பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 14, 2007

கமெண்ட்ஸ் பிளீஸ்


சோனியா: அம்பு கோபாலபுரம் வரை போகுமா ?

இந்த படத்தை கலைஞர் பார்த்தால் என்ன சொல்லுவார் ?
செய்தி கீழே...

ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்ய இரண்டு மனுக்களையும் வாபஸ் பெற்றதையடுத்து ராமர் பால அகழ்வுபணிகளுக்கான தடையை சுப்ரீம் கோர்ட் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது
சேது சமுத்திரத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ராமர் பாலம் தகர்க்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து பதிலளிக்க மத்திய அரசிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துரை நேற்று முன்தினம் தாக்கல் செய்த பதில் மனுவில் ராமர் மற்றும் ராமாயண பாத்திரங்களும் உண்மையானவை என்பதற்கு சரித்திர பூர்வமான ஆதாரங்கள் இல்லை என கூறியது.
இது பா.ஜ., மற்றும் சங்பரிவார் அமைப்புகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தின. இந்த மனுவை வாபஸ் பெறாவிட்டால் பெரிய அளவில் போராட்டங்கள் மேற்கொள்ள பா.ஜ., தயாரானது. இன்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த 2 மனுக்களும் வாபஸ் பெறப்பட்டு புதிய மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சேது சமுத்திர திட்டத்தில் ராமர் பால அகழ்வு பணிக்கான தடையை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது. ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் வேறு வழிகாண 3 மாதம் அவகாசம் அளித்துள்ளது.

0 Comments: