பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 07, 2007

சரத்குமார், நெப்போலியன் காமெடி

மக்கள் பிரச்னைகளுக்காக போராடும் ராமதாஸ்க்கு ஆதரவு - சரத்குமார்
விஜயகாந்த் கட்சி தொடங்கியதால் அ.தி.மு.க.வுக்குதான் இழப்பு - நெப்போலியன்

சரத்குமார் காமெடி:
மக்கள் பிரச்னைகளுக்காக போராடினால் ராமதாஸ்க்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக சரத்குமார் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய நான்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பணிகளை செயல்படுத்தாமல் இருப்பதற்கு அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், இரண்டு திராவிட கட்சிகளிடமும் பணியாற்றி இருப்பதால், பல விஷயங்களில் தான் தெளிவு பெற்றிருப்பதாகவும், மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, மக்களின் கருத்துக்களை அறிந்து, தனது கட்சியின் திட்டங்களை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். ராமதாஸ் மக்களுக்காக போராட்டம் நடத்துவாரானால் அவருக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

நெப்போலியன் காமெடி:
விஜயகாந்த் கட்சி தொடங்கியதால் அ.தி.மு.க.வுக்குதான் இழப்பு. தி.மு.க. வுக்கு எந்த சேதாரம் இல்லை. தி.மு.க. தொண்டர்கள் யாரும் இடம்மாற மாட்டார்கள். எங்கள் ஓட்டும் சிதறாது, நாங்கள் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். இது போல எங்களின் மெகா சீரியலும் நிச்சயம் வெற்றிபெறும்.

வெள்ளிக்கிழமை சினிமா நடிகர்கள் பற்றி செய்தி போட்டாச்சு :-) அப்பாடா

0 Comments: