பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 21, 2007

ஆணவமே, உன் பெயர்தான் கலைஞரோ !

ஆணவமே, உன் பெயர்தான் கலைஞரோ ! ( துக்ளக் தலையங்கம் )

ஆணவமே, உன் பெயர்தான் கலைஞரோ !

தமிழக முதல்வர், ஹிந்துமத நம்பிக்கை கொண்டவர்கள் மனம் புண்படும்படி பேசுவது புதிய விஷயமல்ல. ஆனால், ஈரோட்டில் நடந்த தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் அவர் பேசியுள்ளது, அவர் காட்டி வருகிற ஹிந்துமத துவேஷத்தில், ஒரு புதிய அத்தியாயம்.

ராமர் பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மாற்று வழிகளை ஆராய்கிறோம் – என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியிருப்பது, தமிழக முதல்வருக்கு பெரும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. சேது சமுத்திரத் திட்டம் வருவதை விட, ராமர் பாலம் இடிக்கப்படுவதைத்தான் அவர் பெரிதும் விரும்புகிறார்; அதனால்தான் மாற்று வழியை ஆராய்வதில் அவருக்கு இவ்வளவு கோபம் வருகிறது. ஆனால் கோபம் வந்து என்ன பயன்?

மத்தியில், காங்கிரஸிற்கு ஓட்டு பயம் வந்து விட்டதால், அதற்கு முன் தி.மு.க. காட்டக்கூடிய "ஆதரவு வாபஸ்' பூச்சாண்டி பயம் எடுபடாது என்கிற நிலை; அதனால் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில், ராமர் மீது இருக்கிற மரியாதையை பிரகடனம் செய்ததோடு மட்டுமல்லாமல், புதிய வழியை ஆராய மூன்று மாத தவணை
வாங்கியிருக்கிறது.

முதல்வர் முப்பெரும் விழாவில், "...மூட, மௌடீக, மடத்தனமான மதவாதங்களை இன்றைக்கும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாக, ராமன் பெயரை இழுத்து அவர்கள் இன்றைக்கு நம்மோடு விளையாடுகிறார்கள்... இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கிற, எதிர்காலத்தில் இருள் மயமாக ஆக்குகிற ஒரு பயங்கரமான சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு, ஒரு தீர்மானத்தை உங்கள் முன் வைக்கிறேன்' என்று கூறிவிட்டு – அந்த தீர்மானத்தில் "மதவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு அஞ்சி... சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்கிற முயற்சிக்கு இடம்கொடுத்து விடக்கூடாது என்று குரல் கொடுக்கிறோம்' – என்று கூறியிருக்கிறார்.

இப்படி குரல் கொடுத்தால் போதுமா? "மூட, மௌடீக, மடத்தனமான' மதவாதத்தை காங்கிரஸும், மத்திய அரசும் பேசத் தொடங்கி விட்டனவே? மத்திய சட்ட அமைச்சர், "இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக ராமர் விளங்குகிறார். விவாதத்திற்கு இடமளிக்கிற விஷயமல்ல இது. ராமர் இருந்தார் என்பதை சந்தேகிக்கவே முடியாது. இமயமலை, இமயமலையே; கங்கை, கங்கையே. அதுபோல ராமர், ராமரே! இதை நிரூபிக்கத் தேவையே இல்லை' என்று கூறிவிட்டார்.

மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து "ராமாயணம் புனிதமானது; மத்திய அரசு மதங்களை – அதுவும் இந்த வழக்கு தொடர்பாக குறிப்பாக ஹிந்து மதத்தை – முழுமையாக மதிக்கிறது' என்று கூறிவிட்டது.

