அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் யார் என்றால் உங்களுக்கு தெரியாது. அது சரத்குமார். ‘நம்நாடு’ என்ற ராஜசேகரின் தெலுங்குப் படத்தின் கதையை லவுட்டிவிட்டார் என்று கொஞ்ச நாளாக பரபரப்பு.
இந்த வார குமுதத்தில் சரதகுமார் மற்றும் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா பேட்டி. அதிலிருந்து...
சரத்குமார் பேட்டி
உங்களது ‘நம்நாடு’ படத்தின் கதை டைரக்டர் ராஜசேகரின் தெலுங்குப் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறதே... அதற்கான உரிமையை பெறாமலேயே...
‘‘ஒரிஜினல் கதை மலையாளம். அவர் தெலுங்கில் வாங்கியிருக்கிறார். ‘நம்நாடு’ தயாரிப்பாளர்கள் தமிழில் வாங்கியிருக்கிறார்கள். இது என் தயாரிப்பாளர் பிரச்னை. நாங்கள் மூலமான மலையாளத்திலிருந்து முறையாக உரிமையைப் பெற்றுத்தான் தமிழில் தயாரிக்கிறோம்.’’.
டாக்டர் ராஜசேகர், ஜீவிதா பேட்டி
சரத்குமாரோடு ஏதோ உரசல் என்று அரசல் புரசலாகப் பேசப்படு கிறதே...?
‘‘தெலுங் கில் நான் இயக்கிய ‘எவடைத்தே நாக் கேண்டி’ படத்தை சரத்குமார் பார்த்துவிட்டு, தமிழில் தயாரிக்க ரைட்ஸ் கேட்டார். நான், ‘தமிழிலும் இந்தப் படத்தை நாங்களே ரிலீஸ் செய்யப்போகிறோம். அதனால் கொடுக்க முடியாது’ என்று சொன்னேன். அவ்வளவுதான்! அந்த கோபத்தில் ‘லயன்’ என்ற மலையாள படத்தின் உரிமையை வாங்கி ‘நம்நாடு’ என்று எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.’’
அப்புறம் ஏன் ‘நம்நாடு’ படத்தின் தயாரிப்பாளர் மீது கேஸ் போட்டிருக்கிறீர்கள்?
‘‘‘லயன்’ படத்தின் உரிமையையும் முன்பு எங்களிடமே இருந்தது சமீபத்தில் இந்த உரிமையை வேறு நண்பர்களுக்கு விற்று விட்டேன். நான் விற்றவர்களுக்கும் ‘நம்நாடு’ தயாரிப்பாளருக்கும் தான் ஏதோ பிரச்னை, வழக்கு போட்டிருக்கிறார்கள். மற்றபடி இந்த வழக்கில் எனக்கு சம்மந்தமில்லை! என்னிடம். ‘லயன்’ பட உரிமை இருப்பதாக நினைத்து சிலர் இப்படி ஒரு செய்தியை பரப்பிவிட்டனர்.
அப்படியென்றால், சரத்குமாரிடம் என்னதான் பிரச்னை?
‘‘இதற்கு நான் பதில் சொல்கிறேன்’’ என்று டாக்டர் ராஜசேகர் பேச ஆரம்பித்தார்.
‘‘சரத்குமார் புதுசா கட்சி ஆரம்பித் திருக்கிறார். மக்களிடம் தனக்கு ஒரு நல்ல இமேஜ் வேண்டும் என்று விரும்புகிறார். அதற்கேற்றாற் போல் நாங்கள் எடுத்த எவடைத்தே நாகேண்டி படம் அவருக்கு பொருத்தமாக இருந்தது. ரைட்ஸ் தர முடியாது என்று சொன்ன அந்தப் படத்திலிருந்து, பல காட்சிகளை அப்படியே தன் படத்திலும் ஷூட் பண்ணியிருக்கிறார் என்ற தகவலும் எங்களுக்குக் கிடைத்தது. அது எனக்கு கொஞ்சம் வருத்தம். சரத்குமார் இப்படிச் செய்தது சரியா? வேறொருவரிடம் உரிமை இருக்கும்போது அதே படத்தின் காட்சிகளை பயன்படுத்தினால் பிரச்னை வராதா?’’
அதற்காகத்தான் ‘நம்நாடு’ ரிலீஸ் ஆவதற்குமுன் உங்கள் படத்தை ரிலீஸ் செய்ய அவசரம் காட்டுகிறீர்களா?
‘‘நாங்கள் திட்டமிட்டபடிதான் செப்டம்பரில் ரிலீஸ் செய்யப் போகிறோம். எங்கள் படம் வெளிவந்துவிட்டால் காப்பியடித்திருப்பது தெரிந்துவிடும் என்பவர்கள்தான் அவசரப்படுவார்கள்!’’
பிகு: 'இந்தியன்' படத்தின் டைட்டிலை டாக்டர் ராஜசேகர் பதிவு பண்ணி வைத்திருந்தார். சங்கர் உங்களை வைத்து படம் எடுக்கிறேன் என்று சொல்லி அவரிடம் அந்த டைட்டில் உரிமையை வாங்கி பின் கமலை வைத்து எடுத்தார். (சில மாதம் முன் 'காப்பி வித் அனு' வில் டாக்டர் ராஜசேகர் சொன்னது ).
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, September 17, 2007
பதிலுக்கு பதில் - சரத்குமார், டாக்டர் ராஜசேகர்
Posted by IdlyVadai at 9/17/2007 09:35:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
இட்லிவடை உங்களுக்கு மெய்யாலுமே
'கலகக்காரன்' பட்டம் தானய்யா கொடுக்கவேண்டும்.
bramorchavam vsperiyar ninaivunaal...பற்றி சொல்கிறேன்
//அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் யார் என்றால் உங்களுக்கு தெரியாது..//
இட்லிவடை இது டூ - த்ரீ மாச்...!!!
Post a Comment