பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 23, 2007

கலைஞர் டிவியில் டி.ஆர்

கலைஞர் டிவியில் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் பெப்ஸி உமாவுடன், டி.ஆர் :-) இப்போது நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
உங்களுக்கு பிடித்த பாட்டு வரலாம். பாருங்கள் !

கடினமான உழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது என்று அட்வைஸ்...கையை சொடுக்கி நல்லா பேசுகிறார். நகைச்சுவை நிகழ்ச்சி பார்க்க தவறாதீர்கள்....

உங்கள் லட்சியம் என்ன என்று ஒரு நேயர் கேள்வி கேட்டார் நல்ல காமெடி

ஜூவி செய்தி:

.....விஜய டி.ஆரும் உருகிப் போய் சால்வை போர்த்தி, பதவிக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பியிருக்கிறார்! அதை வாங்க வந்த விஜய டி.ஆரிடம், ‘என்னப்பா இதெல்லாம்..? உனக்கில்லாத உரிமையா? என்னிடம் நீ போனில் பேசியிருந்தாலே போதுமே... இதையெல்லாமா கூட்டம் போட்டு, தீர்மானம் நிறைவேற்றி, பத்திரிகைகளுக்கும் சொல்லிப் பெரிதாக்குவது?’ என்று உரிமையோடு அவரைக் கடிந்துகொண்டாராம் முதல்வர்.’’.....

... உருகிய மனநிலையில் விஜய டி.ஆர். கிளம்புகையில், ‘உங்க கட்சியை இந்தக் கூட்டணியில் மதிப்பதில்லை என்று சொன்னாய் அல்லவா... வருகிற 24-ம் தேதி சேது சமுத்திரத் திட்டம் குறித்துக் கூட்டுகிற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு இங்கேயே, இப்போதே உனக்கு அழைப்பு வைத்துவிட்டேன். மறக்காமல் வந்து சேரு’ என்று தோளில் தட்டி அனுப்பினாராம் முதல்வர்! ‘

3 Comments:

Anonymous said...

டி.ஆரை பார்க்கும்போதெல்லாம் பாவமாக இருக்கிறது. நான் படித்த ஸ்கூலில், தமிழ் ஆசிரியர் ஒருவர் டி.ஆரின் college mate. அதனால் டி.ஆரைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயத்தை எங்க ஆசிரியர் உருவாக்கி வைத்திருந்தார்.

முட்டாள்தனமான படங்கள் எடுத்தார் என்றால், யார்தான் எடுக்கலை? (கமலின் 'மகராசன்' etc.) அவரது படங்களில் எல்லா வேலைகளையும் தானே செய்வது (மற்றெதுவும் இல்லாவிட்டாலும், சில நல்ல பாடல்கள், பிரம்மாண்டமான செட், டைரக்ஷன், பெண்களை விரசமாகக் காட்டினாலும் தன் விரல்கூட படாமல் நடிப்பது) என்பவைகளை பார்த்து நான் திறமையுள்ள நல்ல மனிதர் என்று நினைத்திருந்தேன்.

ஆனால்,தன்னை தானே ஏன் இப்படி கேலிக்குரியவனாக்கிக் கொள்கிறார் என்பதுதான் புரியவில்லை !?

Anonymous said...

எங்கள் தங்கத்தலைவர், அடுக்குமொழிச் சிங்கம் விஜய டி ஆர் பற்றிய அனைத்துப் பதிவுகளையும் நகைச்சுவை என வகைப்படுத்தும் இட்லிவடையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
- இவண் விஜய டி ஆர் ரசிகர் பேரவை, துபாய்

வெங்கட்ராமன் said...

இப்போதைக்கு டி.ஆர் க்கு முக்கியத்துவம் கொடுக்கறது ரெண்டு பேர்தான்.

1. கலைஞர்
2. இட்லிவடை

ஏன் இப்படி எல்லாம். . . . . ?