அதாவது, முதல்வர் கூறுகிற "சதித் திட்டம்' மத்திய அரசின் ஒத்துழைப்பைப்
பெற்றுவிட்டது. "எதிர்காலத்தை இருள் மயமாக்க' மத்திய அரசு முன்வந்து விட்டது. அப்படியிருந்தும் முதல்வர் மத்திய அரசுக்கு எப்படி ஆதரவு தரலாம்? எதிர்காலத்தை இருள் மயமாக்குகிற சதித் திட்டத்தை ஏற்கிற அரசில் தி.மு.க. எப்படி பதவிகள் வகிக்கலாம்? சதிகாரர்களுக்கு உடந்தையான கட்சியாகிவிட்ட காங்கிரஸின் ஆதரவைப் பெற்று, தமிழகத்தில் எப்படி அரசு நடத்தலாம்? இதெல்லாம் பெரியாருக்கு தி.மு.க. இழைக்கிற துரோகமல்லவா?

மத்திய அரசிலிருந்து விலகி, மத்திய அரசுக்குத் தருகிற ஆதரவை வாபஸ் பெற்று, தமிழக அரசுக்கு காங்கிரஸ் தருகிற ஆதரவையும் வேண்டாம் என்று உதறிச் செயல்பட்டால்தானே, சதித் திட்டத்தை முறியடிக்க முடியும்? அதற்கு முதல்வர் துணியாதது ஏன்? பதவி ஆசையைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம்?

"குடிலர்கள், குள்ள நரிகள்' என்று முதல்வர் வர்ணித்துள்ளவர்களின் பட்டியலில் இடம்பெற முன்வந்து விட்ட மத்திய அரசினரை எதிர்க்காத முதல்வர், குடிலர் ஆதரவாளரா? குள்ளநரி போஷகரா? தன்னுடைய பதவி, தன் குடும்பத்தினரின் பதவிகள் என்றால், பெரியார் கொள்கைகளை பலி கொடுக்கத் தயங்காதவர், வெறும் சவடால் பேச்சினால், வீரத்தைக் காட்டுகிறார்! வாய்ச்சொல் வீரம் என்பது இதுதான்.

இப்படி மத்திய அரசைக் கோபிக்க முடியாமல், அவரும் அவர் குடும்பத்தினரும் வகிக்கிற பதவிகள், முதல்வரைத் தடுக்கின்றன.

சரி; முதல்வர் தன்னுடைய கோபத்தை யார் மீது காட்டுவது? இருக்கவே இருக்கிறது ஹிந்து மத நம்பிக்கைகள்.

கோபத்தில், துவேஷத்தைக் கொட்டி முதல்வர் இப்படிப் பேசியிருக்கிறார்: "யார் ராமன்? எந்தப் பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? எப்போது அந்தப் பாலத்தைக் கட்டினான்? ஆதாரம் உண்டா?' என்றெல்லாம் கேட்டிருக்கிறார் முதல்வர்.

துவேஷம் தலைக்கேறியதால், ரொம்ப புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, அவர் பிதற்றியிருக்கிறார்.

பாலத்தைக் கட்டியது ராமர் என்றால், அவரேதான் கற்களை எடுத்து அடுக்கி, அவற்றை ஒன்றிணைத்து, பாலத்தை தன் கையாலேயே கட்டினார் என்று அர்த்தமல்ல. ஒரு மன்னன் கோவில் கட்டினான்; சிற்பங்கள் வைத்தான் – என்றால் அவை, அவனே உளியைக் கையில் எடுத்து, செதுக்கியவை அல்ல. அவன் ஆணையின் மீது, அவன் விருப்பத்திற்கிணங்க, சிற்பக் கலை வல்லுனர்கள் செய்துள்ள பணிகள் அவை. ஆனால் அவை அந்த சிற்பிகளின் பெயரில் வழங்கப்படுவதில்லை; சம்பந்தப்பட்ட மன்னன் வைத்த சிற்பங்களாகவே அவை புகழ் பெறுகின்றன.

அதே போலத்தான் ராமர் கட்டிய பாலமும். முதல்வருக்கு ராமாயணத்தைப் பற்றி இழிவாகப் பேசத்தான் தெரியுமே தவிர, அதிலிருந்து மேற்கோள் காட்டுகிற போதெல்லாம் எதையாவது தப்பும் தவறுமாகப் பேச அவர் தவறுவதில்லை. (இதற்கு முன்பும் நாம் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.)

