பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 13, 2007

நமீதா கிரிக்கெட் ஆடுகிறார்

குமுதத்தில் வந்த ஜொல்லு சந்திப்பு

ஒருவர் பந்த போட்டால் எதிரிலிருப்பவர் கிளீன் போல்ட். இன்னொருவர் அசைந்து வந்து நின்றாலே எதிரிலிருப்பவர் கிளீன் போல்ட். இருவரும் சந்தித்தால்...?

சந்தித்தார்கள். நமீதாவுக்கு திடீரென்று ஒரு ஆசை _ கிரிக்கெட் கற்றுக்கொள்ள வேண்டுமென்று. அதுவும் பந்து வீசி விக்கெட்டுகளைச் சாய்க்க வேண்டும் என்று. ட்வெண்ட்டி ட்வெண்ட்டி உலகக் கோப்பைக்காக பயிற்சி செய்ய சென்னை வந்திருந்த வேக நட்சத்திரம் ஸ்ரீசாந்திடம் சொன்னோம். சட்டென்று அவர் சரி சொல்ல, ஒரு குஷியான சந்திப்பு நிகழ்ந்தது.

‘‘ஹாய் ஸ்ரீகாந்த். ஹவ் ஆர் யு?’’

‘‘ஹாய் நமீதா? என்ன திடீர்னு கிரிக்கெட் கத்துக்கணும்கிற ஆசை?’’ நமீதாவை விட அழகாக தமிழ் பேசுகிறார் மலையாளத்து ஸ்ரீசாந்த்.

‘‘சின்ன வயசுலேயே எனக்கு கிரிக்கெட் ஆசை உண்டு. ஆனா நான் நாலாவது படிக்கும் போது கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்டு விளையாடினேன். எங்கப்பாதான் பந்து போட்டார். முதல் பால்லேயே கிளீன் போல்ட். அதுக்கப்புறம் கிரிக்கெட்டே வேண்டாம்னு விட்டுட்டேன். டி.வில பார்க்கிறதோட சரி. எங்கப்பா மட்டும் என்னை அவுட் ஆக்காம இருந்திருந்தா இன்னைக்கு பெண்கள் கிரிக்கெட்ல பெரிய ஆளாயிருப்பேன்.’’

‘‘நல்ல வேளை, அப்பா அவுட்டாக்கினார். இல்லாட்டி எங்களுக்கெல்லாம் சூப்பரான ஒரு நடிகை கிடைக்காமப் போயிருப்பார். உங்க அப்பாவுக்கு தேங்க்ஸ்’’ என்று ஸ்ரீசாந்த் சொல்ல, அங்கு உற்சாக சிரிப்பலை.

‘‘ஓ.கே. உங்களுக்கு கிரிக் கெட்ல என்ன கத்துக்கணும் பேட்டிங்கா, பெளலிங்கா?’’

‘‘பெளலிங் போடணும். அந்தக் காலத்து அம்பு ரோஸ், இம்ரான்கான், கபில் தேவ் மாதிரி நான் ஓடிவந்து பந்து போடணும். பேட்ஸ் மேன் அவுட் ஆகணும்.’’


‘‘நீங்க ஓடிவந்தாலே போதும், பேட்ஸ் மேன் அவுட்தான்’’ என்று ஸ்ரீசாந்த் சொல்ல... மீண்டும் அங்கே சிரிப்பு.

‘‘முதல்ல பந்தை இப்படி பிடிங்க’’ என்று நமீதாவிடம் பந்தைக் கொடுத்தார் ஸ்ரீசாந்த். நமீதாவுக்கு பந்தை சரியாகப் பிடிக்க வரவில்லை.

‘‘நல்லா பிடிங்க. இப்படிப் பிடிச்சாதான் வேகமா பந்து வீச முடியும். நீங்க பிடிக்கிறது ஸ்பின் பெளலிங்குக்குத்தான் சரி. அது எனக்குத் தெரியாது.’’ _ என்று பந்தில் விரல்கள் எப்படிப் பதிய வேண்டும் என்று காட்டினார் ஸ்ரீசாந்த். அதன்படி நமீதா பந்தைப் பிடிக்க, கையை எப்படிச் சுழற்ற வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

முதல் சுற்றிலேயே பெளலிங் ஆக்ஷன் நமீதாவுக்கு வந்து விட்டது.

‘‘நமீதா, உங்களுக்குப் பிடிச்ச கிரிக்கெட் வீரர் யாரு?’’

