பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 09, 2007

சச்சினுக்கு தப்பாக அவுட் - ICCIயிடம் புகார் செய்ய இந்திய அணி முடிவு

தெண்டுல்கருக்கு தவறான அவுட் ஐ.சி.சி.யிடம் புகார் செய்ய இந்திய அணி முடிவு செய்துள்ளது.

இந்திய அணி 15.4 ஓவர்களில் 59 ரன்னாக இருந்த போது தெண்டுல்கருக்கு நடுவர் அலீம் டார் (பாகிஸ்தான்) தவறுதலாக அவுட் கொடுத்தார். அவரது பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆன பந்துக்கு தவறான அவுட் கொடுத்தார். நடுவரின் தவறான முடிவை எதிர்பாராத தெண்டுல்கர் மிகுந்த வேதனையுடன் நடுவரை ஏக்கத்துடன் பார்த்தபடி வெளியேறினார். 30 ரன் எடுத்த தெண்டுல்கர் லார்ட்சில் ஆடும் கடைசி ஆட்டம் இது தான். அதில் அவர் ஜொலிக்க வேண்டும் என்ற நினைத்த கனவை நடுவர் கலைத்து விட்டார். அதோடு அது இந்திய அணி வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதே போல் டிராவிட்டுக்கு அவுட் கொடுக்கப்பட்டதிலும் சந்தேகம் இருந்தது. நடுவரின் தவறான முடிவு குறித்து ஐ.சி.சி.யிடம் புகார் செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அணியின் நிர்வாக மானேஜர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

0 Comments: