பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 10, 2007

நடிகர் சங்க தலைவராக சரத்குமார் - ராஜினாமா வாபஸ்

நடிகர் சரத்குமார் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை, நடிகர்-நடிகைகளின் வேண்டுகோளை ஏற்று வாபஸ் பெற்றார். நடிகர் சங்க தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார்.


தென் இந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த நடிகர் சரத்குமார் அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதைத் தொடர்ந்து அவர் நடிகர் சங்க பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து தென் இந்திய நடிகர் சங்க அவசர செயற்குழுக்கூட்டம் நேற்று இரவு நடிகர் சங்கத்தில் கூடியது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களும், நடிகர் சங்க உறுப்பினர்களும் திரளாக வந்து இருந்தனர்.

கூட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கியது. செயற்குழு உறுப்பினர்கள் 24 பேர்களும், நியமன உறுப்பினர்கள் 6 பேர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு நடிகர் சங்க பொதுசெயலாளர் ராதாரவி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் நடிகர் விஜயகுமார், நடிகை மனோரமா பொருளாளர் கே.என்.காளை, இணைசெயலாளர்கள் எஸ்.எஸ்.சந்திரன், கே.ஆர்.செல்வராஜ் ஆகியோர் வந்து இருந்தனர்.

இரவு 7 மணிக்கு தொடங்கி 9 மணி வரை கூட்டம் நடந்தது. அதன் பிறகு நடிகர் ராதாரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சரத்குமார் ராஜினாமா முடிவு திடீர் என்று எடுக்கப்பட்டது அல்ல. இதற்கு முன்பு நடிகர் சங்க தலைவர்களாக இருந்தவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்திருக்கிறார்கள். விஜயகாந்த் கூட கட்சி தொடங்கிய பிறகு 1 1/2 ஆண்டுகாலம் நடிகர் சங்க தலைவராக இருந்தார்.

சரத்குமார் அரசியல் கட்சி தொடங்கிவிட்டாரே. தொடர்ந்து அவர் நடிகர் சங்க தலைவர் பதவியில் நீடிக்கலாமா என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். நடிகர் சங்கத்துக்கு அரசியல் வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் சரத்குமார் பதவியை ராஜினாமா செய்தார். எங்கள் ஒட்டுமொத்த செயற்குழு உறுப்பினர்களும், நடிகர்சங்க உறுப்பினர்களும் அவருடைய ராஜினாமாவை ஏற்கவில்லை. இன்னும் 2 வருடம் பதவிக்காலம் உள்ளது. எனவே அவர் தொடர்ந்து நடிகர் சங்க பதவியில் நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். கமிட்டி உறுப்பினர்கள் எடுக்கிற முடிவே முக்கியமானது. 24 கமிட்டி உறுப்பினர்கள், 6 நியமன உறுப்பினர்கள் சேர்ந்து எடுத்த முடிவு இது.

தொடர்ந்து சரத்குமார் நடிகர் சங்க தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று அத்தனை பேரும் ஒரு மனதாக முடிவு எடுத்திருக்கிறோம்.

சரத்குமார் பேட்டி:

நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் என்னை தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நடிகர் சங்கத்தில் பலர் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், நான், நெப்போலியன் போன்றவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்திருக்கிறோம்.

என்றாலும் அரசியல் உணர்வுகளை பிரதிபலிக்கும் சங்கமாக நடிகர் சங்கம் இருக்கக் கூடாது என்று கருதினேன். நான் கட்சி தொடங்கிய பின் கட்சி வேலைகள் நிறைய இருக்கின்றன. நடிகர் சங்க வேலையும் உள்ளது. 2 வேலைகளையும் கவனிப்பது சிரமமாக இருக்கிறது. அதனால் தான் நான் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்.

கமிட்டி உறுப்பினர்களும், நடிகர் சங்க உறுப்பினர்களும் நான் தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் பதவியில் நீடிக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். கமிட்டி உறுப்பினர்கள் இதைத் தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு வருமானம் வரவேண்டும். எனவே இந்த பணிகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து நீங்கள் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்று நான் எனது ராஜினாமாவை வாபஸ் வாங்கி கொள்கிறேன். பதவிக்காலம் முடியும் வரை தலைவர் பதவியில் நீடிப்பேன். அதன்பிறகு நடிகர் சங்க தலைவராக இருக்க முடியாது. நடிகர் சங்க தேர்தலில் அடுத்த முறை நான் நிச்சயமாக போட்டியிட மாட்டேன்.

0 Comments: