கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பஸ் எரிப்பு - ராம பக்தர்களின் பண்பாடு இது தான் என்பதை இதன் மூலமாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்
கலைஞருக்கு ஒரு வேண்டுகோள் - இந்த மாதிரி பேச்சுக்கள் பிரச்சனையை இன்னும் பெரிசாக்கும். So please..
தினகரன் சம்பவத்தின் போது எந்த பண்பாடு வெளிப்பட்டது ? திராவிட பண்பாடு ? திமுக பண்பாடு ?
பேட்டி கீழே..
கேள்வி:- தமிழகத்தில் எல்லையோரத்தில் பேருந்துகள் எரிக்கப் பட்டுள்ளன. இரண்டு பேர் இறந்திருக்கிறார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் :- ராம பக்தர்களின் பண்பாடு இது தான் என்பதை இதன் மூலமாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கே :- இரண்டு உயிர்கள் பறி போய் இருப்பதைப் பற்றி?
ப:- அதற்காக நான் கண்டனம் தெரிவிக்கிறேன். என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை இரு உயிர்களை இழந்த அந்த வீட்டாருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே:- பா.ஜ.க. வினரும், ஆர்.எஸ்.எஸ். காரர்களும் ராமரைப் பற்றி நீங்கள் பேசியது தான் வன்முறைக்குக் காரணம் என்கிறார்களே?
ப :- ராமரைப் பற்றி நான் என்ன சொன்னேன்.
கே :- ராமர் பொறியாளரா என்று நீங்கள் பேசியதைப் பற்றி அவர்கள் குறையாகச் சொல்கிறார்களே?
ப:- ராமர் என்று ஒருவர் இருந்ததாகவோ, அவர் பாலம் கட்டக் கூடிய அளவிற்கு பொறியியல் வல்லுநராக இருந்ததாகவோ அவர் பாலம் கட்டியதாகவோ சரித்திரம் இல்லை. இருக்கிறதா என்று நீங்களே சொல்லுங்கள். அதைத் தான் நான் பேசினேன். அதிலே என்ன தவறு?
ராமரைப் பற்றி நாங்கள் சொல்லாத விஷயங்களை யெல்லாம் ராமாயணம் எழுதிய வால்மீகி அவர்களே ராமாயணத்தில் எழுதியிருக் கிறார். அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
கே:- வால்மீகி இல்லை சார், நீங்கள் தான் இருக்கிறீர்கள்?
ப:- வால்மீகி இல்லை, ராமர் இருக்கிறாரா, அவரும் தான் இல்லை. மக்களை யெல்லாம் அவ்வளவு மோசமாக ஒரு கூட்டம் நினைக்கிறது; அது தவறு!
கே :- கர்நாடக அரசுக்கு நீங்கள் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கச் சொல்வீர்களா?
ப:- நடவடிக்கை எடுக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை. அவர்கள் கடமையை அவர்கள் செய்வார்கள். எங்கள் கடமையை நாங்கள் செய்வோம்.
கே:- நேற்று பெங்களூரில் நடைபெற்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிப்பீர்களா?
ப:- இப்படிப்பட்ட எதிர்ப்புகளையெல்லாம் வரவேற்கக் கூடியவன் நான். தூசாகக் கருதக் கூடியவன் நான்.
கே:- ராமர் விஷயத்தை சில பேர் அநாவசியமாக பெரிது படுத்துவதாக நினைக்கிறீர்களா?
ப:- நிச்சயமாக - சேது சமுத்திரத் திட்டமே வரக் கூடாது என்பது அவர்களுடைய எண்ணம். அந்த எண்ணத்தை நிறை வேற்றுவதற்காக சிறிய சிறிய காரணங்களைத் தேடி அலைகிறார்கள்.
கே :- காங்கிரஸ் அரசாங்கத்திடம் சேது சமுத்திரத் திட்டத்தைத் தொடர வேண்டுமென்று வலியுறுத்துவீர்களா?
ப:- நிச்சயமாக அதைத் தான் சொல்கிறோம். அதை வலியுறுத்தி மத்திய சர்க்காருக்கு தெரிவிப் பதற்காகத் தான் 24ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, September 19, 2007
பஸ் எரிப்பு - ராம பக்தர்கள் பண்பாடு - கலைஞர் பேட்டி
Posted by IdlyVadai at 9/19/2007 03:49:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
அழகிரி ராம பக்தராமா?
இந்த பிரச்சினைக்கே மூலகாரணம் கருணாநிதிதான். எந்த அமைப்பு இந்த படுபாதகச் செய்திருந்தாலும் அது கண்டத்திற்குரியது, கொஞ்சம்கூட மனிதாபிமானமற்ற செயல். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் தொடர்ந்து இந்து மதத்தைப் பற்றித் தாக்குவேன் என்று வேண்டுமென்றே கருணாநிதி செய்வது எந்த வகையில் நியாயம்? எல்லா நேரமும் எல்லா தரப்பினரும் அமைதி காக்க மாட்டார்கள் என்று அவருக்குத் தெரியவேண்டாமா? இது கூடத் தெரியாவிட்டால், இந்தத் தள்ளாத வயதிலும் ஏன் முதல்வர் பதவி மீது ஆசை?
உண்மையில் யார் தீவைத்தார்கள் என்று தெரியும்போது இன்னும் காட்சிகள் மாற்றமடையுமோ என்னவோ.
கிறிஸ்துவத்தைப் பற்றியோ இஸ்லாத்தைப் பற்றியோ அதிலிருக்கும் அற்புதங்கள் பற்றியோ இவரால் என்ன கேட்டுவிடமுடியும்?
ராமன் எந்த கல்லூரியில் படித்தான் பாலம் கட்ட என்பது என்ன கேள்வி? ராஜராஜ சோழன் கட்டிய கோயிலுக்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது. எந்த கல்லூரியில் ராஜராஜசோழன் பட்டம் பெற்றான்?
இப்படி இல்லாமல் பார்த்தாலும், அது ஒரு நம்பிக்கை என்றால் இவர் விட்டுவிடவேண்டியதுதானே? குறைந்தபட்சம் எல்லா மதத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளையும் எதிர்ப்பேன் என்றாலாவது அவர் மீது மரியாதையாவது ஏற்படும். இப்போது கருணாநிதி மீது ஹிந்துக்கள் கொள்ளும் பிம்பம் விஷமக்காரர் என்பது மட்டுமே. இன்றைய நிலையில் மதங்கள் என்பதை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குரிய விஷயமாக மாற்ற மதச் சிந்தனையாளர்கள் முயன்று கொண்டிருக்க, சொல்லியதையே சொல்லிச் சொல்லி, ஹிந்து மதத்தின் மீதான துவேஷத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் இவர். உண்மையில் ஒரு முதலமைச்சருக்குரிய அடிப்படை தகுதிகளிலிருந்து அவர் மீறியவராகிறார். இப்படி இவர் செய்வது முதன்முறை அல்ல. இதுதான் இவர் வாடிக்கை.
//தினகரன் சம்பவத்தின் போது எந்த பண்பாடு வெளிப்பட்டது ? திராவிட பண்பாடு ? திமுக பண்பாடு ?
//
நல்லாவே கேள்வி கேக்குறீங்க..
நாம மறப்போம் மறந்தே இருப்போம்..
-மனசு நோகடிக்காதவன்.
எதுக்கு இரண்டு முறை பதிவு போட்டிருக்கீங்க..?
ராமர்பிரான் ரொம்ப நல்லவரு..
கலைஞர்பிரானும் ரொம்ப நல்லவரு..
RAM vs KK
One man - One family - One wife - RAM
One man - Many Families - Many wife - KK
Does not speak - RAM
Does speak - KK
Cultured - RAM
?? - KK
"தினகரன் சம்பவத்தின் போது எந்த பண்பாடு வெளிப்பட்டது ? திராவிட பண்பாடு ? திமுக பண்பாடு ?"
சரியான கேள்வி.
this is atrocious, enna hindusna pottu vechu pongal saapadravangannu nenakara?
Naai suriyana paathu kolaikkum, adhukkunnu suriyan merkula udhikuma?
ஹரன்பிரசன்னா தாமததிற்கு மன்னிக்கவும். நேற்று உடம்பு சரியில்லை. ராமரை வேண்டிக்கொண்டேன், பிறகு துக்ளக் தலையங்கம் படித்தேன் உடம்பு சரியாகிவிட்டது.
அனானிகளுக்கு நன்றி.
//RAM vs KK
One man - One family - One wife - RAM
One man - Many Families - Many wife - KK
Does not speak - RAM
Does speak - KK
Cultured - RAM
?? - KK//
சிறந்த கருத்து.. இது கருணாநிதியின் தொண்டர்கள் பார்வைக்கு செல்லட்டும்..
//நேற்று உடம்பு சரியில்லை. ராமரை வேண்டிக்கொண்டேன், பிறகு துக்ளக் தலையங்கம் படித்தேன் உடம்பு சரியாகிவிட்டது. //
:))
What a great thalaiyangam by Cho! Really superb.
Post a Comment