பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 16, 2007

பதிலுக்கு பதில் - தங்கர்பச்சான், சேரன் லடாய்

சென்ற வார விகடனில் தங்கர்பச்சானிடம்

ஏன் எப்பவும் உங்களுக்கு ஹீரோக்கள் மேலே கோபம்?’’

என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்....கொஞ்சம் காட்டம் தான்.
‘‘ஐயைய... இது கோபம் இல்லீங்க, வருத்தம். மத்தவங்களை விடுங்க, இந்த சேரனைப் பாருங்க... அவ்வளவு நண்பன். நானும் அவனும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. அவனுக்கு ஒரு கஷ்டம்னா எனக்கும் வலிக்கும். ‘சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமி’ எடுத்ததில் கடன் தொல்லை இருந்தது. ‘பள்ளிக்கூடம்’ படத்தில் கலெக்டர் வேடத்தில் சேரன் 15 நாள் வந்து நடிச்சா போதும், மாசத்துக்கு நாலு நாள் கால்ஷீட் தந்தா போதும்னு சேரன்கிட்ட கேட்டேன்... கெஞ்சினேன். அலை பேசியையே எடுக்கிறதில்லை... இருந்துட்டே இல்லைங்கிறது... பார்க் கவும் அனுமதிக்கிறதில்லை. சேரனுக் காக நான் காத்திருந்த நாளெல்லாம் போச்சு. ‘அழகி’ பயங்கர வெற்றி அடைஞ்ச பின்னாடி யாரை வேண்டுமானாலும் போட்டு நான் படம் எடுத் திருக்கலாம். ஆனா, சேரனைத்தேர்ந் தெடுத்தேன். அது அவருக்கே அதிர்ச்சி. என்னைப் பொறுத்தவரை சேரன் பெரிய திறமைசாலி. ஒவ்வொரு படத்துக்கும் அவர் நடிகர்கள்கிட்டே

போய் நிக்க வேண்டியிருக்கேன்னு நான்தான் அவரை ஹீரோவாக்கினேன். ஆனா, எனக்கு சேரன் செய் தது என்ன? சேரன் மாதிரி நல்ல மனுஷனே இப்படிப் பண்ணினா, என்னங்க பண்றது சொல்லுங்க.

எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட் டேன். என் இமேஜுக்கு சரியா வராதுன்னு சொல்லிட்டார். கடை சி யில் தெய்வம் மாதிரி காப்பாத்தினவன் சீமான். நான் அவனுக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட்ட தில்லை. நான் திட்டினதெல்லாம் வாங்கிட்டு, கோபத்தை உள்ளே அடக்கிவெச்சுக்கிட்டு நடிச்சுக் கொடுத்தான்.

‘பள்ளிக்கூடம்’னா தெரியலைங்க இங்கே. ஸ்கூல்ங்கிற வார்த்தை தமிழ் வார்த்தையாகிப் போச்சுங்க. படிச்ச பள்ளிக்கூடத்தை திரும்பிப் பாருங்கடான்னு இப்படி ஓவியமா ஒரு படம் எடுத்தா, இங்கே சினிமாவில் டைரக்டர் வஸந்த், விக்ரமன் ரெண்டே பேர் தான் மனசுவிட்டுப் பாராட்டினாங்க. மத்த யாருமே ஒரு வார்த்தை சொல்லலைங்க. நல்ல படம் எடுத்தா, ஏன் எல்லோரும் பயப்படறாங்க... ஏங்க, தமிழன் விளங்குவானா சார்?’’

இந்த வார விகடனில் சேரன் தங்கருக்கு எழுதும் கடிதம். இதுவும் கொஞ்சம் காட்டம் தான்..


நண்பன் தங்கருக்கு...

சென்ற வார விகடன் இதழில், உங்கள் நேர்காணலைப் பார்த்தேன்.

ஒவ்வொருத்தருக்கும் எதிரி ஒருத்தன் உள்ளுக்குள்ளேயே இருப்பான். சிலருக்கு அவங்க நேர்மையே எதிரி! இன்னும் சிலருக்கு அவங்க திறமையே எதிரியாகும். ஆனா, உங்களுக்கு உங்க வாய்தான் எதிரி. என்னை நன்றி மறந்தவனாகச் சித்திரிச்சிருக்கீங்க. ஆனா, உண்மை என்ன தங்கர்?

