பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 06, 2007

ஒருநாள் போட்டியில் இருந்து தெண்டுல்கர் ஓய்வு பெற முடிவு ?

ஒருநாள் போட்டியில் இருந்து தெண்டுல்கர் ஓய்வு பெறும் முடிவை நாளை மறுநாள் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் அறிவிக்கிறார். இதை மராட்டிய பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது. மேலும்...


34 வயதான அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் தனது உடல் தகுதி இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இந்த ஓய்வு முடிவை நாளை மறுநாள் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் அறிவிக்கிறார். இதை மராட்டிய பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது.

இதை தெண்டுல்கர் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் 1 மாதத்திற்கு முன்பு தெரிவித்ததாக அந்த பத்திரிகை கூறுகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இந்த ஆண்டு கடைசியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. பாகிஸ்தா னுக்கு எதிரான தொடர்தான் தெண்டுல்கரின் கடைசி ஒருநாள் போட்டித் தொடராக இருக்கும்.

ஏற்கனவே அவர் அளித்த பேட்டியும், தற்போது வெளி யாகும் தகவலும் ஒன்று போல் இருக்கிறது. இதனால் தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து விலகுவது உறுதியாகி விட்டது. ஆனால் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார். டிசம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்லும்போது இடம் பெறுவார்.

தெண்டுல்கர் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக வந்துள்ள தகவலை கேப்டன் டிராவிட் மறுத்துள்ளார். இது முழுக்க முழுக்க தவறான தகவல் என்றார்.

தெண்டுல்கர் 394 ஒருநாள் போட்டியில் விளையாடி 15,395 ரன் எடுத்துள்ளார். சராசரி 44.36 ஆகும். 41 சதமும், 83 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 186 ரன் எடுத்துள்ளார். டெஸ்டில் அதிக ரன்கள், அதிக சதம் எடுத்த உலக சாதனையாளர் தெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

CNN-IBN செய்தி

0 Comments: