பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 15, 2007

கலைஞர் பேட்டி

சேலம் விழா, கூட்டணி கட்சிகள், மதவாத சக்திகளுக்கு மத்திய அரசு தலைவணங்கக் கூடாது.

கேள்வி:- சேலம் அரசு விழா ஒரு மாநாட்டைப் போன்று நடந்து உள்ளது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்ப

பதில்:- இது மக்களின் எழுச்சியை எடுத்துக் காட்டு கிறது. சேலம் மாவட்ட செய லாளர் வீரபாண்டி ஆறுமுகத் தின் உழைப்பை சுட்டிக்காட் டியது.

கே:- நேற்று நடந்த விழாவில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே எந்தப் பிளவும் இல்லை என்று கூறினீர்கள். இந்த நிலை தொடருமா?

ப:- இந்த நிலை தொடர வேண்டும் என்று விரும்பு கிறோம்.

கே:- பா.ம.க.வுக்கும், தி.மு.க. வுக்கும் கீழ்மட்டத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருப்பதை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நீங்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

ப:- இது தானாக தீர்ந்து விடும்.

கே:- தி.மு.க. கூட்டணியை தொடர்ந்து உடைக்கும் முயற்சியில் யாராவது செயல் படுகிறார்களா?

ப:- கூட்டணி உருவாக் கப்பட்ட காலத்தில் இருந்தே உடைக்கும் முயற்சியும் கூட்டணி கட்சிகளுக்கிடையே சிறு, சிறு சலப்பை உண்டாக்க வேண்டும் என்றும் திட்டமிட்ட செயல்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இதற் காக நாம் அஞ்சத் தேவை இல்லை.

கே:- ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க விழா வில் தாங்கள் ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்தீர் களே?

ப:- அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. விழா நடந்த இடம் ஓய்வு பெற்ற அலுவலர்களின் விழா, ஓய்வு பெற்ற ஒவ்வொருவரும் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள், அதேபோல நானும் உற்சாகமாக இருக்க விரும்புகிறேன். நான் பொதுவாழ்க்கையில் ஓய்வு பெறுவதாக திட்ட மிட்டு கூறவில்லை. நான் பேசியதற்கும், என் பொது வாழ்விற்கும் எந்த தொடர்பும் இல்லை.

கே:- துணை முதல்வர் பதவி வழங்கும் திட்டம் உண்டா?

ப:- அந்த மாதிரி திட்டம் எதுவும் இல்லை.

கே:- விவசாயத்துறையிலும் சிறப்பு பொருளாதார மண்ட லம் கொண்டு வர வேண் டும் என்று டாக்டர் ராம தாஸ் கோரிக்கை வைத்து உள்ளாரே?

ப:- தற்போது தொழில் துறையில் சிறப்பு பொருளா தார மண்டலங்கள் கொண்டு வரப்படுகிறது. மற்ற துறை களிலும் ஒவ்வொன்றாக வரலாம். இதில் அரசியல் இல்லை.

கே:- சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் உங்களுக்கும், மத்திய அரசுக்கும் ஏதாவது கருத்துவேறுபாடு உள்ளதா?

ப:- மதத்தை பயன்படுத்து கின்ற நாட்டில் மூட நம்பிக்கை களை விளைவித்து அவர் களின் எண்ணத்தை பூர்த்தி செய்ய நினைக்கும் ஆதிக்க சக்திகளுக்கும், எங்களுக்கும் தான் வேறுபாடு. மத்திய அரசுடன் எந்த கருத்துவேறு பாடும் இல்லை. மதவாத சக்திகளுக்கு மத்திய அரசு தலைவணங்கக் கூடாது. ( இந்து மதம் என்று படிக்கவும் )

கே:- சேதுசமுத்திர திட்ட விவகாரத்தில் மத்திய அரசு தங்கள் நிலைப்பாட்டில் இருந்து சற்று இறங்கி வந்ததாக தெரிகிறதே?

ப:- நீதிமன்றம், சேதுசமுத் திர திட்ட விவகாரத்தில் அவ்வாறு கூறியதால் மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது இருக்கிறது. அதற்காக திட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று பொருளல்ல.

கே:- சேதுசமுத்திர திட்டம் எத்தனை ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்படும்?

ப:- இது 70, 80 ஆண்டு கால கனவு. 3, 4 மாதத்தில் முடித்துவிடுவோம் என்று சொல்ல முடியாதது. ராமர் பாலம் கட்டப்படவே இல்லை. ராமர் என்று ஒருவர் இருந்ததில்லை. அது ஆரியர்களுக்கும், திரா விடர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தை மையமாக வைத்து புனையப்பட்ட ஒரு கதை என்று தன்னுடைய புத்தகத்தில் பகுத்தறிவு வாதி பண்டித ஜவகர்லால் நேரு கூறி இருக்கிறார்.

கே:- போராடி பெற்ற சேலம் ரெயில்வே கோட்டம் எப்போது தொடங்கப்படும்?

ப:- விரைவில் தொடங்கப்படும்.

கே:- மத்திய அரசு அறிவித்த சேலம் ரெயில்வே கோட்டத்தை போர்க்குணம் காட்டித்தான் பெற வேண்டுமா ?

ப:- திருத்திக் கொள்ளவும், போர் குணத்தை செயல்படுத்தி....!

கே:- சேலம் ரெயில்வே கோட்டத்திற்காக மறியலில் ஈடுபட்ட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது வழக்கு தொடர தே.மு.தி.க.வினர் திட்டமிட்டு உள்ளனரே?

ப:- அப்படியா மகிழ்ச்சி.

கே:- ஏற்காட்டுக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்து இருக்கிறீர்கள். எப்படி உணருகிறீர்கள்?

ப:- ஏற்காடு தமிழகத்தின் ஒரு பகுதி. இதற்கு சின்ன குற்றாலம். ஏழைகளின் ஊட்டி என பல பெயர்கள் உள்ளன. சேலம் மாவட்ட வளர்ச்சியுடன் ஒரு கூறாக ஏற்காட்டின் வளர்ச்சியும் அமையும்.

கே:- அ.தி.மு.க.வுடன் பாரதீய ஜனதா நெருங்கி வருவதாக கூறப்படுகிறதே?

ப:- அவர்கள் நெருங்கு வந்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை.

கே:- பாராளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் வருமா?

ப:- பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் வராது. இப்போதைக்கு அமைதி தான் வரவேண்டும்.

கே:- தமிழக அமைச்சரவை யில் மாற்றம் உண்டா?

ப:- இருந்தால் வெளியிடப்படும்.

0 Comments: