பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 21, 2007

யாகாவாராயினும்...

யாகாவாராயினும்... ( தினமணி தலையங்கம் )

யாகாவாராயினும்...

சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழ்ச் சமுதாயத்தின் நீண்டநாள் கனவு என்பதிலும், அது நிறைவேற்றப்படுவதால் தமிழகத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதிலும் யாருக்குமே இரண்டு அபிப்பிராயம் இல்லை. அந்தத் திட்டம் இப்படித்தான் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பதில்தான் கருத்து வேறுபாடே தவிர, சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமா வேண்டாமா என்கிற சர்ச்சையே எழவில்லை.

அது ஒருபுறம் இருக்க, ராமர் என்று ஒருவர் இருந்தார் என்பதற்கான சரித்திரபூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்றும், ராமர் பாலம் என்று சொல்லப்படும் மணல் திட்டுகளுக்கும் ராமாயணத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்றும் மத்திய தொல்லியல் துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பிறகு திரும்பப் பெற்ற குறிப்பு வடமாநிலங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கே தமிழகத்தில், ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார், பாலம் கட்டுவதற்கு என்பது போன்ற பேச்சுகள் விவாதப் பொருளாகி இருக்கின்றன.

ராமர் இருந்தாரா, ஏசுநாதர் இருந்தாரா, புத்தர் இருந்தாரா என்றெல்லாம் ஆராய்ச்சியில் இறங்குவது அபத்தம். அதற்கான ஆதாரத்தைக் காட்டு என்று கேட்பது அதைவிட அபத்தத்திலும் அபத்தம். ஒரு குழந்தையின் தந்தை யார் என்பதை அந்தக் குழந்தையின் தாய் சொல்வதை வைத்துத்தான் சமுதாயம் ஏற்றுக்கொள்கிறதே தவிர, மரபணு பரிசோதனைச் சான்றிதழைக் கேட்பதில்லை. விமர்சனம் என்ற பெயரில் சில நம்பிக்கைகளைச் சிதைக்க முயலுவதும் நம்புவோரைப் புண்படுத்துவதும் நியாயமாகாது.

மக்கள் மத்தியில் பரவலாக இருக்கும் நம்பிக்கைகளை பகுத்தறிவு என்கிற பெயரில் எள்ளி நகையாடுபவர்கள் அவரவர் குடும்பத்தினரைத் தங்களது பகுத்தறிவு வாதத்தை ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியவில்லையே? கேட்டால், அவர்களது தனிப்பட்ட உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம் என்கிறார்கள். பகுத்தறிவுவாதிகளின் குடும்பத்தினருக்கு மட்டும்தான் தனிப்பட்ட உணர்வா? மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பும் மரியாதையும் கிடையாதா?

ராமர் பாலம் என்பது வெறும் மணல் திட்டு என்றே வைத்துக் கொள்வோம். அந்த மணல் திட்டு என்பதே இயற்கை நமக்குத் தந்திருக்கும் மிகப்பெரிய தனித்துவம் அல்லவா! இங்கிலாந்தில் ஸ்டோன்ஹென்ஜ், அமெரிக்காவில் கிராண்ட் கான்யன் என்று இதுபோன்ற இயற்கையான திட்டுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றும் காட்டுகிறார்கள். ராமேசுவரத்திலேயேகூட, மீனவர்கள் படகில் ஏற்றிச் சென்று பயணிகளை இந்த மணல் திட்டில் நடக்க வைத்துக் காட்டுகிறார்கள்.

இதிகாசம், புராணம், சரித்திரம் ஆகிய எல்லாமே எந்தவொரு சமுதாயத்தின் அருமை பெருமைக்கும் ஆதாரமாக உள்ளவை. அவற்றை எள்ளி நகையாடுவதுதான் பகுத்தறிவுவாதம் என்றால், அவர்கள் பகுத்தறிவுக்குச் சரியான விளக்கம் தெரியாதவர்கள் என்றுதான் கூற வேண்டும். எனது மூதாதையர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சொல்வோருக்கு எந்தவித விளக்கங்கள் கொடுத்தாலும் விளங்காது. காரணம், அவர்கள் பகுத்து அறியும் திறனில்லாதவர்களாக இருப்பதுதான்.

இறைமறுப்பு இயக்கம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தோல்வியை மட்டுமே தழுவிய ஒரு விதண்டாவாதம். தமிழகத்தில், இறைமறுப்பு இயக்கம் தொடங்கிய பிறகுதான் கடவுள் நம்பிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அரை நூற்றாண்டுக்கு முன்னால் இந்த அளவுக்கு ஜோதிடர்களும், பூஜைகளும், திருவிழாக்களும் நடத்தனவா என்பதை எண்ணிப் பார்த்தால் தெரியும், அந்த வாதத்தின் பலவீனம். அதுமட்டுமல்ல, இறைமறுப்பாளர்களும் சரி, இந்து மதத்தை மட்டுமே தங்களது தாக்குதல்களுக்கு இலக்காக்குவது அவர்களுடைய கொள்கைப் பிடிப்பில் காணப்படும் உறுதியின்மையின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

பெரும்பான்மை நம்பிக்கையைப் பழிப்பதன் மூலமும், விமர்சிப்பதன் மூலமும் மத உணர்வுகளைத் தூண்டி விடுகிறார்கள். மதவாதிகள் மேலும் தீவிரமடைவதற்கு இதுதான் காரணம். இதனால் பாதிப்படைவது சிறுபான்மையினர் மட்டுமல்ல, சமுதாய நல்லிணக்கமும்கூட. இந்தப் போலிப் பகுத்தறிவுவாதிகளால் இப்போது மீண்டும் மதஉணர்வு தூண்டப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இதன் தொடர்ச்சிதான் நெஞ்சைப் பதறச் செய்யும் வன்முறையும் உயிர்ப்பலிகளும்.

மாற்று வழி கண்டுபிடித்து சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது முக்கியமா, இல்லை மதஉணர்வுகளைத் தூண்டிவிட்டு சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்துவது முக்கியமா?

தினமணியில் வந்த சில கார்டுன்கள்
1. ராமர் பாலமும்... பகுத்தறிவுப் பாதையும்...
ராமரும் வேண்டாம்... ராம பக்தர்களும் வேண்டாம்
ராமர் அவமதிப்புப் பேச்சு

7 Comments:

R.Subramanian@R.S.Mani said...

The Leader ("Thalaianagam") page of "Dinamani" should be taken in xerox in thousand's of copies and to be distributed among the public and also to be sent by post or by courier to the Honorable Chief Minister Kalaignar Karunanidhi to express the feelings of crores and crores of Indian Citizens....
Suppamani

Anonymous said...

arumaiyaana thalaiyanggam.
athai eduththuth thantha ungaLukum nanRi.

Anonymous said...

ஏகப்பட்ட பத்தினிகளைக் கொண்டவருக்கு, ஏகப்பத்தினி விரதனாகிய ராமனிடம் கோபம் வரத்தானே செய்யும். இதில் என்ன அதிசயம்

Viji Sundararajan said...

perfect one from Dinamani !

Anonymous said...

cool one from dinamani..

இலவசக்கொத்தனார் said...

ஒரு சிறிய திருத்தம். கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி Stonehenge எனப்படுவது இயற்கையாய் ஏற்பட்டது இல்லை. மனிதர்களால் கட்டப்பட்டது. ஆனால் கட்டியவர்கள் எந்த கல்லூரியில் படித்தார்கள், பொறியாளர் பட்டம் வாங்கினரா, அவர்களுக்கு குடிப்பழக்கம் உண்டா என்பது போன்ற கேள்விகளுக்கு எனக்குப் பதில் தெரியாது! ;-)

Anonymous said...

அடடா அடடா என்ன ஒரு அற்புதமான கருத்துக்கோர்வைகள்...ஆணவத்தின் பெயர் கலைஞர் என்றால் இங்கே எல்லாரும் கூறும் பொருமைமிக்க இந்துமதத்தின் பிரதிநிதியான வேதாந்திரியின் கூற்றுக்குப்பதில் என்ன??? எல்லோரையும் மதிப்பதாக கூறிக்கொள்ளும் இந்துமதப்பிரதிநிதிகள் ஏன் அயோத்தி பாபர் மசூதியை இடித்தார்கள்..சொல்ல்ப்போனால் ராமர் வாழ்ந்ததாக புர் ...ஆணமே உண்டு...தெளிவாக தெரியாமலே ஒரு வரலாற்று ஆவணத்தை இடித்த இவர்கள் , மிகத்தெளிவாக உண்மையா , பொய்யா என்று தெரியாமல் இருக்கும் ஒரு மணல் திட்டை இடிப்பதற்கு ஏன் கூக்குரலிடுகிறார்கள்???? முட்டாள்களே திருந்த முயற்சியாவது செய்யுங்கள்...நம் அறியாமையை அகற்ற முயன்ற கலைஞர் ஆணவக்காரராம்!!!