பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 28, 2007

பந்துக்கு தடை இல்லை - தீர்ப்பு விவரம்

முழுஅடைப்பு அல்லது பந்துக்கு தடையில்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது !

கலைஞர் என்ன சொல்லுகிறார் ?

அக்டோபர் 1ந் தேதி திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் தமிழ் மக்களுக்காக ஒரு கோரிக்கையை முன்வைத்து கவனத்தை கவரும் வகையில் அமைதியான முறையில் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன. இது அரசு அறிவிப்பு அல்ல


தீர்ர்பு விவரம் கீழே...

அரசியல் கட்சிகள் விடுத்துள்ள இந்த பந்த்துக்கு அடிப்படை ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது. அரசியல் கட்சிகள் கூறியிருப்பது பந்த். அதை வேலை நிறுத்தம் என்றோ, கடையடைப்பு போராட்டம் என்றோ கூறுவதை ஏற்க முடியாது.

வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் இது தொடர்பாக பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. வழக்கு விசாரணை வரும் 24.10.2007க்கு தள்ளிவைக்கப்படுகிறது. பந்த் நடைபெறும் நாளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என்றும், மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு இராது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

அதன்படி மாநில அரசு, காவல்துறை டிஜிபி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அக்டோபர் 1ந் தேதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ கட்டாயப்படுத்தி குடிமக்களின் அன்றாட வேலையில் குறுக்கிட்டால், அப்படி குறுக்கிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து உட்பட எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் அன்றைய தினம் இயல்பாக செயல்பட அரசு உறுதி செய்ய வேண்டும்.

இதை தடுக்க யாராவது முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைகளில் விளம்பரம் வாயிலாக இதனை அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். முழு அடைப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ள தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. கம்ïனிஸ்டு, கட்சிகள் உள் ளிட்டோர் பதில் மனு தாக் கல் செய்ய உத்தர விடப்படு கிறது. இவ்வாறு அவர்கள் அந்த இடைக்கால தீர்ப்பில் கூறியிருந்தனர்

4 Comments:

ஹரன்பிரசன்னா said...

நமது கட்சிகளின் ரவுடி பாரம்பரியம் நாம் அறிந்ததே. எத்தனை பேர் வேலைக்கு வந்துவிடுவார்கள்? எத்தனை பெண்கள் பஸ்ஸில் வருவார்கள்? நீதிபதியே சொல்லியிருக்கிறார், கடந்த வேலை நிறுத்தத்தின் போது வேலைக்கு வந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்று. எப்படியோ, கொஞ்சமாவது கிடுக்கிப்பிடி போட்டதே நீதிமன்றம்.

தொடர்ந்து இனிமேல் எந்தக் கட்சியும் பந்த் நடத்தக்கூடாது என்றும் அப்படி கட்சிகள் நடத்தினாலும் அரசு அதை அனுமதிக்ககூடாது என்றும் தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவை மீறும் கட்சிகளின் மீது நடவடிக்கை எடுப்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தினாலே போதும், பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.

Boston Bala said...

பந்த் அன்று இந்தியா x ஆஸி க்ரிக்கெட் இருக்கிறதா?

அல்லது அன்று எந்த டிவி பார்க்கலாம்: கலைஞர் அல்லது சன்?

இட்லி-வடையும் பந்த்தில் பங்கு கொள்ளுமா ;)

ராமதாஸ் கருத்து பார்த்தீர்களா...

ஐகோர்ட்டில் வழக்கு உள்ளதால், பந்த் கூடாது என்ற வாதம் எடுத்து வைக்கப்படுகிறது. 2002ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அக்டோபர் 9ம் தேதி காவிரி பிரச்னைக்காக பொது வேலை நிறுத்தம் நடந்தது. அப்போதும் காவிரி பிரச்னை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் இருந்தது.

IdlyVadai said...

ஒரு ஐ.டி கம்பெனி திறந்து வைத்தால் எல்லோரும் திறப்பார்கள். பார்க்கலாம்.

IdlyVadai said...

பாபா
கிரிக்கெட்டில் பந்து இல்லை என்றால் பந்த் :-)

பந்த் அன்று சன் டிவி தெரியாமல் போகலாம். அரசு நடத்தாத பந்த் என்பதால் கலைஞர் டிவி தெரியும்

இட்லிவடை சாம்பாரில் கலக்கலாம் பந்தில் கலக்க முடியாது.

ராமதாஸ் முன்பு ஜெ கேபிள் டிவி அரசுடமை ஆக்க வேண்டும் என்ற போது எதிர்த்தார் இப்ப அதை வரவேற்க்கிறார். அதே போல் தான் இதுவும்.