பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 17, 2007

நோ கமெண்ட்ஸ்

தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் கருணாநிதி இன்று காலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பூங்கோதை ஆலடி அருணா, பரிதி இளம்வழுதி, கே.என்.நேரு, சென்னை மேயர் மா.சுப்ரமணியம் ஆகியோரும் சென்றிருந்தனர்.

அண்ணா மேம்பாலப் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக சார்பில் அதன் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதே சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு எதிரே கடந்த ஆண்டு பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நிறுவப்பட்ட பெரியார் சிலைக்கு தி.க. தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பிகு: உண்மையான பக்தன் தெய்வத்தை தொட்டு வணங்க வேண்டும் என்று நினைக்க மாட்டான். அவன் ஏற்கெனவே தெய்வத்தை மனதில் சுமந்து கொண்டிருக்கிறான்.

3 Comments:

Anonymous said...

Appo amma than unmaiyana bakthainu sollarengala?

உண்மைத்தமிழன் said...

//பிகு: உண்மையான பக்தன் தெய்வத்தை தொட்டு வணங்க வேண்டும் என்று நினைக்க மாட்டான். அவன் ஏற்கெனவே தெய்வத்தை மனதில் சுமந்து கொண்டிருக்கிறான்.//

இது இட்லிவடையின் நச்சென்ற டச்..

IdlyVadai said...

உ.த ஐயோ அந்த பிகு நான் போடலை, எங்கோ படித்தேன் அவ்வளவு தான்.

கிருஷ்ணன் நோ கமெண்ட்ஸ்