு.

வாழ்த்துக்கள்

சுகா

ச.மனோகர் said...

அடி வயிற்று அபான வாயு ஆராய்ச்சியில் இவ்வளவு விசயங்கள் உள்ளதா? இட்லி..சூப்ப்பர்!