பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 23, 2007

திமுகவின் பண்பாடு வெளிப்பட்டது!

ராமர் பக்கதர்கள் பண்பாடு என்று சில நாட்களுக்கு முன் பேசிய கலைஞர் இன்று தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி மேயர் சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவின் பண்பாட்டை காண்பித்தார்கள்....


இன்றைய செய்தி:

தி.நகரில் பதட்டம்
சென்னையில் பிஜேபி அலுவலகத்தின் மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் தமிழிசை சௌந்தர்ராஜன் உட்பட நிர்வாகிகள் படுகாயமடைந்தனர்.
திமுகவினரின் வன்முறையில் பிஜேபி அலுவலகத்தின் கண்ணாடி கள் உடைந்தன. கொடிக் கம்பம் வெட்டிச் சாய்க்கப்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. வன்முறையில் ஈடுபட்ட சுமார் ஆயிரம் திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

திமுகவினர் பெரிய கற்களை எடுத்தும், உருட்டுக் கட்டைகளை கொண்டும் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அங்கு நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டன. இதில் சில பத்திரிகையாளர்களின் வாகனங்களும் சேதமடைந்தன. அலுவலகத் தில் இருந்த கொடிக் கம்பம் வெட்டிச் சாய்க்கப்பட்டது.

திமுகவினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தாததுடன், வேடிக்கை பார்த்ததாக பிஜேபியினர் தெரிவித்தனர். திமுகவினரின் இந்த வன்முறையால் அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல காணப்பட்டது. தி.நகரில் பெரும் பதட்டமும் நிலவியது.

கவர்னரிடம் புகார் மனு அளிக்க பா.ஜ., முடிவு

சென்னை பா.ஜ., ஆபீஸ் தாக்கப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவித்து பா.ஜ., மாநில மூத்த தலைவர் எச்.ராஜா கூறியிருப்பதாவது: பா. ஜ., ஆபீஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அமைச்சர் பரிதி இளம் வழுதி முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே இவரையும் போராட்டத்தை தூண்டி விட்ட அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.மு.க., ஆட்சியை கலைக்க வலியுறுத்தி கவர்னரை சந்தித்து மனுக்கொடுப்போம் என்றார்

ஆர்ப்பாட்டம் மட்டும் போதும் - தொண்டர்களுக்கு திமுக உத்தரவு
திமுக தொண்டர்கள் பாஜக, இந்து அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தினால் போதும். வேறு எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கருணாநிதி பற்றி அவதூறாக பேசவில்லை - வேதாந்தி மறுப்பு
கருணாநிதி குறித்து நான் நேரிடையாக எதுவும் பேசவில்லை. ராமர் குறித்து பழித்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மரணத்தண்டனைக்கு ஆளாவார்கள் என்று கீதை உள்பட இந்துமத நூல்கள் கூறுகின்றன என்றுதான் சொன்னேன் ஆனால் பத்திரிகைகள் தவறாக எடுத்து கூட்டி பிரசுரித்து விட்டன. அதே நேரத்தில் ராமர் இல்லை என்றும் ராம பகவான் பற்றி இழித்து பேச யாரையும் அனுமதிக்க முடியாது . மேலும் கருணாநிதி தலையை கொணர்ந்தால் தங்க காசுகள் வழங்கப்படும் என்று நான் சொல்லவே இல்லை.

தி. மு. க.,வுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் போராட்டம்
தி. மு. க.,வுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் சென்னையில் போராட்டம் நடத்தினர். விஸ்வ இந்து பரிஷத் மண்டல தலைவர் ‌ராம்விலாஸ் வேதாந்தியை உட‌னே கைது செய்ய வேண்டும் ‌என விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை பெரியார் சிலை அருகே போராட்டம் நடந்தது. மேலும் வேதாந்தியின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. இதனையடுத்து நிருபர்களிடம் பேசிய திருமாவளவன் முதல்வர் கருணாநிதியை அவமதித்து பேசிய இந்து பரிஷத் அமைப்புகளை தடைசெய்ய வேண்டும். மேலும் ‌கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வேதாந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.

ஜெ அறிக்கை
சேது சமுத்திரம் திட்டம் குறித்த பிரச்னை தற்போது மிகவும் தவறான திசையில் போய்க் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று நினைத்தால், ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று வழியில் நிறைவேற்ற வேண்டும் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். ஆனால் கருணாநிதியும் டி.ஆர். பாலுவும் ராமர் பாலத்தை இடித்தே தீருவோம் என்று பிடிவாதமாக இருந்தார்கள். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இப்போது கருணாநிதி, அது ராமர் கட்டிய பாலமே இல்லை என்றும், மக்கள் கடவுளாகக் கருதும் ராமரை தகாத வார்த்தைகளால் தொடர்ந்து இழிவுபடுத்தியும் பேசி வருகிறார்.

எல்லா மதங்களையும் சமமாக மதிப்பதுதான் உண்மையான மதச் சார்பின்மை. மதச் சார்பின்மையை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தெரிவிக்கிறது. முதலமைச்சர் பொறுப்பை வகிப்பவர் தனிப்பட்ட உணர்வுகளை ஒதுக்கிவிட்டு, விருப்பு வெறுப்பின்றி அனைத்து மக்களையும் மதித்து, சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டும். மாநில அரசானாலும், மத்திய அரசானாலும் நம் நாட்டின் பெரும்பான்மையான மக்களான இந்துக்கள்தான் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

கருணாநிதி தனது பொறுப்பை மறந்து, கடமையை மறந்து, உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களின் நம்பிக்கையை ஆழமாகக் காயப்படுத்தி, ராமரை அவமானப்படுத்தி பேசியது கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.

ஆகவே இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொள்ளும் கருணாநிதி உடனே பதவி விலக வேண்டும். இல்லையெனில் கருணாநிதியின் அரசை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தி, இம்மாதம் 26-ம் தேதி காலை 10 மணிக்கு, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி. கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், புதுதில்லி, அந்தமான் ஆகிய பிற மாநிலங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்

18 Comments:

மடல்காரன்_MadalKaran said...

// பன்பாடு //

பண்பாடு ..?

உங்க உடல் நலம் ?

-K.Balu

ROSAVASANTH said...

தங்களின் கோபத்திற்கு பாத்திரமானவர்களை திமுக தாக்கியிருக்கிறது. இது திமுக பண்பாடு; ஒத்துக் கொள்கிறேன். இந்த பண்பாடு இல்லாத ஒரு (அதிகாரமும், பலமும் உள்ள) அரசியல் கட்சி பற்றி இனிதான் கேள்விப்படவேண்டும்.

ஆனால் கருணாநிதி சொன்ன ஒரு வாக்கியத்திற்கு, அதுவும் ஜனநாயக நாட்டில் அவருக்கு உரிமையுள்ள நாகரீகமான வாக்கியத்திற்கு, அதற்கு தொடர்பே இல்லாத (ராமரை நம்பக்கூடிய) இரண்டு தமிழர்களை எரித்து கொன்ற பண்பாட்டுடன் இதை ஒப்பிட்டு பார்க்கலாம். கர்நாடகத்தில் அது குறித்து முணுமுணுப்பே எழாத பண்பாட்டை பற்றி பேசலாம். (இங்கே திமுக செயல் பற்றி (இந்த பின்னூட்ட களன் போல்)நாராசமான கும்பல் கூச்சல் எழப்போவதுடன், விழப்போகும் ஓட்டிற்கும் வேட்டு வரப்போகிறது). அதை விட முக்கியமாய் இதில் ஒன்றை நியாயப்படுத்தி, மற்றதை பற்றி மட்டும் பேசும் இட்லிவடையை ஒத்த கேஸ்களின் நாசுக்கு பண்பாட்டை பற்றியும் பேசலாம்.

IdlyVadai said...

//இது திமுக பண்பாடு; ஒத்துக் கொள்கிறேன். இந்த பண்பாடு இல்லாத ஒரு (அதிகாரமும், பலமும் உள்ள) அரசியல் கட்சி பற்றி இனிதான் கேள்விப்படவேண்டும்.//

எந்த திராவிட கட்சிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் வன்முறை அதிகம் யார் செய்தது என்று கடந்த வரலாற்றை புரட்டி பார்த்தால் திமுகாவே முன்னனியில் இருக்கிறது.

//ஆனால் கருணாநிதி சொன்ன ஒரு வாக்கியத்திற்கு, அதுவும் ஜனநாயக நாட்டில் அவருக்கு உரிமையுள்ள நாகரீகமான வாக்கியத்திற்கு, அதற்கு தொடர்பே இல்லாத (ராமரை நம்பக்கூடிய) இரண்டு தமிழர்களை எரித்து கொன்ற பண்பாட்டுடன் இதை ஒப்பிட்டு பார்க்கலாம்.//

பெங்களூரில் நடந்த சம்பவம் கண்டிக்கதக்கது. காட்டுமிராண்டிதனம்.

போன வார விகடனில் ஞாநி குப்பையை பற்றி எழுதியதற்கு கலைஞர் டென்ஷனாகி அடுத்த நாளே கட்சி ஏட்டில் சாதிச் சாயம் பூசப் அவருடைய வீரத்தை காண்பித்திருக்கிறார். அந்த குப்பை மேட்டரில் கூட சகிப்பு தன்மை இல்லை என்றால் முதல் அமைச்சராக இருப்பதற்கே லாயக்கு இல்லை. இவர் ராமரை பற்றி பேசி மற்றவர்களுக்கு சகிப்பு தன்மை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். நீங்களும் நினைக்கிறீர்கள். ஒரு வயசான முதலமைச்சருக்கே அந்த சகிப்பு தன்மை இல்லை என்றால் சாதாரன மக்களுக்கு அது இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது நல்ல தமாஷ்.

//கர்நாடகத்தில் அது குறித்து முணுமுணுப்பே எழாத பண்பாட்டை பற்றி பேசலாம். //

கலைஞர் தினகரன் சம்பவம் நடந்த போது, கண்டித்தார். இப்ப குமாரசாமி கண்டித்திருக்கிறார். முதல் அமைச்சர்கள் வேற என்ன செய்ய முடியும் ? சன் டிவி தாக்கபட்ட போது வீடியோ ஆதரம் கூட இருந்தது ஆனால் இன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

//அதை விட முக்கியமாய் இதில் ஒன்றை நியாயப்படுத்தி, மற்றதை பற்றி மட்டும் பேசும் இட்லிவடையை ஒத்த கேஸ்களின் நாசுக்கு பண்பாட்டை பற்றியும் பேசலாம்.//
நான் மற்றவர்களை போல் நடு நிலமை வாதி கிடையாது, இப்படி தான் ரொம்ப நாளா பேசிக்கொண்டிருக்கிறேன் :-)

பிகு: கடவுள் மறுப்பு செய்பவர்கள் எல்லாம் பெரியார் சீடர்கள் என்று நினைக்கிறார்கள். சிறுபான்மையினர் உரிமைகளை மதிக்க தெரிந்த பகுத்தறிவு அரசியல்வாதிகள் ஹிந்துக்களின் உணர்வுகளை மட்டும் உதாசீனப் படுத்துவது என்பது இவர்களுக்கு செக்குலரிசம். வேட்டு கேக்க வந்த போது, கோயில் பரிவட்டத்தையும், வேட்டி கட்டிக்கொண்டு கோவிலுக்கு போவதும், பாபாவின் ஆசிர்வார்தம/மோதிரம் வாங்கும் பெரியார் சீடர்களை ராமர் காக்க வேண்டும். இவர்கள் ராமரை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

Anonymous said...

Karunanithi has always said that There is no God.

Did he ever said that If there is no god, how is it possible for a prophet of god to exist?

Then why does he go to drink Ramjan kanji?

Anonymous said...

படிப்பது ராமாயனம். இடிப்பது பெருமாள் கோயில்

ROSAVASANTH said...

////கர்நாடகத்தில் அது குறித்து முணுமுணுப்பே எழாத பண்பாட்டை பற்றி பேசலாம். //

கலைஞர் தினகரன் சம்பவம் நடந்த போது, கண்டித்தார். இப்ப குமாரசாமி கண்டித்திருக்கிறார்.//

ஆமாம் கலைஞர் கண்டித்தார்; அனால் குமாரசாமி கண்டிக்கவில்லை; (பாதுக்காப்பு தரப்படும் என்று சொன்னார்.) சொல்லப்போனால் இங்கே (பெங்களூரில் வெளிவந்த நாளிதழ்களில்) யாருமே கண்டிக்கவில்லை-பாதுப்பு உள்ள கலைஞரை தவிர. சம்பவம் நடந்த பிறகு போலிஸும் மற்றவர்களும் `யாரையும் தீங்கிழைக்க பஸ்ஸிற்கு நெருப்பு வைக்கவில்லை; தங்கள் உணர்வுகளை வெளிகாட்ட மட்டுமே தீவைத்தார்கள். உள்ளே இருந்தவர்கள் குடித்திருக்கலாம்; நோய்வாய்பட்டிருக்கலாம்; அதனால் வெளியே வரமுடியாமல் இருந்திருக்கலாம்' என்றெல்லாம் சர்டிஃபிகேட் குடுத்தார்கள்.

தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு இங்கே கூச்சலும், கும்மாளமும் 'மூன்று அப்பாவி உயிர்களை கொன்றுவிட்டதாக' வானதிர (சொல்லப்போனால் ஆபாசமாக)எழுந்தது. கர்நாடகத்தில் இரண்டு (எந்த சம்பந்தமும் இல்லாத) அப்பவி உயிர்கள் கொல்லப்பட்டது பற்றி சலசல்ப்பு கூட இல்லாமல், இப்போது மறந்தாகி விட்டது.

நான் எழுதியதற்கும் இட்லி வடையின் பதிலுக்கும் லாஜிக்கலி தொடர்பு இல்லாவிட்டாலும் தகவல் பிழையை சுட்ட மட்டும் இது.

Anonymous said...

What a bs!

State CM condemns bus torching, attack on Selvi's residence


condemns என்றால் கண்டிப்பது என்றுதானே பொருள்?

ROSAVASANTH said...

உங்களின் துல்லியமான தகவலுக்கு நன்றி அனானி. சம்பவம் நடந்த மறுநாள், நான் தங்கியிருந்த விடுதியில் பார்க்க நேர்ந்த எந்த செய்திதாளிலும் குமாரசாமி மட்டுமில்லாது யாரும் கண்டித்ததாக செய்திவராததால் எழுதினேன். பிறகு மத்திய அரசும் அழைத்து விசாரித்த பிறகு நடந்தவைகளையும், ஒப்புக்கான கணடனங்களையும் நான் கணக்கில் கொள்ளவில்லை.

நான் சொல்லவருவது இத்தனை துல்லியமாக ஒரு வார்த்தை பற்றியதா என்பது உங்களுக்கு புரிய போகிறதா? தமிழ் நாட்டு பஸ்ஸை எரிப்பது என்பது, ஓவ்வொரு முறையும் ஏதாவது உரசல் வரும்போது, ஒரு சடங்கு மாதிரி நடந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஒரு காட்டுத்தனம் என்று இங்கே ஒரு சின்ன உனர்வு இந்த ஊர் அறிவுஜீவிகளுக்கு கூட இருப்பதில்லை. இந்த பண்பாட்டை சுட்டிகாடும்போது என் தரப்பு வாதம் எங்கே இருக்கிறது, எதற்கு வக்காலதாக நீங்கள் செய்தி எடுத்து போடுகிறீர்கள் என்பது பற்றி நான் சுட்டிக் காட்டினால் உங்களுக்கு விளங்க போகிறதா?

Anonymous said...

What does Rosavasanth want?. Cant he understand that those who criticise DMK are not always pro-Hinduvta.Does he read this blog or papers regularly.Has anywhere Idlyvadai condoned the violence in
Bangalore. Rosavasanth should understand one thing. If Hindus begin to retaliate neither DMK nor MK can bear it.MK is after all a chief minister of a state in India. He is not the lord of universe. There is more to India
than DMK and MK. He should behave like a chief minister and should
be careful with his words. Otherwise he has to pay a heavy
price. Hindus will shed no tears
for him even as they disagree with
statements asking for his head and condemn such statements.

Anonymous said...

Idlyvadai also include the photos on the attack published in Dinamani.Accessing that in
Dinamani is not easy.

தறுதலை said...

//எந்த திராவிட கட்சிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல//

அதென்ன திராவிடக் கட்சிகள் மட்டும்.

பண்டாரங்களின் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.
உம்மை யாரும் நடுநிலை வியாதி கொண்டவராக நினைக்கவில்லை. லக்கிலுக் என்பவர் எப்படி தன்னை கருணானிதி ஆதரவாளர் என்று அறிவித்துவிட்டு எழுதுகிறாரோ அதுபோல் நீரும் எந்த சாதி சங்கத்திற்கோ, பண்டார கட்சிக்கோ வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துவிட்டு எழுதினால் இதுபோன்ற விமர்சனங்கள் வராது. நடுநிலை போர்வைக்குள் புகுந்துகொண்டு செய்யும் சோமாறித்தனமே இங்கு விமர்சிக்கப்படுகிறது.

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

IdlyVadai said...

//Idlyvadai also include the photos on the attack published in Dinamani.Accessing that in
Dinamani is not easy.//

பார்க்கிறேன். எப்ப வந்தது என்று நினைவிருக்கா ?

IdlyVadai said...

//அதுபோல் நீரும் எந்த சாதி சங்கத்திற்கோ, பண்டார கட்சிக்கோ வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துவிட்டு எழுதினால் இதுபோன்ற விமர்சனங்கள் வராது. நடுநிலை போர்வைக்குள் புகுந்துகொண்டு செய்யும் சோமாறித்தனமே இங்கு விமர்சிக்கப்படுகிறது.
// எனக்கு அறிவித்துவிட்டு எழுதும் அவசியம் இல்லை. எதிர் வாதம் இல்லை என்றால் கடைசி அஸ்திரமாக ஜாதி ( பார்ப்பான் ) புத்தி என்று முதலமைச்சர் கலைஞர் முதல் வலைப்பதிவு எழுதும் பெரும்பாலோர் செய்யும் செயலே. இதில் போர்வை எல்லாம் தேவை இல்லை சார். என்னை போல எழுதுபவர்களை சோமாறித்தனம் என்றால். உங்களை போல எழுதுபவர்களுக்கு என்ன சொல்லுவது - கேப்மாரிதனம்(அ) மொள்ளமாரிதனம் ?

தறுதலை said...

சோமாறித்தனம் செஞ்சா கேப்மாறித்தனம்தான் செய்வான். சோமாறிக்கு கேப்மாறியின் செயல்களை கண்டிக்கும் தார்மீக உரிமை இல்லை என்பதையாவது உணர்கிறீகளா?
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

IdlyVadai said...

//சோமாறித்தனம் செஞ்சா கேப்மாறித்தனம்தான் செய்வான். சோமாறிக்கு கேப்மாறியின் செயல்களை கண்டிக்கும் தார்மீக உரிமை இல்லை என்பதையாவது உணர்கிறீகளா?//

அப்படியா ? உரிமை கிரிமை என்று எல்லாம் சொல்லி கிச்சுகிச்சு மூட்டாதப்பா.
சரி தருதலை சொன்னால் சரியாக தான் இருக்கும் :-)

தறுதலை said...

கெக்கே... பிக்கே.....
கிச்சு... கிச்சு...
தெரிஞ்சதுதானே :-)

இந்த இழையில அம்புட்டுதேங்.........
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

பார்க்கிறேன். எப்ப வந்தது என்று நினைவிருக்கா ?

see Dinamani website.

Anonymous said...

Please argue in decent words...........this is not good to tell about his community.......we are in the 21st century.........innuma intha jathi sandai...........please dont do this in future