அந்த பாலம் கட்ட, ராமருக்கு சமுத்திரராஜன் வழி கூறினான். அவனே, அதற்கு நளன் என்ற நிபுணனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் யோசனை கூறினான்.

"....நளன், தேவதச்சனாகிய விச்வகர்மாவின் மகன்; தந்தையிடமிருந்து வரமும் பெற்று, தொழிலும் கற்றவன்; நிபுணன். அவன் பாலத்தைக் கட்ட முன்வந்து, சுக்ரீவனைப் பார்த்து, "வானரர்களில் சிறந்தவரே! பாலம் கட்டுவதற்கான எல்லாப் பொருட்களும் உடனே சேகரிக்கப்பட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டான்.

நளன் கேட்ட பொருட்களை சேகரிக்க வானரர்கள் புறப்பட்டனர். (வானரர்கள் என்றால் ஆங்கிலத்தில் சொல்கிற "மங்கி' அல்ல; அவர்கள் குரங்குகள் அல்ல;
பெரும் வீரர்கள்; கற்றவர்கள்; நகரத்தில் அரண்மனைகளைக் கட்டிக்கொண்டு
வாழ்ந்தவர்கள்.... என்கிற விவரங்கள் வால்மீகி ராமாயணத்தில் இருக்கின்றன).

"வானரர்களின் உதவியுடன், பாறைகள் தகர்க்கப்பட்டன; மரங்கள் வேரோடு
பிடுங்கப்பட்டு, கொண்டுவரப்பட்டன. இம்மாதிரி பாறைகளும், மரங்களும், மற்ற பொருட்களும் கடற்கரையில் கொண்டு வந்து சேர்ப்பிக்கப்பட்டன. பாலம் கட்டப்படுகையில், பாறைகளை நேர்க்கோட்டில் நிறுத்தி வைக்க, பலமான கயிறுகள் பயன்படுத்தப்பட்டன. நளன் உத்திரவிட்டவாறு, பாறைகளை சமுத்திரத்தில் தள்ளிக் கொண்டும், மரங்களை பாறைகள் மீது நிறுத்தியும், பல வேலைகளைச் செய்தும், வானரர்கள் சுறுசுறுப்பாக இயங்கினர். கட்டி முடிக்கப்பட்ட பாலம், வான வீதியில் தெரிகிற நக்ஷத்திர மண்டலம் போல காட்சி அளித்தது. மேல் வானத்திலிருந்து பார்ப்பதற்கு, ஒரு பெண்ணின் கூந்தலை, இருபுறம் விலக்கி எடுக்கப்பட்ட வகிடு போல தோற்றமளித்த அந்த பாலத்தின் மீதேறி, வானரர்களும், மற்றவர்களும் கடலைக் கடந்து சென்றனர்...'

இவையெல்லாம் வால்மீகி ராமாயணத்தில், கூறப்பட்டுள்ள விவரங்கள். ஆகையால் புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்துக்கொண்டு, பிதற்றியுள்ள முதல்வர், "நளன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்?' என்றாவது கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்டிருந்தால், அதற்கு நம்முடைய பதில் : நளன் தனது தந்தையிடம் தொழில் கற்றவன். நிபுணன் என்று பெயர் பெற்றவன்.

அது இருக்கட்டும். "ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பாலம்
கட்டினா(ன்)ர்?' என்று கேட்கிற முதல்வர், இதேபோல வேறு சில விஷயங்களைப் பற்றியும் கேள்வி கேட்பாரா?

