பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 13, 2007

விஜயகாந்த் ரசிகர்களுடன் வடிவேலு மோதல்

விஜயகாந்த் ரசிகர்களுடன் மோதல் - போலீஸ் நிலையத்தில் வடிவேலுவிடம் விசாரணை .....

தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த்தின் தங்கை திருமலாவின் வீடு சென்னை சாலிகிராமம் காவேரி நகரில் உள்ளது. திருமலா வீட்டின் எதிரில் உள்ள மாடியில் நடிகர் வடிவேலுவின் அலுவலகம் இருக்கிறது.

நேற்று இரவு உடல் நலம் இல்லாமல் இருந்த திருமலாவின் கணவர் முத்து ராமன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதைக் கேள்விப்பட்டு திருமலா வீட்டு முன் விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் கட்சி தொண்டர்களும் கூடி இருந்தனர்.

விஜயகாந்த் கட்சி நிர்வாகி கள் வந்தகார் வடிவேலு அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. வடிவேலு அலுவலகத்தில் தனது நகைச்சுவை காட்சி கள் சம்பந்தமாக உதவி யாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு கீழே இறங்கி வந்தார்.

அங்கு அவரது கார் செல்ல முடியாத அளவுக்கு விஜயகாந்த் ரசிகர்களது கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தும் சத்தம் போட்டு காரை எடுங்கள் என்றார்.

அப்போது விஜயகாந்த் ரசிகர் களுக்கும், வடிவேலு வுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. உடனே விஜய காந்தின் மேனேஜர் சதீஷ்குமார் ஓடி வந்து வடிவேலுவை சமாதானப்படுத்தினார்,

ஆனால் வடிவேலு ஆவேசத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் பற்றி ஏதேதோ கூறியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

அதன் பிறகு வடிவேலு காரில் ஏறி வீட்டுக்கு சென்றார். இந்த மோதல் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசில் விஜயகாந்தின் மானேஜர் சதீஷ்குமார் புகார் செய்தார்.

இதையடுத்து இன்ஸ் பெக்டர் அழகேசன் நடிகர் வடிவேலுவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.

அதிகாலை 2 மணியில் இருந்து 5 மணிவரை 3 மணி நேரம் போலீஸ் நிலையத்தில் வைத்து வடிவேலுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. மோதலின் போது வடிவேலு குடி போதையில் இருந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாகவும் வடிவேலு விடம் விசாரணை நடந்தது.

இதே போல் வடிவேல் தரப்பிலும் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப் பட்டுள்ளது. அதில் விஜய காந்த் ரசிகர்கள் அவதூறாக பேசிய தால்தான் மோதல் ஏற்பட்டது'' என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே நள்ளிரவில் விஜயகாந்த் தங்கை வீடு எதிரில் உள்ள வடிவேலுவின் அலுவலகம் கல்வீசி தாக்கப் பட்டது. இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

இது தொடர்பாக அலுவல கத்தில் இருந்த வடிவேலுவின் உதவியாளர்கள் விருகம் பாக்கம் போலீசில் புகார் செய்தனர்.

வடிவேல் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக விஜயகாந்த்தின் மேனேஜர் சதீஷ்குமாரை விருகம்பாக்கம் போலீசார் பிடித்துச் சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.

அவரை போலீசார் கைது செய்ததாக தகவல் பரவியதால் ஏராளமான விஜயகாந்த் ரசிகர்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டு முற்றுகையிட்டனர். விஜகாந்த் மேனேஜரை விடுவிக்க கோரி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் துணை கமிஷனர்கள் அருண், லட்சுமி தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.

அவர்கள் சதீஷ்குமாரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் நிலையம் முன் விஜயகாந்த் ரசிகர்கள் தொடர்ந்து கூடியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வெளிïரில் இருந்த நடிகர் விஜயகாந்துக்கு கட்சி நிர்வாகிகள் தகவல் கொடுத்தனர். உடனே அவர் சென்னை விரைந்தார். முன் எச்சரிக்கையாக சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கும், வடிவேல் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
(செய்தி: மாலைமலர் )

0 Comments: