பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 30, 2007

FLASH: பந்த் - உச்ச நீதி மன்றம் அதிரடி

சேது சமுத்திர திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை (1ம் தேதி) முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பந்த்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று காலை சுப்ரீம் கோர்ட் நீதிபதி பி.என்.அகர்வால் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அதன் பின்னர் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பந்த் நடத்த தடை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து முழு அடைப்புக்கு பதிலாக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திருவல்லிக்கேணியில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எத்தனை நந்திகள் குழுக்கே வந்தாலும் சேது திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Public right is superior to individual political party's right - SC
We cant tolerate these types of activities by political parties - SC

உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு சபாஷ்.

விவாதத்தின் விவரம்...


நீதிபதிகள்:- பந்துக்கும், வேலை நிறுத்தத்துக்கும் என்ன வித்தியாசம்?

வக்கீல் அல்டாப் அகமது:- பந்த் என்றால் முழுவதுமாக மூடுவது. வேலை நிறுத்தம் என்றால் விருப்பப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்வது.

நீதிபதிகள்:- சேது சமுத்திர திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்துவதாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் உங்கள் விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லை.

நீங்கள் நிறைவேற்றிய தீர்மானத்திலேயே, அக்டோபர் 1-ந் தேதி அன்று அனைத்து பணிகளும், செயல்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, அது பந்த் அல்ல என்று எப்படி சொல்கிறீர்கள்? அன்று பொதுக்கூட்டம் எதற்காக நடத்துகிறீர்கள்? அன்றைய தினம் எல்லா பணிகளையும் நிறுத்த வேண்டும் என்று உங்கள் தீர்மானம் சொல்கிறது. பிறகு எப்படி உங்கள் பொதுக்கூட்டத்துக்கு ஆள் பிடிப்பீர்கள்?

கல்வி நிறுவனங்களையும், வர்த்தக நிறுவனங்களையும் ஏன் அடைக்க சொல்கிறீர்கள்? திட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதை விட, தங்கள் பலத்தை காட்டுவதுதான் கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. உங்கள் செல்வாக்கை காட்டவே விரும்புகிறீர்கள்.

யாருக்கு எதிராக பந்த் நடத்தப்படுகிறது? சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராகவா? மத்திய அரசுக்கு எதிராகவா? அல்லது இந்த கோர்ட்டுக்கு எதிராகவா?

வக்கீல் அல்டாப் அகமது:- சேது சமுத்திர திட்டத்தை விரைவில் அமல்படுத்த வற்புறுத்தி பந்த் நடத்துகின்றனர். அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாற்றுவழியில் நிறைவேற்றுவதாக இருந்தாலும் அதை நிறைவேற்ற வற்புறுத்தி தான் நடக்கிறது.


நீதிபதிகள்:- மாற்றுவழி கண்டறிய தான் சுப்ரீம் கோர்ட்டு 3 மாத அவகாசம் கொடுத்து உள்ளது.

வக்கீல் அல்டாப் அகமது:- மாற்று வழி என்றாலும் உடனே அமல்படுத்த வேண்டும், தாமதம் வேண்டாம் என்றுதான் நடத்துகின்றனர்.

நீதிபதிகள்:- இந்த வழக்கில் நாம் மாற்று வழி பற்றி விசாரிக்கவில்லை. பந்துக்கு அழைப்பு விடுப்பது சரிதானா? என்றுதான் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது. 3 மணி நேரமாக விவாதம் நீடித்தது.

அதன்பிறகு முழு அடைப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் அளித்த பரபரப்பான தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பில் பந்த் சட்ட விரோதமானது என்று கூறியதை ஏற்கிறோம். ஆனால் மற்ற தீர்ப்புகளை ஏற்க முடியாது. சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. எனவே, சென்னை ஐகோர்ட்டு பந்துக்கு தடை விதித்திருக்க வேண்டும். அக்டோபர் 1-ந் தேதி நடக்க இருப்பது வேலை நிறுத்தம் அல்ல, பந்த் தான் என்று சென்னை ஐகோர்ட்டே கூறியுள்ளது.

பந்த் என்றால் அரசியல் சட்ட சீர்குலைவு ஏற்பட்டதாகவே கருதப்பட வேண்டும். பந்த், பொதுமக்கள் வாழ்க்கையை சீர்குலைக்கிறது. அரசியல் சட்டம் வழங்கிய பேச்சுரிமை, வாழ்வுரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளது. எனவே, பந்த் சட்ட விரோதமானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

பந்த் எதற்காக நடத்தப்படுகிறது என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கு கவலை இல்லை. மத்திய அரசுக்கு எதிராகவா? அல்லது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டதற்காக போராட்டம் நடத்தப்படுகிறதா? என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. பொதுமக்களுக்கு எதிராக பந்த் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது.

அரசியல் கட்சிகளின் உரிமைகளை விட, தனிப்பட்ட மக்களின் உரிமைகள் மேலானது. எனவே, அரசியல் கட்சிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை சகித்து கொள்ள முடியாது.