"கண்ணகி தன்னுடைய மார்பகத்தைக் கிள்ளி எறிந்து, மதுரையை எரித்ததாகச் சொல்கிறார்களே – அந்த டெக்னிக்கை, அவள் எந்தக் கல்லூரியில் படித்தாள்? அது என்ன பயாலஜியா? அல்லது வெடிகுண்டு தயாரிக்கிற கலையா?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனெனில் கண்ணகி காட்டியது, கற்பின் சக்தி என்பதை ஏற்பவர்கள் நாம்.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய முதல்வர், "தொல்காப்பியர் எந்தக் கல்லூரியில் இலக்கணம் படித்தார்? தமிழ் இலக்கணத்தையே வகுத்ததாகச் சொல்லப்படுபவருக்கு இலக்கணம் கற்பித்தது யார்?' என்று கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனெனில், நமது சிற்றறிவுக்கு எட்டாத, பெரும் புலமையும், வல்லமையும் படைத்தவர்கள் முன் காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டவர்கள் நாம்.

"திருவள்ளுவர், திருக்குறள் எழுதியதாகச் சொல்கிறார்களே – அவர் எங்கு செய்யுள் இலக்கணம் படித்தார்? எங்கு தமிழ் கற்றார்? எங்கு ஃபிலாஸபி என்கிற தத்துவ விசாரணையை கற்றார்?' என்றெல்லாம் கேட்பாரா முதல்வர்? நாம் கேட்க மாட்டோம்; ஏனென்றால், திருவள்ளுவர் இறையருள் பெற்ற மகான் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.

சரி, இதெல்லாம் போகட்டும். ராமர் இருந்தாரா என்று கேட்கிற முதல்வர், இதுவரை தப்பித் தவறியாவது மற்ற மத நம்பிக்கைகள் பற்றி ஒரு சிறு விமர்சனமாவது செய்தது உண்டா? காஷ்மீரில் உள்ள ஹஸ்ரத்பால் மசூதியில் (புனித ஸ்தலத்தில்) நபிகள் நாயகத்தின் தலை முடி ஒன்று இருப்பதாகக் கூறப்பட்டு, அது பெரிதும் மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறதே – அது பற்றி முதல்வர் பேசியதுண்டா?

"அந்த முடி, நபிகள் முடிதான் என்று எப்படித் தெரியும்? என்ன ஆதாரம்?' என்று அவர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனென்றால் மற்ற மத நம்பிக்கைகளை மதிக்கக் கற்றவர்கள் நாம்; மற்ற மதத்தவர்கள் போற்றி வணங்குகிற மகான்கள் பற்றி அவமரியாதையாகப் பேசுவது, அற்பத்தனம் என்று நம்புகிறவர்கள் நாம்.

"ஏசு கிறிஸ்து சிலுவையில் மாண்டு, பின்னர் உயிர்ப்பித்து வந்ததாகச் சொல்கிறார்களே? அவர் அந்தக் கலையை எந்த ஆராய்ச்சிக் கூடத்தில் பயின்றார்? அல்லது அவரை உயிர்ப்பித்தவர் எந்த விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் இந்த
சிகிச்சையைக் கற்றார்? ஆதாரம் உண்டா?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம். மற்ற மத நம்பிக்கையையும், மற்ற மதத்தவர்கள் போற்றுகிற இறைத் தூதர்களையும் மட்டமாகப் பேசுவது, காட்டுமிராண்டித்தனமான செயல் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.

இவ்வளவு போவானேன்? "புத்தர் அணிந்த ஆடை – மஞ்சள் நிறமுடையது என்பதால், நானும் மஞ்சள் துண்டு போடுகிறேன்' என்பது முதல்வர், தன்னுடைய மஞ்சள் மகிமை பற்றி அருளிய பற்பல காரணங்களில் ஒன்று. "புத்தர் மஞ்சள் ஆடை அணிந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? அவர் எங்கே அந்த ஆடைக்கு சாயம் ஏற்றினார்?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம். ஏனென்றால், அவதார புருஷர்கள் போல தோன்றிய பெரியவர்கள் பற்றி, மடத்தனமான
விமர்சனங்கள் செய்வது, சுத்த முட்டாள்தனம் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.

இராமாயணம் வெறும் கதை என்று நேரு கூறியிருக்கிறார் – என்பது முதல்வர் காட்டுகிற பெரிய ஆதாரம்! நேரு உட்பட – எந்த நாஸ்திகரும், ராமாயணம் பற்றியோ, ஹிந்துக்கள் நம்பிக்கைகள் பற்றியோ, கூறுகிற கருத்துக்கள், அவை பற்றிய தீர்ப்பாகிவிடாது.

சரி, நேரு சொன்னதை இப்படி வேத வாக்காக – மன்னிக்கவும், பெரியார் வாக்காக
– எடுத்துக்கொள்கிற முதல்வர், நேரு சொன்ன மற்றொரு கருத்து பற்றி என்ன சொல்லப்போகிறார்? "நான்சென்ஸ்' என்று தி.மு.க.வினரை நேரு வர்ணித்ததற்காக, இவர்கள் ஏன் போராட்டம் நடத்தினார்கள்? நேருவே சொல்லிவிட்டாரே? அப்புறம் ஏது அப்பீல்? "நான்சென்ஸ்' என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே!

முதல்வர் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார் – அதுவும் ஹிந்து மத நம்பிக்கைகளை பற்றி மட்டும்தான். ஏனென்றால் ஹிந்துக்கள் இளிச்சவாயர்கள் என்பது அவருடைய தீர்மானமான அபிப்ராயம். இல்லாவிட்டால், கோடானுகோடி மக்கள் வணங்குகிற புருஷோத்தமனை, இப்படி தாறுமாறாகப் பேசுவாரா அவர்?

பணம் தருகிற கர்வம், பதவி தருகிற பித்து, அரசியல் புகழ் தருகிற ஆணவம் போன்றவை ஒன்று கூடி ஒருவரிடம் இருக்கும்போது, அவர் வாய் இப்படித்தான் பேசும். ராமரின் பொறியியல் தகுதி பற்றி பேசுகிறவர், எந்தத் தகுதி கொண்டு முதல்வர் பதவி வகிக்கிறார்? மக்கள் தருகிற ஓட்டு; அதே மக்களில் முக்காலே மூணு வீசம் பேர் ராமரை தெய்வமாக வணங்குகிறவர்கள்.

"அந்த ஓட்டு வேண்டாம்; ராமனை தெய்வமாக நினைக்கிற மூடர்களின் ஓட்டு வேண்டவே வேண்டாம்!' என்று சொல்வாரா முதல்வர்? அவர் சொல்லாவிட்டால் என்ன? நாம் சொல்வோம். ராமரையும், மற்ற தெய்வங்களையும் வணங்குகிற
ஹிந்துக்கள், இந்த முதல்வருக்கும், அவர் சார்ந்துள்ள கட்சிக்கும், இனியும் வாக்களிப்பது, வெட்கக்கேடான செயலாகத்தான் இருக்கும்.

28 Comments:

Anonymous said...

Super..

இணையத்தில் திரியும் பன்னாடைகள் என்ன பதில் சொல்லப்போகின்றது...

Anonymous said...

இந்த தமிழர்கள் என்ன சொன்னாலும் புரிந்துக் கொள்ள மாட்டார்கள என்ற துனிவில் தான், தி.மு.க. தலைவரின் இந்த பேச்சுக்கள்.மற்ற மதத்தவர்களுக்கு தோன்றும் கோபம் கூட ஹிந்துக்களுக்கு வராததால் தான், இத்தனைக் காலத்திற்கும் தி.மு.க. மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்துக் கொண்டிருப்பதிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். துக்ளக்கிற்மும், இணையத்தில் வெளியிட்ட தங்களுக்கும் நன்றி.

Unknown said...

இணையத்தில் திரியும் பன்னாடைகள் என்ன பதில் சொல்லப்போகின்றது...

Repeatu....

Viji Sundararajan said...

---------
இந்த தமிழர்கள் என்ன சொன்னாலும் புரிந்துக் கொள்ள மாட்டார்கள என்ற துனிவில் தான்
---------

i think thw word "தமிழர்கள்" shoud be replaced by "ஹிந்துக்கள்"..rightly said துக்ளக் and Dinamani ! actually i was never a fan/devotee of Ram but after Karunanidhi's petthals about, i am quite irritated and angry with his comments..

Anonymous said...

நல்லவேளை அழகிரி செய்த கொலைகளைக் கண்டு 'அழகிரி கொலை செய்தாரா?' அவர் எந்த திருடனிடம் பட்டம் வாங்கினாருன்னு சொல்லாம விட்டாரே?'

இந்து என்றால் திருடன் என்று பொருள்னு சொன்ன மனிதர் தான் இவர். இவர் தமிழினத்தலைவர் இல்லை தமிழீனத்தலைவர்.

Anonymous said...

nethi adi...
DK, DMK - the time has come for their end. so as to admk,congress,bjp and other kazhagams.
Ella makkalum vandhu ottu pottu ivangalai velila anupungayya

Anonymous said...

Sothu pandaram-araicha mavu-pulicha thanni-half boil-CHO-vukku idai thavira verenna ezhudha theriyum?Kalaignarai thittiye vayuttha kazhuvi pozhutha ootturathe inthallukku pozhappa poochi.Hare RAM.

Anonymous said...

இந்தியா பரதனால் ஆளப்பட்ட புண்ணியபூமி. இந்த புண்ணிய பூமியை தோண்டுவதோ போர்வெல் இயந்திரங்கள் மூலம் துளையிடுவதோ பரதன் ஆண்ட பாரதத்தை அவமதிக்கும் செயல் ஆகும்! எனவே இன்றுமுதல் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் விவசாயக் கிணறுகள் வெட்டப்படுவதை தடை செய்யச் சொல்லி பரத சமாஜத் தலைவர் அத்வானி அவர்கள் நாடுமுழுவதும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளார். எம் மக்கள் சார்பாக நானும் நாளை முதல் இந்த புண்ணிய பூமியில் உச்சா கூட போகமாட்டேன் என்று சபதமிடுகிறேன்.

இப்படிக்கு
பரத ராஜப் பெருமாள்
முதலமைச்சர்,
ராமர் பாலத்துக்கு அந்தாண்ட இருக்கிற பூமி!

பிகு: இந்த செய்தி UPI ( உடான்ஸ் பேப்பர் ஆப் இந்தியா ) ல் தமிழில் வந்த செய்தியின் மின்வடிவமாகும்! இதற்கு ஒரு டெம்பிளேட்டும் கிடையாது, நீங்களே பின்னூட்டமிடவும்!

Anonymous said...

அர்த்தமுள்ள இந்து மதம்..
சகிப்புத்தன்மை கொண்ட இந்து மதம்..
சகித்துக் கொண்டிருக்கும் இந்து மதம்..
பொறுமையின் அர்த்தம் இந்து மதம்..
பெருமையின் அர்த்தம் இந்து மதம்
சபிக்காது இந்த மதம்..

Anonymous said...

//Anonymous said...
இந்தியா பரதனால் ஆளப்பட்ட புண்ணியபூமி. இந்த புண்ணிய பூமியை தோண்டுவதோ போர்வெல் இயந்திரங்கள் மூலம் துளையிடுவதோ பரதன் ஆண்ட
//
Dei...Aravekadu...Why you people never think about the context of the matter. Always speaking somthing not relevant to the matter like Kalignar (we call him thatha)

"Ramar Palam" beleived that it was built by Ram. They did not said that India Built by them.

Try to understand the context and matter!!!

ஸ்ரீ சரவணகுமார் said...

போதும் நிறுத்தும் உன் உளறலை

அப்படியே உங்கள் ராமனோ அல்லது விஸ்வகர்மா மகனோ கட்டியதாக வைத்துக் கொள்ளுங்கள்
அதை வைத்து என்ன புடுங்க போகிறீர்கள் இப்போது

PRINCENRSAMA said...

//ஆணவமே, உன் பெயர்தான் கலைஞரோ //
ஆமாண்டா வெண்ணை...

இந்த பதில், தலையங்கம் எழுதியவருக்கு...
நாங்கள்லாம் பதிவர்களை மதிக்கிறவங்களக்கும்!

aathirai said...

//மத்திய அரசிலிருந்து விலகி, மத்திய அரசுக்குத் தருகிற ஆதரவை வாபஸ் பெற்று, தமிழக அரசுக்கு காங்கிரஸ் தருகிற ஆதரவையும் வேண்டாம் என்று உதறிச் செயல்பட்டால்தானே, சதித் திட்டத்தை முறியடிக்க முடியும்?//
ஆசை தோசை அப்பள வடை (இட்லி வடைன்னும் வெச்சுக்கலாம்)

Anonymous said...

மார்க்கட் இழந்த - அரசியல் தரகன்-செயலலிதாவின் மாமா -முன்னாள் காமெடி நடிகனின் 'ஜோக்கை' படித்து வாயால் சிரிக்க முடியவில்லை-- போங்கடா வேலைமெனக்கெட்ட வெட்டி பயலுங்களா...

Anonymous said...

அர்த்தமுள்ள இந்து மதம்..
சகிப்புத்தன்மை கொண்ட இந்து மதம்..
சகித்துக் கொண்டிருக்கும் இந்து மதம்..
பொறுமையின் அர்த்தம் இந்து மதம்..
பெருமையின் அர்த்தம் இந்து மதம்
சபிக்காது இந்த மதம்..

ஆமாம்!!
அதனால்தான் பங்க்களூர் பஸ்ஸில் வைத்து பூநூல் போடாத தமிழர்களை கொழுத்தியது...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

The line of argument by CHO is in correct line & it is well said.
But regarding the SETHU BRIDGE we need to have a WHITE PAPER with all merits and demerits,which should be the sole criteria for decision making.
Plesae see my posting reharding this too.
http://sangappalagai.blogspot.com/2007/09/blog-post_22.html

Anonymous said...

இணையத்துல ஊளையிட்டுக் கொண்டிருக்கும் அத்தனை அரை வேக்காட்டு நாய்களுக்கும் நல்ல செருப்படி இந்தக் கட்டுரை.

Anonymous said...

மொதல்ல ஊட்ல் இருக்குற பொஞாதிகலையெல்லாம் நெத்தியில ஏத்தி வச்சுருக்குற தோசக் கலை ( அந்த அளவுல இருக்கும் குங்குமத்தை) எறக்கி வக்கச் சொல்லிட்டு அப்புறம் பகுத்தறிவு மசுரெல்லாம் பேசலாம். குங்குமம் என்பது ஹிந்துக்களின் பிரத்த்இயேக அடையாளம்..அதை வச்சுருக்குறதுக்கு ஹிந்துக்கள் என்றால் திருடர்கள் அப்படீன்னு விளக்கம் சொன்னவர்களுக்கு யோக்கியதை கிடையாது.

பகுத்தறிவு பேசும் பரதேசிகளே ..உங்கல் அயோக்கியத் தலைவர்களது இப்படிப் பட்ட இரட்டை நாடகங்களை இனியாகிலும் உணர்ந்து திருந்துங்கள்

Anonymous said...

I think leaders like Dr. M.K. should be more careful in word selection - especially talking about religious beliefs. (We already have enough trouble in the country - for that matter worldwide - because of religion).

Even DMK's achievement list says that Mr. Stalin built 8 -9 over-bridges in Chennai- SO DOES THAT MEAN MR. STALIN IS AN ENGINEER?! WHERE DID HE GET HIS DEGREE FROM??!!

I think he got really fed-up with all these "obstacles" which do not allow him to do any work! (Twin city - NO!!! Sethu bridge - NO!!! Got to pee - NO!!!)

Common Dr. Kalaignar! We respect you for your contributions to Tamil. We love your wit and humor but just know your audience!!

Anonymous said...

good one.
sricharan - ramar palathai vachi nanga yedhayo pudungarom. adha idichi ne yennatha pudunga pora?

BTW hindu endralae poonool potta brahmins dhaan endra karuthu yen?

Anonymous said...

hypocrazy,thy name is karunanidhi.

Anonymous said...

What a nice arguement? It was rightly said relegion is opimum.Any way let these advocates of Ramar Palam start searching for Pushpaga vimanam, which carried Sitha to Lank, the broken bow, which helped Rama to marry sitha.They could be traced and preserved to keep their sentiments alive.Idiots, even if Rama is there he will not obstruct any reasonable need of the people as he ruled for the welfare of his state and the people. Why such hue and cry for an unused, and can never be used, one. Loganathan

Anonymous said...

இணையத்தில் திரியும் பன்னாடைகள் என்ன பதில் சொல்லப்போகின்றது...

Repeatu....

geeyar said...

உங்கள் ஆதங்கம், கோபம் இவைகளில் இல்லை என் மறுப்பு. திமுகவிற்கு ஓட்டளிக்க வேண்டாம் என்ற இறுதி வரியில் எழுகிறது என் கேள்வி.
கோவிலுக்குள் நுழையும் பொழுது நாங்கள்(நீங்கள் கூறும் தமிழக இந்துக்கள்) இந்துக்களாக தெரியவில்லை. இன்றும் எந்த கோவில் கருவரைக்குள்ளும் பெரும்பான்மை இந்துக்களுக்கு அனுமதி இல்லை. (நாங்களே கட்டிய சுடலை மாடன், ஐயனார், அம்மன் கோவில்கள் தவிர)
உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் மட்டும் நாங்கள் இந்துக்களாக தெரிகின்றோமா? உண்மையில் உங்கள் பார்வையில் நாங்கள் யார்?
திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றால் நீங்கள் சுட்டுவது யாரை? அதிமுக? (அ) பிசேபி?
மிக மிக குறைந்த விழுக்காடே உள்ள நீங்கள் இன்னும் எத்தனை காலம் ஏமாற்றுவீர். இந்தியா முழுவதும் உங்கள் மந்திரக்கோலுக்கு கட்டுப்பட்டாலும் தமிழன் தன் தனித்தன்மையை இழக்கமாட்டான். அப்படி ஏமாந்தால் ஈரோட்டு வெண்தாடி வேந்தன் விதைத்த பகுத்தறிவு வேரூன்றாமல் போயிருக்கும்.
இனியேனும் எங்களை நாடும் முன் உங்கள் ராமரையே நாடுங்களேன்! சீற்றத்துடன் மன்னிப்போம், மறக்கமாட்டோம்.(பதில் எதிர்நோக்கி)

Anonymous said...

//ஈரோட்டு வெண்தாடி வேந்தன் விதைத்த பகுத்தறிவு வேரூன்றாமல் போயிருக்கும்.//
Nanba gandhi..

Pagutharivai patri sonneerkal.. aanal pagutharivin porulai matrum oru malivaana arasiyalai puriyum oruvarai patri thaan pesugirom..

Hindu ethirpu enbathe pagutharivagum endrara periyar??
Kovil kalukku mun periyar silai amaitha avarin vaarisu endru sollikollum pseudo-DK periyavarkal yen masuthi church mumbu vaika try panna villai?? Dillu pathathu ... vettiruvanla ellathaum??

Magathana oru thalaivar (periyar) sonna visayangalai arasiyalakka mattume virumbum hindu ethirpu kolkaikalai parappum oruvar pathavi pramanam edukkum pothu viruppu veruppukalukku apparpattu nadapatha ithu??

thamizh periyavarkal vaguthuvittu poyirukkum thamizh puthaandai matri thamizhai valarthavar... (ippidi matriya pin valarntha Thamizhai ellam enge vaipathu ida nerukkadi endru kelvi...)

ippdi muthalvar eppadi nadakka vendam endru ninaikiromo appadi nadappavarukku ottu podavenduma??

ADMK, BJP thavira katchika panjam nam naatil??

kavalai padathirgal gandhi..

Unknown said...

its not a man made bridge. nature build the sand bridge between india and srilanka. stop myths . think about india's growth

jaisankarj

Anonymous said...

kalaighar nallavarthan.anal avarathu suyanalam kettathu.

Anonymous said...

kalaighar nallavarthan. avarathu suyanalam mosamanathu.
rk.sathis,cde.