பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 07, 2007

மக்கள் தொலைக்காட்சி இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

மக்கள் டிவி தொலைக்காட்சி ஒரு ஆண்டு நிறைவு விழாவில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் டாக்டர் ராமதாஸ், ஸ்டாலின் பேச்சு.
கலைஞர் டிவியின் ஒரு ஆண்டு நிறைவு விழாவில் ராமதாஸ் என்ன பேசுவார் ?டாக்டர் ராமதாஸ் பேச்சு:

மக்கள் தொலைக்காட்சியின் இந்த வெற்றிக்கு, இங்கு அனைவரும் ஒரு குடும்பமாக இருந்து பணியாற்றுவதும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் ஆதரவும் தான் காரணம். ஒரு வயது ஆனாலும் இந்த தொலைக்காட்சியை தொடங்கும் முன்பு ஒரு வருடமாக திட்டமிட்டோம். எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது, எவையெல்லாம் எப்பொழுதும் வரக்கூடாது என்று திட்டமிட்டோம்.

திரைப்படம் இல்லாமல், பாடல் இன்றி, மெகா சீரியல் இன்றி ஒரு தொலைக்காட்சி நடத்த முடியுமா என்று என்னுடன் இருந்தவர்களே ஐயப்பட்ட போது, நடத்துவோம், வெற்றி பெறுவோம் என்று உற்சாகப்படுத்தினேன். இப்போது உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் பாராட்டும் அளவுக்கு வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம்.

தூய தமிழில், இலக்கணத் தமிழில் நடத்துவதாக சிலர் கூறுகிறார்கள். இயல்பு தமிழில், பேச்சுத் தமிழில் தான் இதை நடத்துகிறோம். ஆங்கிலம் கலக்காமல் நடத்துகிறோம். சோறு என்பது இலக்கிய சொல்லா? `ரைஸ்' என்றும் `சாதம்' என்றும் சொல்லாமல் `அம்மா சோறு போடு' என்று கூறுங்கள் என்கிறோம்.

வணிக ரீதியாக வெற்றி பெறமுடியுமா என்றும் சிலர் ஆதங்கத்தோடு கேட்டார்கள். வணிகரீதியிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். சிலவற்றை விளம்பரப்படுத்த மாட்டோம் என்று கூறியிருக்கிறோம். மத ரீதி, சாதி சம்பந்தப்பட்டவைகள், நிரூபிக்கப்படாத மருத்துவம், அன்னிய குளிர்பானங்கள், மூடப்பழக்கங்கள், வன்முறை, ஆபாசம் கலந்த விளம்பரங்களை ஏற்கமாட்டோம்.

இதுபோல் சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம். எந்தக் காலத்திலும் எங்கள் கொள்கையில் இருந்து நிச்சயம் மாறமாட்டோம். மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.மு.க.ஸ்டாலின் பேச்சு:

தமிழ் மக்களுக்காக இந்த தொலைக்காட்சி சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலம், பிறமொழி கலப்பின்றி தமிழ் மொழியை பறைசாற்றுகின்ற வகையில் இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படும் போது இதைக் காண்கின்ற மக்களுக்கும் இதுபோல் பிறமொழி கலப்பின்றி தமிழில் பேசவேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் அமைகிறது.

தொலைக்காட்சிப் பெட்டி 1800-ம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும், கடந்த 50 ஆண்டுகளாகத் தான் இந்தியாவில் இதன் வளர்ச்சி இருந்திருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் ஒன்றான இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டம் வெற்றிகரமாக நடந்துவருவது அனைவருக்கும் தெரியும். இதில் தவறுகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக முதல்-அமைச்சரே டெண்டர் திறக்கும்போது நேரில் வந்து பார்ப்பதை பல வெளிநாட்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

தமிழை வாழவைக்க இந்த மக்கள் தொலைக்காட்சி தொடர்ந்து பணியாற்றும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


கலைஞர் டிவி விளம்பரம் உதவி, தினமலர், பாஸ்டன் பாலா :-)
தேவயானி நடிக்கும் சீரியல் பெயர் : மஞ்சள் மகிமை :-)

0 Comments: