பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 21, 2007

முதல்வர் கலைஞர் – இல. கணேசன் சந்திப்பு நடந்தது என்ன ?

முதல்வர் – இல. கணேசன் சந்திப்பில் நடந்தது என்ன ? என்று துக்ளக்கில் வந்த கட்டுரை.
படித்துவிட்டு யார் பொய் சொல்லுகிறார்கள் என்று பின்னூட்டதில் சொல்லவும் :-)

முதல்வர் – இல. கணேசன் சந்திப்பில் நடந்தது என்ன ?

தி.மு.க. தலைவர் கருணாநிதியை, கடந்த வாரம் அவரது இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் சந்தித்துப் பேசினார்.

இதன் பின்னர், சில நாட்கள் கழித்து (செப்டம்பர் 14) சேலம் சென்ற முதலமைச்சர் கருணாநிதி, அரசு விழா ஒன்றில் பேசும்போது சேது சமுத்திரத் திட்டம் – ராமர் பாலம் தொடர்பாக சில கருத்துக்களைக் கூறினார். அப்போது ""நேற்று ஒருவர் என்னை சந்தித்து, "ராமர் பாலத்தை உடைக்கக் கூடாது. அது உண்மையிலேயே ராமர் பாலம் அல்ல. அதில் கந்தகம் இருக்கிறது. அணுகுண்டு தயாரிக்கத் தேவையான மருந்து இருக்கிறது. அது இருந்தால் ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவை பாதுகாக்க முடியும்' என்று கூறினார்.

""நான் உடனே அவரிடம் "அப்படியானால், இந்த உண்மையை உலகறிய ஊரறிய மேடைபோட்டு கூறுங்கள். ராமர் பாலம் பிரச்சனையை நான் பேசவில்லை என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும், அவர், "அப்படியானால் நாங்கள் கட்சி நடத்த வேண்டாமா' என்று கேட்கிறார்.

""...பாரதிய ஜனதா கட்சியினர் கட்சி நடத்த, தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட்
கட்சியினர் என்ன இளித்தவாயர்களா?'' – என்று முதல்வர் கருணாநிதி
பேசியுள்ளார்.

முதல்வரின் இந்தப் பேச்சில் இல. கணேசன் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர்தான் மிக சமீபத்தில் முதல்வரைச் சந்தித்த பா.ஜ.க. தலைவர். எனவே, முதல்வர் பேசியிருப்பது போல, "ராமர் பாலம் என்று ஒன்று கிடையாது' என்று முதல்வரிடம் இல. கணேசன் கூறினாரா? – என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசனிடம் விசாரித்தபோது, அவர் கூறிய கருத்து :

""முதல்வரிடம் பொன். ராதா கிருஷ்ணனின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கான கோரிக்கை பற்றி எடுத்துச் சொல்லிவிட்டு, சேது சமுத்திரத் திட்டம் பற்றியும்
பேசினேன். "ராமசேதுவைப் பொறுத்தவரை, ராமர் வாழ்ந்தார்; மனித முயற்சியில் உருவான ராமர் பாலம்தான் அது என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது;
உங்களுக்கு இல்லை. உங்கள் கருத்தை என்னால் மாற்றவும் முடியாது. ஆனால், அமெரிக்காவுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தால், நமக்கு 40 வருஷத்துக்குத் தேவையான அணுமின்சாரம்தான் கிடைக்கும். அந்த பாலமோ, 400 வருஷத்துக்குத் தேவையான அணுசக்தியை தயாரிப்பதற்கு பயன்படும் தோரியத்தை தன்னுள் சேமித்து வைத்துள்ளது. அந்த ஒரு காரணத்துக்காகவாவது நீங்கள் அதை பாதுகாக்க வேண்டும்'' என்று கூறினேன்.

""அப்போது முதல்வர் என்னிடம், "நீங்கள் கூறும் இந்த தகவல் பற்றி எனக்குத் தெரியாது. நீங்கள் உங்கள் கட்சி மேடைகளில் இதைப்பற்றி எல்லாம் பேசுவதுதானே?' என்றார். உடனே நான், "இதையும் கூறிக்கொண்டுதான் இருக்கிறோம்' என்று சொன்னேன்.

""ஆனால் முதல்வர், இந்தப் பேச்சின் ஒரு பகுதியை மாற்றிச் சொல்லி இருக்கிறார். ராமர் பாலம் இல்லை என்று நான் கூறியதைப் போல அவர் சொல்லி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இவ்விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை மாற்றிக்கொண்ட கோபம் காரணமாகவோ, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதாலோ
முதல்வருக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக நான் சொல்லாத ஒரு கருத்தை சொன்னதாக அவர் சொல்லக்கூடாது. ராமர் பாலம் இல்லை என்று இல. கணேசன் கூறுவானா என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்''.

முதல்வருக்கு இல. கணேசன் இவ்வாறு மறுப்பு கூறியபோதிலும், வழக்கமாக கட்சி நிர்வாகிகளுடன் சென்று முதல்வரைச் சந்திக்கும் அவர், தனியாகப் போய் சந்தித்து, தேவையற்ற ஒரு சர்ச்சைக்கு ஆளாகிவிட்டார். தவிர, அ.தி.மு.க.வுடன், பா.ஜ.க. மேலிடம் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள முயன்று வரும் சூழலில், இவர் முதல்வரைச் சந்தித்தது, அ.தி.மு.க.விலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

(நன்றி: துக்ளக் )

7 Comments:

Anonymous said...

இல கணேசன் கிடக்கட்டும்.

கலைஞர் எப்போதாவது பொய் பேசியிருக்கிறாரா?

:-))))

Anonymous said...

kalaignar pesum poithan ulagam ariyume? ila ganesan kanavil kooda apadi pesi iruka mattar.

Anonymous said...

இட்லி வடையாரே இந்த ராமர் பிரட்சனையில் கலைஞரின் குடும்ப பிரட்சனையை மறந்து விட்டீர்களே... Sun Direct DTH வந்த பிறகு இந்த பிரட்சனை மீண்டும் சூடு பிடிக்க ஆறம்பித்துவிட்டது போல் தெரிகிறதே...

Anonymous said...

I suspect ila ganesan is the culprit.Casual lla pesaratha ninichi ulari kotti erupparr.

R.Subramanian@R.S.Mani said...

Ceaser"s Wife beyond doubt ???????
In both who is the ceaser is left to your imagination;
Suppamani

IdlyVadai said...

//இட்லி வடையாரே இந்த ராமர் பிரட்சனையில் கலைஞரின் குடும்ப பிரட்சனையை மறந்து விட்டீர்களே... Sun Direct DTH வந்த பிறகு இந்த பிரட்சனை மீண்டும் சூடு பிடிக்க ஆறம்பித்துவிட்டது போல் தெரிகிறதே...// இன்று கொஞ்சம் வேலை அதிகம் அதனால் அதை எடுக்கவில்லை. இன்று இதை பற்றி ஒரு முழு தொகுப்பு போடுகிறேன். நன்றி

Anonymous said...

கிழவன் காரியம் இல்லாம காக்கி டவுசர் காரன் வூட்டுக்கு போக மாட்டான்.இதுதாண்டா அரசியல்.