நாட்டில் இதுதான் பிரச்சினை. இந்த நாட்டில் எல்லாவற்றையும் இரும்பு கரம் கொண்டு தான் கையாள வேண்டி உள்ளது. இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. பாராளுமன்றமோ, அரசு நிர்வாகமோ, நீதித்துறையோ எதுவாக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு செயல்பட வேண்டி இருக்கிறது.

பந்த் சட்ட விரோதமானது என்ற தீர்ப்பை கடந்த 1998-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டின் முழு பெஞ்ச் அளித்துள்ளது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. ஆனால் கோர்ட்டு உத்தரவுகள் மீறப்படுவது வருந்தத்தக்கது. நாட்டில் எல்லாவற்றையும் கோர்ட்டுகள்தான் கண்காணிக்க வேண்டிய- தடுத்து நிறுத்த வேண்டிய- உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலைமைக்கு நாம் இன்று வந்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகள் கூட கவனிக்கப்படுவது இல்லை. ஐகோர்ட்டுகளின் 99 சதவீத உத்தரவுகள் அமல்படுத்தப்படுவது இல்லை.

பந்த் சட்ட விரோதமானது என்ற உத்தரவை நாங்கள்தான் அளித்தோம். இதுவே இறுதியானது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமானால், அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தான் விசாரித்து முடிவு செய்ய வேண்டும்.

எனவே, பந்த் நடத்துவது சட்ட விரோதம். பந்த் நடத்துவதாக தி.மு.க. கூட்டணி நிறைவேற்றிய தீர்மானம் சட்ட விரோதம் என்று அறிவித்து, அதை ரத்து செய்கிறோம்.

தி.மு.க. கூட்டணி அக்டோபர் 1-ந் தேதியோ, வேறு எந்த நாளிலோ பந்த் நடத்தக்கூடாது. இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை, எந்த அரசியல் கட்சியும் பந்த் நடத்தக் கூடாது.

16 Comments:

Hariharan # 03985177737685368452 said...

இவர்கள் தாராளமாக உண்ணாவிரதம் இருந்து கொள்ளட்டும்.

திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கும் ஹோட்டல்களுக்காவது போணியாகும்!

Anonymous said...

இந்த மாதிரி எல்லா பந்தையும் தடை செஞ்சா கலக்கல் தான். தேவை இல்லாம ஒரு சனிக்கிழமை நாள் வேலை செய்யவேண்டியது இல்ல ;-)

நாகை சிவா said...

அட்ரா சக்கை... அட்ரா சக்கை... அட்ரா சக்கைனா...

யோசிப்பவர் said...

Atlast, A good Stay Order!!;-)

Anonymous said...

Now that SC has categorically stopped him in his tracks, TN Dada has announced FAST UNTO LUNCH comedy. As a mark of celebration, I am going to eat EXTRA tomorrow.

Anonymous said...

இந்த "ஜோக்ஸ் ஜோதிகா" ரொம்பநாள் அப்படியே இருக்கிறது...
கொஞ்சம் மாற்றக்கூடாதா?

IdlyVadai said...

ஸ்ரீகாந்த் இதெல்லாம் கூட பார்க்கிறீகளா ? பாஸ்டன் பாலா மட்டும் தான் பார்க்கிறாருன்னு நினைச்சேன்.

Anonymous said...

idlyvadai,
மைக் முனுசாமி சொன்னது கூட ஜோக் தான?டாக்டர் அய்யா மரத்தை கேட்டுவிட்டுதான் வெட்டுவாரோ?

Anonymous said...

cho press meet:
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20070929223549&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist=

Boston Bala said...

நான் வலதுசாரியா... அபாண்டமா இருக்கே ;)

IdlyVadai said...

அனானி நன்றி.

IdlyVadai said...

//நான் வலதுசாரியா... அபாண்டமா இருக்கே ;)//

இந்த பெருமை வேற வேண்டுமா ?

Kumaran said...

http://thatstamil.oneindia.in/news/2007/10/01/sc-warns-karunanidhi-over-strike.html

அரசுக்கு டிஸ்மிஸ் எச்சரிக்கை

IdlyVadai said...

குமரன் - செய்தியும் உங்க பின்னூட்டமும் கிராஸ் ஆகிவிட்டது :-)

Anonymous said...

If karuna still has any sense of decency and propriety left, he has to go quit on his own if at all he is able to understand the Supreme court warning.He and his henchmen are free to continue their fast indefinetly in their homes after the President rule. A lot of food materials can be saved.

Anonymous said...

//Srikanth said...
இந்த "ஜோக்ஸ் ஜோதிகா" ரொம்பநாள் அப்படியே இருக்கிறது...
கொஞ்சம் மாற்றக்கூடாதா? //

யாருடைய வற்புறுத்தலும் இன்றி கடைகள் தானாகவே அடைக்கப் பட்டிருக்கின்றன என்று ஒரு பதிவர் போட்டிருக்கிறாரே அதை ஜோக்ஸ் ஜோதிகாவில் போடுமாறு சிபாரிசு செய்கிறேன்