பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 24, 2007

T20 இந்தியா வெற்றி


20-20 உலக ‌கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. உலகமே எதிர்பார்த்த இந்த போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 157/5 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் ஸ்டார்கள் இல்லாமல் இந்தியா வெற்றி !

* இந்திய அணிக்கு 2 மில்லியன் பரிசு - BCCI அறிவிப்பு!

* யுவராஜுக்கு 1 கோடி பரிசு ( 6 சிக்ஸர் அடித்ததற்கு )

இறுதி போட்டி நிஜமாகவே ரொம்ப க்லோசாக இருந்தது, இதே போல் இந்திய-பாக் உறவும் க்லோசாக இருக்க பிரத்திப்போம் !

கங்கிரட்ஸ் இந்திய !

கடைசி செய்தி:
Dhoni is Special - கங்குலி
Dhoni is a very balanced character. Indian Cricket is in a safe hands now! - சச்சின்

3 Comments:

Anonymous said...

ஓடி விளையாடு பாப்பா..
கோடி பணம் பண்ணலாம் வாப்பா..
கூடி விளையாடு பாப்பா..
இந்தியக் அணி குழுவிற்கே நல்லதப்பா..

வாழ்த்துக்கள் ..!

ஏனுங்க டிவி முன்னாடி ஒக்காந்துகிட்டுதான் வலைப்பூவில் செய்தி சொல்றீங்களா..?
-மனசு நோகடிக்காதவன்

IdlyVadai said...

அட ஆமாங்க எப்படி கண்டுபிடிச்சீங்க :-)

ஹரன்பிரசன்னா said...

இந்தியா வென்றது சந்தோஷமாக இருந்தது.

உங்கள் கருத்துக்கணிப்பில் பாகிஸ்தானுக்கு வாக்களித்தேன். அப்போதே நினைத்தேன், இந்தியாதான் வெல்லப்போகிறது என்று!

தேர்தல் சமயத்தில் நான் போட்ட கருத்துக்கணிப்புக்கு, மிகச்சரியாக எதிரான விதத்தில் முடிவு வெளியாகி இருந்தது. :))