பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 06, 2007

வேணுகோபால், அன்புமணிக்கு கோர்ட் நோட்டீஸ்

தில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) பதிவாளரை நியமிக்கும் விவகாரம் தொடர்பாக அதன் இயக்குநர் வேணுகோபால் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஆகியோருக்கு தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.டாக்டர் மனோஜ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கீதா மிட்டல், வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் அமைச்சர் அன்புமணியும், எய்ம்ஸ் இயக்குநர் பி.வேணுகோபாலும் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

எய்ம்ஸ் பதிவாளரை நியமிப்பது தொடர்பான விதிமுறைகளை 6 வாரத்துக்குள் வகுக்குமாறு கடந்த மார்ச் 7-ல் உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு என்னவாயிற்று என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படியும் நீதிபதி கீதா மிட்டல் கடிந்து கொண்டார்.

பதிவாளரை நியமிக்க எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபாலும், இல்லை, எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று அமைச்சர் அன்புமணியும் மல்லுக்கட்டி வருவதாக டாக்டர் மனோஜ்குமார் தனது மனுவில் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இவர்கள் இருவரின் மோதலால், மருத்துவ மாணவர்கள் கல்வி வெகுவாக பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதே மோதல் பிரச்னை காரணமாக, எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களின் தேர்ச்சி சான்றிதழ்களில் கையெழுத்திட மறுத்து வந்த அமைச்சர் அன்புமணி, தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடந்த செவ்வாய்க்கிழமை சான்றிதழ்களில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சிக்கல்: இதற்கிடையில் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 2 பேர், தங்கள் தேர்ச்சி சான்றிதழ்களில் அமைச்சர் அன்புமணி கையெழுத்திட மறுப்பதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த நீதிபதி எஸ்.ரவீந்திரா பட், மருத்துவ மாணவர்கள் தேர்ச்சி சான்றிதழ்களில் அமைச்சர் அன்புமணி கையெழுத்திடுவதில் எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது. நீதிமன்ற உத்தரவுப்படி அந்த பிரச்னை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்றார்.

செவ்வாய்க்கிழமை 49 மாணவர்களின் சான்றிதழ்களில் அமைச்சர் கையெழுத்திட்டார். இன்னும் 17 பேரின் சான்றிதழ்களில் அவர் கையெழுத்திட வில்லை என்று மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்னதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சரின் வழக்கறிஞர் முகுல் குப்தா, சம்பந்தப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் உரிய நேரத்தில் அமைச்சரிடம் சமர்ப்பிக்க பட வில்லை. மாணவர்கள் சான்றிதழ்களுடன் அமைச்சரை அணுகினால் உடனே அவர் கையெழுத்திட்டு தருவார். புதன்கிழமை மாலைக்குள் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும் என்றார்.

0 Comments: