* சரியாக 6:00 மணிக்கு
"அகர முதல எழுத்தெல்லாம்.. என்ற குறளுடன் நிகழ்ச்சி தொடங்கியது,
* என்னை கடலில் தூக்கி வீசினாலும், தமிழர்களுக்கு கட்டுமரம் போல் இருப்பேன் என்று கலைஞர் தன் உரையை தொடங்கினார். இந்த புது தொலைக்காட்சிக்கு என்ன வாழ்த்த சொன்னார்கள், வாழ்த்துகிறேன் என்றார்.
6::05 "சரவணபவ" என்று தொடங்கும் மங்கல இசை ஆரம்பித்தது.
6:10 பேராசிரியர் அன்பழகன் வாழ்த்து. அதை தொடர்ந்து மங்கல தொடர்கிறது...
6:23: கி.வீரமணி வாழ்த்து. கலைஞர் தொலைக்காட்சி, பகுத்தறிவு, மூடநம்பிக்கை, எல்லாம் இல்லாமல் இருக்கும். தமிழர்களுக்கு நல்ல சிந்தனையை தரக்கூடிய நிகழ்ச்சிகள் இருக்கும் என்றார்.
6:25: முதல் விளம்பரம் - கோபுரம் பூசு மஞ்சள் தூள் விளம்பரம். மங்கலமான மஞ்சள் விளம்பரம்.
6:38: நடிகர் விவேக் வாழ்த்து. கலைஞர் டிவி கலைஞர்களை அரவனைக்கும் பராசக்தி. கலைஞர் டிவிக்கு வணக்கம் என்றார்.
6:30 சுதாரகுநாதன் ( நில நிற பட்டுபுடவை ), "எல்லாம் இன்பமயம் பாடல்..."
6:35 காற்றினிலே வரும் கீதம் பாடல் ( பாடல் கல்கி ) ( எம்.எஸ் பாடுவாங்களே அதே பாட்டு )
6:45: பொல்லாத விஷம கார கண்ணன் பாட்டு
6:48: கவிஞர் வைரமுத்து வாழ்த்து.
6:50: சாந்தி நிலவ வேண்டும் பாட்டு
6:55: அண்ணா வாழ்கிறார் படம். அண்ணாவை பற்றிய குறும்பட்ம்.
7:30 செய்திகள். முதல்வர் கலைஞர் என்று தான் சொல்லுகிறார்கள். ( சன் டிவியில் கருணாநிதி என்று சொல்லுகிறார்கள் ). சேது சமுத்திரம் திட்டம் பற்றி கலைஞர் சேலத்தில் பேசிய பேச்சு தலைப்பு செய்தி. சன் டிவியில் நியூஸ் படிப்பவர் படிப்பதால் போலி சன் டிவி பார்ப்பது போல இருக்கு. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட படுகிறது என்ற செய்தியும், எல்லா தலைவர்களும் ( கலைஞரை தவிற ) வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
8:00 கமல் பேட்டி. தமிழ் சினிமாவில் பாடல் எப்படி வந்தது....,
8:15 சன் டிவியில், புதுகோட்டையில் விஜயகாந்த் எழுச்சி பேச்சு கவர் செய்யபட்டது. கொட்டும் மழையிலும், கூட்டம், மற்றும் விஜயகாந்த் பேச்சை கொஞ்சம் நேரம் காண்பித்தார்கள். விஜயகாந்த் டிவி தொடங்க வேண்டாம், சன் டிவியே அவருக்கு போதும்.
8:45 இளையராஜா ஒரு பாட்டுக்கு மெட்டு போடுகிறார். நல்ல நிகழ்ச்சி. பவதாரணி தமிழ் பாட்டை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு பாடுகிறார் :-)
9:30 சினிமா பாடல்களை நக்கல் அடிக்கும் லீயோனி பட்டிமன்றம். "மேயாத மான்..." என்ற பாடலை இன்னும் எவ்வளவு தடவை நக்கல் அடிக்க போகிறார்களோ
10:50: போக்கிரி வெற்றி விழா நிகழ்ச்சி. "இடுப்போரம் மச்சம் காட்டவா? ..." குத்தாட்டம் நல்லா நடக்குது...
12:45 விவேக் காமெடி நிகழ்ச்சிக்கு இடைவேளையில் டாக்டர் ராமதாஸ் கலைஞர் டிவிக்கு வாழ்த்து சொன்னார்.
1:00 செய்திகள். விஷேசமாக எதுவும் இல்லை. கலைஞர் பேச்சு, மக்கள் எப்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறார்கள் போன்ற செய்திகள்.
1:30 மொழி. நல்ல படம். எச்சரிக்கை விளம்பரங்கள் அதிகம்.
5:15 வடிவேலு காமெடி. விஜயகாந்த் பார்பாரா என்று தெரியாது.
5:45 23ஆம் புலிகேசி படம். அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் வந்தால் சன் பிழைக்கும். இல்லை பணம் விளையாடும். முதல் இரண்டு பதிவை வைத்து வலைப்பதிவை எப்படி ஒரு வலைப்பதிவை எடை போட முடியாதோ அதே போல் முதல் இரண்டு நாள் நிகழ்ச்சியை வைத்து கலைஞர் டிவியை எடை போட முடியாது. சன் டிவியில் திமிரு படம். கலைஞர் டிவியால் சன் டிவியின் திமிரு அடங்கினால் தமிழ்நாட்டுக்கு நல்லது.
கலைஞர் டிவியில் நிறைய விளம்பரங்கள் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் என்று சொல்லுகிறது.
கொசுறு: சென்னையில் எல்லா விளம்பர பேனர்களையும் எடுத்துவிட்டார்கள், ஆனால் கலைஞர் டிவி 15 ஆரம்பம் பேனர் மட்டும் யாரும் தொடவில்லை..
Updates follow in the same post....
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, September 15, 2007
கலைஞர் டிவி
Posted by IdlyVadai at 9/15/2007 06:05:00 AM
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
"Mangalakarma Aarambam" for Kalaignar TV the followers of Periyar, Annna;
wish it all success
//கலைஞர் தொலைக்காட்சி, பகுத்தறிவு, மூடநம்பிக்கை, எல்லாம் இல்லாமல் இருக்கும்.//
சரிதான். இவரு சன் ரீவி காரங்க கிட்ட காசு வாங்க்கிட்டாரு போல. கலைஞர் தொலைக்காட்சி இல்லாமல் இருக்கும். பகுத்தறிவு. மூட நம்பிக்கை எல்லாம் இல்லாம இருக்கும். அப்படின்னா இங்கயும் இல்லை அங்கயும் இல்லையா? என்றெல்லாம் பேசினா என்ன அர்த்தம்?
கொத்ஸ் என்ன தூங்கி எழுந்து வரீங்களா ? நாம தூங்ம் போது இந்த மாதிரி அறிவிப்பு எல்லாம் வந்தது. தமிழகம் முழித்துக்கொண்ட பின் லியோனி பட்டிமன்ற காமெடி :-)
பவதாரிணிக்கு பாட்டுச் சொல்லிக்கொடுக்கும் போது ஒரு பாசமும், அந்த பாட்டை கடைசியாக ராஜா எதிர்பார்த்தபடி முயற்சி செய்து பவதாரிணி பாட பின்னணி இசை வேகமாக உடன் இணையும் போது, தகப்பனை தேடி ஓடி வரும் குழந்தையை வாரி அணைத்து உயர தூக்கும் பெருமிதம் ராஜாவின் கண்களில் இசையை மீறி மிளிர்ந்தது !
KALAINGAR TV STARTED BROADCASTING ON " Pilliar chaturthi".
What veeramani will say for this?
Murali
ஸ்ரீகாந்த் ஆமாம் நானும் ரசித்தேன். கலியுலக சித்தன் வருகைக்கு நன்றி
---விவேக் காமெடி. விஜயகாந்த் பார்பாரா என்று தெரியாது.---
அவருக்கு வடிவேலு காமெடிதான் ரசிக்காது
பாபா ஆமாம். சரி செய்துவிட்டேன்.
Mr Idlyvadi sep 15 this year only a vinayakar chathurthi.....
but it is a Anna birthday date and also periyar death date.
that is why kalaignar TV Starts that day..........
Post a Comment