பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 12, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 12-09-07

மைடியர் முனீஸ்வரன்,

எப்டி இருக்கீங்க ? ஏன் முனீஸ்வரன் கடிதத்துல சினிமா பத்தி எல்லாம் எழுதறதில்லைன்னு பிரபல வலைப்பதிவர் குறைபட்டுண்டார். அதனால இந்த வாரம் சினிமா நெடி கொஞ்சம் தூக்கலா இருக்கும். பொறுத்துக்கணும்.

சேலம் அய்யந்திருமாளிகைல ஆலங்கொட்டை முனியப்பன் கோவில் இருக்கறதா கேள்விப்பட்டேன். இவர் உங்க ஃபிரண்டா ? இந்தக் கோயில்ல மாமியார் மருமகள் கூட்டம் அதிகமா வருதாம், ஏன் தெரியுமா ? அவங்களோட சண்டையைத் தீர்க்கத்தான். இங்க வர பெண்கள் கைல பூட்டு எடுத்துக்கிட்டு வராங்க. நினைச்ச காரியம் நிறைவேற, முனியப்பனை வேண்டி வழிபடற அவங்க தாங்கள் வாங்கி வந்த பூட்டை கோயில்ல இருக்கற சூலாயத்துல போட்டுப் பூட்டி, சாவியைக் கொண்டு போயிடறாங்க. குடும்பச் சண்டை, கணவன் மனைவி பிரச்சினைன்னு எல்லா பிரச்சினைகளுக்கும் இங்க பூட்டு போட்டுட்டு போறாங்க. ஆனா மாமியார் மருமகள் பிரச்சினைக்குப் பூட்டுதான் ரொம்பப் பிரபலம். அமெரிக்காவிலேருந்தும் இங்க பக்தர்கள் வராங்க. அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஆனாலும் மாமியாரும் மருமகளும் தானே. பின்ன வராம என்ன செய்வாங்க? இந்தப் 'பூட்டு சாமி' கோயிலுக்கு பெண்கள் தான் அதிகம் வராங்க. சேலம் பஸ் ஸ்டாப்லேருந்து ஷேர் ஆட்டோல போகலாம். ஆட்டோகாரனோட சண்டை போட்டா எக்ஸ்ட்ரா ஒரு பூட்டும் எடுத்துண்டு போகனும் அவ்வளவு தான். தினமலர்ல கலைஞர் டிவி விளம்பரம் பார்த்தியா ? நிறைய மெகா சீரியல் இருக்கும் போல. மெகா சீரியல்னாலே மாமியார் மருமகள் சண்டையும் நிச்சயம் இருக்கும். இன்னும் எவ்வளவு பூட்டு தேவையோ ? மஞ்சள் மகிமை சீரியல் முன்னோட்டம் கலைஞர் டிவியில பார்த்தையா ? மஞ்சள், கருப்பு, சிகப்பு கலர்ல சேலை கட்டிண்டு தேவயானி.... என்னக் கோலம் இது ?

முன்பு, "கலக்க போவது யாரு?" ன்னு இருந்த காமெடி நிகழ்ச்சி விஜய் டிவியிலிருந்து சன் டிவிக்கு டிரன்ஸ்ஃபர் ஆச்சு. இப்ப பெப்சி உமா நடத்தற நிகழ்ச்சி சன் டிவியிலேருந்து கலைஞர் டிவிக்கு 'உங்கள் சாய்ஸ்'ன்னு போகுது. முதல் நிகழ்ச்சியில ஜெயம் ரவி. The brief history of time :-)

ஹிந்தி சிவாஜில ஹிந்தி ரசிகர்களுக்காக புதுசா ஒரு பாடலை ஷூட் செய்யப் போறாங்களாமே? ஒரிஜினல் சிவாஜில, எம்.ஜி.ஆர். சிவாஜி, கமல் போல இமிட்டேட் செஞ்ச பாடல் காட்சியில் ரஜினி நடிச்சிருக்காரில்ல, அதே ஸ்டைல்ல தேவ் ஆனந்த், ஷம்மி கபூர், ஷாருக்கான் போல ரஜினி வேஷம் போட்டு கலக்கப் போறாராம். தெலுங்குல என்.டி.ஆர், நாகேஷ்வர ராவ், சிரஞ்சீவி போலவும் நடிச்சிருக்காரு. அமிதாப் பச்சன் போல நடிச்சு, வீண் பிரச்சினை வேண்டாம்னு சொல்லிட்டாராம் ரஜினி. விவேக் கோன் பனேகா கோரோர்பதி மாதிரி அமிதாப் பச்சனை நக்கல் அடிட்த்திருப்பார். காமடியனுக்கு இருக்கும் தில்லு ஹிரோவுக்கு இல்லையா ? நல்ல காமெடிதான்

இந்த மருத்துவ நிறுவனத்தோட இயக்குநர் பி.வேணுகோபாலுக்கும், அமைச்சர் அன்புமணிக்கும் என்ன பணின்னு யாராவது கேட்டா, "வெறும் பனிப்போர்''ன்னு சொல்றாங்க. இயக்குநர் பதவியிலேருந்து டாக்டர் வேணுகோபாலை நீக்க, அன்புமணி தொடர்ந்து பல்வேறு வழிகள்லயும் முயற்சித்து வர்றாரு. பாவம் முடியலை. 24 மணி நேரத்துக்குள்ல மாணவர்களோட தேர்ச்சிச் சான்றிதழில்ல கையெழுத்துப் போடணும்னு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிச்சது.

Save the Earth ங்கற இந்தக் கட்டுரையை ஹிண்டுல படிச்சியா ? இங்க் பேனா இன்னும் நாட்டுல இருக்கா என்ன ? சுற்றுப்புற சூழல் காரணமா எல்லோரும் இனிமேல் இங்க் பேனாதான் உபயோகிக்கணுமாம். அமைச்சர் அன்புமணிக்கு ஒரு இங்க் பேனா பார்சேல்! ( முதல்வன் சினிமா மணிவண்ணன் ஸ்டைல்ல படி.)

தினமணில நீதிதேவன் மயக்கம்-னு ஒரு தலையங்கம் படிச்சேன். எனக்கு மயக்கமே வந்துடுச்சு. நாட்டுல இருக்கற 21 உயர் நீதிமன்றங்கள்ல தேங்கிக் கிடக்கற வழக்குகள் 30 லட்சம். மிக அதிகமா கிடக்கறது அலகாபாத் உயர் நீதிமன்றத்துல தானாம். உச்ச நீதிமன்றத்துல ? 39, 780 வழக்குகள் நிலுவைல இருக்காம். இது 2006 கணக்காம்!

சென்னை உயர் நீதிமன்றத்துல தேங்கிக் கிடக்கற வழக்குகளோட எண்ணிக்கை 4,06,958. போன ஆண்டு கடைசில வெளியிட்ட புள்ளிவிவரம் இது. தமிழக விசாரணை நீதிமன்றங்கள்ல சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகள் 31 மார்ச், 2007 நிலவரப்படி விசாரணையில இருக்கறதாவும் இதுல 26,800 வழக்குகள் சிறு குற்றங்கள் தொடர்பானதுன்னும் தெரியறது. க்வாட்ரோச்சி இன்னும் தேடப்படற குற்றவாளிதான். அவரைப் பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்னு நான் சொல்லலை, ஸி.பி.ஐ சொல்றது. அவரைப் பிடிச்சா இன்னொரு வழக்கு கூடுதலாகும், அவ்ளோதான். சிரிப்பு வந்தால் அடக்காத. சிரிச்சுடு.

பெரிய திருடர்கள் கதையெல்லாம் சொன்னா நம்பளை அடிக்க வருவாங்க. சின்ன திருடர்களைப் பத்தி சொல்றேன். ரோமேனியாவுல ரெண்டு திருடங்க, வீட்டை உடைச்சு திருடினாங்க. அங்க குழந்தை சாப்பிடற 'லாலி போப்' ( Loppipop) இருக்கவே, அதை எடுத்து சாப்பிட்டுட்டு. கிளம்பிப் போகும் போது, அதை முழுசும் சப்ப முடியாம வெளியே போட்டுட்டு போயிட்டாங்க. போலிஸ் அதை எடுத்து எச்சல்லேருந்து DNA ஆராய்ச்சி எல்லாம் செஞ்சுட்டு, திருடங்களை அமுக்கிட்டாங்க. இதனால இதுக்கு முன்னால இவங்க செஞ்ச 78 திருட்டும் அம்பலமானது. வாழ்க லாலிபாப்.

நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் திரைப்பட நடிகையும், எம்.பி.யுமானவைஜெயந்திமாலா பாலி எழுதின சுயசரிதை புத்தத்தோட வெளியீட்டு விழாவுல அவரை ஓஹோன்னு புகழ்ந்துட்டு, "இந்தப் புத்தகத்தை நான் முழுமையாகப் படித்து முடித்துவிட்டேன். ஒரு ரகசியத்தை சொல்ல வேண்டுமானால், புத்தகத்தின் பெரும்பாலான பகுதியை பார்லிமெண்ட் நடந்து கொண்டிருந்தபோது தான் படித்தேன்... " ன்னு ஒரு போடு போட்டார். இப்ப தெரியறது, ஏன் சிதம்பரம் மாமா சமீப காலமா முக்கிய பல பிரச்சினைகளைப் பத்தி எந்தக் கருத்தும் கூறாம இருக்கிறாருன்னு. கூட்டிக் கழிச்சுப் பாரு, சரியா இருக்கும்.

ஏன் விஜய் நடிக்கற `குருவி' படத்துலேருந்து நயன்தாராவை நீக்கிட்டாங்க? ஏன் திரிஷா திரும்ப ஜோடி சேர்ந்தார் ? சினிமாவுல கூட காக்கா பிடிச்சா தான் குருவிக்கும் சான்ஸ் போல !

மூணாவது அணி கிட்டத்தட்ட உடைஞ்சுட்டதுன்னு நினைக்கறேன். இடதுசாரிகள் சந்திர பாபு நாயுடு, அமர் சிங்கை தங்களோட போராட்டத்துக்கு அழைச்சாங்க, ஆனால் ஜெயை அழைக்கலை. ஜெக்கு கோபம் வந்து(வழக்கம் போல) அறிக்கை விட்டிருக்காங்க. இடதுசாரிகள் ஏன் ஜெயை அழைக்கலை ? ஜனாதிபதி தேர்தலில்ல கூட்டணி சார்புல எடுத்த முடிவுக்கு மாறா அ.தி.மு.க. நடந்துண்டது, ஷெகாவத்துக்கு கடைசி நேரத்துல ஓட்டுப்போட்டது, அதுக்கு ஜெ சொன்ன பதில் இந்த ஆண்டின் சிறந்த ஜோக். அடுத்த தேர்தல்ல அதிமுக பா.ஜ.கவோட நிச்சயம் கூட்டணின்னு தெரியறது. முக்கியமான தலைவர்கள் ஜெவை சந்திக்க போறாங்க. பா.ஜ.க நிலமையை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.

'கலைஞர் டிவி' லோகோல 'டிவி' ங்கற வார்த்தை போய், வெறும் கலைஞர் மட்டும் தான் இருக்கு. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொடுக்கும்னு சொல்வாங்க. கலைஞர் எழுதின சுதந்திர தினக் கட்டுரைக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானம் கொடுத்திருக்காங்க. அந்தத் தெய்வத்தோட பேர் மவுண்ட் ரோடு மகா விஷ்ணு ! விநாயகரை வணங்கி தொடங்கின எல்லாம் நன்னா வரும். கலைஞர் டிவி விநாயகர் சதுர்த்தி அன்னிக்கி தொடங்கறதால நிச்சயம் நன்னா இருக்கும்னு நம்பலாம். முதல் நிகழ்ச்சி சுதா ரகுநாதன் பாட்டு பாடி மங்களகரமாக ஆரம்பிக்கிறார், விநாயகர் பற்றி பாட போறாறோ என்னவோ ? நிச்சயம் மஞ்சள் கலர் பட்டு புடவை என்ன பெட் ?


விகடனில் வந்த ஜோக். நான் படித்த போது எனக்கு உதட்டோரத்தில் கூட சிரிப்பு வரலை. இப்படி கடி ஜோக் எல்லாம் போடுகிறார்களே என்று ஆ.வி மீது வெறுப்பே வந்தது. பிறகு குமரன், சிவபாலன் பதிவில் அதே ஜோக்கை பற்றி படித்த போது விழுந்து விழுந்து சிரித்தேன். போன மாட்சை பார்த்தால் திராவிட என்பதை விட தி.டிராவிட் என்று பேர் மாத்தலாம். பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை.



ஷாருக்கான் நடிச்ச "சக்டே இந்தியா' அப்படீங்கற புது ஹிந்திப் படம் வந்த வேளை சென்னைல நடந்த ஆசியக் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டில இந்திய அணி தென்கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஜெயிச்சது. மகளிர் தான் ஹாக்கி விளையாட்டுக்கு தகுந்தவங்கன்னு யாரும் நினைச்சுடக் கூடாதேங்கற காரணம் கூட இருக்கலாம். இந்தப் படத்தை ராஷ்டிரபதியோட இல்லத்துல திரையிட்டுப் பார்த்து மகிழ்ந்திருக்கார் பிரதீபா பாட்டீல். அதில் மகளிர் அணி கோல் போட போட இவர் 1,2,3 என்று எண்ணியிருப்பார். ஹாக்கி பத்தி இன்னொரு செய்தி- R.K.Sports நிறுவனம் ஹாக்கி மட்டையோட வளைஞ்சிருக்கர கீழ்ப் பகுதிக்கு காண்டோமை உறையாக போட்டிருக்காங்களாம். வழவழப்பாவும் உறுதியாகவும் இருக்காம். இதுவரைக்கும் ஒரு லட்சம் ஹாக்கி மட்டை வித்துட்டாங்களாம். இந்திய மகளிர் ஹாக்கி அணில மொத்தம் 13 பேர் இந்த ஹாக்கி மட்டையை தான் உபயோகிக்கறாங்களாம். அத விடுங்க சக்டே இந்தியா படத்துல கூட இந்த ஹாக்கி மட்டையைத் தான் உபயோகபடுத்தினாங்களாம். 'The hook is the most important part of the stick as it is used to strike the ball!
(இந்த ஐடியா பேடண்ட் செய்யபட்டது, வீணாக முயற்சிக்காதீர்கள் )

3 Comments:

இலவசக்கொத்தனார் said...

/மிக அதிகமா கிடக்கறது அலகாபாத் உயர் நீதிமன்றத்துல தானாம். உச்ச நீதிமன்றத்துல ? 39, 780 வழக்குகள் நிலுவைல இருக்காம். இது 2006 கணக்காம்!//

ஒரு நம்பர் மிஸ்ஸிங் போலத் தெரியுதே..

Boston Bala said...

---காமடியனுக்கு இருக்கும் தில்லு ஹிரோவுக்கு இல்லையா ---

:)

Anonymous said...

மஞ்சக்கலரு சிங்குசா