‘‘எனக்கு வெஸ்ட் இண்டியன் ஆட்டக்காரர்கள்தான் ரொம்பப் பிடிக்கும். அவங்கதான் நிஜமான ஸ்போர்ட்ஸ் மேன். அவங்கள்ல பிரையன் லாரா ரொம்பப் பிடிக்கும். அவர் ரிட்டயர்ட் ஆன பிறகு கிரிக்கெட் பார்க்கிறதுக்கே இண்ட்ரஸ்ட் இல்லாமப் போயிடுச்சு?’’

‘‘இந்திய வீரர்கள் யாரையும் பிடிக்காதா?’’

‘‘ஏன், கபில்தேவை ரொம்பப் பிடிக்கும். அப்புறம் உங்களைப் பிடிக்கும்.’’

‘‘பொய்... பொய். நான் விளையாடி நீங்க பார்த்தே இருக்க மாட்டீங்க.’’

‘‘சத்தியமா நிஜம். சரி, ஆளை அடிக்குற மாதிரி பெளலிங் போட்டீங்கனு இங்கிலாந்துல பிரச்னையாய்டுச்சே... வேணும்னு போட்டீங்களா? இல்ல நிஜ மாகவே கை தவறி பந்து வந்துடுச்சா?’’ இது நமீதாவின் திடீர் பவுன்சர். இதை ஸ்ரீசாந்த் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

‘‘ஐய்யோ! ஏதோ நமீதாவுக்கு பெளலிங் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கனு கூப்பிட்டாங்க. இப்படிலாம் வம்புல மாட்டிவுடுற மாதிரி கேள்வி கேப்பாங்கனு சொல்லலையே. சத்தியமா சொல் றேன். அந்தப் பந்து கைநழுவி வந்தது தான். வாங்க, பேட்டிங் சொல்லித் தர்றேன்’’ என்று மட்டை பிடிக்க கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார் ஸ்ரீசாந்த்.

‘‘ஸ்ரீசாந்த், உங்களுக்கு நடிக்க ஆசையிருக்கா?’’

‘‘நல்லா இருக்கு. யாராவது தயாரிப்பாளர் கேட்டா சொல்லுங்க.’’

‘‘சொல்றேன். ஆனா ஒரு கண்டிஷன்.’’

‘‘என்னது?’’

‘‘நான்தான் உங்களுக்கு ஹீரோயினா இருப்பேன்.’’

‘‘கண்டிப்பா நீங்கதான் என் ஹீரோயின். ஆனா இப்போ என்னோட கவனம் எல்லாம் வரப்போற உலகக் கோப்பையில தான் இருக்கு. சினிமாலாம் அப்புறம்தான்.’’

‘‘ரொம்ப கரெக்ட். நாங்கள்லாம் உங்களைத்தான் நம்பியிருக்கோம். நல்லா விளையாடி டிவெண்ட்டி டிவெண்ட்டி கப்பை வின் பண்ணிட்டு வாங்க. வாழ்த்துக்கள்.’’

‘‘தேங்க்யூ!’’

கிரிக்கெட் சந்திப்பு இனிதே முடிந்தது..
( கட்டுரை, படங்கள்: குமுதம் )

3 Comments:

Anonymous said...

நிஜமாவே ஸ்ரீகாந்த் கிரிக்கெட் பாலைத்தான் பேசினாரா?

இலவசக்கொத்தனார் said...

//ஹாய் ஸ்ரீகாந்த். ஹவ் ஆர் யு?//

என்னங்க நமீதாவுக்கு யாரைப் பார்க்கப் போறோம் அப்படின்னு சரியாச் சொல்லித் தரலையா?

//நிஜமாவே ஸ்ரீகாந்த் கிரிக்கெட் பாலைத்தான் பேசினாரா?//

அனானி ஸ்ரீகாந்த் என்ன பேசினாரு? கொஞ்சம் சுட்டி தாங்களேன்! :)

வடுவூர் குமார் said...

இப்ப உங்க பக்கமே நமிதா மாதிரி இருக்கு.
வலது பக்கம் வீடியோ எல்லாம் போட்டு தூள் கிளப்பிருக்கீங்க.வீடியோ கிளாரிட்டி கூட நன்றாக இருக்கு.
முப்பெரும் விழா... செம நகைச்சுவை.
ஸ்ரீசாந்த் - ஓரளவு தெரியும்,யாருங்க இந்த நமீதா?