பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 10, 2007

நவாஸ் ஷெரீப் டிராமா

[ 12:30 pm ]
நவாஸ் ஷெரீப் கைது - சிறையில் அடைக்கப்படுகிறார்.
எல்லா டிவி சேனலும் Off-Air !
Nawaz being taken to undisclosed location
[ 12:10 pm ]
படங்கள் - 1

நவாஸ் ஷெரீப் இன்று காலை 9.15 இஸ்லாமாபாத் விமானநிலையத்தை வந்தடைந்தார் . பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அதிபர் முஷாரபால் நாடுகடத்தப்பட்டார். நாடுகடத்தப்பட்டு 7 ஆண்டுகள் கழித்து இன்று நவாஸ் பாகிஸ்தான் திரும்பினார். அதிகாரிகள் விமானத்தில் இருந்து இன்னும் அவரை இறங்கவிடவில்லை. கமாண்டோக்கள் அவர் வந்த விமானத்தை சுற்றி வளைத்துள்ளனர். குடியேற்ற அதிகாரிகள் விமானத்திற்குள் சென்று அவரது பாஸ்போர்ட்டை வாங்க முயற்சித்தனர். நவாஸ் ஷெரீப் தனது பாஸ்போர்ட்டை தர மறுத்து விட்டார். விமானத்தில் இருந்து நவாஸ் ஷெரீபை தவிர அனைத்துபயணிகள் அனைவரும் இறங்கி விட்டனர். விமானத்தில் இருந்த படியே சாட்டிலைட் போன் மூலம் அவர் தனது கட்சியினருடன் பேச முயற்சி எடுத்து கொண்டிருந்தார். விமானத்தில் அவருடன் ஏராளமான பத்திரிக்கையாளர்களும் இருந்தனர். அவர் ராய்ட்டர் பத்திரிக்கைக்கு அளித்த செய்தியில் தான் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாய் கூறினார்.

More updates below....[ 12:00 pm ]
நவாஸ் ஷெரீபை மீண்டும் சவுதி அரேபியாவிற்கு அனுப்ப விமானம் தயார்
நவாஸ் ஷெரீப் இன்று காலை 9.15 இஸ்லாமாபாத் விமானநிலையத்தை வந்தடைந்தார் . அவர் மீண்டும் சவுதிஅரேபியா அனுப்பி வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அதிபர் முஷாரபால் நாடுகடத்தப்பட்டார். நாடுகடத்தப்பட்டு 7 ஆண்டுகள் கழித்து இன்று நவாஸ் பாகிஸ்தான் திரும்பினார். அதிகாரிகள் விமானத்தில் இருந்து அவரை இறங்கவிடவில்லை. கமாண்டோக்கள் அவர் வந்த விமானத்தை சுற்றி வளைத்துள்ளனர். குடியேற்ற அதிகாரிகள் விமானத்திற்குள் சென்று அவரது பாஸ்போர்ட்டை வாங்க முயற்சித்தனர். நவாஸ் ஷெரீப் தனது பாஸ்போர்ட்டை தர மறுத்து விட்டார். விமானத்தில் இருந்து நவாஸ் ஷெரீபை தவிர அனைத்துபயணிகள் அனைவரும் இறங்கி விட்டனர். விமானத்தில் இருந்த படியே சாட்டிலைட் போன் மூலம் அவர் தனது கட்சியினருடன் பேச முயற்சி எடுத்து கொண்டிருந்தார். விமானத்தில் அவருடன் ஏராளமான பத்திரிக்கையாளர்களும் இருந்தனர். அவர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த செய்தியில் தான் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாய் கூறினார். பின்னர் அவர் விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்கப்பட்டார். விமான நிலையத்தில் சவுதி செல்ல விமானம் எரிபொருள் நிரப்பப்பட்டு தயாராக உள்ளது. எனவே சவுதி அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் பரபரப்புக்கிடையே, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று காலை இஸ்லாமாபாத் வந்தடைந்தார். ஆனால் அவரை விமானத்திலிருந்து இன்னும் இறங்க அனுமதிக்காததால் விமானத்திலேயே இருக்கிறார். விமான நிலையத்தில் போலீஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Nawaz planeகடந்த 1999ம் ஆண்டு ரத்தம் சிந்தாத புரட்சியின் மூலம் நவாஸ் ஷெரீப் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த முஷாரப் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். அடுத்த ஆண்டே நவாஸ் ஷெரீப், நாடு கடத்தப்பட்டார்.

சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவர் பின்னர் லண்டன் சென்றார். அங்கேயே தொடர்ந்து வசித்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் நாடு திரும்ப நவாஸுக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவர் நாடு திரும்பப் போவதாக அறிவித்தார்.

ஆனால் நவாஸ் நாடு திரும்ப முடியாது. 10 ஆண்டுகள் அவர் சவூதியில் வசிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதை மீறி அவர் வந்தால் கைது செய்யப்படுவார் அல்லது மீண்டும் நாடு கடத்தப்படுவார் என பாகிஸ்தான் அரசு எச்சரித்தது.

Nawaz Sherif இருப்பினும் தனது திட்டத்தில் மாற்றம் இல்லை, 10ம் தேதி நான் பாகிஸ்தான் திரும்புகிறேன், கைது செய்தால் செய்து கொள்ளட்டும் என்று நவாஸ் திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவர் பாகிஸ்தான் சர்வதேச விமானம் மூலம் பாகிஸ்தான் கிளம்பினார். நவாஸ் வருகையையொட்டி பாகிஸ்தானில் உள்ள விமான நிலையங்களில் போலீஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.

இஸ்லாமாபாத் விமான நிலையம் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. விமான நிலையத்தை சுற்றிலும் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு யாரும் நடமாட அனுமதி மறுக்கப்பட்டது. விமான நிலையமும் முழுமையாக காலி செய்யப்பட்டது. கமாண்டோ படையினரும் குவிக்கப்பட்டனர்.

விமான நிலையப் பகுதியில் செல்போன்கள் செயல்படாமல் செயலிழக்க செய்யப்பட்டன. பத்திரிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாடு முழுவதும் நவாஸ் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். நவாஸை வரவேற்பதற்காக விமான நிலையம் நோக்கிக் கிளம்பிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் அசன் இக்பால் கைது செய்யப்பட்டார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 8.40 மணிக்கு நவாஸ் வந்த விமானம் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால் விமானத்திலிருந்து யாரும் இறங்க அனுமதிக்கப்படவில்லை. விமானத்தின் கதவுகளும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களில் குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும், கமாண்டோ படை வீரர்களும் விமானத்திற்குள் சென்றனர். அங்கு நவாஸ் ஷெரீப்பை சந்தித்த குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டைத் தருமாறு கேட்டனர்.

ஆனால் பாஸ்போர்ட்டைத் தர முடியாது என்று ஷெரீப் மறுத்து விட்டார். தொடர்ந்து அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஷெரீப்பை சுற்றிலும் கமாண்டோ படையினர் நிற்பதாக கூறப்படுகிறது.

நவாஸுடன் அவரது தம்பி சபாஷ் ஷெரீப் வரவில்லை. அவர் லண்டனிலேயே தங்கியுள்ளார். ஒரு கொலை வழக்கில் அவரைக் கைது செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அவர் வரவில்லை என்று தெரிகிறது.

விமானத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் படையினர், கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நவாஸ் ஷெரீப் தொடர்ந்து விமானத்துக்குள்ளேயே இருக்கிறார்.

விமான நிலையத்தில் 2 விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நவாஸ் விவகாரம் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் கூறுகையில், நவாஸ் விவகாரம் குறித்து இன்னும் சில மணி நேரங்களில் அரசின் நிலை தெரிய வரும்.

நவாஸை நாடு கடத்தவோ, கைது செய்யவோ தேவையில்லை என்பது எனது கருத்து. என்னிடம் முடிவெடுக்கும் அதிகாரம் தரப்பட்டால் அவரை விடுவிக்கவே தீர்மானிப்பேன்.

இருப்பினும் இதுகுறித்து அரசுதான் இறுதி முடிவெடுக்க முடியும். சில மணி நேரங்களில் தெளிவு நிலை உருவாகும் என்றார்.

நவாஸ் வருகையால் ஏற்பட்டுள்ள பதட்டத்தையடுத்து லாகூர், கராச்சி, பெஷாவர் ஆகிய விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கராச்சி நகரிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நவாஸ் விமானம் இஸ்லாமாபாத் வந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பரபரப்பு கூடியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் பாகிஸ்தான் மக்கள் உள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 3 மத்திய சிறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை நவாஸ் கைது செய்யப்பட்டால் இங்குள்ள ஒரு சிறையில் அடைக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

கிட்டத்தட்ட 7 ஆண்டு நாடு கடத்தல் வாழ்க்கைக்குப் பின்னர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

செய்தி: தட்ஸ் தமிழ், படம் IBNLIve

0 Comments: