1. ‘உலகின் சரித்திரத் தொன்மைவாய்ந்த சின்னங்களின் பட்டியலில், இன்னமும் ஏன் தமிழகத்தின் கல்லணை சேர்க்கப்படவில்லை?’ என நாடாளுமன்றத்தில் கேட்டிருக்கிறார், தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா. பாரட்டவேண்டிய நல்ல முயற்சி ( ஆனந்த விகடன் தலையங்கத்திலும் பாராட்டு வாங்கியிருக்கிறார்) ஓடும் நீரைத் தேக்கிவைத்து, வேண்டுகிறபோது வேண்டிய திசையில் பாய்ச்சிக்கொள்ளலாம் என்ற பொறியியல் தொழில்நுட்பத்தை உலகுக்கு உணர்த்திய அணை இது! ஒழுங்கில்லாத கற்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட கட்டுமான அதிசயம்! கரிகால் சோழன் கட்டிய கல்லணை அது.
யார் கரிகாலன் ? எந்த பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? இல்லை சோழ பேரசர்கள் எல்லாம் சிவில் என்ஜினியர்களா ? என்று அவர்கள் கடிய அணைகள், கோயில்களை பார்த்து கலைஞர் கேட்காமல் இருக்க அந்த ராமரை வேண்டிக்கொள்கிறேன்.
2. வால்மிகி ராமாயணத்தின் படி 100 யோஜன நீளமும், 10 யோஜன அகலமும் உள்ள அணை குரங்குகள் கட்டியது என்று யுத்த காண்டத்தில் குறிப்பு உள்ளது. ஒரு யோஜனம் என்பது 12.87 கிமீ. அப்படி என்றால் 1287 கிமீ தூரமும், 128.7 கிமீ அகலமும் உள்ள அணை இருக்க வேண்டும். ஆனால் ராமேஷ்வரம் டூ மன்னாருக்கும்(ராமர் பாலத்தையும் சேர்த்து) உள்ள தூரம் வெறும் 21 கிமீ. அப்படியென்றால் மீதமுள்ள 1266 கிமீ எங்கே போனது ?
3. 1972வில் ராமநாதபுரம் கெசட்டியர் (Gazetteer ) நூலின் முன்னுரையில் “Itreflects our civization and is a mirror of society" என்று ராமர் பாலத்தை பற்றி எழுதியுள்ளார் கலைஞர். இப்போது என்ன நடந்தது ? இதற்கு என்ன விளக்கம் கொடுக்க போகிறார் கலைஞர் ?
4. ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று சொல்லியிருந்தார். திடீர் பல்டிக்கு காரணம் என்ன ?
5. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு டி.ஆர்.பாலு, சுற்றுப்புறசூழலினால் கடல் நீரில் இருக்கும் மீன்கள் செத்துவிடும் என்றார். ஆனால் இப்போது சேது சமுத்திர திட்டத்தினால் மீன்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்கிறார். அப்படியா ?
குரங்குகள் மட்டுமா பல்டியடிக்கனும் ?
பல்டிகள் தொடரும்...!
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, September 19, 2007
ராமர் சேது - டாப் 5 (தொடரும் ) பல்டிகள்
Posted by IdlyVadai at 9/19/2007 02:27:00 PM
Labels: செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
புராணங்களிலும் இதிகாசங்களிலும் வரும் அளவுகள் நம் டெசிமல் சிஸ்டத்தில் எடுத்துக்கொள்ள இயலாது. அவை சித்த சங்கேதம் என்ற ஒரு அளவை கொண்டவை. இவற்றை விரிவாக இங்கு விளக்க இயலாது. ஆனால், இதன் கரு என்ன என்றால் இதன்படி 10 என்பது ஒன்றையும் 100 என்பது 2 ஐயும் 1000 என்பது மூன்றையும் குறிக்கும். இதன்படியே ராமர் காட்டுக்கு ஏகிய காலம், அரியணை ஏறியது மற்றும் பிராட்டியை துறந்தது முதலானவை அறியப்படுகின்றன. (ஆதாரம் - ராமாயண சாரம் published by RK MUtt, chennai author அண்ணா)
இதன்படி பார்த்தால் சேதுவின் நீளம் இன்றைய அளவின்படி துல்லியமாக இருக்கிறது.
அறிவியல் பார்வையிலும் இது பொருந்தும். சேது இந்திய நாகரீகத்துக்கு முன்பிருந்தே இருந்ததாகவும் அதை கொண்டு புணையப்பட்ட பல சரித்திர நிகழ்வுகள் அதனால் நிதர்சனமான பல நிகழ்வுகளையும், இடங்களையும் குறித்தே எழுந்த ஒரு மாதிரி science fiction என்று சில அறிஞர்கள் கருதுவதும் இந்த ஒப்புதலால் தான்
நன்றி
அருமையான பதிவு! பாராட்டுகள்!!
//குரங்குகள் மாட்டுமா பல்டியடிக்கனும்//
மட்டுமா (?!)
ஜயராமன் //இதன்படி பார்த்தால் சேதுவின் நீளம் இன்றைய அளவின்படி துல்லியமாக இருக்கிறது.// எப்படி என்று விளக்கினால் எனக்கும் மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
Post a Comment