பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 19, 2007

டி.ராஜேந்தருக்கு பதவி - கலைஞர் அறிவிப்பு

சிறுசேமிப்பு ஆலோசனை குழு: துணை தலைவராக டி.ராஜேந்தர் நியமனம்- கருணாநிதி அறிவிப்பு

லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தனது கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை. இனி தனித்து செயல்படுவேன் என்றார்.

பின்னர் அவர், தங்களுக்கு தி.மு.க. கூட்டணியில் உரிய மரியாதை அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டுள்ளது. விரைவில் முதல்-அமைச்சர் கருணா நிதியை சந்தித்துப் பேசுவேன் என்று கூறினார்.

இந்த நிலையில்ப டி.ராஜேந்தருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

விஜய டி.ராஜேந்தரை தமிழ்நாடு மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நியமனம் செய்து இன்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த பதவியை எம்.ஜி.ஆர். அதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரகுமான்கான் ஆகியோர் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது டி.ராஜேந்தர் கலைஞர் டிவியில் அரட்டை அரங்கம் நடத்துவார்.

1 Comment:

R.Subramanian@R.S.Mani said...

"Barking Dogs only would get Bone Pieces" - If he is really as declaring he himself as a self respected person he should not accept his post(ofer). Let us wait and sea - Suppamani