T20 கிரிக்கெட் முடிந்து இரண்டு நாள் ஆகியும் அதன் தாக்கம் இருந்துகொண்டே தான் இருக்கு. இன்று எல்லா செய்திதாள்களிலும் முதல் பக்கம் படங்களுடன் இந்த நியூஸ் தான். நேற்று இந்திய அணி வந்து இறங்கியதை எல்லா நியூஸ் சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு (கேமராவுக்கு ரெயின் கோட் எல்லாம் போட்டு) நேரடி ஒளிபரப்பு செய்தது.
இதோ வந்திவிட்டார் தோனி, இதோ திரும்பி பார்க்கிறார், இதோ நடக்கிறார் நேரடி வர்ணனை வேறு. "Can you explain the mood of the people over there" அதான் பார்த்து கொண்டிருக்கிறோமே.
இதே கிரிக்கெட் டீம் போனவருஷம் ஏர்போர்ட் பின் பக்க கதவு வழியாக வந்தவர்கள் இந்த முறை மெயின் கேட் வழியாக வந்தார்கள். சரி வந்தார்கள், ஏர்போர்ட்டில் முக்கியமானவர்கள் வரவேற்றார்கள் என்பதோடு நிறுத்தியிருக்கலாம். அதுவும் மாநில முதல் அமைச்சர், துணை முதலமைச்சர் ஏர்போர்ட் செல்வது டூமச். போகட்டும் அதை விடுங்க, பஸ்ஸில் ஊர்வலம், பின் பாராட்டு விழா எல்லாம் கொஞ்சம் ஓவராகவே எனக்கு தெரிகிறது. வந்திறங்கிய இந்திய அணி் டாயிலட் கூட போயிருக்க மாட்டார்கள்.
மீடியா இரண்டு நாட்களாக "Dhoni’s Devils", "Bravehearts", "Welcome Warriors" என்று புகழாரம். கிரிக்கெட்டில் என்ன வீரம் இருக்கிறது. பந்தை போட வேண்டும், அல்லது அடிக்க வேண்டும், சில சமயம் புல் தரையில் விழுந்து பிடிக்க வேண்டும்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர், இந்திய அணியை சக்கரபதி சிவாஜி போன்றவர்கள், பிரிட்ஷை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் போன்றவர்கள், பாக்கிஸ்தானுடன் போர் புரிந்த இந்திய ராணுவத்தினர் போன்றவர்கள் என்றார். மும்பையில் Zoo இருக்கான்னு தெரியலை, இல்லை இவரை அங்கு கொண்டுபோய் வைக்கனும்.
"சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருக்கும் மும்பை இன்று அப்படியே நின்றது" என்றார் தோனி. அடுத்த முறை தோல்வியை சந்தித்தால் அப்படியே நின்ற கூட்டம் சுறுசுறுப்பாக அடிக்க வருவார்கள்.
பிகு: இந்திய வந்த ஆஸி அணி கேப்டன் ரிக்கி பாண்டிங்(கூத்தை எல்லாம் பார்த்திருப்பார்), T-20 வெற்றி எல்லாம் பழைய கதை என்று பேட்டியில் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் பயமாக தான் இருக்கு. இவர்கள் நேற்று செய்த கூத்து அடுத்த மெட்ச் இவர்கள் தொற்றால் நன்றாக இருக்கும் என்று கூட தோன்றுகிறது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, September 27, 2007
கிறுக்குத்தனமான கிரிக்கெட் கூத்து
Posted by IdlyVadai at 9/27/2007 04:12:00 PM
Labels: செய்தி விமர்சனம், விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
மும்பையில் Zoo இருக்கான்னு தெரியலை, இல்லை இவரை அங்கு கொண்டுபோய் வைக்கனும்.
Well said IV
தோனிக்கு கூடிய சீக்கிரமே ரசிகர்கள், மீடியாக்கள் ஆப்பு வைப்பார்கள் என உள்மனம் சொல்கிறது. ஐயோ பாவம். அவர் பேசுவதெல்லாம் வெற்றியின் போது மட்டுமே எடுபடக்கூடியது என்பதை விரைவில் புரிந்துகொள்வார். முதலிலேயே தோல்வியை சந்திக்கும் தலைவனே சிறந்த தலைவனாக வரமுடியும். :P
IV,
இதுு உண்மையில் கொண்டாட வேண்டிய வெற்றி. உமக்கு என்ன பொறாமை. இது நம் வெற்றி , அப்படிதான் நான் நினைக்கிறேன். ஹாக்கி போட்டியை கண்டுகல , அப்படி feel பன்னா , அது நியாயம்.
சின்ன புல்ல தனமா இருக்கு .........
ஜீவன்
ஹரன்பிரசன்னா இதெல்லாம் கிரிக்கெட்டில் சகஜமப்பா
இது உண்மையில் கொண்டாட வேண்டிய வெற்றி. உமக்கு என்ன பொறாமை. இது நம் வெற்றி , அப்படிதான் நான் நினைக்கிறேன். ஹாக்கி போட்டியை கண்டுகல , அப்படி feel பன்னா , அது நியாயம்.
சின்ன புல்ல தனமா இருக்கு //
கொண்டாடுங்க ஆனா ரொம்ப ஆடாதிங்க என்று சொன்னேன் அவ்வளவு தான்
iv,
ஆஸ்திரேலியா Ashes தொடர் போட்டியை வென்ற போது , இது போல் தான் நடந்தது. இதில் தப்பு ஏதும் இல்லை என்று தான் தோன்றுகிறது.
உம்மை இந்த கொண்டாத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிரேண்.
ஜீவண்..
Post a Comment