சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அக்டோபர் 1ம் தேதி நடத்தவுள்ள பந்த்தை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் அட்லீஸ்ட் ஒரு தில்லான குடிமகன் இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
டெல்லிக்கு சென்று சோனியா காந்தி வீட்டு முன் மறியல் செய்ய வேண்டியது தானே ? அல்லது ஆதரவு வாபஸ் பூச்சாண்டி காமிக்கவேண்டியது தானே, அதை விட்டுபுட்டு ஒரு நாள் பந்தில் என்ன சாதித்துவிட முடியும் ? பந்துக்கு அடுத்த நாள்
"முழு அடிப்பு வெற்றி" ( சாக்கடைகள் ஓடவில்லை எல்லா இடத்திலேயும் அடைப்பு என்று படிக்கவும்)
"தமிழகமே எதிர்ப்பை காட்டியது. இயல்பு வாழ்க்கை பாதிப்பு" (எல்லோரும் டிவி சினிமா பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நல்லா தூங்கினார்கள், விட்டை சுத்தம் செய்தார்கள் என்று படிக்கவும்)
இந்த வழக்கில் வரும் தீர்ப்பு அரசியல் தலைவருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
Leaders have responsibility இது டிராபிக் ராமசாமிக்கு மட்டும் பொருந்தும்.
செய்தி கீழே...
பல்வேறு பொது நல வழக்குகளை தாக்கல் செய்வதில் பிரபலமானவர் டிராபிக் ராமசாமி. இவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்தான் தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற சட்டம் வந்தது.
மேலும் முக்கிய சாலைகளில் ஊர்வலம் நடத்தவும் இவர் தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்தே, முக்கிய சாலைகளில் ஊர்வலங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக பந்த்தை தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார் ராமசாமி.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திமுக கூட்டணி அக்டோபர் 1ம் தேதி கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கடையடைப்பினால் தமிழகத்தில் ரூ. 700 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும். மேலும் இந்தக் கடையடைப்பு சட்டவிரோதமானதாகும்.
அக்டோபர் 1ந் தேதி நடைபெற உள்ள பந்த் போராட்டத்தை தடை செய்யும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு கடந்த 25ந் தேதி தந்தி அனுப்பினேன். இந்த பந்த் போராட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுப்பது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும்.
ஏற்கனவே உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றம் ஆகியவை வேலை நிறுத்தப் போராட்டம் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்கி உள்ளன.
இந்தநிலையில் அக்டோபர் 1ந் தேதி நடைபெற இருக்கும் பந்த் போராட்டத்தால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும். சேது சமுத்திர திட்டத்தை விரைவில் முடிக்க வலியுறுத்தி இந்த பந்த் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. ஏற்கனவே ராமர் பாலம் தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் பந்த் நடத்துவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.
ஏற்கனவே தமிழகத்தில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே அக்டோபர் 1ந் தேதி நடைபெற உள்ள பந்த் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த கடையடைப்பு மற்றும் பந்த் போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கிடையே ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியசாமியும் பந்த் போராட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, September 26, 2007
திமுக பந்த்-எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு
Posted by IdlyVadai at 9/26/2007 02:21:00 PM
Labels: அரசியல், செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
தேவையற்ற பந்த். இதற்கு முன் ஒரு பந்த் நடந்தது. 27% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக. அப்போதும் நீதிமன்றத்தில் (இவர்தான் என நினைக்கிறேன்) பந்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. :(
அரசு பந்த் நடத்துவது சட்ட விரோதம் என ஏற்கனவே தீர்ப்பு வந்திருப்பாக ஒரு நினைவு இருக்கிறது. உறுதியாகத் தெரியவில்லை.
அரசு நடத்தினால்தானே பிரச்சினை, எல்லா கட்சிகளும் சேர்ந்து நடத்தினால்?
இவர்களே போக்குவரத்து, அலுவலகங்கள் எல்லாவற்றிற்கும் விடுமுறை அளித்துவிட்டு, பின்பு பந்த் வெற்றி என்றால் என்ன அர்த்தம்?
சனிக்கிழமையும் லீவு எடுத்துக்கொண்டு, நாலு நாள் ஜாலியாக ஊர் சுற்றப் போகிறேன். இதுதான் இதன் ஒரே பயன்.
இதற்கு மத்திய அரசுக்கு ஆதரவு தரும் கட்சிகள், வீட்டிலிருந்தபடியே "ஆதரவு பந்த்" என்கிற பந்த் நடத்தலாம். என்ன அரசியலோ.
ச்சும்மா 'நச்'ன்னு இருக்கு..!
-மனசு நோகடிக்காதவன்
indha traffic Ramasamikku vera velaiyea illaya........
natala yekapata prachani irrku.......
indha arasial oru chakadai......
i advise u traffic ramasamy ......
pls concentrate any other matter...
-----vivek
வாழ்க டிராபிக் ராமசாமி.....
ஏங்க அவரிடமே சொல்லி கருணாநிதியின் இந்துமத துவேஷத்துக்கும் ஒரு கேஸ் போடச் சொல்லுங்களேன்?.
பந்த்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. கட்சியின் அவை தலைவர் மதுசூதனன் தாக்கல் செய்துள்ள வழக்கில், அக்டோபர் 1ம் தேதி பந்த் நடத்துவதாக இருந்தால் ரூ.100 கோடி இழப்பபீட்டுத் தொகையை தி.மு.க. செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
The Supreme Court has given a clear verdict in this. No party has right to disrupt normal life
in the name of bandh. BJP and Shiv Sena were fined Rs 20 lakhs for a bandh in Mumbai.This time there is more than one petitioner and as even if the Madras High Court does not given an order in time, they can approach Supreme Court.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்தடா..
பெரியவங்க சொன்னது உண்மைதான்..
டி.ராமசாமிக்கு நல்ல உள்ளம்.
-நெஞ்சாங்கூட்டில் இருப்பவன்
ட்ராபிக் ராமசாமி வாழ்க!!
டெல்லிக்கு சென்று சோனியா காந்தி வீட்டு முன் மறியல் செய்ய வேண்டியது தானே ? அல்லது ஆதரவு வாபஸ் பூச்சாண்டி காமிக்கவேண்டியது தானே, அதை விட்டுபுட்டு ஒரு நாள் பந்தில் என்ன சாதித்துவிட முடியும் ?
இதுக்கு நோகாம நோம்பு கும்படறதுன்னு பேரு.
அவிங்க நோகாம நம்மள நோகடிக்கிறாங்க. . . .
வாழ்க டிராபிக் ராமசாமி.....
//ஏங்க அவரிடமே சொல்லி கருணாநிதியின் இந்துமத துவேஷத்துக்கும் ஒரு கேஸ் போடச் சொல்லுங்களேன்?.//
Idhu Super
//இதுக்கு நோகாம நோம்பு கும்படறதுன்னு பேரு.//
Haaaa, nogaama Nongu urikaradhunum sollalaam
Post a Comment