பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 12, 2007

ஜெயலலிதாவை சந்திக்க அத்வானி சென்னை வருகை

பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி 18-ந் தேதி சென்னையில் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சி, ஜனாதிபதி தேர்தலின்போது தொடங்கியது. சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் அடங்கிய 3-வது அணியில் அ.தி.மு.க. இருந்தபோதிலும், அ.தி.மு.க.வின் ஆதரவை வாஜ்பாய் கேட்டார். இதனால் பா.ஜனதா ஆதரவு வேட்பாளர் செகாவத்துக்கு கடைசி நேரத்தில் அ.தி.மு.க. ஓட்டு போட்டது. அணுசக்தி ஒப்பந்தம், ராமர் பாலம் ஆகிய விவகாரங்களிலும் பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் ஒரே நிலையை எடுத்துள்ளன.

இரு கட்சிகளும் நெருங்கி வரும் அதேவேளையில் 3-வது அணி கட்சிகளுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் 3-வது அணியில் இருந்து அ.தி.மு.க. விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கடந்த வாரம் பா.ஜனதா செய்தித்தொடர்பாளரும், தமிழக பா.ஜனதா விவகாரங்களை கவனிக்கும் மேலிட பார்வையாளருமான ரவிசங்கர் பிரசாத் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து கூட்டணி குறித்து முறைப்படி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, ஜெயலலிதாவை சந்திக்கிறார். சென்னையில் 18-ந் தேதி இச்சந்திப்பு நடக்கிறது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரு கட்சிகளும், கடந்த 1998, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

1 Comment:

Unknown said...

பாவம். அத்வானி..