பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 13, 2007

ராமர் பாலம் பற்றி ஜெ அறிக்கை

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ராமர் பாலம் பற்றிய அறிக்கை....ராமர் பாலம் என்ற புராதன சின்னத்தை இடித்து விட்டு சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் கருணாநிதியும், மத்திய கப்பல் தரைவழி, போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருமான டி.ஆர். பாலுவும் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராமர் பாலம் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினாலே டி.ஆர். பாலுவுக்கு ஆவேசம் வந்தது போல் ருத்ரதாண்டவம் ஆடுகிறார். கருணாநிதியோ, இதை நிறைவேற்றியே தீருவேன் என்று சூளுரைக்கிறார். அவர்கள் என்ன வேண்டு மானாலும் செய்து கொண்டு போகட்டும் அதைப் பற்றி அ.தி.மு.க. தற்போது கேள்வி கேட்கவில்லை. ஆனால் மாற்றுத்திட்டங்கள் இருக்கும் போது புராதனச் சின்னமான ராமர் பாலத்தை இடிக்க வேண்டிய அவசியம் என்னப என்றுதான் கேள்வி எழுப்பு கிறோம்.

ராமர் பாலத்தை இடிக்காமல் இந்த திட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் முக்கியமான கோரிக்கை. இது தான் இந்திய மக்களின் விருப்பமாகும். ராமர்பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரக்கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு மாற்றுத் திட்டங்கள் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டு உள்ளன. அதில் சாத்தியமான ஒன்றை மத்திய அரசு பரிசீலனை செய்து இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். ஆனால், மத்திய கப்பல், தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு எதையும் ஆரா யாமல் மக்களின் விருப்பத்தை புறக்கணிப்பது ஜன நாயகத்திற்கு முரண் பாடான செயலாகும். இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எதிர்ப்பைப் பற்றியும் கவலைப்படாமல் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகÛள் பற்றியும் கவலைப்படாமல், எப்படியும் இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று விடாப்பிடியாக இருக்கிது மத்திய அரசு.

இந்திய மக்களின் விருப் பத்திற்கு எதிரான, இயற்கைக்கு அநீதி இழைக்கக் கூடிய டி.ஆர். பாலுவின் போக்கிற்கு அ.தி.மு.க. தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

புராதனச் சின்னமான ராமர் பாலத்தை இடிக்காமல், கொடுக்கப்பட்டுள்ள மாற் றுத் திட்டங்களில் ஏதாவது ஒன்றை பரிசீலனை செய்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

0 Comments: