பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 15, 2007

டிராவிட் ராஜினாமா ஏன் ?

எல்லா பத்திரிக்கைகளும் ஏன் என்று சில விவாதங்களை முன் வைக்கிறது. நெருப்பில்லாமல் புகையாது...

மலைமலர், தினத்தந்தி.
கேப்டன் பதவியால் பேட்டிங் பாதிக்கிறது. பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக பதவியில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்தார். ஆனால் டிராவிட் கேப்டன் பதவியை துறந்ததற்கு அது காரணமல்ல. பல்வேறு நெருக்கடி காரணமாக அவர் இந்த முடிவை மேற்கொண்டுஉள்ளார். இந்த அணியில் இருக்கும் குரூப் பாலிடிக்ஸ், முன்னாள் வீரர்களின் விமர்சனம் ஆகிய வற்றால் டிராவிட் மனம் நொந்து காணப்பட்டார் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அவரது தலைமையில் இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை புரிந்தது. ஒருநாள் தொடரை 3-4 என்ற கணக்கில் இழந்தது. அப்போது தேர்வு குழு தலைவர் வெங்சர்க்கார் விமர்சித்து இருந்தார். டிராவிட் 3-வது வீரர் வரிசையில் நன்றாக ஆடுவார். அதை விட்டு அவர் ஏன் யுவராஜ்சிங், காம்பீர், தினேஷ் கார்த்திக்கை 3-வது வீரராக இறக்க வேண்டும் என்று கூறி இருந்தார். டெஸ்டில் வெற்றி பெற்றதை பாராட்டாமல் இப்படி விமர்சனம் செய்கிறார்களே என்று டிராவிட் விரக்தி அடைந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் டிராவிட் `பாலோஆன்' கொடுக்க வில்லை. இதற்காக வும் அவர் கடுமையாக விமர்சிக்கப் பட்டார். மேலும் மேற்கு மண்டலத்தின் ஆதிக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது. அவரது சொல்லுக்கு மரியாதை இல்லை. வெளியே தெரியாத பல்வேறு பிரச்சினைகளும் உள்ளன. இதனால் டிராவிட் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.

தினமலர்
* இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முதலிரண்டு டெஸ்டின் முடிவில் இந்தியா தொடரில் 1-0 என்ற முன்னிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்டில் வலிமையான முன்னிலை கிடைத்த போதும், கேப்டன் டிராவிட் இங்கிலாந்துக்கு "பாலோ-ஆன்' தராதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவரது ராஜினாமாவிற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

* அடுத்து நடந்த ஒரு நாள் தொடரில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் "டாஸ்' வென்ற இவர் மூன்றில் தவறான முடிவை எடுத்தார். இதனால் தொடர் கைநழுவிப் போனது.

* சமீபகாலமாக டிராவிட் தனது வழக்கமாக களமிறங்கும் 3வது இடத்தில் வருவதில்லை. இவருக்கு பதிலாக யுவராஜ் அல்லது தினேஷ் கார்த்திக் களமிறங்கி வருகிறார்கள். இந்த முடிவை தேர்வுக் குழு தலைவர் வெங்சர்க்கார் விமர்சித்தார். இது டிராவிட்டுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

* இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியுடன் பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர் மற்றும் மானேஜர் சென்றிருந்தனர். இவர்கள் யாரும் டிராவிட்டுக்கு போதிய ஒத்துழைப்பு தராமல் இருந்திருக்கலாம்.

* "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான அணியில் டிராவிட், சச்சின், கங்குலி இடம்பெறவில்லை. அப்போது அவர்களை பங்கேற்க வேண்டாம் என பி.சி.சி.ஐ., நிர்ப்பந்தித்ததாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து இளம் தோனிக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டது. "டுவென்டி-20' தொடரில் கேப்டன் பொறுப்பு மறுக்கப்பட்ட கோபத்தில் டிராவிட் இருக்கிறாரா...?

* டிராவிட் 2005, அக்டோபர் 25ம் தேதி முதல் ஒரு நாள் தொடரின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதற்கு முன்பாக அவர் சராசரியாக 39.60 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் தற்போது அவரது சராசரி 40.05 என உயர்ந்துள்ளது. இதனால் கேப்டன் பொறுப்பு அவரது பேட்டிங்கை பாதிக்கவில்லை என அடித்துக் கூறலாம்.

Times of India

The official explanation is that Dravid wanted to concentrate on his batting. His form in Tests had indeed dipped - he averaged 25 against England and 21 against South Africa. But lots of other unconfirmed theories and rumours are doing the rounds, including:

He was upset by the adverse reaction after India's early World Cup exit, but didn't want to quit as a loser. The relatively successful tour of England gave him the chance to resign on a high note.

He didn't get the required support from some senior players

He was miffed by the uproar over the decision not to enforce the follow-on at the Oval. He was said to be particularly upset over the controversy triggered by Zaheer Khan's remark that he was ready to bowl, which seemed to contradict Dravid's statement that the bowlers were too tired to bowl again. But any rift within the team over this issue has been denied.

The 'Bombay lobby' was at work against him

NDTV

reg Chappell however had great faith in Dravid's captaincy implying that it was the destructive influence of seniors that prevented him from doing his job.

While Dravid had test series wins in West Indies and England he was also criticized for being too defensive as a captain.

Rahul Dravid as captain:

* Did not enforce the follow-on in the Oval Test
* Toss error allowed England to win the Mumbai test in 2006
* Toss error in the Lord's game
* England won ODIs 4-3

However Dravid continuing as captain was never in doubt despite some of the mixed results but there was always speculation that he couldn't quite marshal the team and didn't always enjoy their support.

Dravid's problems:

* Zaheer said 'bowlers were not tired' in the Oval test contradicting him
* Dravid pulled up Ganguly for dressing room leaks
* Dravid pulled up players for 'torn' jeans and using I-pods

.The speculation will continue unless Dravid sets the record straight himself.


2 Comments:

ஹரன்பிரசன்னா said...

Dravid is not a super captain, India is not loosing anything! But the rumours for he quitted are partly true and partly imagination. He might have resigned when India didnt make into super 8 in the world cup. Kapildev, Azaruddin are the best captains of India.

ரவி said...

அடுத்த கேப்டன் பதவியை மீண்டும் கங்குலிக்கே கொடுத்தல் நன்று என்று நான் நினைக்கிறேன்...

இட்லிவடையார் என்ன நினைக்கிறார் ?