பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 13, 2007

ராமர் பாலம் மனுவை வாபஸ் பெற மத்திய முடிவு

ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக துணை அபிடவிட் மனுவை மத்திய அரசு நாளை தாக்கல் செய்ய உள்ளது. ராமர் மற்றும் ராமர் பாலத்திற்கான ஆதாரங்கள் இல்லை என மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சியினர் நாடு முழுவதும் பஸ்மறியல், ரயில் மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். மத்திய அரசு அளித்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தவை பக்தர்களை புண்படுத்தும் நோக்கில் கூறப்பட்டிருப்பதாக அத்வானி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கடவுள் ராமர் நம் கலாசாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவராவார். அவரைப் பற்றி வாதம் செய்வது சரியில்லை என கூறியுள்ளது. மேலும் அந்த பதில் மனுவை வாபஸ் பெறுவதற்காக நாளை துணை அபிடவிட் மனு தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

0 Comments: