இந்த வாரம் முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம். அரசியல், சினிமா...
மைடியர் இட்லிவடை,
ரின் சோப்பு தூள் விளம்பரத்துல ஒருத்தர் எதைச் சொன்னாலும் பக்கத்தில் இருப்பவர் "ஆதாரம் இருக்கா?" ன்னு ஓயாம கேட்டுகிட்டே இருப்பார். கடைசியா "உன் சட்டை என் சட்டையைவிட வெளுப்பு" ன்னு ஒரு சிறுவன் சொல்ல, பக்கத்துல இருப்பவர் வழக்கம் போல் "ஆதாரம் இருக்கா?" என்பார். இந்தச் சிறுவன் ஒரு பட்டையை எடுத்துக் கொடுப்பான். அந்தப் பட்டையை வெச்சுண்டு எது அதிக வெண்மைன்னு அறிஞ்சுக்கணுமா! அது மாதிரி முனி கடிதத்துக்கு ஒரு பட்டை தயாரிச்சா நல்லா இருக்கும். என்ன ஒண்ணு, பட்டைய பார்த்தாலே டென்ஷன் ஆவாங்க.
20ஆம் தேதி ஞாநிக்கு எதிரா ( அல்லது பார்ப்பனர்களுக்கு எதிரா) நடந்த கண்டனக் கூட்டத்துல, பார்ப்பனர்களோட 2000 வருஷப் பகைன்னாங்களாமே? அப்படியா உனக்கு இதை பத்தி எல்லாம் ஆதாரம் இருக்கான்னெல்லாம் கேட்கக் கூடாது, பிளீஸ்.
எஸ்.வி.சேகர் நாடகத்தில பத்திரிக்கையாளர் ஒரு கேள்வி கேட்பார் அதற்கு இவர(எஸ்.வி.சேகர்) "எல்.கே.ஜிக்கெல்லாம் லிவு விட்டுடலாம்" என்பார். அதுமாதிரி, அறிவுமதி, "பார்ப்பனர்களை இணையத் தம்பிகள் ஒருகை பார்த்துவிடுவார்கள்"ன்னு சொல்லியிருக்கார். இதுவும் அதே போல ஒரு காமெடி தான். 'பார்ப்பன' சாதியில் பிறந்ததற்காகவே ஒருத்தரை பார்ப்பான்னு சொல்றது தான் பகுத்தறிவுன்னு நினைச்சா என்ன செய்ய? பெயர்ல மட்டும் அறிவு+மதி இருந்து என்ன பயன் ?
சரி இப்ப ஒரு ஒலிப்புதிர். இந்த பாடலை கேளு... இந்தப் பாடலை(!) இறையன்பன் குத்தூஸ் வாணி மாஹாலில் ( கச்சேரி நடக்கும் இடம்பா ) பாடியிருக்கார்.(பாடல் லிரிக்ஸ் பத்ரி பதிவில் இருக்கு) கேள்வி இது தான் - இதன் ராகம் என்ன ? நானும் ரொம்ப நேரமா, எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே, என்ன ராகம்னு யோசிச்சு யோசிச்சு தாவு தீர்ந்துபோச்சு. விடை கடைசியில.
திரைப்பட விருது வழங்கும் விழால ரஜினி, ராமர் பாலம் பத்தி பேசினதுக்கு கலைஞர் பதில் பார்த்தியா, சூப்பர். படிகாதவங்களுக்கு கீழே.."'சக்கரவர்த்தி திருமகன்'' அப்டீங்கற ஒரு தொடர் ஓவியத்தை ராஜாஜி பத்திரிகையிலே எழுதினார். அது புத்தகமா வந்திருக்கு. இன்னைக்கும் அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தா அவர் அதில் எழுதிய முன்னுரையிலே என்ன குறிப்பிட்டிருக்கிறார்னா, "ராமாயணம் என்பது ஒரு இதிகாசமே தவிர சரித்திரம் அல்ல. நான் இதிலே அடையாளம் காட்டுகின்ற ராமன் கடவுள் அவதாரம் அல்ல. ராமன் மனிதன்தான். ஒரு ராஜகுமாரன்தான், நல்லவன், நல்ல காரியங்களை செய்தவன், அவனிடத்திலே தெய்வீக அம்சம் என்று சொல்லப்படுகின்ற சில விஷயங்கள் இருந்தாலும் கூட ராமர் செய்ததை கடவுளின் வேலை என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று நான் அல்ல, நம்முடைய அன்புக்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மூதறிஞர் ராஜாஜியே எழுதியிருக்கிறார்.
புத்தகம் இருக்கிறது, தம்பி ரஜினி அவர்களுக்கு சந்தேகம் தேவையில்லை, இருக்காது. நான் சொன்னால் அவர் நம்புவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஒரு வேளை நம்பாவிட்டால் காலையிலே அந்த புத்தகத்தை பக்கத்திலேதான் வீடு, கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன். எழுதியதை பார்க்கலாம்."
ஆனா அதே புத்தகத்துல 8ஆம் பதிப்பின் முன்னுரையில் ராஜாஜி இப்படி சொல்லியிருக்கார்."இந்த எட்டாம் பதிப்பு ராம சரித்திரத்தைத் தமிழ் மக்கள் ஆண், பெண், பெரியோர், குழந்தைகள் எல்லோரும் படிக்க வேண்டும். படித்தால் நல்ல பயனையும் பகவான் கருணையும் பெறுவார்கள்".
என்கிட்ட புஸ்தகம் இருக்கு. உனக்கும் சந்தேகமா இருந்தா தி.நகர்ல இருக்கற வானதி பதிப்பகத்துல வாங்கி பார்த்துக்கோ. அனுப்ப மாட்டேன். என் ராமாயணத்தை உனக்கு அனுப்பிட்டா எனக்கு ராமர் அருள் போயிடாதான்னு ஒரு செண்டிமெண்ட்ன் தான். புரிஞ்சுக்கோ.
புரியுது, செண்டிமெண்ட் கூட ஒரு வித மூட நம்பிக்கை தான். முன்னாள் விளையாட்டு வீரர் ஸ்ரீகாந்த் சூரியனைப் பார்ப்பார் (சிக்ஸ் அடிப்பார் இல்லை அவுட் ஆவார்) ஜெக்கு ராசியான நம்பர் 9, ராசியான கலர் பச்சை. அதே போல் கலைஞருக்கு மஞ்சள் துண்டு. இப்ப சத்தியராஜ் போட்டுக்கற பெரியார் மோதிரம் கூட இதே மாதிரி தான். இதுக்கும் என் கையில் இருக்கற வெங்கடாஜலபதி படம் போட்ட மோதிரத்துக்கும் என் வித்தியாசம். ஒரு வெங்காயமும் இல்லை. இரண்டும் பக்தியால் போட்டது. பகுத்தறிவுடன் பார்த்தா அது வெறும் கலர் கல்லு.
சரி வொடு, கொஞ்சம் ஜாலியான டாப்பிக் போகலாம். பெண்கள் யாராவது இந்த பதிவை இதுவரை படிச்சுண்டிருந்தா, வேற சுவையான சமையல் குறிப்பு பதிவுகளுக்கு போகலாம். (அட்லீஸ்ட் போட்டோ எல்ல்லாம் நல்லா இருக்கும் )
இந்த வாரம் ஆனந்த விகடன் ஹாய் மதன் பகுதியில் வந்த முதல் கேள்வி பதில் இது:
இளம் யுவதிகள் அணியும் டி-ஷர்ட், பனியன் போன்றவற்றில் எழுதியுள்ள வாசகங்களைப் படிக்க நேரிடுகிறபோது தர்மசங்கடமாகிவிடுகிறது. கவனித்துப் பார்த்துப் படிக்கலாமா, விட்டுவிடுவது நல்லதா? ( என்ன அருமையான கேள்வி )
பதில்: படித்து ரசிப்பதற்காகத்தானே டி-ஷர்ட்டில் வாசகங்களோடு அவர்கள் வருகிறார்கள்! படிக்காமல் போனால் உங்களுக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியாது என்று அவர்கள் தப்பாக நினைக்க மாட்டார்களா?! (அதற்காக ரொம்பக் கிட்டே போய் எழுத்துக் கூட்டியெல்லாம் படிக்கக் கூடாது!)
எனக்கும் இங்கிலிபிஷ் தெரியும், நான் படித்த சில வாசகங்கள் இங்கே...
do you know the meaning of
ABCDEFG
A boy can do everything for Girl
reverse the meaning of
GFEDCBA
Girls Forget everything Done and Catches new Boy Again
Sometimes When I'am Alone, I Google myself.
தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்காக இந்த டி-ஷர்ட் வாசகம்
( புரட்சி பெண்களுக்கு மட்டும் )
மூடவுட் ஆனா
எப்பவாவது தண்ணியடிப்பேன்
சில சமயம் புகைபிடிப்பேன்
பல நேரம் வலைப்பதிவு எழுதுவேன்
இந்த டி.ஷர்ட் மேட்டரில் இன்னும் ஒரு நல்ல ஜோக் இருக்கு அதைச் சொன்னா அடிக்க வருவாங்க. அதனால் இத்துடன் நிறுத்திக்கிறேன்பா (அப்படியும் உங்களுக்கு அந்த ஜோக் வேணும்னா, இந்த லைனில் இருக்கு கண்டுபிடிச்சிக்கோங்க.... )சில ஹோட்டல்களில் காபியை, டம்பிளரில் காபியுடன் டவாரா மீது கவுத்து கொடுப்பார்கள். டிகிரி காப்பி கேள்வி பட்டிருக்கேன், ஆது மாதிரி இது டவரா காப்பியா ? ஏன் இது மாதிரி கவுத்து கொடுக்கிறாங்க ? யாருக்காவது தெரியுமா ?
காப்பி போடுவதில் நிறைய டெக்னிக் இருக்கு. ஃபில்டர் காப்பி, இன்ஸ்டெண்ட் காபி, எக்ஸ்பிரஸோ, இத்தாலியன் காபி இப்படி நிறைய வந்துட்டுது. எது சூப்பர்னு இந்தப் பக்கத்தை பார்த்தா தெரியும். நமக்கு எப்பவும் அம்மா போடற கும்பகோணம் டிகிரி காப்பி தான்.
நம்ப நாட்டுல விளையற நல்ல காப்பி, டீ எல்லாம் வெளிநாட்டுக்கு ஏத்துமதியாறது. நம்மளுக்கு கிடைக்கறதெல்லாம் இரண்டாம் ரக காப்பியும், டீத்தூளும்தான். உனக்கு யாரும் காப்பி டீ எல்லாம் கண்ணுல காட்றதில்லை, ஆடு கிடாதாங்கறயா, அதுவும் சரிதான். ஆனா பாரு, அது மட்டுமில்ல, நம்ப பாரத தேசத்துல விளையற எல்லா நல்ல பொருள்களும் - ஏலக்காய், கிராம்பு, மாம்பழம், துணி மணிகள் இன்னும் பல வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகுது. நம் நாட்டு மக்களுக்கு கூடாரம் போட்டு "Sale!!! - Export Rejected" இருக்கவே இருக்கு. அதே போல திறமையான மாணவர்கள் பெரும்பாபானவங்க வெளிநாட்டுக்கு போயிடறதும் ஒருவித எக்ஸ்போர்ட் தானே ?
ராயர் காப்பி கிளப்புக்கு திரும்ப உயிர் வந்திருக்கு தெரியுமா ? வலைப்பதிவு ஆரம்பிச்சு மூடிட்டுப் போனவங்க எல்லாம் திரும்பவும் இங்கே ஆஜர். வெங்கடேஷ் பூனால காப்பிக் கடையை தேடுறார். பூனாவில் காப்பியா முக்கியம்? வேற ஏதாவது மேட்டர் இருந்தா நேசமுடன் எனக்கு மட்டும் சொல்லுங்க.
இப்ப தமிழ்நாட்டுல இன்னொரு 'புரட்சி' வெடிச்சிருக்கு. புதிய "புரட்சித் தளபதி' யாரு தெரியுமா, நம்ம சினிமா நடிகர் விஷாலாம். இந்த 'புரட்சி'ங்கற பட்டமே புரட்சி செய்யாதவங்களுக்கு தர்றதுதான் நம்ம தமிழ் நாட்டோட வழக்கம். புரட்சி தலைவி, 'புரட்சிக் கலைஞர்', புரட்சித் தமிழன், ... எப்படி 'சூப்ப்ர்'ங்கறதை எல்லாத்துக்கும் உபயோகபடுத்தறாங்களோ அதே மாதிரி இந்த வார்த்தையை எல்லாத்துக்கும் உபயோகப்படுத்தறது தான் தமிழ்நாட்டில பெரிய புரட்சி.
