பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 28, 2007

பந்த் பற்றி நீதிபதி கவலை

சட்டத்தில் ஓட்டை என்று நேற்று எழுதியிருந்தேன். விவாதத்தின் முழு விவரத்தை இப்போது டான் படித்தேன். நாம் நினைக்கும் அளவுக்கு நீதிமன்றம் அவ்வளவு மோசம் இல்லை.

நீதிபதி அரசிடம் சில நச் கேள்விகளை கேட்டுள்ளார். இன்று தீர்ப்பு என்ன வரும் என்று தெரிந்தாலும், அரசுக்கு பகுத்தறிவு இருந்தால் நீதிபதி சொல்லுவது புரியும்.

மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்காத வகையில் உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்துக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை மட்டும் தான் இருக்கு என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது.

விவரம் கீழே...


நேற்று இவ்வழக்கில், தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய `முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அ.தி.மு.க., சார்பில் வக்கீல் என்.ஜோதி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி, `டிராபிக்' ராமசாமி ஆகியோர் ஆஜராயினர்.

கோர்ட்டில் நடந்த வாதம்

வக்கீல் என்.ஜோதி: பந்த் அறிவிப்பு தொடர்பாக மும்பை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவைப் போல் இந்த வழக்கிலும் பிறப்பிக்க வேண்டும். (மும்பை ஐகோர்ட்டில் நீதிபதியாக ஏ.பி.ஷா பணியாற்றிய போது, `பந்த்' அறிவிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பித்திருந்தார்) இந்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கவில்லை. கேரள ஐகோர்ட்டும் `பந்த்'க்கு தடை விதித்துள்ளது. இதனை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

சுப்ரமணிய சாமி: அரசியல் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரே `பந்த்'க்கு அழைப்பு விடுத்துள்ளார். `பந்த்' சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இங்கே சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறுகின்றன.

தலைமை நீதிபதி: அரசை நடத்தும் கட்சி தலைமையில் `பந்த்'க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசின் நிலை என்ன என்பதை தலைமைச் செயலர் தெரிவிக்க வேண்டும். எத்தகைய காரணங்கள் இருந்தாலும், மக்களின் உரிமைகள் பாதிக்கும் வகையில் ஆளுங்கட்சியே `பந்த்'க்கு அழைப்பு விடுப்பது முறையாக இருக்குமா?

அட்வகேட்-ஜெனரல் விடுதலை: சட்ட ஒழுங்கை அரசு பாதுகாக்கும்.

தலைமை நீதிபதி: சட்ட ஒழுங்கை எப்படி பேணப் போகிறீர்கள்? அரசியலுக்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை. அரசியல் சட்ட பொறுப்பு வகிப்பவர்கள் இப்படி நடந்தால், நாம் எங்கே போகிறோம்? சட்டத்தின் ஆட்சி எங்கே?

அட்வகேட்-ஜெனரல்: அரசு வேறு, அரசியல் கட்சிகள் வேறு. அரசைப் பொறுத்தவரை சட்ட ஒழுங்கை பேணுவோம்.

தலைமை நீதிபதி: பொது மக்களுக்கு இது பெரிய வேதனையாக இருக்கும். மக்களின் நிலையைப் பற்றி நாங்கள் அக்கறை கொள்கிறோம். இந்த `பந்த்' சட்ட விரோதமானதா, இல்லையா என்பதை மாநில அரசை கேட்கிறோம்.

அட்வகேட்-ஜெனரல்: அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தலைமை நீதிபதி: மக்கள் சகஜமாக செல்வதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு குடிமகனுக்கு உள்ள உரிமைகளை செயல்படுத்த விடாமல் தடுப்பதும் பிரச்னை தான்.

அட்வகேட்-ஜெனரல்: வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. ஆனால், மற்றவர்களின் உரிமைகளை மீறாமல் அது இருக்க வேண்டும். பொதுமக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கும், பொருட்களை கொண்டு செல்வதற்கும் உறுதி செய்யப்படும். அனைத்து தரப்பு மக்களின் நலன்களை அரசு கருத்தில் கொண்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும். தமிழக அரசு இந்த `பந்த்'தை நடத்தவில்லை. அரசியல் கட்சிகள் தான் நடத்துகின்றன.

தலைமை நீதிபதி: கடந்த முறை `பந்த்' அறிவிக்கப்பட்ட போது, கோர்ட்டுக்கு ஒரு சில வக்கீல்களே வந்தனர்.

அட்வகேட்-ஜெனரல்: எந்த அசம்பாவிதமும் நடக்காது. தலைமை நீதிபதி: அப்படியென்றால், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் விதத்தில் செய்தி ஊடகங்கள் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் எங்கும் செல்லலாம், யாராவது தடுத்தால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பர் என்றும் தெரியப்படுத்த வேண்டும்.

தலைமை நீதிபதி: பொது மக்களின் அடிப்படை உரிமையை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசைப் பொறுத்தது.

அட்வகேட்-ஜெனரல்: மக்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்.

தலைமை நீதிபதி: நாங்கள் முன்கூட்டியே தடை விதிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், பொது மக்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

வக்கீல் ஜோதி: கோர்ட்டில் தெரிவிக்கும் இந்த கருத்துக்களை எப்படி ஏற்க முடியும்? இந்த போலீஸ், அதிகாரிகளை நாங்கள் நம்பவில்லை. எந்த அரசியல் கட்சியும் `பந்த்' நடத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்ட நாங்கள் தயங்க மாட்டோம்.

சுப்ரமணிய சாமி: முழு வேலை நிறுத்தம் என்பதும் சட்ட விரோதமானது தான். இது நடக்காமல் கோர்ட் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அட்வகேட்-ஜெனரல்: சட்டம்-ஒழுங்கு பேணப்படும். பொதுமக்கள் எங்கும் செல்ல உறுதி செய்யப்படும். வன்முறையில் யாரும் ஈடுபட்டால் அவர்களை கடுமையாக அணுகும்.

பிகு: `பந்த்' நடத்த கேரள ஐகோர்ட் விதித்த தடையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. அரசியல் சட்டப்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு அரசியல் கட்சிகள், தலைமைச் செயலர், டி.ஜி.பி., ஆகியோர் கட்டுப்பட வேண்டும். மாநில அரசு அறிவித்துள்ள `பந்த்'தை தடுக்க வேண்டிய பொறுப்பு தலைமைச் செயலருக்கும், டி.ஜி.பி.,க்கும் உள்ளது. செய்வார்களா ?

4 Comments:

ஹரன்பிரசன்னா said...

ரஜினி படத்துக்கு மொதல் ஷோவே போகாத என்று என் அப்பா என்னைத் திட்டுவது போல் வழவழ கொழகொழவாக இருக்கிறது நீதிபதியின் கண்டனம். அவர் இன்னும் ஒன்றே ஒன்றுதான் சொல்லவில்லை, "ப்ளீஸ் வேண்டாம், விட்ருங்க, நான் அழுதுடுவேன்."

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, ஏன் தடைவிதிக்க விரும்பவில்லை என்கிறார் நீதிபதி?

பழைய படம் ஒன்றில் சாட்சி சொல்ல வரும் ஒருவன் மீண்டும் மீண்டும் "தெரியாது தெரியாது" என்று சொல்லிக்கொண்டிருப்பான். அவனுக்கு அரசு வக்கீலுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. மீண்டும் மீண்டும் ஒரே வாதம்தான்.

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கூட்டிச் செல்வோம் என்றால் என்ன அர்த்தம்? கைத்தாங்கலாக சாலையை கடந்து செல்ல உதவுவார்களா? சென்ற முறை பந்தின் போது கருணாநிதியின் தொலைபேசி அழைப்பை ஏற்று மத்திய அரசு விமான சேவையையே நிறுத்தியது.

பஸ் ஓடுமா ஓடாதா?

கருணாநிதி முதல்வராக அரசு பேருந்துகள் ஓடும் என்று அறிவிப்பார். அவ்வை சண்முகி கமல் போல வீட்டுக்கு ஓடி அரிதாரத்தை மாற்றி திமுகவின் தலைமையாகி "திமுக பந்துக்கு முழு ஆதரவு" என்று அறிவிப்பாராமா? நல்ல விறுவிறுப்பா இருக்குல்ல?

பந்துக்கு அழைப்பு விடுக்கும் எல்லா அரசியல் கட்சிகளையும் நீதிமன்றம் உண்டு இல்லை என்றாக்கிவிடவேண்டும். சட்டம் கடுமையாகாத வரையில் இந்த அரசியல்வாதிகள் உருப்படப்போவதே இல்லை.

அருண்மொழி said...

மாமேதை சுப்பிரமணிய சுவாமி courtக்கு வந்தும் தடை கிடைக்கவில்லையா!!! என்ன ஆச்சர்யம்?

Anonymous said...

raamar koottam panth andru saalaiyil thalai viriththu aaduvaargaLaa....

Anonymous said...

@ஹரன்பிரசன்னா

Pasangu vendam.

Ennammo dmk vai bihar makkal ellam tamilnadukku vandu ottu pottu jeikka vacha madhiri pesaringa.

Neenga than ottu pottinga.. Enge makkal atchi than nadakkuthu..

Arasiyal vadhi kettavan...Sattam stongga erundu than avangalai thiruthanum ethellam chumma. Nee nallavanukku ottu podu kettavanukku ottu podathennu makkal kitta poi sollu...