‘பள்ளிக்கூடம்’ கதையை நீங்க என்னிடம் விவரிச்சப்போ, அது ‘அழகி’யையும் ‘ஆட்டோகிராஃப்’பையும் நினைவுபடுத்துதுன்னு சொன்னேன். இதில் நீங்களும் நானும் நடிச்சா, இவங்களுக்கு வேற வேலையே இல்லையான்னு மக்கள் நினைச்சிடுவாங்கன்னு மட்டும்-தான் சொன்னேன். வேறு நடிகர்கள் நடிச்சா, அது தெரியாதுன்னும் சொன்-னேன். ஆனா, பிடிவாதமா நின்னீங்க. இப்போ, அதை மறந்துட்டு என்னென்-னவோ பேசி இருக்கீங்க.

நீங்க நல்ல எழுத்தாளர். உங்க-ளோட ‘வெள்ளை மாடு’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ ரெண்டையும் படிச்சு உருகியிருக்கேன். நீங்க என்னோட ‘தேசிய கீதம்’ பார்த்துட்டு, ‘இப்படி-எல்லாம் எடுக்க முடியுமாய்யா?’னு நெருங்கி வந்தீங்க. அப்படி ஆரம்பிச் சது நம்ம நட்பு. ஆனா, நீங்க பேசக் கூடிய வார்த்தை-களுக்கும் வாழுற வாழ்க்கைக்கும் எவ்வளவு முரண்பாடு!

‘சொல்ல மறந்த கதை’ யில் என்னை ஒரு நடிகனா அறி-முகம் செய்தவர் நீங்கதான். நான் சம்பளமே வேண்டாம்னு சொன்னேன். ‘இல்லை சேரா, இது தொழில்!’னு 3 லட்சத்தை எனக்குக் கொடுத்துட்டு, 25 லட்சம் கொடுத்ததா தயாரிப்பாளரிடம் கணக்கு காட்டினவர் நீங்க. உங்களின் இந்த ‘அரிய’ குணத்தைக்கூட இதுவரைக்கும் நான் வெளியே சொன்னதில்லை, தங்கர்! இப்போ சொல்ல வெச்சதும் உங்கள் பேச்சுதான்.

இவ்வளவு அழகாக எழுதுகிற கலைஞன், எப்படி இத்தனை நேர்மையற்றவரா இருக்க முடியும்னு நினைச்சுப் பார்க்கவே கஷ்டமா இருக்கு தங்கர். வாழ்க்கையின் உயர்ந்த பட்ச நல்ல மனநிலையை எப்பதான் அடையப்போறீங்க?

‘சொல்ல மறந்த கதை’யில் என் நடிப்பைப் பார்த்துட்டு, பல தடவை கட்டிப்பிடிச்சுப் பாராட்டி அழுதிருக்கீங்க. ஆனா, அதே வேகத்தில் இன்னொரு நடிகரைப் பார்க்கப் போய், ‘சேரனுக்குப் பதில் நீங்க நடிச்சிருந்தா, அந்தப் படம் பிச்சிட்டுப் போயிருக்கும்’னு சிரிச்சிருக்கீங்க. முரண்பாடுகளின் மூட்டையாகிட்டீங்களே, ஏன் தங்கர்?

எந்த ஒரு கஷ்டமான கணத்திலும், உங்களுக்கு ஆதரவா நின்னிருக்கேன். குஷ்புவுக்கும் உங்களுக்கும் நடந்த சண்டையில் உங்கள் பக்கம் நின்னு, நடிகர் சங்கத்துக்கும் யூனியனுக்கும் அலைஞ்சிருக்கேன். ‘அழகி’யை ரிலீஸ் செய்ய முடியாம தவிச்-சப்போ, என் ஆபீஸ்ல கூடிப் பேசி பிரச்னையைச் சரி பண்ணி-யிருக்கோம். ஆனா, ‘ஒண்ணுக்குள்ள ஒண்ணு’ன்னு சொல்றவர், என்னோட ‘ஆட்டோகிராஃப்’, ‘தவமாய் தவமிருந்து’ படங்கள் ரிலீஸ் செய்யக் கஷ்டப்பட்ட காலங்களில், ஆறுதலாக ஒரு வார்த்தை, போனிலாவது நீங்க பேசியது உண்டா?

எப்போ பார்த்தாலும் ‘தமிழனுக்கு நான்தான் அத்தாரிட்டி’ன்னு சொல்லிக்கிறீங்களே... மகேந்திரனின் ‘உதிரிப்பூக்க’ளும், பாரதிராஜா-வின் பல படங்களும் காட்டிய தமிழ் வாழ்க்கையை நீங்க இன்னும் காட்டவே இல்லை. முதலில், உங்க படங்களைச் ‘சுருட்டாம’ நல்லா எடுக்கிறவிதத்தைப் பழகுங்க. ‘பள்ளிக்கூடம்’ மிகச் சிறந்த கதை. ஆனா, கொடுத்த பணத்தைச் ‘சுருட்டாமல்’ இருந்திருந்தால், அது இன்னும் நல்ல படமா வந்திருக்கும். இப்போ ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தையாவது கெடுக்காமல் எடுங்க. அதுதான் உங்களை வேறு இடத்தில் கொண்டுபோய் வைக்கும்.

என்னை மட்டுமில்லை... விஜயகாந்த்தையும், சரத்குமாரையும் வம்புக்கு இழுத்திருக்கீங்க. திருமா அண்ணன் சினிமாவுக்கு வந்ததை எந்த அளவுக்கு வரவேற்கிறோமோ, அதே மாதிரி இவங்களும் அரசியலுக்கு வரட்டுமே! அவங்களை மக்கள் முடிவு பண்ணட்டும். உங்களுக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தாங்க?

‘அழகி’யை அப்போ கொண்டாடியது, இப்போ நீங்க திட்டுற அதே டைரக்டர்கள்தான். அவங்களுக்குத் தெரிஞ்சதை அவங்க பண்றாங்க; நமக்குத் தெரிஞ்சதை நாம செய்றோம். அவரவர் திறமை, அவரவர் பாடு! மக்கள் புத்திசாலிகள். அவங்களுக்குத் திருப்தி இல்லைங்கிறதை ‘தென்றல்’, ‘மாயக்கண்ணாடி’ ரெண்டும் நிரூபிச்சுது. உங்களை வஸந்த்தும், விக்கிரமனும் பாராட்டியிருந்தா, அது அவங்க பெருந்தன்மை!

உங்களுக்குப் பதில் சொல்றதுக்கு முன்னால யோசிச்சேன். ஆனா, என்னால் அமைதியா இருக்க முடியலை. ஏன்னா, இது சுமத்தப்பட்ட அமைதி. நான் வேகமா நடக்கிறபோதெல்லாம், இப்படி ஏதாவது ஒரு கல் என் பெருவிரலைக் காயப்படுத்திட்டே இருக்கு. இருந்தாலும் நன்றி மறப்பவன் நான் அல்ல. இப்பவும் நல்ல கதை இருந்தா, சொல்லுங்க... நடிக்கிறேன். ஆனால் உங்களின் பேச்சு, நீங்க நல்ல நண்பர் இல்-லைன்னு காட்டிவிட்டது. உங்கள் பொய் முகத்தைக் காட்டிவிட்டு, நான் இன்னும் வெகுதூரம் போக வேண்டும்.

ஒன்றே ஒன்றுதான் தங்கர்... நம் படைப்பு-களைத்தான் தமிழர்கள் நேசிக்கிறார்கள். நாம் அதிகம் பேசுவதை அல்ல!

நண்பன் தங்கருக்கு
அன்புடன்
சேரன்


17 Comments:

இலவசக்கொத்தனார் said...

அடுத்தது சேரன் என்னவெல்லாம் செஞ்சாருன்னு தங்கர் சொல்லுவாருன்னு எதிர் பார்க்கலாம். :)

IdlyVadai said...

கொத்ஸ் அடுத்த வார ஆனந்த விகடனுக்கு இரண்டு பக்க மேட்டர் இருக்கு. தொடர் கதைக்கு பதில் இந்த டெக்னிக் நல்லாவே இருக்கு. ஏதோ நமக்கு பொழுது போகுது.

Anonymous said...

Theruporikkinga. Oru sirthiruthavadhi Poi kanakku kamippar..

Ennoru sirthiruthavadhi hero chance kku kaga poi kanakkai kandukkamal eruppar prachanai nnu vanda athai veliy solluvar..

Erandu sirthirutha vadhigal aduthu samudaya sirthirutha karuthulla padam eduppanga. Tamil samudhayam eppadi vazanum nnu solli kudupanga..

We The People said...

//நல்ல படம் எடுத்தா, ஏன் எல்லோரும் பயப்படறாங்க... ஏங்க, தமிழன் விளங்குவானா சார்?’’
//

பள்ளிக்கூடம் நல்ல படம்ன்னு பார்க்கிறவன் தான் சொல்லனும்! இவறா சொல்லிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு! என் நண்பன் பார்த்து வந்து, நல்ல கதை தங்கர் சொதப்பிவைத்திருக்கிறார்ன்னு சேரன் சொன்ன அதே வார்த்தையை தான் சொன்னான்!

இந்த ஆள் படத்தை சொதப்பிவிட்டுவிட்டு தமிழனை திட்டி என்ன பண்ணறது!!! இந்த ஆள் கூட எப்பவுமே காமெடிதான்!!!

IdlyVadai said...

//We The People//
//இந்த ஆள் படத்தை சொதப்பிவிட்டுவிட்டு தமிழனை திட்டி என்ன பண்ணறது!!! இந்த ஆள் கூட எப்பவுமே காமெடிதான்!!!//
தங்கர்பச்சான் சரியான பச்சான் என்று நிருபித்துவிட்டார். குஷ்புவிடமே இவர் பாச்சா எதுவும் பலிக்கவில்லை.

அமிழ்து - Sathis M R said...

சரி இதெல்லாம் இருக்கட்டும்! தெரியாமதான் கேக்கிறேன், தங்கர் பச்சான் -ங்கறது தமிழ் பெயரா?

IdlyVadai said...

//தங்கர் பச்சான் -ங்கறது தமிழ் பெயரா?//

நல்ல கேள்வி, இதுக்கு தான் பள்ளிக்கூடத்தில் ஒழுங்க படிக்கனும்.

Aani Pidunganum said...

//இந்த ஆள் படத்தை சொதப்பிவிட்டுவிட்டு தமிழனை திட்டி என்ன பண்ணறது!!! இந்த ஆள் கூட எப்பவுமே காமெடிதான்!!!//

Hahahaha, sariyaa sonninga,

Chumma ivanungala ippadi pesi vechundu sanda podara madhiri pannarangalohnu ninaika thonudhu... (Ellam oru publicityku, naanum fieldla irukaenu solla).

Ellarum paarunga, oru naal Cheran-kitta Thangarbachhan Mannipu ketundu inaizhchutaanganu oru message varum paperla (Ellam kushboo-Thangarbachhan sandai pottu, kaala vizhunda madhiri)

Anonymous said...

If Thankar Bachchan is a Tamil name, then Amitabh Bachchan also is a pure Tamil name.

PPattian said...

அனானியோட கமென்ட்டு சூப்பர்.. ஒரு சீர்திருத்தவாதி திருட்டு கணக்கு காமிப்பார்.. இன்னொரு சீர்திருத்தவாதி அதை கண்டுக்காம வுட்டுட்டு அப்புறம் சண்டைன்னதும் யூஸ் பண்ணிக்குவார்...

பள்ளிக்கூடமாவது பரவாயில்ல..அப்பாசாமின்னு ஒரு படம்.. குப்பயோ குப்பை.. அதில விக்ரம் நடிக்கனுன்னு சொன்னாராம்.. விக்ரம் அதோட ஊரை காலி பண்ணியிருப்பார், அவரோட நல்ல நேரம், தப்பிச்சார்.

IdlyVadai said...

//If Thankar Bachchan is a Tamil name, then Amitabh Bachchan also is a pure Tamil name.// என்னங்க இப்படி காமெடி செஞ்சு என் புழப்புல மண்ணை போடாதீங்க :-)

வவ்வால் said...

தங்கர் பச்சான் பேரு தங்கசாமி ,

பச்சைவாழி அம்மன் அவர் குல தெய்வமாம் , அதை பச்சான் என்று மாற்றி சேர்த்துக்கொண்டார். இதற்கும் அமிதாப் பச்சனுக்கும் சம்பந்தம் இல்லை :-))

IdlyVadai said...

வவ்வாள் தமிழர்களின் மானத்தை காத்ததற்கு உங்களுக்கு நன்றி.

Boston Bala said...

---இன்னொரு நடிகரைப் பார்க்கப் போய், ‘சேரனுக்குப் பதில் நீங்க நடிச்சிருந்தா, அந்தப் படம் பிச்சிட்டுப் போயிருக்கும்’னு சிரிச்சிருக்கீங்க. ---

அந்த நடிகர்... சுந்தர் சி?!

IdlyVadai said...

பாபா குஷ்புவிடம் தான் கேக்கனும்

அமிழ்து - Sathis M R said...

தங்கருக்கே தங்கசாமின்ற தங்கமான தமிழ் பேரு பிடிக்கலயா? அப்புறம் இவரு என்ன தமிழர்கள திட்டுறாரு... யாருக்கும் அவுங்க முதுகு தெரியமாட்டேங்குது!

Anonymous said...

sorry i dont know how to type in tamil..thangar pachan name is a blend of his grand father thangarappan + his father name appachan = thangarappan thats it..
its a pure tamil name .. and he is a good creator...