போன வாரம் சிம்பு, பிருத்வி வெளிநடப்புக்கு அப்புறம் இப்ப நரேந்திர மோடி. வெளிநடப்புன்னு சொல்ல முடியாது ஓடிட்டார்ங்கறது தான் சரி. கரண் தாப்பர் ஓடவிட்ட இரண்டாம் ஆள் நரேந்திர மோடி, முதல் ஆள் ஜெ. நம்ம கனிமொழி மாதிரி கனிவா காலமேக புலவர் பத்தியெல்லாம் சொல்லத் தெரியலை பாவம்.போனவாரம் வடிவேலுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடனமாம். அதிர்ஷ்டம் அடிக்கிறதுன்னு சொல்லமாட்டாங்க அது தான் இது. சரி யார் அதிர்ஷ்டசாலி ? ன்னு கேட்டிருந்தான். சிவாஜியில் 'ரஜினி'யுடன் நடிச்சதால அவருக்கு வடிவேலுவோட நடிக்கற வாய்ப்பு கிடைச்சது. இப்ப வடிவேலுவோட நடிச்சதால அசோக் அமிர்தராஜ் தயாரிக்கும் `ஹாலிவுட்' படத்தில், ஸ்ரேயா கதாநாயகியாக நடிக்கிறார். இது எப்படி இருக்கு !
சூப்பர் ஸ்டார் ஆக என்னவெல்லாம் செய்யனும் தெரியுமா ? இதோ இந்த படத்தை பார்த்தால் தெரியும். :-)
அந்த ராகத்தோட பேர்: எலக்டரிக் ராகம்! (எலக்டரிக் டிரெயின்ல இந்த மாதிரி தான் பாடுவாங்க)
இந்த வாரம் உண்மை தமிழன் ரேன்ஜுக்கு பெரிசாக எழுதிய,
முனிஸ்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, October 23, 2007
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 23-10-07
Posted by IdlyVadai at 10/23/2007 07:45:00 PM
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
<==
'பார்ப்பன' சாதியில் பிறந்ததற்காகவே ஒருத்தரை பார்ப்பான்னு சொல்றது தான் பகுத்தறிவுன்னு நினைச்சா என்ன செய்ய? ==>
அப்படி எனில் அய்யர் அய்யஙகார் என்பவர்களை எப்படி அழைப்பது என்று சொல்லுஙகள். அவர்கள் மாற்றி அழைத்துகொள்வார்கள்.
என்னுடன் வேலை செய்பரும் இதே மாதிரிதான் கேட்டார்.
இங்கு உண்மையான பார்ப்பனரா என்பதல்ல பிரச்னை.குறிப்பிட்ட சாதியைனரைப் பற்றித்தான் இப்படி குறிப்பிடுகின்றனர் என்பது தெளிவு.
இதை எனக்கு தெளிவுபடுத்தவே கேட்கிரேன். இதை நீங்கள் பின்னூட்டமா இடாமல் எனக்கு மின்னஞ்சலில் பதில் அனுப்பினலும் எனக்கு சரியே sivaprakasam_p@yahoo.com
முனி, ஆனாலும் உமக்கு ரெம்ப குறும்பு !! விரைவில் நீங்க எலக்டிரிக் ராகம் பாடப்போறீங்க :)))
//ரின் சோப்பு தூள் விளம்பரத்துல ஒருத்தர் எதைச் சொன்னாலும் பக்கத்தில் இருப்பவர் "ஆதாரம் இருக்கா?" ன்னு ஓயாம கேட்டுகிட்டே இருப்பார். கடைசியா "உன் சட்டை என் சட்டையைவிட வெளுப்பு" ன்னு ஒரு சிறுவன் சொல்ல, பக்கத்துல இருப்பவர் வழக்கம் போல் "ஆதாரம் இருக்கா?" என்பார். இந்தச் சிறுவன் ஒரு பட்டையை எடுத்துக் கொடுப்பான். அந்தப் பட்டையை வெச்சுண்டு எது அதிக வெண்மைன்னு அறிஞ்சுக்கணுமா! அது மாதிரி முனி கடிதத்துக்கு ஒரு பட்டை தயாரிச்சா நல்லா இருக்கும். என்ன ஒண்ணு, பட்டைய பார்த்தாலே டென்ஷன் ஆவாங்க.//
:))
என்ன நாட்டார் தெய்வமான முனியை அப்படியே ஆரியப்படுத்தற மாதிரி இருக்கு!!
