அக்டோபர் 1ம் தேதி முழு அடைப்பு நடைபெறும் என்று திமுக அறிவித்தது. இதை தொடர்ந்து பந்த் நடத்துவது சட்டவிரோதம் என்று ஜெ, சுப்பிரமணிய சாமி, டிராபிக் ராமசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தர்கள்.
அந்த பதிவு இங்கே
உயர்நீதி மன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்றது. அதில் அரசு தரப்பு வக்கீல் நீதிபதியிடம் இவ்வாறு சொல்லியிருக்கிறார்
அக்டோபர் 1ம் தேதி அரசு சார்பில் பந்த் நடக்கவில்லை. தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம்தான் நடக்கிறது. மக்கள் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தலைமை நீதிபதி ஏ.பி.ஷா :
பொதுமக்களை பாதிக்கும் வகையில் ஆளுங்கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுவது முறைதானா? எப்படி சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவீர்கள். அரசியல் அமைப்பின் கீழ் பொறுப்பு வகிப்பவர்களே ஒருவிதமான நிலையை உருவாக்கலாமா? பொதுமக்கள் எங்கே போவார்கள். நான் அரசியலுக்குள் நுழையவில்லை.
முழு அடைப்பால் பொதுமக்களுக்கு மனவேதனை ஏற்படும் என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும். இதற்கு இடைக்கால விதிக்கவில்லை. பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
வேலைக்கு வருபவர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் அரசை நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டத்தில் உள்ள ஓட்டை தெரிகிறதா ?
4 Comments:
உண்மை, இந்த பந்த் தேவை இல்லாத ஒன்று. ஏதிர்ப்பை காட்ட வேண்டும் என்றால் சோனியா ஜி, மண்மோகன் ஜி வீட்டின் முன் போராட்டம் நடத்த வேண்டியது தானே..... இல்லை ஆதரவு வாபஸ் என்று பூச்சான்டி காட்ட வேன்டியது தானே....
ஏன் தமிழ்நாட்டு மக்கள் உயிரை வாங்கிறிங்க.
ஜீவன்.
நீதிமன்றம் இதை கேள்வி கேட்க்கக்கூடாதா? நீதிபதிகள் என்ன செய்கிறார்கள்? அரசு நடத்தவில்லை என்றால் எப்படி பள்ளிகள், கல்லூரிகள், அரசு போக்குவரத்து எல்லாம் அன்று விடுமுறை எடுத்துக்கொள்கிறது? போக்குவரத்தை அரசு பாதுகாப்போடு செயல்படுத்தவேண்டாமா? பாதுகாப்பு கருதி செயல்படுத்தவில்லை என்றா சொல்வார்கள்? இந்த அபத்தமான வாதத்தை எப்படி நீதிமன்றம் ஏற்கிறதோ?
சட்டத்தில் உள்ள ஓட்டை தெரிகிறதா ?
Ottai mattum illa... paadhaala gugaiye theriyudhu...
ஹரன்பிரசன்னா நேற்று நீதிபதி சொன்னது :
தலைமை நீதிபதி ஏ.பி.ஷா:

Post a Comment