பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 26, 2007

என்னை யாருக்கும் பிடிப்பது இல்லை - ராமதாஸ் பேட்டி

பாரதீய ஜனதா அலுவலகம் தாக்கபட்டது, சேலம் ரெயில்வே திமுக போராட்டம் பற்றி...


கேள்வி:- நில சீர்திருத்தம் தமிழ்நாட்டில் முறையாக செயல்படுத்தவில்லை என்று நினைக்கின்றீர்களா?

பதில்:- தமிழ்நாட்டில் நில சீர்திருத்தம் முறையாக செயல்படுத்தவில்லை என்பதுதான் எனது குற்றச்சாட்டு ஆகும். தமிழ்நாட்டில் ஆட்சி செய்த எல்லா அரசும் நில சீர்திருத்தத்தை மீறி உள்ளன.


கேள்வி:- சேலத்தில் அமைச்சர் தலைமையில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மணலை கொட்டி உள்ளனர். ரெயில்வே சிக்னலை உடைத்துள்ளனர். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் அல்லவா?

பதில்:- நான் நிறைய சொல்லி சொல்லி என்னை யாருக்கும் பிடிப்பது இல்லை.

கேள்வி:- பாரதீய ஜனதா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து...?

பதில்:- என்னை பொறுத்தவரை பொதுமக்களை காக்க வேண்டியது அரசு மற்றும், போலீஸ் கடமையாகும். சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் அரசின் கையில் இருக்கிறது. காவல் துறையின் கையில் இருக்கிறது.

2 Comments:

Anonymous said...

I know one thing: Idlyvadai likes
Dr.Ramadoss.

Anonymous said...

அட ஏனுங்க மருத்துவர் கிட்ட மட்டும் ராமர் பத்தி யாருமே கேள்வி கேக்கறதில்லையா? இல்ல அத சாம்பார் ஊத்தி அவர் சொன்ன இட்லிகளை யும் வடைகளையும் மறைக்கறீங்களா?

நீங்களே நியாத்தை சொல்லுங்க..

- மனசு நோகடிக்காதவன்