ஆனா சும்மா சொல்லக் கூடாதய்யா. நீரும் முனியும்தான் ஜோடி நம்பர் 1.
ஜட்ஜ் எல்லாம் சும்மா துண்டைக் காணும் துணியைக் காணுமுன்னு ஓடறாங்க இல்ல!!
ரொம்ப புரட்சிகரமான பதிவுங்க. சூப்பர்!!(ஓ! இப்ப இந்த வார்த்தை எல்லாம் சொல்லக் கூடாதோ. சரி விடுங்க!) :))
கொத்ஸ்,
//என்ன நாட்டார் தெய்வமான முனியை அப்படியே ஆரியப்படுத்தற மாதிரி இருக்கு!!//
நீங்க வேற கொழப்பாதீங்க, அது இட்லியாருடைய கமெண்ட் அப்படித்தான் இருக்கும் ;) அதுக்கு கீழ உள்ளது தான் முனீஸ் மேட்டர், கரீட்டா இட்லியாரே?!! ;)
ஏங்க... டபராவோட நிக்கிற ஒரு பொண்ணு போட்டோவ போட்டு ஆர்வத்த தூண்டிட்டு, சும்மா டிகிரி காபி பத்தி அனலைஸ் பண்ணியிருக்கீங்க... இதெல்லாம் அநியாயம்!
மை டியர் முனீச்வரன் ,
எப்படியோ, இட்லிவடை இந்தவாரத்த இப்படீயே சொல்லிகினே ஓட்டிட்டாரூ.
அப்புரம் இன்னா.மேட்டர் எதுவும் கெடக்கிலயமா??
//பார்ப்பனர்களோட 2000 வருஷப் பகைன்னாங்களாமே? அப்படியா உனக்கு இதை பத்தி எல்லாம் ஆதாரம் இருக்கான்னெல்லாம் கேட்கக் கூடாது, பிளீஸ்.//
முனி,
அது அவாளோட "நம்பிக்கை". "நம்பிக்கை" என்று சொல்லும் போது ஆதாரம் கேட்க கூடாது. சேது சமுத்திர திட்டத்தில் அதானே நடக்கின்றது :-)
அய்யா அந்த ராயர் காபி கிளப் படிக்கவேமுடியவில்லை என்ன செய்யவேண்டும். fஆண்ட் பிரசனை.
நட்ராஜன்
//அய்யா அந்த ராயர் காபி கிளப் படிக்கவேமுடியவில்லை என்ன செய்யவேண்டும். fஆண்ட் பிரசனை.
//
யுனிகோடுக்கு மாற்றிவிட்டார்கள் போலும். Change the encoding in browser and try to read. Still if you cant read, dont worry, you are not missing anything :-)
////பெண்கள் யாராவது இந்த பதிவை இதுவரை படிச்சுண்டிருந்தா, வேற சுவையான சமையல் குறிப்பு பதிவுகளுக்கு போகலாம். (அட்லீஸ்ட் போட்டோ எல்ல்லாம் நல்லா இருக்கும் )////
இட்லிவடை, உமக்கு ஏன் இந்த சீண்டற வேலை? ஏற்கனவே தாளிக்கற மாமி இல்ல அக்கா, எப்ப நீ கைல கிடைப்ப, தாளிக்கலாம்னு இருக்காங்களாம். அரசியல்வாதிகள் ஆட்டோலேருந்து தப்பினாலும் அடுப்படி அக்காகிட்ட இருக்குடீ உனக்கு. திரும்ப சொல்றேன், மரத்தடி, கிளப் எல்லாம் சீண்டாத..
//(அப்படியும் உங்களுக்கு அந்த ஜோக் வேணும்னா, இந்த லைனில் இருக்கு கண்டுபிடிச்சிக்கோங்க.... )
//
?? somebody help me
//?? somebody help me//
அனானி என்னது இது.
அவனவன் கோடு போட்டா ரோடே போடறாங்க நீங்க புள்ளி இருக்கு சும்மா கோலம் போட வேண்டியது தானே :-)
//என்ன நாட்டார் தெய்வமான முனியை அப்படியே ஆரியப்படுத்தற மாதிரி இருக்கு!!//
:)) Good Catch.
Post a Comment