பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 11, 2007

FLASH: தி.மு.க., கூட்டணியிலிருந்து டி.ராஜேந்தர் விலகல்

தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகுவதாக லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் அவர்...

தி.மு.க., கூட்டணி தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே, கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். மேலும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து இயங்கும்


நான் வாழ்ந்தது இல்லை தன்மானத்தை வித்து
ஏன் என்றால் சுயமரியாதை என்னோட சொத்து
சிலம்பரசன் நான் பெத்தெடுத்த முத்து
அவன் நடிச்ச படம் பேரு 'குத்து'
உதயசூரியன் சின்னத்தை பார்த்து நீ வோட்டை குத்து
( டி.ஆர் தேர்தல் சமயத்தில் உதிர்த்த முத்துக்கள் )

செய்தி இன்னும் CNN-IBNல் வரவில்லை, வந்தவுடன் லிங் தருகிறேன் :-)

ஏன் விலகல் டி.ராஜேந்தர் விளக்கம்

எச்சரிக்கை: ரொம்ப சிரித்தால் உங்களுக்கு வயித்த வலிக்கலாம்

எங்கள் கட்சியின் பொதுக்குழு வருகிற 16ந் தேதி சென்னையில் நடைபெறும். கட்சியின் எதிர்காலத்திட்டம், கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கடந்த சட்டசபை தேர்தலின்போது, எங்களுடைய ஆதரவு திமுகவுக்கு தேவைப்பட்டதால் கருணாநிதி அழைப்பு விடுத்தார். வைகோ இல்லாத இடத்தை நிரப்ப என்னை அழைத்தார். நான் பிரச்சாரம் செய்தேன்.

ஆகவே திமுக வெற்றியில் எனக்கும் பங்கிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று பிரச்சாரம் செய்ததால் உடனடியாக குறைகளை சொல்லக்கூடாது என்று அமைதியாக இருந்தோம்.
லட்சிய திமுக தற்போது வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே நாங்கள் யாருக்கும் இனி பல்லாக்கு தூக்க தயாராக இல்லை.

அதிமுகவில் எங்களுக்கு சீட்டு கொடுத்தார். ஆனால் போதிய தொகுதிகளை தராததால் வெளியே வந்தோம். திமுக எங்களை பிரச் சாரத்துக்காக பயன்படுத்திக் கொண்டது. அதுவும் வைகோவை எதிர்ப்பதற்காக எங்களைப் பயன் படுத்திக் கொண்டார் கள். அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை. அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கும் அழைப்பு அனுப்பவில்லை.

சரத்குமார் கட்சி துவங்கியதும் வாழ்த்து தெரிவிக்கிறார். ஆனால் எங்களை கண்டு கொள்ளவில்லை. எனவே திமுகவுடன் இனி உறவு இல்லை. தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட இருக்கிறது. இந்த மாற்றத்தில் லட்சிய திமுக முக்கிய பங்கு வகிக்கும்.


மேலும் சில எச்சரிக்கைகள்...

வருகிற 16-ந்தேதி லட்சிய தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடக் கிறது. இதில் கட்சியின் எதிர் கால திட்டம் பற்றி முடிவு செய்வோம். இனி அரசியலில் தீவிரமாக செயல்படுவது என்று முடிவு செய்து இருக்கிறேன். எனது கட்சி கொடியில் சிறிய மாற்றம் செய்து புதிய கொடி தயாராகிறது. செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளில் முதன் முதலாக அந்த கொடியை ஏற்றி வைக்கிறேன். 16-ந்தேதிக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடி ஏற்றுகிறேன். இனி எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. எம்.ஜி.ஆர். அரசி யலில் இருக்கும் போதே நான் அரசியல் கட்சி தொடங்கியவன். சிலரைப் போல் சினிமாவில் ஓய்வு பெறும் கால கட்டத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை.
என் கட்சியில் 2 லட்சம் பேர் தொண்டர்களாக இருக்கிறார் கள். இனி எந்த கட்சிக்கும் பல்லக்கு தூக்க மாட்டேன். சிறு தவறு நடந்தாலும் தட்டி கேட்பேன். எங்கள் கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபடு வர். எனக்கு 10 சதவீத ஓட்டு இருக்கிறது. எனவே தீவிர அரசியலில் இனி நாங்கள் ஈடுபடுவோம். எனது மகன் சிம்பு அரசியலில் இல்லை.

12 Comments:

Hariharan # 03985177737685368452 said...

திரு. டி.வி.ராஜேந்தரின் கூட்டணி விலகல் தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை,அரசியல் சுனாமியை ஏற்படுத்தும்.

காலைச்சிற்றுண்டிக்கு இட்லிவடை ஆர்டர் செய்து இட்லிசாப்பிடும்போது அதிமுகவிலும் வடையை சாப்பிட ஆரம்பிக்கும்போது திமுகவிலும் அணிமாறி தமிழ்நாட்டின் தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ராமதாசையே வெட்கப்படவைக்கும் அளவுக்கு அணிமாறுவதுதான் டிவி.ராஜேந்தரின் 'இலட்சிய"திமுக கட்சி(??)யின் லட்சியமோ?

ராஜேந்தர் தமிழக அரசியலை சும்மா சம்ம்மு..சம்ம்மு..சம்ஹாரம் செய்கிறார் :-))

மடல்காரன்_MadalKaran said...

பிழையா?

//வேட்டை குத்து?//

சரியா?

வோட்டை குத்து?

Anonymous said...

TR comedy aramibichiduchu...

IdlyVadai said...

ஏன் விலகியது என்ற அப்டேட்.
மடல்காரன் நன்றி.

IdlyVadai said...

மேலும் சில அப்டேட்/எச்சரிக்கைகள் :-)

Anonymous said...

விலகலுக்கு கலைஞர் டிவியிலிருந்து இவரை அழைக்காமல் பாக்யராஜை அழைத்து நிகழ்ச்சி செய்யும்படி கேட்டுக் கொண்டதும் ஒரு காரணம் என்கிறார்கள்.

சன் டிவியின் அரட்டை அரங்கத்திலிருந்து விலகவும் தயாராக இருந்தார். ஆனால் அழைப்பு வராததால் ஏமாந்து போய்விட்டார்.

கூடவே சரத்குமார், விஜயகாந்த் இருவருக்கும் இப்போது கிடைத்திருக்கும் மீடியா ஆதரவு தனித்து நின்றால் மட்டுமே கிடைக்கும். இல்லாவிடில் கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தாதான் என்பது இவருடைய சுற்றத்தாரின் அட்வைஸாம்..

ஏற்றுக் கொண்டார். லவட்டிக் கொண்டார்.. இனி சரத், விஜய்காந்திற்கு பதில் கொடுக்க ராஜேந்தரே போதும் என்கிறார்கள்.

பின்னணியில் இருப்பது சன் டிவியா? கலைஞர் டிவியா? என்பதுதான் இப்போது புரியாத புதிர்..

IdlyVadai said...

அனானி நீங்கள் சொல்லுவது சரி. இந்த விலகலுக்கு டிவி தான் காரணம். பெப்ஸி உமாவிற்கு கூட சான்ஸ் கிடைத்தது நமக்கு ஏன் கிடைக்கவில்லை என்று கூட நினைத்திருக்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

அடடா அப்போ அரட்டை அரங்கம் கண்டினியூ ஆகும். ஏன்னா இவருதான் இனிமே புது டீவிக்குப் போக முடியாதே.

IdlyVadai said...

இலவசம், இது கலைஞரின் சாணக்கியம். எப்படியாவது சன் டிவியை ஒழித்துவிடுவது என்ற முடிவில் இருக்கிறார் :-)

Unknown said...

Sringaram the tamil film that has won 3 national and 2 state awards is being released on the 21st of september..a great film!

Anonymous said...

அட. இவ்வளவு நாள் இந்த ஆள் நம் கூட்டணியிலா இருந்தார்? - கலைஞர்.

IdlyVadai said...

//அட. இவ்வளவு நாள் இந்த ஆள் நம் கூட்டணியிலா இருந்தார்? - கலைஞர்.//

:-) நல்ல ஜோக் !