பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 14, 2007

FLASH: கேப்டன் பதவியிலிருந்து டிராவிட் திடீர் விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அவர் அனுப்பியுள்ளார். டிராவிட்டின் முடிவு குறித்து கிரிக்கெட் வாரியம் எந்த கருத்தையும் வெளிவிடவில்லை. அவரது முடிவு ஏற்கப்படுமா நிராகரிக்கப்படுமா என கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய குழு கூடி முடிவு செய்யும்.

இந்திய அணி கோச் + கேப்டன் இல்லாமல் இருக்கிறது...
ICLக்கு போக போகிறாரா ?

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்றிலேயே இந்தியா கேவலமாக தோற்றதைத் தொடர்ந்து டிராவிட் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அவருக்கும் மூத்த வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஒரு புகார் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் டிராவிட் பங்கேற்கவில்லை. இதனால் டோணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந் நிலையில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக டிராவிட் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளேன். எனவே கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணியில் நான் சாதாரண வீரராக இடம் பெற விரும்புகிறேன். எனவே அதற்குள் எனக்குப் பதில் வேறு கேப்டனைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

டிராவிடின் இந்த முடிவு குறித்து வருகிற 19ம் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

CNN-IBN

2 Comments:

இலவசக்கொத்தனார் said...

அவரு தமிழ்மணம் படிக்கிறாரு போல! அதான் இப்படி அவமானம் தாங்க முடியாம தலைவர் பதவியைத் தூக்கி எறிஞ்சுட்டாரு. நல்ல வேளை தூக்கு போட்டுக்காம இருந்தாரே. அந்த அளவில் சரி.

IdlyVadai said...

கொத்ஸ் அவர் தமிழ் வலைப்பதிவு படித்திருந்தால் கிரிக்கேட்டிலிருந்தே விலகியிருப்பார் :-)